துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி
பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது!
நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு தொகுதியிலும் மிகக்கடுமையாகத் தேர்தல் பணியாற்றிய தொண்டர்கள், முன்னணியினர், உடன்பிறப்புகள், கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்றத் தேர்தல் முடிந்த ஐந்தே மாதத்தில் திணிக்கப்பட்டதுதான் இந்த இடைத்தேர்தல். வாக்களித்த மை அழிவதற்கு முன்னால் மக்களின் விருப்பத்தை அழித்துவிட்டு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை விட்டு விலகி, அடுத்த நிமிடமே ஆளும் கட்சியில் சேர்ந்தார்கள். அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை நடந்தது. அதனால்தான் இந்த இடைத்தேர்தல் நடந்தது.
பதவி விலகிய இருவரையே வேட்பாளர்களாக அறிவித்து, தேர்தலைச் சந்தித்தது ஆளும்கட்சி. அதிகார பலம், ஆட்சி பலம், பணபலம், போலீஸ் பலம் ஆகியவற்றைப் பக்கபலமாக வைத்து த.வெ.க. இந்தத் தேர்தலை எதிர்கொண்டது. சினிமா கவர்ச்சி பலத்தை மட்டுமே நம்பி அரசியல் களத்தில் குதித்து - பெரும்பான்மை பலம் இல்லாவிட்டாலும் குதிரை பேரங்களின் மூலமாக முதலமைச்சர் ஆகியுள்ள விஜய், இந்த இடைத்தேர்தலிலும் ரீல்ஸ் காட்சிகளே கைகொடுக்கும் என்று நம்பினார்.
டீ குடித்தார், டிராக்டர் ஓட்டினார், முருங்கைக்காய் பறித்தார், தெருத்தெருவாகப் போனார். எந்தவொரு இடைத்தேர்தலுக்கும், ஒரு முதலமைச்சர் பதவியில் இருப்பவர் இப்படித் தெருத்தெருவாகப் போனது இல்லை. இந்த இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றால்தான் தனக்கு இனி அரசியல் வாழ்க்கை என்ற முடிவோடு செயல்பட்டார். நான்கு நாட்கள் இரண்டு தொகுதியிலும் இருந்துள்ளார் முதலமைச்சர். வெளியூரில் இருந்து இறக்கிவிடப்பட்ட ஆட்கள், அவர் போகும் சாலைகள் அனைத்தும் வைக்கப்பட்ட பேரிகேட், கொடுக்கப்பட்ட அன்பளிப்புகள், அமைச்சர்களுக்கு மட்டும் எவ்வளவு செலவு செய்துள்ளேன் என்று ஆளும்கட்சி வேட்பாளரே அளித்த வாக்குமூலங்கள் இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது இந்த வெற்றியை அடைய த.வெ.க. எவ்வளவு பதற்றத்தில் இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக் கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள். கட்சி, தேர்தல், மக்கள் பணிகள் என்றால் என்னவென்று முதலமைச்சர் விஜய் இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயண விரிவாக்கம், தாய்மாமன் தங்கமோதிரம், அண்ணன் சீர் போன்ற திட்டங்களை அவர் அறிவித்தார். இதுவே தேர்தல் நடத்தை விதிகளை மீறியதுதான். இப்படி பல்வேறு விதிமீறல்களைச் செய்தே இந்த முடிவை த.வெ.க. பெற்றுள்ளது.
என்னைப் பொறுத்தவரையில் துரோகத்துக்கு இடைக்கால வெற்றி கிடைத்துள்ளது. அதே நேரத்தில் பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது!
ஜி.பே.யில் பணம் - பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். ஊரையே விலை பேசினார்கள் என்பதை இந்த ஆட்சியை ஆதரிக்கும் கட்சிகளே ஒப்புக்கொண்டு பேட்டி கொடுத்த காட்சிகளையும் நாம் பார்த்தோம். தேர்தலுக்கு முந்தைய இரவு வெளியான வீடியோவில் கோடிகளைக் கொட்டிச் செலவிட்டதை வேட்பாளரே ஒப்புக்கொள்ளும் காட்சிகளையும் பார்த்தோம். தூய சக்தியின் வேடத்தை இது அம்பலப்படுத்தியது.
திரைமறைவில், இன்னும் சில கட்சிகளின் வாக்குகளை வாங்கப் பொய்ச்செய்தியைப் பரப்பினார்கள். ஒட்டுமொத்த அமைச்சரவையும் இரு தொகுதிகளுக்குள் மூன்று வார காலம் முடங்கியது. துரோகம் செய்த வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் காவல்துறையினரைக் கொண்டு மிரட்டப்பட்டார்கள். 17 வயது இளைஞரைக் கூட கைது செய்தார்கள்.
'ஆளும்கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் தொகுதிக்கு எதையும் செய்யமாட்டோம்' என பிளாக்மெயில் செய்து வாக்கு வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அரசு ஊழியர்களையும் வாக்குப்பதிவின்போது மிரட்டி ஆதரவாகப் பணியாற்ற வைத்தார்கள். 'சூரியனுக்கு வாக்களிக்கச் சொன்னால் விசிலுக்கு அழுத்தச் சொன்னார்கள்' என்று ஒரு மூதாட்டி வெளிப்படையாகப் பேட்டியே அளித்தார்.
இப்படி, தன் அதிகார பலம் முழுவதையும் இடைத்தேர்தலுக்காகத் தவறாகப் பயன்படுத்தியது த.வெ.க. அரசு.
5 நிமிடப் பேச்சிலேயே அனைத்தையும் விஜய் மாற்றிவிடுவார் எனக் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பம் நான்கே மாதங்களில் கிழிந்து தொங்கிவிட்டது. ஆட்சிக்கு வந்த இத்தனை குறுகிய காலத்தில் இப்படி ஒரு சரிவு எந்த முதலமைச்சருக்கும் இதுவரை ஏற்பட்டதில்லை.
கல்லாப்பெட்டிக் கூட்டணிக் கட்சிகள் என விமர்சித்த கட்சிகளையே, இப்போது தன்னோடு இணைத்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்த நிலையிலும், அனைத்தையும் மீறி, ‘எப்படியாவது வெற்றி பெற்றால் போதும்’ என்ற மனநிலைக்கு அவர்களைத் தள்ளும் வகையில்தான் இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
என்ன செய்தும், தி.மு.க. மீதான மக்களின் நம்பிக்கையை எதுவும் செய்ய முடியவில்லை. தி.மு.க.வை மட்டுமே குறிவைத்துப் பேசினார் முதலமைச்சர். ஆனால், தி.மு.க.வின் செல்வாக்கை அவரால் அசைக்க முடியவில்லை.
இதில் மிகவும் முக்கியமானது, துர்நாற்றமெடுக்கும் துரோக சக்தியான த.வெ.க.வுக்கு எதிராகக் களம் கண்ட அனைத்துக் கட்சிகள் பெற்ற வாக்குகளும் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் என்பதுதான்! அவைதான் பெரும்பான்மை! இந்த அரசு மீண்டும் பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குதிரை பேரம், எம்.எல்.ஏ. ஷாப்பிங், பழிவாங்கும் நடவடிக்கைகள், அருவருப்பான பேச்சுகள், அசிங்கமான சைகைகள், ரீல்ஸ் எடுப்பதில் மட்டும் கவனம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு இனியாவது மக்கள் பணிகளில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தேர்தல் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் கொள்கை - இலக்கு என பயணிக்கும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
களத்தில் கடும் போட்டியைக் கொடுத்து, ஆளும்கட்சியினரை அச்சத்தில் அலையவிட்ட கழக உடன்பிறப்புகளுக்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோளோடு தோள் நின்று உழைத்த அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தோழர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
சினிமா கவர்ச்சியை மூலதனமாகக் கொண்டு, அதன் மூலமாக மக்களை ஏமாற்றி அதிகாரத்துக்கு வந்து கார்ப்பரேட் மாஃபியாக்கள் சிலரின் கைப்பாவையாக ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் விஜய்யின் முகத்திரையைக் கிழிக்கும் பரப்புரைப் பயணத்தை நாம் தினம்தோறும் தொய்வின்றித் தொடர்வோம். தமிழ்நாட்டுக்கு விரோதமான சக்திகளின் பிடியில் அவர் சிக்கி இருக்கிறார். அதை மக்கள் விரைவில் முழுமையாக உணர்வார்கள்.
இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்!
டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தையும், முத்தமிழறிஞர் கலைஞரின் துணிவையும், கழக தலைவர் அவர்களின் உழைப்பையும் சுமந்து நிற்கும் தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம்.
#VoteForDMK
#திருச்சி_மாநாடு: ஏழாவது முறையும் நாமதான்; இனி எப்போதும் நாமதான்
திராவிட மாடலுக்கு ஆதரவாகத் தமிழ்நாடெங்கும் வீசும் அலையினை, திருச்சியில் அலைகடலெனத் திரண்ட உடன்பிறப்புகளின் திருமுகங்களில் கண்டேன்! நானும் எழுச்சி கொண்டேன்!
அடிமைகளின் முதுகில் ஏறி வந்தாலும், புதிதாய் அடிமைகளைச் சேர்க்க முனைந்தாலும், ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்ட நினைத்தாலும் பாசிச பா.ஜ.க.வால் நம்மை அசைத்துக்கூட பார்க்க முடியாது.
வீடுவீடாகச் செல்வோம்; நம் சாதனைத் திட்டங்களைச் சொல்வோம்!
#TamilNaduVsNDA எனும் நம் மண்ணைக் காக்கும் போரில் உறுதியாக வெல்வோம்!
#வெல்வோம்_ஒன்றாக
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரத்துடன், கோடைக்காலச் செலவுகளைக் கருத்தில் கொண்டு சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரமும் சேர்த்து, கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் 1.31 கோடி மகளிருக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கியிருப்பதோடு, தமிழ்நாட்டு மகளிரின் நலனில் என்றும் அக்கறை கொண்டு செயல்படும் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைந்ததும், மகளிருக்கான உரிமைத் தொகை மாதந்தோறும் ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. @mkstalin அவர்களுக்கு நன்றி.
திரு
மா சுப்ரமணியம் அவர்களுக்கு
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர்
-ரில்லுல்ல அரசு மருத்துவமனை
ஒவ்வொரு நாளும் 8:40to9:00க்கு
தான் வருகிறார்கள் ஏனென்றால்
பள்ளிகள் போகும் பிள்ளைகளுக்கு பெரிய சிரமம் ஏர்ப்படுகிறது
கொஞ்சம் விசிட்டிங் அடிங்களே
சென்னையை சீரழித்த பெருமை எம்ஜிஆரையே சாரும்.
இது எத்தனை பேருக்கு தெரியும்.?!
போரூர் ஏரி -உடையார் ராமச்சந்திரா ஆஸ்பத்திரி (240 ஏக்கர்)
பொத்தேரி - பச்சமுத்து SRM கல்லூரி
கூவம் ஆறு - ஏ.சி.சண்முகம் மருத்துவக் கல்லூரி.
பல்லாவரம் ஏரி - ஐசரி கணேஷ் வேல் பல்கலைக்கழகம்.
ஜேப்பியார் - சத்தியபாமா பல்கலைக்கழகம்.
நடிகைகள் அம்பிகா, ராதா ஆகியோருக்கு வழங்கிய டாக்டர் கானு நகர் ஏஆர்எஸ் கார்டன் ஸ்டியோவாக இருந்து தற்போது அடுக்குமாடி குடியிருப்பாக உள்ளது (40 ஏக்கர் நிலம் இன்றைய மதிப்பு 400 கோடி) எல்லாமே எம் ஜி ஆர் வாரிக்கொடுத்த நீர்நிலைகளில் கட்டப்பட்ட கட்டிடங்கள்.
சென்னையை சீரழித்த பெருமை எம்ஜிஆரையே சாரும்.
மீதமுள்ளதை இப்படி ரம்மியமாக காப்பாற்றி காட்சிப்படுத்தி வருகிறது திராவிட மாடல்..
கூவ ஆற்றை பற்றி பேசினால் உங்க நாற்றம் மேலும் நாறும் ஆகவே நீங்க முதலையை பற்றி பேசினாலும் சரி முதலக்கொண்டு கலைஞர் குடும்பம் வாழ்ந்ததாக பேசினாலும் சரி..
சென்னையை சிங்கார சென்னையாக மாற்றி அமைத்தது கலைஞர் அதை பின் தொடர்ந்து இன்று மீட்டுத்தருவது எங்கள் தளபதி ஸ்டாலின். ❤️
சென்னை திமுகவின் கோட்டை🖤❤️🔥
(தரவுகள் மாணவநேசன் பத்திரிக்கை)
மகளிர் நலன் காக்கும் மன்னவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்கள் சிறப்புரையாற்ற, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், நம் இளம் தலைவர் @Udhaystalin அவர்கள் வாழ்த்துரை வழங்க, நேற்று திருப்பூர், பல்லடத்தில் நடைபெற்ற #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் - மேற்கு மண்டல கழக மகளிர் அணி மாநாட்டின் காணொளி தொகுப்பு..
வளைந்து நின்ற முதுகுகள் தலைநிமிர்ந்து தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்த தந்தை பெரியாருக்குப் புகழ் வணக்கம்!
தமிழர்கள் தலைகுனியாமல் - ஆதிக்கத்துக்கு அடிபணியாமல் - பகுத்தறிவுச் சிந்தனையோடு சக மனிதரை நேசித்துச் சமத்துவத்தைப் பேணுவதே, இனமானமே பெரிதென அவர் உழைத்த உழைப்புக்கு நாம் செலுத்தும் நன்றி!
பெரியார் எனும் பெருஞ்சூரியனைத் திருடவும் முடியாமல் தின்று செரிக்கவும் முடியாமல் திண்டாடும் பகைவர் கூட்டத்தின் வஞ்சக எண்ணங்களை வீழ்த்திட ஒற்றுமை உணர்வோடு #ஓரணியில்_தமிழ்நாடு நின்றால், என்றும் வெற்றி நமதே!
#Periyar
ஜார்க்கண்ட் மாநிலம் சிம்டேகா மாவட்டத்தில் உள்ள சர்ச் பூசை நடந்து கொண்டிருந்தது. திடீரென்று முப்பதற்கும் மேற்பட்ட பாஜக ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் உள்ளே நுழைந்து இரண்டு பாதிரியார்களை வெளியே இழுத்துப் போட்டு கொடூரமாக தாக்கினார்கள். ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல சொல்லி அவர்களை கட்டாயப்படுத்தினார்கள். சொல்ல முடியாது என்று சொன்னதால் ஆடைகளை உருவி தாக்க தொடங்கினார்கள். இதில் பாதிரியார்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைந்தனர். பிறகு சர்ச் உள்ளே இருந்த கிறிஸ்தவர்கள் சிலரை தாக்கி விட்டு இனிமேல் பூசை நடக்க கூடாது என்று எச்சரித்துவிட்டு சென்றனர். இது சம்பந்தமாக காவல்துறையினர் எட்டு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வழக்கம்போல் நீதிமன்றம் அவர்களை ஜாமினில் வெளியே விட்டது...
தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை #பொருநை அருங்காட்சியகம்!
காண்போரின் விழிகள் விரிகின்றன; தமிழர்தம் நாகரிக உச்சம் பார்த்து மனம் எழுச்சி கொள்கிறது...
மரபும் புதுமையும் சந்தித்துக் கைக்குலுக்கிக் கொள்ளும் வரலாற்று மாளிகையாக நம் #DravidianModel அரசு கட்டியுள்ள #Porunai அருங்காட்சியகம் - உலகத் தமிழர் ஒவ்வொருவரும் கண்டுணர வேண்டிய பண்பாட்டுக் கருவூலம்!
வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும். பழம்பெருமையில் தேங்கிடாமல் இன்னும் உயர்ந்து 'முன் செல்லடா...' என நம்மை உந்தித் தள்ளும் ஊக்க மருந்தாக #PorunaiMuseum அமையும் என நம்பித் தமிழ்நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளேன்.
@TThenarasu@KanimozhiDMK
#பொருநை_தமிழர்_பெருமை