#WATCH | “சினிமா மாதிரி நல்லா ரிகர்சல் எடுத்துட்டு வந்து மனப்பாடமா பஞ்ச் டயலாக் பேசுவாரு.. அதுக்குதான் 3 நாள் டைம்”
நாளை முதலமைச்சர் விஜயின் பதிலுரை - அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்
#SunNews | #TNAssembly | #TVKVijay | #SellurRaju
விஜய் :
பார்டி ஃபண்ட் என்று சொன்னதும் ஓடிப்போயிட்டாங்க.
உதய் அண்ணா இன் அசெம்ப்ளி :
தைரியம் இருந்தா தெம்பு திராணி வக்கு முதுகெலும்புனு இருந்தா எந்த Party ன்னு சொல்லு.
காவல்துறையின் எச்சரிக்கையை மீறி வாகனத்தை கூட்டத்திற்குள் கொண்டு சென்றதே கரூர் துயரத்திற்கு காரணம். அப்பாவி மக்களை பகடைக்காயாக்கி இப்படி ஒரு அரசியல் தேவையா விஜய் சார்?
ஒரு அமைச்சர் எங்கே , எப்படி , என்ன பேச வேண்டும் என்கிற அடிப்படை கூட தெரியாத நபராக ஆதவ் அர்ஜுனா இருக்கிறார் . கரூரில் கூட்ட நெரிசலில் மக்களை காவல் துறை கொன்றது என்று பொருள் பட பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது , ஒட்டுமொத்த காவல் துறையை கொச்சை படுத்தும் பேச்சு
மகிழ்ச்சி நிறைந்த இந்த இளையவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு நாம் பதறவில்லையெனில், நாம் மனிதராக வாழ இயலுமா?
பார்த்தீபன்-திவ்யதர்சினி ஆகிய காதலர்கள் படுகொலையாகி உள்ளார்கள்...
பார்த்தீபனின் உடலில் குருதி வழிந்திருக்கிறது என்கின்றனர். பெண்ணின் குடும்பத்தால் தாக்கப்பட்டார் பார்த்தீபன். சில மணிநேரத்தில் திவ்யதர்சினியும் தூக்கில் பார்த்திபனோடு தொங்குகிறார் என்றால் இது தற்கொலையா? காவல்துறை தற்கொலை எனச் சொல்வதாக தோழர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஒருவேளை தற்கொலையெனில் தூண்டியது யார் என அறிவது காவல்துறை வேலையில்லையா?
காயத்துடன் இருக்கும் பார்த்தீபன் கொலை செய்யப்படவில்லையென சொல்ல முடியுமா?
சொந்த மகளை, மகனை படுகொலை செய்யும் காட்டுமிராண்டித்தனத்தை உருவாக்குகிறது சாதி.
இந்த சாதியை குடி என்கிறது போலித்தமிழ்த்தேசியக் கூட்டம். சாதி சொன்னால் தான் தமிழனா இல்லையா என்பேன் என்கிற இந்த போலிகள், தற்போது வாய்மூடி கள்ளமெளனத்தோடு கடந்து செல்வார்கள். இந்தக் கொலைகளையும் தெலுங்கு சதி என எழுதி வைப்பார்கள். இவர்களுக்குள்இருக்ககும் சாதிவெறிதான், மனச்சிதைவு நோயாக ஆணவபப்டுகொலையாக வெளியாகிறது.
போலித்தமிழ்த்தேசியம் ஏன் மிக ஆபத்தானது என்பதை இந்த சமயங்களில் புரிந்து கொள்ள இயலும்.
இதுவே விடுதலைப் புலிகள் ஆண்ட தேசமாயிருந்தால் சாதிய வன்மத்தை பரப்புபவர்களை குழிதோண்டி புதைத்திருப்பார்கள்.
கேடுகெட்ட இந்திய சனநாயகத்தில், அதிகாரவர்க்கமே சாதியாக விஷமேறிக்கிடக்கிறது.
புலிகளின் ஆட்சியில், சாதியற்ற தமிழன் தமிழீழத்தை நிர்வாகம் செய்தான் , சாதி அங்கே ஒழிந்தது. இங்கே இந்துத்துவ அதிகாரவர்க்கத்தின் கீழ் சாதி வளர்த்தப்படுகிறது. இதனால் தான் இந்தியா இருக்கும்வரை இந்து மதம் இருக்கும், இந்துமதம் இருக்கும் வரை சாதி இருக்குமென்றார் தந்தை பெரியார். பெரியாரை நிராகரித்தவனும், அண்ணலை மறுத்தவனும் மிருகமான சாதியவாதியாக அலைகிற நாடாகிப்போனது தமிழ்நாடு.
சாதி ஒழிந்த தமிழ்த்தேசம் படைக்க ஒன்றாவோம்.. இளைஞர்களை கொன்றழிக்கும் சாதியவாதிகளை வேரறுப்போம்
.
கலெக்டர்கள்-காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு நடத்தும் நாளிலேயே சீரழிந்த சட்டம்-ஒழுங்கு!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்ற 19 வயது இளைஞரும், 16 வயது பெண்ணும் காதலித்த விவகாரத்தில், வெவ்வேறு சாதிகளைச் சார்ந்த இரு வீட்டாருக்கும் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், இளைஞரும் அந்தப் பெண்ணும் ஒரு குடிசையில் தூக்கில் தொங்கும் காட்சிகளைப் பார்த்து தமிழ்நாடே பதைபதைக்கிறது.
இந்த மர்ம மரணங்கள் குறித்து பல சந்தேகக் கேள்விகள் எழுந்திருப்பதுடன், சிங்கப்பெண் என்கிற ஸ்டிக்கர் திட்டத்தின் ஆட்சியில், +2 படிக்கும் பெண்ணின் உயிருக்குக்கூட பாதுகாப்பு இல்லாத மோசமான சூழல் நிலவுவதை உணர முடிகிறது. இதுவரை வடமாநிலங்களில் மட்டுமே, வீடுகளை இடிக்கும் காட்சிகளைப் பார்த்து வந்த நாம், தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில், இரு குடும்பத்தார் பிரச்சினையில் வீடுகளும் வாகனங்களும் நொறுக்கப்படும் புதிய அபாயமும் அரங்கேறியுள்ளது.
சினிமாவில் மட்டுமே வரக்கூடிய கொடூரமான வில்லத்தனக் காட்சிகளை தமிழ்நாடு நிஜத்தில் அனுபவிக்கத் தொடங்கியுள்ளது. இத்தனைக் கொடூரங்களும் முதலமைச்சர் ஆய்வு நடத்தும் நாளிலேயே அரங்கேறி இருப்பது சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக சீரழிந்திருப்பதையே காட்டுகிறது. குதிரை பேரத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் சோபா மாடல் அரசின் முதலமைச்சர், தன் கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கின் மீது இனியாவது கவனம் செலுத்துவாரா?
திமுக இதைக்கூட விமர்சிக்காமல்-கேள்வி கேட்காமல் 6 மாதம் பொறுத்திருந்தால், அநியாயமாகப் பறிபோன இரண்டு உயிர்களைத் திருப்பிக் கொடுத்து விடுவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?
#TVKFails