ஆசியாவிலேயே முதல்முறையாக இரவில் ஃபார்முலா ரேஸ் நடத்திச் சாதனை படைத்தோம்! எதிர்ப்புகளையும் நீதிமன்றத் தடைகளையும் தாண்டி வெற்றிகரமாக நடத்தியது திமுக அரசு!
விளையாட்டு வீரர்களின் புகழைக் கொச்சைப்படுத்தாதீர்கள்!
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
பரந்தூரில் உள்ளவர்கள் மட்டும்தான் இவர்களின் கண்களுக்கு விவசாயிகளாகத் தெரிகிறார்களா? ஓசூரில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் உண்மையான விவசாயிகள் இல்லையா? அப்படியென்றால் அவர்களின் நிலைதான் என்ன?
திராவிட மாடல் அரசு ஓசூரில் முதலீடுகளைக் கொண்டுவந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கியபோது, “இது தமிழ்நாட்டிலேயே இல்லையே?” என்று ஆச்சரியக்குறியோடு கேட்டவர்கள் அல்லவா இவர்கள்!
இவர்களின் இரட்டை வேடத்திற்கு எப்போதுதான் முடிவு?
2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
அப்போது, “நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் எவை?
காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும்” எனப் பேசியிருந்தேன்.
கழகத் தலைவராக 9-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், அப்படி ஒரு மாற்றத்தை, மறுசீரமைப்பை அறிவித்துள்ளேன். கழகத்தின் நலனை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்த மறுசீரமைப்புக்குக் கழகத்தினர் அனைவரும் துணைநிற்க வேண்டும்.
உங்களின் துணையோடு மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்!
(1/2)
#DMK4TN
திமுக வை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து செல்வேன் 🖤❤
@mkstalin
புதிய பாய்ச்சல்
புதிய பொறுப்பாளர்களுக்கு கடை கோடி தொண்டனின் வாழ்த்துக்களும் அன்பும்
அவரின் உழைப்பிற்கு அவரை மீண்டும் அரியனையில் ஏற்க உழைப்போம் 🖤❤
#திராவடநாயகர்MKS
சமூக நீதி வரலாற்றை இருட்டடிப்பு செய்யும் தவெக அரசுக்கு கண்டனம்!
சமூக நீதிக்காக வாழ்நாளெல்லாம் போராடி, முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு வழிகோலிய தந்தை பெரியார், அரசியல் சட்டத்தை உருவாக்கிய புரட்சியாளர் அம்பேத்கர், உண்மையான ஜனநாயகக் காவலர் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்களும் வரலாறும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கொள்கை விளக்கக் குறிப்பேட்டிலிருந்து நீக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அறிவாலயத்தில் அம்பேத்கர் சிலை எங்கே? என்று கேட்டவர்கள், இன்று கொள்கை விளக்கக் குறிப்பேட்டிலேயே அம்பேத்கர் பெயரை நீக்கியுள்ளனர்.
பெரியார் பற்றி பேச தகுதி இருக்கிறதா? என்று கேட்டவர்கள், இன்று அதே குறிப்பேட்டிலிருந்து தந்தை பெரியார் பெயரையும் நீக்கியுள்ளனர்.
காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு என்று கூறியவர்கள், முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தப் பின்னணியில் முக்கியப் பங்காற்றிய நேருவின் வரலாற்றையே கொள்கை விளக்கக் குறிப்பேட்டிலிருந்து நீக்கியுள்ளனர்.
இடஒதுக்கீட்டு வரலாற்றில் அச்சாணியாகத் திகழ்ந்த தலைவர்களின் பெயர்களை அரசாங்க ஆவணங்களிலிருந்து மறைப்பது, நாம் கடந்து வந்த போராட்டப் பாதையையே வரலாற்றிலிருந்து அழிப்பதற்குச் சமம்.
இடஒதுக்கீடு வெறும் சலுகை அல்ல;
தலைவர்கள் போராடிப் பெற்றுத் தந்த சமூகநீதி உரிமை!
வரலாற்றை இருட்டடிப்பு செய்யும் இந்நடவடிக்கை, சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாத தவெகவின் சினிமா பாணி இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது!