கனமழை உள்ளிட்ட மிக சென்சிடிவ் ஆன விஷயங்களில் சில செய்தி சேனல்கள் இனியாவது பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
கனமழை போன்ற பிரச்னைகளை அரசாங்கம் எப்படி கையாள்கிறது என்பதை பாராட்டவும், விமர்சிக்கவும் ஊடகங்களுக்கு முழு உரிமையுண்டு.
ஆனால்.. மரணபயம் காட்டும்மழை, பேய் ஆட்டம் ஆரம்பம், சென்னை மூழ்கும் ஆபத்துபோன்ற தம்ப் நெயில் வைப்பது, திகிலான BGM போடுவது என மக்களை பெரும் மன உளைச்சலுக்கும், உச்சக்கட்ட பதட்டத்திற்கும் உள்ளாக்குவதை தவிர்க்க வேண்டும்.
வதந்தி பரப்பினால் நடவடிக்கை என்பதை சமூக வலைத்தளங்களுக்கு மட்டுமின்றி அனைத்து ஊடகங்களுக்கும் பொதுவாக்க வேண்டும்.
அரசாங்கமும், வானிலை ஆய்வாளர்களும் சொல்லும் தகவல்களை மக்களிடம் சேர்த்தாலே போதும்.
இனி இப்படியொரு அதீத பதற்ற சூழலை தாங்க மனதளவில் மக்கள் தயாராக இல்லை.
@tradewith300@RealAravind36 சகோ, அவர் சொல்வதன் அர்த்தம் அதுவல்ல,TTF வாசன் என்ற ஒருவரால் மட்டுமே 2k kids தவறான வழிக்கு சென்றுவிட்டார்களா ? வேறு எந்த காரியத்திலும் அவர்கள் கெட்டுபோகவில்லையா!? என்பதுதான்.மது அருந்திவிட்டு எத்தனையோ விபத்துகளை ஏற்படுத்துகிறார்கள்.அந்த மது பழக்கத்தில் பாதிக்கபடுகிற 2k kids ஏராளம்