தவெக @TVKVijayHQ
தலைமையிலான தமிழக அரசே
@CMOTamilnadu இனியும் காலம் தாழ்த்தாமல் ஆணவப்படுகொலைக்கு எதிரான தனிச் சட்டத்தை உடனடியாக இயற்றிடு!
தென்மாவட்டங்களில் குறிப்பாக, நெல்லை,தூத்துக்குடியில் சமீபகாலமாகத் தொடர்ந்து நிகழக்கூடிய சாதி ஆணவப்படுகொலைகள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. இந்நிலை தொடர்ந்து நீடிப்பது ஆரோக்கியமான சமூகத்திற்கு அரண் சேர்க்காது.இந்நிலையில் கடந்த இருதினங்களில் அதாவது, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் நடந்தேறிய சாதி ஆணவக்கொலையை நீலம் பண்பாட்டு மையம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது!
கங்கைகொண்டான் சிப்காட் தனியார் சோலார் நிறுவனத்தில் பணிசெய்துவந்த மறவர் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் (ராமலட்சுமி) திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவரைக் காதலித்தார் என்பதற்காகவே தன் சகோதரரால் அப்பெண் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதிகளில் நடப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த காலங்களிலும் நடந்திருக்கின்றன.
ஒரு சம்பவம் நடந்து முடிவதற்குள் மீண்டுமொரு துயரம் நிகழ்வது தொடர்கதையாக நீடிப்பது கவலையளிக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் இளம்பெண் அபிசெல்வி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக குடும்பத்தினர் கூறிய நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை எனத் தெரியவந்துள்ளது. சக தோழியின் அண்ணனான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்ற தலித் இளைஞரைக் காதலித்ததற்காக இப்படுகொலையைச் செய்த அப்பெண்ணின் அண்ணன் சிவஞானம், உடந்தையாக இருந்த தாய் எஸ்தர் பாலின் இருவரையும் கைது செய்துள்ளது காவல்துறை. இவ்விரு சம்பவங்களிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஈடுபட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவும் தங்கள் வீட்டுப் பெண் தலித் சமூக இளைஞரைக் காதலித்தார் என்பதற்காக இரத்தச் சொந்தங்களே படுகொலை செய்யும் அளவிற்குத் துணிந்திருப்பது அபாயகரமான செயலாகும். இதன் பின்னணியில் யார் யார் இருந்து இதுபோன்ற சமூகவிரோதச் செயலை ஊக்குவிகிறார்கள் என்பதைக் காவல்துறையும் அரசும் உடனடியாகக் கண்டறிய வேண்டும்.
தொடர்ந்து தென்தமிழகத்தில் நடக்கக்கூடிய சாதிய வன்முறைகளும் ஆணவக்கொலைகளும் மக்கள் மத்தியில் அச்சத்தையும் சமூகப் பதற்றத்தையும் ஏற்படுத்தி சட்ட ஒழுங்கைக் கேள்விக்குள்ளாக்குகின்றது. மேற்கண்ட இரு சாதி ஆணவக்கொலைகளுக்கும், சாதிய வன்முறைகளுக்கும் மூளையாக இருந்து செயல்பட்ட சாதியவாதிகளுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுக்கொடுக்க முன்வருவதோடு தாமதிக்காமல் ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச்சட்டத்தையும் தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும்.
காவல்துறையும் கைது செய்வதோடு தங்களுடைய கடமை முடிந்துவிட்டதாக கருதும்போக்கு நீடிப்பது ஆரோக்கியமானதல்ல. ஏனெனில், குற்றவாளிகள் வெளியே வந்து மீண்டும் அதே செயலைத்தான் செய்கிறார்கள் என்கிறபோது இயல்பாகவே சமூகப் பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. இப்போக்கு சாதிய வன்முறையையும் ஆணவக்கொலையையும் ஊக்குவிப்பதாகவே அமையும்.
“தென்மாவட்டங்களில் சாதிய மோதல்களைத் தடுக்கச் சிறப்பு கண்காணிப்பு தீவிரம்; கிராமங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு சிறப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என தென்மண்டல ஐஜி குறிப்பிட்டுள்ளார். இது வெறும் அறிக்கையாக மட்டுமே இருந்துவிடக்கூடாது. ஏனெனில், இதற்கு முன்னதாக இதுபோன்று நிறைய அறிக்கைகளும் ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட ஒருநபர் ஆணையங்களும் பல்வேறு வழிமுறைகளைக் கொடுத்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய பணிகளில் பணியமர்த்தப்படுகின்ற காவலர்களும் காவல் அதிகாரிகளும் ஓரே சமூகப் பின்னணியைக் கொண்டவர்களாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதோடு, காலந்தாழ்த்தாமல் ஆணவப் படுகொலைகளுக்கான தனிச் சட்டத்தை இயற்றி, நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையும் நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது.
@Neelam_Culture
A new story. A new journey. A new milestone.
Zinema Media and Entertainment Limited Dinesh Raj proudly presents #ProductionNo3#Pavish3 titled #Attacker.
Tamil Cinema's first volleyball-based feature film.
Meet the Players of Attacker 🏐 Video Out Now
தென் மாவட்டங்களில் தொடரும் சாதிய வன்கொடுமைகளை தவெக தலைமையிலான அரசு
@TVKVijayHQ@CMOTamilnadu
இரும்புக்கரம் கொண்டு தடுத்திட வேண்டும். தொடர் சாதிய வன்முறைகளுக்கெதிரான தீர்மானகரமான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நேரமிது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பாபாசாகேப் அம்பேத்கர், ஐயா இமானுவேல் சேகரன், திரு பசுபதி பாண்டியன் ஆகியோரின் திருவுருவப் படங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டதால் பட்டியல் சமூகத்தினர் மீது தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறுபேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுபோன்ற வன்முறைகள் இப்பகுதியில் நடப்பது புதிதல்ல.
இச்சம்பவம் நடந்து மூன்று நாட்கள் கழிந்துவிட்டன. ஆயினும் இதற்கான தகுந்த நீதியாக கைது நடவடிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம் கொடுப்பது மட்டுமே இதை முற்றிலும் தடுத்துவிட முடியுமெனக் கருதிவிட முடியாது. மேலும், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கான பின்னணி என்ன? இதைத் தடுத்து நிறுத்துவதற்கான அரசினுடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதில் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நேர்மையான விசாரணைக் குழு ஒன்றை அமைத்து, இதுபோன்று தொடர்ந்து சாதிவெறி தலைவிரித்தாடுகின்ற பகுதிகளில் நியமித்திடவும் தற்போதைய தவெக தலைமையிலான அரசு ஆவண செய்திட வேண்டும்.
தொடர் சாதிய வன்முறைகள் கடந்த ஆட்சியைப் போல தற்போதைய புதிய ஆட்சியிலும் தொடர்வது ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைக்க விரும்புகிற ஓர் அரசிற்கு அழகல்ல. இதை தவெக தலைமையிலான அரசு சரியாகப் புரிந்துகொண்டு தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வலியுறுத்துவதோடு, அதற்குச் சில பரிந்துரைகளையும் நாங்கள் முன்வைக்க விரும்புகிறோம்.
குறிப்பாக, தென்தமிழக இளைஞர்களில் குறிப்பிட்ட சில சமூகப் பிரிவினரிடையே வன்முறைப் போக்கு அதிகரித்து வருகிறது. பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான இந்த வன்முறைகள், பொதுவான குற்றங்களோடு ஒப்பிட்டுக் கடந்து போகக்கூடியவை அல்ல. இதன் பின்னாலிருக்கும் காரணங்கள், சமூக உளவியல் உட்பட பல நிலைகளில் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை.
குற்றப்பின்னணி உள்ளவர்களைக் கைது செய்தல், வழக்கு தொடுத்தல் போன்ற சட்ட நடவடிக்கைகளோடு இதனை நிறுத்திக்கொள்ளாமல், கீழ்க்கண்ட சில பரிந்துரைகளையும் அரசு அமல்படுத்த வேண்டும் பட வேண்டும்.
1. தென்மாவட்டங்களில் சாதிய வன்முறை அதிகம் நிகழும் பகுதிகளை அடையாளங்கண்டு, மாவட்ட அளவில் சாதிய மோதல் தடுப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும். இதில் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசு அதிகாரிகள் இடம்பெற வேண்டும்.
2. பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்படும் வழக்குகளின் விசாரணையைக் கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு ஆய்வு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். வழக்குகள் நீண்ட காலம் நிலுவையில் இருப்பதைத் தவிர்க்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும்.
3. கடந்த திமுக ஆட்சியில், பள்ளிகளில் அதிகரித்த சாதியப் பாகுபாடுகளைக் களைய ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் கமிஷனின் பரிந்துரைகளின் தற்போதைய நிலை கண்டறியப்பட வேண்டும். அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற உத்தரவாதத்தை உறுதி செய்ய வேண்டும்.
4. பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டங்களில் இந்திய அரசியலமைப்பு, சமூகநீதி, சாதி எதிர்ப்பு வரலாறு, பாபாசாகேப் அம்பேத்கர் சிந்தனைகள் போன்றவை கட்டாயமான குடியுரிமைக் கல்வியின் ஒரு பகுதியாக வலுப்படுத்தப்பட வேண்டும்.
5. சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்யும் வகுப்புகள், நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். சமூக அறிவு, விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பொதுப் புழங்கு வெளிகளை அரசு அதிகப்படுத்த வேண்டும். சாதிய வன்முறைகள் அதிகம் நிகழும் பகுதிகளில் இளைஞர்களுக்கான விளையாட்டு மையங்கள், நூலகங்கள், கலை மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
6. தென்மாவட்ட காவல் நிலையங்களில், ஒரே சமூகத்தைச் சேர்ந்த காவலர்களையும் காவல் அதிகாரிகளையும் பணியமர்த்துவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
7. தென் தமிழகம் முழுக்க சாதியக் குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களில் பெரும்பாலானோர், சமூக வலைதளங்களில் சாதியப் பெருமிதத்தைக் கொண்டாடும் கலாச்சாரத்திற்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். சமூகவலைதளங்களில் சாதி வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கங்களைக் கண்காணிக்க மாநில அளவில் சிறப்பு இணையக் கண்காணிப்புப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும்.
தவெக @TVKVijayHQ
தலைமையிலான தமிழக அரசே
@CMOTamilnadu தொடர்ந்து நிகழும் ஆணவப்படுகொலைக்கு எதிரான தனிச்சட்டத்தை உடனடியாக இயற்றிட
நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது! @beemji
கோவை பகுதிக்குட்பட்ட சூலூரில் 10 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பது ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கி இருக்கிறது. சம்பந்தப்பட்ட குடும்பத்தை எந்த வகையிலும் ஆற்றுப்படுத்த முடியாத துயரம் இது.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்; உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்கிற உத்தரவாதமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அரசின் இந்த அறிவிப்போடு இக்கொடூரத்தை கடந்து போக முடியாது.
கடந்த தேர்தலில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் முக்கிய பேசுபொருளானது. அவை ஆட்சி மாற்றத்தில் சரி செய்யப்படும் என்கிற உத்தரவாதமும் கொடுக்கப்பட்டது.
தவெக அரசு @TVKVijayHQ
ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு வாரங்களே ஆகி இருந்தாலும், இத்தகைய குற்றங்களுக்கு முன்னே அதை ஒரு காரணமாக இனி ஒருபோதும் முன்வைக்க முடியாது. குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட வேண்டும். சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் இதை எல்லா விதங்களிலும் அணுகி, அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture தமிழக அரசை @CMOTamilnadu@CollectorCbe
வலியுறுத்துகிறது.
இந்த மனிதாபிமானமற்ற கொடூரத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர்களின் துயரத்தில் நாங்களும் பங்கெடுக்கிறோம்.
உறைந்த சாதியமும் அதை உருக விடாத சுப. வீரபாண்டியன்களும்:
பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் கருஞ்சட்டைத் தமிழர் இணைய இதழில் இன்று எழுதியுள்ள குறும் கட்டுரையில், த.வெ.க பட்டியலின சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியிருக்கும் பிரதிநித்துவத்தை பாஜக வழங்கியிருக்கும் பிரதிநித்துவத்தோடு ஒப்பிட்டு பேசுகிறார். “இவற்றை நாமும் பாராட்டுகிறோம்” என்று ஒரு வரியில் குறிப்பிட்டுவிட்டு, அந்த மாற்றத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத ஆதங்கமும் அதில் வெளிப்படுகிறது.
நீதிக்கட்சி காலத்திலிருந்தே, வெள்ளாளர் மற்றும் இடைநிலைச் சாதிகளிடம் குவிந்து கிடக்கும் அதிகாரத்திற்கு எதிராக நாம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறோம். அதன் நீட்சியாகத்தான் திமுகவையும் விமர்சிக்கிறோம். திமுக என்பது ஒரு தேர்தல் அரசியல் அதிகாரம். நம் விமர்சனத்தை அவர்கள் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாதது போல தோன்றினாலும், அந்த விமர்சனங்கள் அவர்களது அரசியலில் தாக்கம் ஏற்படுத்தாமல் போவதில்லை. குறிப்பாக இந்தத் தேர்தலில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள், பழைய திமுக அரசியலுக்கு ஒரு முக்கியமான படிப்பினையாக அமைந்துள்ளன. பழைய குறுநில மன்னர் அரசியலைத் தாண்டி, பிரதிநித்துவ அரசியலை மேலும் விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு உருவாகியுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டின் OBC அரசியலை சமூகநீதி அரசியலாக முன்வைத்து வந்த பல முற்போக்கு வட்டாரங்கள், அந்த அரசியலின் எல்லைகளை மறுபரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாக தெரியவில்லை. அதனால் தான் தற்போதைய த.வெ.க பிரதிநித்துவத்தை கூட, நேரடியாக எதிர்கொள்ளாமல் பாஜக அரசியலோடு ஒப்பிட்டு பேச வேண்டிய நிலை உருவாகிறது.
சுப.வீரபாண்டியன் அவர்களிடம் சில கேள்விகள்:
பிரபஞ்ச அளவில் ஒப்பிட்டுப் பார்த்தாலும், “எங்கள் சமூகநீதியே சிறந்த சமூகநீதி” என்று நம்பும் திமுக, ஏன் இதுவரை இப்படியான பிரதிநித்துவத்தை சாத்தியப்படுத்தவில்லை?
தேசிய காங்கிரஸ் கட்சி, அகில இந்திய தலைவராக ஒரு தலித்தை தேர்வு செய்து அவருக்கு உரிய அதிகாரத்தையும் வழங்கியிருக்கிறது. ஆனால், திராவிட இயக்க அரசியலில் தலித்துகள் தலைமை நிலைக்கு வருவது ஏன் இன்னமும் சாத்தியப்படவேயில்லை?
தேசிய காங்கிரஸ் தன் குடும்பத்திற்கு வெளியிலிருந்து பல பிரதமர்களை உருவாக்கியிருக்கிறது. ஆனால் அண்ணா மறைவுக்குப் பிறகு கலைஞர் குடும்பத்திற்கு வந்த அதிகாரம், ஏன் அங்கேயே தேக்கம் கண்டிருக்கிறது?
அண்டை மாநிலமான ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்கள் உட்பட ஐந்து துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் திமுகவில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மட்டுமே துணை முதல்வராக முடிகிறது. இது எந்த வகையான ஜனநாயக மாதிரி?
கருணாநிதி மாவட்ட அளவில் தலித்துகளுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவியை வழங்கும் திருத்தத்தை கொண்டு வந்தார். ஆனால் அந்த அமைப்பிலிருந்து, துரைமுருகன், பொன்முடி, MRK பன்னீர்செல்வம், ஐ. பெரியசாமி, எ.வ.வேலு, கே. என்.நேரு, ஆவுடையப்பன், கீதா ஜீவன், தங்கம் தென்னரசு, கதிர் ஆனந்த், கௌதம சிகாமணி, த.மோ அன்பரசன், பெரியகருப்பன் , RD சேகர், சேகர் பாபு போன்ற மாநிலம் முழுக்க அறியப்பட்ட ஆளுமைகள் உருவானது போல, எத்தனை ஆளுமைமிக்க வட்டார தலித் தலைவர்கள் உருவாகியிருக்கிறார்கள்?
தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க பங்காக இருக்கும் பட்டியலின மக்களிலிருந்து, 72 மாவட்ட செயலாளர்களில் பத்து பேரைக் கூட திமுக தொடர்ந்து உருவாக்க முடியவில்லையென்றால், இந்தக் கட்சியின் சமூகநீதி அரசியல் யாருக்காக செயல்படுகிறது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
இது போன்ற ஏராளமான கேள்விகளை வரலாற்றின் பல பக்கங்களில் இருந்து முன்வைக்க முடியும். அவற்றை ஆரோக்கியமான விமர்சனமாக எடுத்துக்கொண்டு, ஆதிக்கச் சாதிகளிடம் குவிந்து கிடக்கும் அதிகாரத்தை உடைத்து, புதிய மாற்றங்களை நோக்கி நகர வேண்டிய தேவை இருக்கிறது.
பாஜகவை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தி எல்லா விமர்சனங்களையும் திசைதிருப்பும் அரசியல் நீண்ட காலம் நீடிக்காது. நேர்மையான விமர்சனங்களையும், புதிய தலைமுறையின் பிரதிநித்துவக் கோரிக்கைகளையும் எதிர்கொள்ள வேண்டிய காலம் இது.
முன்முடிவுகளற்ற ஒரு புதிய பிரதிநித்துவ அரசியல் உருவாகத் தொடங்கியுள்ளது. அதுவும் இத்தனை ஆண்டுகளாக முன்வைக்கப்பட்ட விமர்சனங்களின் விளைவே. அந்த மாற்றங்களை வளர்த்தெடுக்க வேண்டும். முற்போக்கு அரசியலுக்குள்ளேயே உறைந்து கிடக்கும் சாதி மனநிலைகளை, புதிய தலைமுறை உருவாக்கும் மாற்றங்கள் கேள்விக்குள்ளாக்கத் தொடங்கியிருக்கின்றன.
பாரதிய ஜனதா என்கிற ஒரு வார்த்தையை நீக்கி விட்டால், உங்கள் கட்டுரை ஆதிக்கச் சாதியின் குமுறல் மட்டுமே, அதன் பொருட்டே இந்த ஒப்பீடு உங்களுக்கு தோன்றுகிறது என்பதை லட்சக்கணக்கான தலித் இளைஞர்கள் அறிவர். அவர்களது நம்பிக்கையை பெற முன்முடிவுகளற்று பேசும் நேர்மையை பெறுங்கள்.
சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும்
விடுதலைச் சிறுத்தைகள் @thirumaofficial கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் வன்னியரசு @VanniTamizhVCK அவர்களுக்கு நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நெடுங்காலமாக இருந்து வருகிற துறையாக இருந்தாலும், அது உருவாக்கப்பட்டதின் நோக்கத்தை உணர்ந்து, பட்டியலின மக்களின் அரசியலைப் பேசி வளர்ந்த ஒரு இயக்கத்தின் கைகளுக்கு இன்று அது வந்திருக்கிறது. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வியலையும் உரிமைகளையும் மையமாக வைத்து, இத்துறை உண்மையான மாற்றங்களுக்கான கருவியாக செயல்பட வேண்டும். அந்தப் பொறுப்பை தோழர் வன்னியரசு அவர்கள் சிறப்பாக முன்னெடுப்பார் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும்
(IUML) @IUMLTNOfficial கட்சியைச் சேர்ந்த தோழர் ஷாஜகான் அவர்களுக்கும்
மனமார்ந்த வாழ்த்துகள்.
இதை சாத்தியப்படுத்திய தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்
@TVKVijayHQ அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். @CMOTamilnadu
ஜெய் பீம்!
தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது.நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்புகிறோம். சமூகநீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை; கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும்.
இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடும்போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசுக்கும் @CMOTamilnadu
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் @TVKVijayHQ
அவர்களுக்கும் நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture
தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
ஜெய் பீம்!
வேர்ச்சொல் இலக்கிய விருது 2026
'வேர்ச்சொல் இலக்கிய விருது' என்பது நீலம் பண்பாட்டு மையத்தின் முன்னெடுப்பில் கடந்த நான்கு வருடங்களாகக் கொடுக்கப்படும் விருதாகும். தமிழ் இலக்கியத்தின் திசைவழிப்போக்கை மாற்றியதில் தலித் இலக்கியத்திற்கு முக்கியப் பங்குண்டு. அதில் பெரும் பங்காற்றிய எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரைக் கௌரவிப்பதும், அவர்களது படைப்புகளை ஆய்வுநோக்கில் நினைவுகூர்வதும் ‘வேர்ச்சொல் இலக்கிய விருதின்’ நோக்கமாகும். அதன் அடிப்படையில் கடந்த 2022ஆம் ஆண்டுக்கான 'வேர்ச்சொல் இலக்கிய விருது' அறிஞர் ராஜ் கௌதமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு எழுத்தாளர், கலை விமர்சகர் இந்திரன் அவர்களுக்கும், 2024ஆம் ஆண்டுக்கான விருது எழுத்தாளர் பாமா அவர்களுக்கும், 2025ஆம் ஆண்டுக்கான விருது எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர் ப.சிவகாமி அவர்களுக்கும் வழங்கப்பட்டது. விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் இலக்கிய ஆளுமைகள் குறித்த ஆவணப்படம், தொகுப்பு நூல், அவர்களது படைப்பாக்கம் குறித்த விரிவான கலந்துரையாடல் ஆகியவற்றுக்குப் பிறகு ஒரு இலட்சம் ரூபாய் காசோலையோடு 'வேர்ச்சொல் விருது' அளிக்கப்பட்டுவருகிறது.
இந்த ஆண்டிற்கான (2026) ‘வேர்ச்சொல் விருது' கவிஞர், நாடகக் கலைஞர் என்.டி.ராஜ்குமார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். சமவெளியின் நாகரிக வாழ்வால் செரிக்கப்படாத பழங்குடி சொல்மரபை நவீன தமிழ்க் கவிதைக்கு அறிமுகப்படுத்தியவர் என்.டி.ராஜ்குமார். அவரது கவிதைகள் வடிவத்தால் மட்டுமல்லாமல் உள்ளடக்கத்தாலும் தமிழில் முக்கியப் பங்காற்றியிருக்கின்றன. வைதீக மதங்களையும், அதன் பொய்க்கதைகளையும் கலைத்துக் காட்டுவதோடு, பூர்வக்குடிகள் தங்களுக்கெனச் சொந்தமாகக் கொண்டிருந்த பெரும் பரப்பைத் தன் கவிதைக்குள் விரித்துக் காட்டின. நீலம் பண்பாட்டு மையம் சார்பாக 'வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை' இரண்டு நாட்கள் நிகழ்வாக வரும் ஏப்ரல் 18, 19 தேதிகளில் சென்னை முத்தமிழ்ப் பேரவை, டி.என்.இராஜரத்தினம் கலை அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. கூடுகையின் இரண்டாம் நாள் (19.04.2026) மாலை நான்கு மணியளவில், 2026ஆம் ஆண்டுக்கான வேர்ச்சொல் இலக்கிய விருதை, கவிஞர் என்.டி.ராஜ்குமார் அவர்களுக்கு வழங்குவதில் பெருமையடைகிறோம், மகிழ்ச்சியடைகிறோம். @Neelam_Culture@NeelamPublicat1
#ஜெய்பீம்🌸💙
கலை, இலக்கியம், அரசியல் ஆகியவற்றில் தலித் மக்கள் நெடிய வரலாற்றை கொண்டவர்கள். வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் தலித் மக்கள் செய்த பணிகள், அதனால் நிகழந்த மாற்றங்கள், உருப்பெற்ற உரையாடல்கள் உள்ளிட்டவற்றை இம்மாதம் முழுவதும் நினைவுகூருவது, காட்சிப்படுத்துவது, உரையாடலுக்கு உட்படுத்துவது என்பதே வானம் தலித் வரலாற்று மாத கொண்டாட்டத்தின் மைய நோக்கம்.🎉❤️🌸💙
முதல் நிகழ்வாக தலித் வரலாற்று மாத கண்காட்சியும், துவக்க விழாவும் நடைபெறவுள்ளது. அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.💙🎉💥🌸
@beemji@Vaanam_Art@Neelam_Culture@NeelamPublicat1@NeelamBooks@KoogaiThirai@NeelamSocial@NeelamEntertain
#vaanamartfestival5thedition
#dalithistorymonth #inauguration
#babasahebambedkar💙
Director and Founder of Neelam Cultural Centre @beemji invites you all to be a part of the 🎉Dalit History Month Vaanam Art Festival 5th Edition 🎉✨💙💥🎭
Register now, grab your pass at KYN:
https://t.co/XpYhRzM6Fv
@beemji@Neelam_Culture#vaanamartfestival2026
‘பஹிஷ்கிரித் பாரத்’ நூல் முன்பதிவுத் திட்டம்📚
‘பஹிஷ்கிரித் பாரத்’, பாபாசாகேப் அம்பேத்கரால் 1927-1929 காலகட்டத்தில் நடத்தப்பட்ட இதழ்.📚🌸💙
மராத்தியில் வெளிவந்த இந்த இதழின் கட்டுரைகள் முழுத் தொகுப்பு வடிவில் முதன்முறையாகத் தமிழில் வெளிவரவிருக்கிறது. மொத்தம் நான்கு பாகங்களாக, நேர்த்தியான வடிவமைப்போடு உருவாக்கப்பட்டிருக்கும் இந்நூல் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னையில் வெளியிடப்படுகிறது.❤️🎉
1200 பக்கங்கள்
நூலின் விலை ரூ.1500
முன்பதிவுத் திட்டத்தில் ரூ.999 (கொரியர் கட்டணம் உட்பட)
முன்பதிவுத் திட்டத்தின் மூலம் நூலைப் பெற விரும்புவோர் போஸ்டரில் உள்ள QR Code மூலம் பணம் செலுத்தி, அல்லது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தி செலுத்தப்பட்ட விவரத்தையும், உங்கள் முகவரியையும் (6369825175) இந்த Whatsapp எண்ணிற்கு அனுப்பவும்.📲
NEELAM CULTURAL CENTRE PRESENTS VAANAM ART FESTIVAL 5th EDITION ✨💙
💥DALIT HISTORY MONTH💥
PK ROSY FILM FESTIVAL 2026 organized by KOOGAI THIRAIPADA IYAKKAM 🎬🔥
One massive film festival. Countless powerful films. Just one pass.
Register now, grab your pass at KYN:
https://t.co/UyIrKsF1Fb
Step into a space filled with cinema, conversations, and energy. Watch bold stories. Argue, debate, celebrate them.
This isn’t just a festival, it’s where cinema meets people.
JAI BHIM 💙🎉
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட போவதாக வந்த அறிவிப்பு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பதாக உள்ளது.
தமிழகத்தின் சமகால அரசியல் சூழலையும், சமூகநீதி சார்ந்த எதிர்காலத்தையும் கணக்கில் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இம்முடிவு முக்கியமானதும் பொருத்தமானதும் ஆகும். தமிழக சட்டமன்றத்தில் சாதி ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு, மனித உரிமைகள் போன்ற விடயங்களில் அவரது குரல் வலிமையாக ஒலிக்க வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது.
ஜனநாயகத்தை காக்கவும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்கள் மகத்தான வெற்றியடைய வாழ்த்துகள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டு களம் காணவிருக்கும் அனைவரும் சட்டமன்றத்தில் அண்ணன் அவர்களது தலைமையில் வலுவான குரலாக ஒலித்திட வாழ்த்துகள், மகிழ்ச்சி. @thirumaofficial@VCKofficial_
எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை
பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங்.
கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது.
இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது.
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.
ஜெய்பீம்
#PorkodiArmstrong
#JusticeForArmstrong
#Jaibhim