நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடு குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பியதற்காக என்னை இடைநீக்கம் செய்ததைக் கண்டித்து நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் #திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
நாளை 22.12.2023
காலை 10 மணிக்கு
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில்
பாசிச பிஜேபி அரசின் சனநாயக படுகொலையை கண்டித்தும்
140 க்கும் மேற்பட்ட
இந்தியா கூட்டணி கட்சிகளின்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும்
நாடாளுமன்ற அவையில் நாட்டின் பாதுகாப்பை கேலிக்கூத்தாக்கி அத்துமீறி நுழைந்து வண்ண புகைக் குண்டுகள் வீசிட காரணமான
மோடியும் அமித்சாவும் பதவி விலக வலியுறுத்தியும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது
தோழர்கள் பெருந்திரளாய் பங்கேற்க வேண்டுகிறோம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. @thirumaofficial அவர்கள் நாளை தனது பிறந்தநாளையொட்டி மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
'திருமாமணி' மணிவிழா மலர் வெளியீடு
'திருமாமணி' எனும் மணிவிழா மலரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள் வெளியிட திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் பெற்றுக் கொண்டார்
'#திருமாமணி' மணிவிழா மலர் வெளியீட்டு விழாவில்
#கருத்தியல்_கவியரங்கம்:
மக்கள்கவி #கபிலன் தலைமையில் நடைபெற்றது.
கவியரங்கத்தின் தொடக்க உரையாக கவிஞர் #காசிமுத்துமாணிக்கம் கவிதை பாடினார்.
கவிஞர் தமிழ் மணவாளன், கவிஞர் இரவிக்குமார், கவிஞர் தனிக்கொடி, கவிஞர் இனியன், கவிஞர் தேன்மொழி தாஸ், கவிஞர் அருண் பாரதி ஆகிய கவிஞர்கள் கருத்தியல் கவிப்பாடி வாழ்த்தினார்கள்.
ஆக17 - தமிழர் எழுச்சி நாள்:
----------------------------------
ஆக- 17 அன்று காலையில் சென்னையில் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின்னர்,
அன்று மாலை 4.00 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் வானூரில் விழுப்புரம் தென்கிழக்கு மாவட்டத்தின் சார்பில் ஒருங்கிணைக்கப்படும் 'அகவை அறுபது நிறைவு விழாவில்' பங்கேற்கிறேன்.
இந்நிகழ்வில் புதுவை மேனாள் முதல்வர் திரு. #நாராயணசாமி அவர்களும் திமுக
மக்களவை உறுப்பினர்
திரு. #ஜெகத்ரட்சகன் அவர்கள்
உள்ளிட்ட பல தலைவர்களும், புரட்சிக்கனல் #இளையகம்பன் அவர்கள் உள்ளிட்ட பல கவிஞர்களும் பங்கேற்றுச் சிறப்பிக்கவுள்ளனர்.
அவ்விழாவில்
60 சவரன் பொற்காசுகள் வழங்குகின்றனர்.
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த பொறுப்பாளர்கள் யாவரும் தஙறாமல் பங்கேற்றுச் சிறப்பிக்கவும்.
#HBDThiruma60 #VCK
இன்று நாடாளுமன்றத்தில் பாஜக அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வரவேற்று, ஒட்டுமொத்தத்தில் அனைத்துதரப்பு மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கிற பிரதமர் மோடி தலைமையிலான இந்த அமைச்சரவையின் மீதான எனது நம்பிக்கையின்மையை தெரிவித்து உரையாற்றினேன்.
#NoConfidenceMotion