தமிழ்நாடு இன்றைக்கு அடைந்துள்ள சமூகப் பொருளாதார முன்னேற்றம், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சென்று சேரும் வகையில் பரவலாக்கப்பட்டு சமூக நீதித் தளத்தில் நாட்டிற்கே வழிகாட்டியாக விளங்குவதற்கு அடித்தளமிட்ட திராவிட இயக்கத்தின் ஆணிவேரான நீதிக்கட்சி துவக்கப்பட்டு 108 ஆண்டுகள் ஆகின்றன.
வசதியான பின்புலத்தைக் கொண்டிருந்தாலும், நம் சமூகத்தில் பெரும்பான்மையான மக்களுக்குக் கல்வியறிவும், பொருளாதார வளர்ச்சியும், சமூக சமத்துவமும் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்குடைய தன்னலமற்ற தலைவர்களால் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி தமது ஆட்சிக் காலத்தில் நிகழ்த்திய சாதனைகள் தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் நினைவு கூர்ந்து, போற்றத்தக்கதாகும்!
The Justice Party, the bedrock of the Dravidian Movement, laid the groundwork for Tamil Nadu's current socio-economic progress. On the 108th anniversary of its foundation, we salute and celebrate its unparalleled legacy of social justice.
Despite hailing from privileged backgrounds, the visionary and selfless leaders who founded the Justice Party were driven by a noble objective—to ensure that education, economic growth, and social equality reached the masses. The achievements of the Justice Party during its time in power remain etched in the collective memory of the Tamil people, serving as a testament to its enduring legacy!
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரை வேதாரண்யத்தைச் சார்ந்த சகோதரி சிவரஞ்சனி அறிந்து, படித்து #என்_உயிரினும்_மேலான கலைஞர் நூற்றாண்டுப் பேச்சுப் போட்டியில் வென்று கழக மேடைகளில் முழங்கவுள்ளார்! 👏❤️
தாய்மொழி தமிழையும், திராவிடத்தையும் தன் உயிருக்கு மேலாக நேசித்த தலைவரை கொண்டாடும் 'கலைஞர் 100 வினாடி வினா' போட்டியின் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பிரிவில் சென்னை மண்டலதில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறிய அணி எவ்வாறு கலைஞர் அவர்களால் ஈர்க்கப்பட்டோம் என்பதை பகிர்ந்துக்கொள்கிறார்கள்!
#Kalaignar100quiz #vinaadivinaa
3 ஆண்டுகளுக்கு முன்பு நம் @dmk_youthwing மூலம் உதவி பெற்ற மாற்றுத்திறனாளி உடன்பிறப்பு ஒருவர் இன்று பலருக்கு உதவும் ஏணியாய் உயர்ந்திருக்கிறார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் வென்று சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்த நம்மை தூத்துக்குடியிலிருந்து மூன்று சக்கர மோட்டார் சைக்கிளில் வந்திருந்தார் தம்பி ஜஸ்டின்.
‘நான் வாழ்வில் முன்னேற துணை நில்லுங்கள் அண்ணா’ என்று உரிமையுடன் கரங்களைப் பற்றினார். சிறுதொழில் தொடங்கிட ஏதுவாக கழக இளைஞரணி சார்பில் அவருக்கு தூத்துக்குடி மாவட்ட அரசு பொது மருத்துவமனை அருகில் தேனீர் மற்றும் ஜுஸ் கடை ஒன்றை அமைத்துத் தந்தோம். அதற்கு நம்முடைய பெயரையும் அவர் சூட்டினார்.
இந்த 3 ஆண்டுகளில், தன்னம்பிக்கையோடும் திறமையுடனும் தன்னுடைய கடையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தான் ஈட்டும் வருவாயில் ஒரு பகுதியை தன்னால் இயன்ற அளவுக்கு சமூக நலனுக்கும் செலவிடுகிறார்.
அந்த வகையில், தம்பி ஜஸ்டினின் ஏற்பாட்டில் சென்றாண்டு 3 தையல் மெஷின்கள் மற்றும் இரு மூன்று சக்கர வாகனங்களை பயனாளிகளுக்கு வழங்கினோம்.
இதைத்தொடர்ந்து இன்றைக்கு மேலும், 5 தையல் மெஷின் மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு மூன்று சக்கர வண்டிகளை தம்பி ஜஸ்டினின் அவர்களுடைய ஏற்பாட்டில் இன்று வழங்கினோம்.
‘வாழ்க்கையில் உயர்ந்திட உதவுகள்’ என்ற அவர், இன்று பிறர் உயர பறக்க சிறகுகள் தந்து கொண்டிருப்பதை நேரில் காணும் போதும் மகிழ்ச்சியாகவும் – பெருமையாகவும் இருக்கிறது.
வாழ்த்துகள் ஜஸ்டின்! உங்கள் பணிகள் தொடரட்டும்!
@geethajeevandmk@ARROffice@Joel_Dmk #InbaRaghu #Mathiyalagan
மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் - இராஜபாளையம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் அண்ணன் @SThangapandian2 அவர்களின் அன்பு மகன் தம்பி லட்சுமணன் - அக்ஷயா இணையரின் திருமணத்தை தூத்துக்குடியில் இன்று நடத்தி வைத்தோம்.
மணமக்கள் இருவரும் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தினோம்.
தங்களுக்கு பிறக்கின்ற குழந்தைக்கு திராவிட இயக்க வழியில் அழகிய தமிழ்ப்பெயரை சூட்டிட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டோம்!
@KKSSRR_DMK@TThenarasu@geethajeevandmk@ARROffice
அரசு சேவைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வட்டாட்சியர் அலுவலகங்களின் பங்களிப்பு முக்கியமானது. அந்த வகையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்றைய தினம் ஆய்வு மேற்கொண்டோம்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேஷன் அட்டை - வாக்காளர் அட்டை - நில அளவை - வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்கள் வழங்குவது போன்ற மக்களுக்கான சேவைகள் செயல்படுத்தப்படும் விதம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தோம்.
மேலும், வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வருகின்ற பொதுமக்களை கனிவோடு நடத்தி, அவர்களுக்கான சேவைகளை நிறைவேற்றித் தந்திட வலியுறுத்தினோம்.
@geethajeevandmk@ARROffice@shunmugaiah_mla
நாளை நடைபெறும் திருமண நிகழ்ச்சி, அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையத்தில் இருந்து இன்று தூத்துக்குடிக்கு வருகை தரும் வழியில் மாவட்ட எல்லையில் தூத்துக்குடி வடக்கு மாவட்டக்கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பை அளித்து, அன்பால் என்னை நெகிழச்செய்த கழகத்தினர் - இளைஞர் அணி தம்பிமார்கள் - பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் அன்பும், நன்றியும்.
@geethajeevandmk
பெண்களுக்காக களம் அமைத்துக் கொடுப்பதில், எப்போதும் முன்நிற்பது நம் திராவிட முன்னேற்றக் கழகம். ஆண்களுக்கு நிகராகப் போராட்டக் களங்களிலும் பொதுக்கூட்ட மேடைகளிலும் பெண்கள் பங்குபெற்றதால்தான் நம் திராவிட இயக்கம், திசைகள் எங்கும் வளர்ந்தது.
அந்தவகையில், கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin அவர்களின் வழிகாட்டுதலுடன் @dmk_youthwing நடத்திய #என்_உயிரினும்_மேலான கலைஞர் நூற்றாண்டுப் பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசு வென்றார், வேதாரண்யத்தைச் சேர்ந்த அன்புத் தங்கை சிவரஞ்சனி.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரை இவர் எப்படி அறிந்துகொண்டார், எப்படி உள்வாங்கினார் என்பதை அவரே சொல்கிறார் கேளுங்கள்…
#கலைஞர்100