ஆட்சிக்கு பொறுப்பேற்ற கொஞ்ச நாளிலேயே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்கள் பயத்தோடு வாழும் நிலை உருவாகி இருக்கிறது. கோவையில் குழந்தை மீது நடைபெற்ற கொடூர சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறது. ஆனால் அதைப் பற்றி பேச வேண்டிய அமைச்சர்கள் கூட பொறுப்புணர்வில்லாமல் நடந்து கொள்வது வேதனையாக இருக்கிறது.
ஒரு பெண் அமைச்சர் இத்தனை கொடூரமான சம்பவம் குறித்து சிரித்தபடி பதில் சொல்கிறார். இன்னொரு அமைச்சர் தன்னுடைய துறையே தெளிவாக தெரியாமல் பேசி வருகிறார். கோவையை சேர்ந்த அமைச்சரோ “கம்ப்ளைன்ட் வருவதற்கு முன்பே சம்பவம் நடந்துவிட்டது” என்று பொறுப்பை தட்டிக்கழிக்கும் விதமாக பேசுகிறார்.
மக்கள் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு என்று மேடைக்கு மேடை பேசி வந்த உங்கள் முகமூடி இப்போது ஒவ்வொன்றாக கிழிய ஆரம்பித்துவிட்டது விஜயண்ணா!
#TVKFails
நாளை காலை 10 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் திராவிடர் கழகம் சார்பில் "இந்தியா முழுவதும் நீட்டை ஒழிக்க வலியுறுத்தி" கண்டன ஆர்ப்பாட்டம்.
#neetscam#neetscam2026#banneet
தமிழ்நாட்டை பின்னுக்கு இழுக்கும் NDA கூட்டணியை விலக்கி வைப்போம்.
தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு முன்னெடுத்துச் செல்லும் திமுக கூட்டணி வெல்ல உறுதியேற்போம்😎✋
#வெல்வோம்_ஒன்றாக
திராவிட அறநெறியாளர் - தமிழவேள் பி.டி.ராஜன் அவர்களின் 'வாழ்வே வரலாறு'தான்!
மாண்புமிகு @ptrmadurai மட்டுமல்ல, நாமும் அவரது வாரிசுகள்தான்! நமது #DravidianModel ஆட்சியே நீதிக்கட்சியின் நீட்சிதான்...
1973-இல் பி.டி.ராஜன் அவர்களின் 82-ஆவது பிறந்தநாள் விழாவில் தலைவர் கலைஞரும் அவரது அமைச்சரவையும் கலந்துகொண்டனர். இன்று அவரது வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டில் நானும் நமது அமைச்சரவையும் கலந்துகொள்கிறோம்...
"வெற்றியோ தோல்வியோ... நிற்குநிலை மாறாது நில்" எனப் பெரியவர் #PTRajan அவர்கள் சொன்னபடி, சுயமரியாதைக் கொள்கையில் உறுதியாக இருந்து நடைபோடுவோம்!
வாழ்வில் ஓர் பொன்னாள், இந்நாள்!
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளிலும் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் உன்னதச் சட்டத்தை இன்று சட்டமன்றத்தில் முன்மொழிந்தேன்!
12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குரல்கள் உள்ளாட்சி மன்றங்களில் இனி ஒலிக்கும்! இதுதான் #DravidianModel!