@Lyricist_Vivek இதுக்கு மேல் ஒரு ரசிகனுக்கு என்ன வேண்டும், விவேக் அண்ணா ஒரு கலைஞர் என்பதை தாண்டி ஒரு மிக சிறந்த மனிதர் என்பதை தெரிந்துக் கொண்டேன் , உங்கள் தமிழுக்கும் அன்புக்கும் என்றும் நான் வெறித்தனமான ரசிகன் அண்ணா
என்றும் உங்கள் அன்பு தம்பி
அருண்
“சினிமாவில் விஜய் என அறிமுகமாகிவிட்டு,
அரசியலில் மட்டும் ஜோசப் விஜய் என போடுவதற்கு காரணம் என்ன?”என்று ‘புத்திசாலி’த்தனமாக கேள்வி எழுப்பியுள்ளார் நடிகரும்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான
திரு @Seeman4TN அவர்கள்.
இப்படியான புத்திசாலித்தனமான கேள்வியை இந்து முன்னணி தலைவர் அர்ஜூன் சம்பத்,
பாஜக எச்.ராஜா போன்றோர் முன்னரே மத வெறுப்பாக கக்கினர்.
இப்போது அதையே
திரு.சீமானும் வழிமொழிகிறார்.
சினிமாவில் அறிமுகமானவர்கள் புனை பெயரிலோ அல்லது சுருக்கமான பெயரிலோ
அறிமுகமாவார்கள்.
வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா உள்ளிட்ட எத்தனையோ இயக்குனர்கள் தாங்கள் அறிமுகப்படுத்திய நாயகன்,நாயகிகளின் பெயர்களை
மாற்றி சூட்டியிருக்கிறார்கள்.
சினிமாவில் எந்த சட்டமுறையும் இல்லை.
ஆனால், தேர்தல் அரசியலில் நிற்பவர்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
முழுப்பெயரையும் பதிவிட வேண்டும்.சொத்துக்களை மறைப்பது போல
பெயரின் பாதியை மறைப்பதும் குற்றம்.
இவை எல்லாம் பல முறை தேர்தலில் நின்ற திரு.சீமான் அவர்களுக்கும் தெரியும்.
ஆனாலும் அர்ஜூன் சம்பத் போன்ற
#RSS கும்பலின் மத வெறுப்பையே கக்குவது ஏன்?
மைக்கேல் பட்டி லாவண்யா வழக்கில் கிறித்தவ வெறுப்பை பரப்பிய திரு.அண்ணாமலை அவர்களுக்கும்
திரு.சீமானுக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா?
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
4.8.2026
உயர் சிறப்பு ( Super speciality) மருத்துவ இடங்களை பொறுத்த மட்டில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 422 இடங்களில், 219 இடங்கள் நம் மாநில மருத்துவர்களுக்கும்( state quota) மீதமுள்ள இடங்கள் All India Quota விற்கும் ஒதுக்கப்பட்டதாகும்.
கடந்த ஆண்டுகளில் கலந்தாய்வு முடிந்தபின் state quota வில் நம் அரசு மருத்துவர்கள் கொண்டு நிரம்ப முடியாத இடங்கள் அனைத்தும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டது என்பதை மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் @Udhaystalin அறிவாரா? நாம் சரண்டர் செய்த பிறகு, குறைந்தபட்ச சதவீதத்தை ( cut off) குறைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நமக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் "All India merit list" மூலம் நிரப்பப்பட்டதனால் தமிழ்நாட்டு அரசு மருத்துவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர் என்பதையும் அவர் அறிவாரா? 2024-ல், 119 இடங்களும், 2025-ல் 145 இடங்களும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டன என்பது வரலாறு. தங்கள் கடிதத்தில் சென்ற 2025 ஆண்டில் நிரப்பப்படாமல் இருந்த 152 இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு செல்வது தடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது உண்மைக்கு புறம்பான செய்தி.
ஆனால் இந்த ஆண்டு, state quota வில் 151 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தபோதும், மாண்புமிகு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களின் தலைமையிலான தமிழக அரசு அவற்றை சரண்டர் செய்ய மறுத்து, இது தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் உரிய முறையில் வாதங்களை முன் வைத்தது. ஒன்றிய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குறைந்தபட்ச சதவீதத்தைக் குறைப்பது பற்றிய முடிவு பின்னர் எடுக்கப்படும் என்ற வாதத்தை வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாண்பமை உச்சநீதிமன்றம் தனது 29.05.2026 நாளிட்ட தீர்ப்பில் 151 இடங்களை சரண்டர் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
நம் மாநில தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மருத்துவர்கள் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பதே மாண்புமிகு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களின் தலைமையிலான தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு. எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, நம் மருத்துவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம், மறுசீராய்வு மனுவினை உடனடியாக 04.06.2026 அன்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
கிராமப்புற மக்களுக்கும் உயரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதிலும், நம் மாநில உரிமை சார்ந்த இட ஒதுக்கிடு நிலைப்பாட்டிலும் தமிழக வெற்றிக் கழகம் எப்பொழுதும் உறுதியுடனும், துரிதமாகவும் செயல்படும் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
தம்பி திரு.நிமல் ராகவன் அவர்களுக்கு வணக்கம்.
நீர்நிலைகள் சீரமைப்பு பணிகளில் தங்களுக்கு அனுமதி கிடைப்பதில் சிரமமாக இருக்கிறது என்ற தங்களின் பதிவை பார்த்தேன்.
தங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் தலைமையின் கீழ் உள்ள இந்த அரசு மக்களின் நலன் சார்ந்த அரசு, மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிற அரசு.
மாண்புமிகு முதல்வரின் அறிவுறுத்தலின்படி தங்களின் கோரிக்கை விரைந்து பரிசீலிக்கப்படும் என்று தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி.
@TVKVijayHQ
சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும்
விடுதலைச் சிறுத்தைகள் @thirumaofficial கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் வன்னியரசு @VanniTamizhVCK அவர்களுக்கு நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நெடுங்காலமாக இருந்து வருகிற துறையாக இருந்தாலும், அது உருவாக்கப்பட்டதின் நோக்கத்தை உணர்ந்து, பட்டியலின மக்களின் அரசியலைப் பேசி வளர்ந்த ஒரு இயக்கத்தின் கைகளுக்கு இன்று அது வந்திருக்கிறது. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வியலையும் உரிமைகளையும் மையமாக வைத்து, இத்துறை உண்மையான மாற்றங்களுக்கான கருவியாக செயல்பட வேண்டும். அந்தப் பொறுப்பை தோழர் வன்னியரசு அவர்கள் சிறப்பாக முன்னெடுப்பார் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும்
(IUML) @IUMLTNOfficial கட்சியைச் சேர்ந்த தோழர் ஷாஜகான் அவர்களுக்கும்
மனமார்ந்த வாழ்த்துகள்.
இதை சாத்தியப்படுத்திய தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்
@TVKVijayHQ அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். @CMOTamilnadu
ஜெய் பீம்!
https://t.co/2ghv9IhVXX
திருவாரூர் மாவட்ட காவல்துறை
மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் விசாரணை செய்ததில் முத்துப்பேட்டை சேர்ந்த செய்தியாளர் திரு ஹாஜாமுதீன் என்பவர் அதிராம்பட்டிணத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
பெண்ணின் உறவினரான முத்துப்பேட்டை ஐ சேர்ந்த அப்பாஸ் (எ)முகமது யூனிஸ் என்ற நபர் 18.05.2026 அன்று இரவு தனது நண்பர்களான அப்துல் பாஷித், புதுத் தெரு , முத்துப்பேட்டை, மற்றும் சபிக் அகமது , பேட்டை ரோடு,முத்துப்பேட்டை ஆகியோர்களுடன் திரு காஜா மொய்தீன் அவர்களின் வீட்டிற்கு சென்று தகாத தொடர்பு சம்பந்தமாக பிரச்சனை செய்து பின்னர் தங்கள் கொண்டு வந்திருந்த பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் உடனடியாக கு/எண் 156/2026 ச/பி 296(b),118(1),351(3) BNS படி வழக்கு பதிவு செய்து வழக்கின் எதிரிகள் மூவரில் அப்துல் பாஷித் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் தலைமறைவு எதிரிகளான சபிக் அகமது மற்றும் அப்பாஸ் (எ) முகமது யூனிஸ் ஆகியோரும் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேல் சொல்லப்பட்ட நிகழ்வு தனிப்பட்ட விரோதத்தினால் நடந்ததே தவிர மேற்கூறியவாறு கஞ்சா போதையினாலோ கஞ்சா தொடர்பான விரோதத்தினாலோ நடந்தது அல்ல. மேலும் செய்தி ஊடகங்களும், மற்றவர்களும் பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் என இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது
@tnpoliceoffl@CMOTamilnadu