"முதலில் ஸ்டாலின் தான் புத்தகத்தை வெளியிட வேண்டும்..நான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் ஆதவ் அர்ஜுனாவின் எண்ணம்..ஸ்டாலினிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை..அதற்கு பிறகு தான் பிளான் மாறியது"..பல உண்மைகளை உடைத்து பேசிய திருமாவளவன்
#Thirumavalavan | #VCK | #Maduranthakam | #ByElection | #CMVijay | #AadhavArjuna | #MKStalin | #DMK | #RahulGandhi | #Congress
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் சகோதரி மரகதம் குமரவேல் அவர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்கு சேகரித்து உரையாற்றினேன்.
ஒரு உண்மையான தலைவர் எங்கள் அண்ணன் திருமா அண்ணன்...🔥
சும்மா தளபதி மாதிரி எங்க தளபதி கூட எங்க அண்ணனும் கூட இருக்கிறார் அதுவே எங்களுக்கு பெரிய பலம்..!
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை & நீர் வளத்துறை அமைச்சர் புஸ்ஸி எண்.ஆனந்த் அவர்கள்
வாழ்த்துக்கள் @karthiksubbaraj.🎁😊
#டோரதி மிக மிக சிறப்பான படம்.👌
திரையுலகம் சொல்ல மறந்த உன்னதப் படைப்பு .
இந்தப் படத்தில் உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!❤️
சொத்தை கூட பங்கிட்டு வார்கள்...அதிகாரத்தை பங்கிட மாட்டார்கள்...ஆசான் மொரட்டு ஸ்பீச்...அதுவும் அந்த பாஜக கூட கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரம் கொடுக்குதுன்னு சொன்னதுலாம் திமுகவ செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு...
கடலூர் சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி மேன்மைமிகு தலைவர் எழுச்சித் தமிழர் @thirumaofficial ஆற்றிய உரை...
டெல்லியில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் விசிக சார்பில் உரையாற்றினேன். எனது உரையின் இறுதியில் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்தியா கூட்டணியைக் கேட்டுக்கொண்டேன்.
INDIA கூட்டணி பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்:
1. குற்றஞ்சாட்டப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கோர வேண்டும்.
2. தற்போது நடைபெற்று வரும் SIR நடவடிக்கையை உடனடியாக நிறுத்தக் கோர வேண்டும்.
3. பெயர்கள் நீக்கப்பட்ட வாக்காளர்களின் சமூகவாரியான விவரங்களை வெளியிடக் கோர வேண்டும்.
4. நீக்கப்பட்ட 13 கோடி வாக்காளர்களின் பெயர்களையும் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கோர வேண்டும்.
5. வாக்களிக்கும் உரிமையை அடிப்படை உரிமையாக்கக் கோர வேண்டும்.
6. திரு. ஞானேஷ் குமாரை தலைமைத் தேர்தல் ஆணையராக நியமித்ததற்காக பிரதமரும் உள்துறை அமைச்சரும் மன்னிப்புக் கோர வேண்டும் எனக் கோர வேண்டும்.
7. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் சட்டம், 2023-ஐ திரும்பப் பெறக் கோர வேண்டும்.
8. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக நாடு தழுவிய போராட்டத்தை அறிவிக்க வேண்டும்.
நன்றி.
முனைவர் தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர் – தலைவர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
இணைப்பு ஆங்கில உரையின் நகல்:
கடலூர்: கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு வந்த விசிக தலைவரை வரவேற்கக் திரண்ட தொண்டர்களால் நிலவிய பரபரப்பான சூழல்
#VCK#Thirumavalavan#Cuddalore
நட்சத்திர விடுதியில் கிடைக்கும் தரமான உணவை சமூகநீதி விடுதியிலும் வழங்க அரசு முன்வருமா?
பரிவுடன் பரிசீலிப்போம் என்ற மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சருக்கு வாழ்த்து சொல்வோம்.
நெல்லை கவின் கொலை வழக்கில் மேல் முறையீடு செய்ய வேண்டும்
தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்
===
நெல்லை கவின் கொலைவழக்கில் குற்றம் சாற்றப்பட்ட சுர்ஜித்தின் (ஏ1) பெற்றோர் சரவணன்(ஏ2), கிருஷ்ணகுமாரி(ஏ3) ஆகியோர் மீதான 'குற்றச்சாற்று அறிக்கையை' மதுரை உயர்நீதிமன்றம் 'ரத்து' செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. விசாரணைக்குப் பின்னர் ஆதாரங்கள் இல்லையென விடுதலை செய்வது தான் நீதிமன்றத்துக்குள்ள அதிகாரம். குற்றவிசாரணை தொடங்குவதற்கு முன்னரே குற்ற அறிக்கையை 'ரத்து' செய்வது 'தவறான முன்மாதிரி' ஆகும்.
கவின் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட சரவணன் பிணையில் (ஜாமீனில்) வெளியே வந்ததும் இன்னொரு கொலைவழக்கில் கூலிப்படையினரோடு தொடர்பிருப்பதாக மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பவர் என்பது குறிப்பிடத் தக்கது.
இத்தகைய பின்னணி கொண்ட ஒருவரையும் அவரது மனைவியையையும் குற்றமற்றவர்கள் என்கிற தோற்றத்தை உருவாக்கும் வகையில் உயர்நீதிமன்ற நடவடிக்கை அமைந்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்திட ஆவன செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இவண்
தொல். திருமாவளவன்
நிறுவனர்- தலைவர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி