My first podcast (an unconventional one) after the announcement of our political movement is on its way & will be aired tomorrow at 10 AM on my YouTube channel.
https://t.co/rfti0J7ZsL
https://t.co/oVURDAxIE7 - Where it all began.
பிப்ரவரி 24 ஆம் தேதி தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், ஜெ ஜெயலலிதா அவர்களின்* பிறந்தநாளைக் குறிக்கிறது. 1948 ஆம் ஆண்டு பிறந்த அவர், ஆறு முறை முதலமைச்சராகப் பணியாற்றினார், மேலும் “அம்மா” என்று அன்புடன் அழைக்கப்பட்டார். 78 வது பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது.
#ᴀᴅᴍᴋ#jaya
தடைகளை தாண்டி ஓடுவோம்... கேலோ இந்தியா ஆரோக்கிய தேசத்தைப் படைப்போம்... சேலம் மாவட்ட அளவிலான நமோ டிராபி மாரத்தான் மாபெரும் விழாவை தொடங்க வைக்க பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் மதிப்புக்கும் மரியாதைக்குரிய அண்ணன் திரு Nainar Nagenthran அவர்கள் குடி அசைத்து தொடங்கி வைத்தார்
பல்லடத்தில் இருந்து செட்டிபாளையம் வழியாக உக்கடம் காந்திபுரம் வரை அரசு புறநகர் பேருந்துகளை இயக்கம் செய்ய மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு @sivasankar1ss அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளேன்.
திமுகவினரின் பாலியல் வெறிக்கு இன்னும் எத்தனை தமிழ்ப் பெண்கள் பலியாக வேண்டும்?
திருச்சி திமுக வட்டச் செயலாளர் காளை உள்ளிட்ட 15 பேரால், 14 வயது சிறுமி ஒருவர் தொடர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதாகவும், அக்கொடூரத்தின் வினையாக அக்குழந்தை ஒரு குழந்தையை பெற்றெடுத்திருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. பள்ளிப்படிப்பைக் கூட தாண்டாத ஒரு பெண் குழந்தையை தங்களின் பாலியல் இச்சைக்கு பலியாக்கிக் கொண்ட அந்த மிருகங்களை இத்தனை ஆண்டுகளாக பாதுகாப்பாக அடைகாத்து வந்த @arivalayam அரசு தமிழகத்தின் அவமானச் சின்னம்.
பள்ளி மாணவர்கள் கஞ்சா போதையில் மிதக்கிறார்கள், பள்ளி மாணவிகள் பாலியல் கரங்களில் சிக்கி சீரழிகிறார்கள், தமிழகப் பிள்ளைகள் தன்னை அப்பா என்றழைப்பதாக உருகும் முதல்வர் திரு. @mkstalin அவர்கள் தனது பிள்ளைகளை பாதுகாக்கும் லட்சணம் இதுதானா? சென்னை ஞானசேகர், அரக்கோணம் தெய்வச்செயல், திருச்சி காளை போன்று பெண்களைக் குறிவைத்து வேட்டையாடும் இன்னும் எத்தனை மிருகங்களை திமுக தன் கூடாரத்திற்குள் தீனி போட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறது?
திமுக காமுகர்களைக் கண்டு தமிழகப் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சி நடுங்குகையில், கொஞ்சம் கூட கூச்சமேயில்லாமல் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற விழா எடுப்பதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும். இப்படிப்பட்ட ஒரு பெண்கள் விரோத ஆட்சியை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கவும் மாட்டார்கள், இனியொரு முறை அரியணையில் அமர்த்தவும் மாட்டார்கள்!
உண்மையை எதிர்கொள்ள @arivalayam அரசுக்கு தைரியம் இல்லை
சட்டமன்றத்தில் நடந்தது என்ன?
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (22.1.2026) ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பாஜக சார்பில் கலந்து கொண்டு பேசும் வாய்ப்பு கிடைத்தது. சட்டமன்றத்தில் எப்போது நான் பேசினாலும், ஆளும் கட்சி வரிசை நிறைந்திருக்கும். அமைச்சர்கள் அனைவரும் இருப்பார்கள். இன்றும் ஒரு சில அமைச்சர்கள் தவிர, மற்றவர்கள் இருந்தனர்.
எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் யார் பேசினாலும், அமைச்சர்கள் பதில் சொல்லும் முன்பே, சட்டப்பேரவைத் தலைவர் திரு. அப்பாவு அவர்கள் குறுக்கிட்டு பதிலளிப்பார். நான் பேசும்போது அதிகமாக குறுக்கிடுவார். இதை சுட்டிக்காட்டி, அமைச்சர்களிடம் இருந்து பதில் தேவைப்படும் போதெல்லாம், பேரவைத் தலைவரே கொடுப்பார். இப்போது ஆளுநர் உரையையும் அவரே படித்திருக்கிறார். இதை பார்க்கும்போது, மகாகவி பாரதி சொன்ன, 'யாதுமாகி நின்றாய் காளி' என்பது தான் நினைவுக்கு வருகிறது என்று சொல்லி எனது உரையை துவங்கினேன்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை செயல்படுத்தாமல் திமுக அரசு அராஜகத்தில் ஈடுபட்டது. இப்பிரச்னையில் திமுக அரசின் இந்து விரோதப் போக்கை சுட்டிக்காட்ட நினைத்தேன். திருப்பரங்குன்றம் என, நான் பேசத் துவங்கியதுமே, பதறிப்போன பேரவைத் தலைவர், "இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் அதுபற்றி பேச அனுமதிக்க முடியாது" எனக்கூறியதோடு, நான் பேசிய சில வார்த்தைகளையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.
ஆனாலும், நான் பேசியதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. @evvelu அவர்கள், "நீங்கள் என்ன இந்து மதத்திற்கு அத்தாரிட்டியா? நாங்களும் இந்துக்கள் தான். நாங்களும் இந்து பக்தர்கள்தான். நாங்களும் இந்து பண்டிகைகளை கொண்டாடுவர்கள்தான் . எங்களுக்கு எம்மதமும் சம்மதம்" என்றார்.
தொடர்ந்து பேசிய நான், "அமைச்சர் பேசியதை கேட்க ஆனந்தமாக இருக்கிறது. நீங்கள் இந்துக்கள் என்றால், இந்து பண்டிகைகளை கொண்டாடுபவர்கள் என்றால், எம் மதமும் சம்மதம் என்பதில் உடன்பாடு கொண்டவர்கள் என்றால், முதலமைச்சர் திரு. @mkstalin ஏன் இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துச் சொல்வதில்லை? இதற்கு பதில் மட்டும் சொல்லுங்கள்" என்றேன்.
உடனே அமைச்சர்களும், திமுக எம்.எல்.ஏக்களும் பதறிப் போனார்கள். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. @PKSekarbabu அவர்கள், "பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்வதும், சொல்லாததும் அவரவர் தனிப்பட்ட உரிமை. மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்கும் பிரிவினை வாதம் தமிழ்நாட்டில் எடுபடாது" என்றார்.
சமூக நலத்துறை அமைச்சர் திருமதி @geethajeevandmk அவர்கள், "கடவுளை வணங்குவது, பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்வதெல்லாம் அவரவர் தனிப்பட்ட சுதந்திரம். அதை ஏன் இங்கு வந்து பேச வேண்டும். படித்து விட்டு வாருங்கள். இப்படியெல்லாம் பேச அருகதை இல்லை" என்றெல்லாம் பேசிக் கொண்டே சென்றார். அவருக்கு பதிலளிக்க எனக்கு நேரம் வழங்கப்படவில்லை.
என பேச்சில், "தமிழ் மொழி, கலாசாரத்தின் பெருமைகளை உலகெங்கும் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் பரப்பி வருகிறார்" என்றேன்.
அதற்குப் பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. எ.வ.வேலு அவர்கள், "மத்தியில் ஆளும் நீங்கள், தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழியாக அறிவிப்பீர்களா? உச்ச நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிப்பீர்களா?" என்று கேள்விகளை அடுக்கினார்.
அவருக்கு பதில் சொன்ன நான், "நீதிமன்றங்களின் வழக்காடு மொழியை தீர்மானிக்கும் அதிகாரம், உச்ச நீதிமன்றத்திடம் உள்ளது. உச்ச நீதிமன்றம் தமிழை வழக்காடு மொழியாக அறிவித்தால், மத்திய பாஜக கூட்டணி அரசு அதை செயல்படுத்தும்" என்றேன்.
அதோடு விடாமல், "பொங்கல் பண்டிகையை இந்து பண்டிகை இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். அப்படியெனில் பொங்கல், யாருடைய பண்டிகை? தலைநகர் டெல்லியில் பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, உண்மையாகவே பொங்கல் வைத்து, சூரியனுக்கு படையலிட்டு வழிபட்டார். ஹோட்டலில் இருந்து பொங்கல் வாங்கி வந்து, பானையில் போட்டு பொங்கல் கொண்டாடவில்லை" என்றேன்.
திமுகவின் இந்து விரோதப் போக்கை நான் அம்பலப்படுத்தியவுடன், மதம் தொடர்பாக நடந்த விவாதம் அனைத்தையும் நீக்குவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார். அதுமட்டுமல்லாது சட்டமன்றத்தில் அமர்ந்திருந்த பத்திரிகையாளர்களை நோக்கி, "இந்த விவாதம் தொடப்பாக, சட்டமன்றம் அலுவலகம் தரும் தகவலை சரி பார்த்த பிறகே செய்தி வெளியிட வேண்டும்" என்றார்.
TamilNadu welcomes PM @narendramodi ji for pivotal NDA rally, set to dismantle DMK regime and install people welfare NDA government ahead of 2026 polls.
Visit alarms Anti-Sanatan Dharma forces as lotus blossoms statewide. #NDA4TN
இன்று திருச்சியில் நடைபெற்ற "நம்ம ஊர் மோடி பொங்கல் 2026" நிகழ்ச்சியில் மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் @AmitShah ஜி அவர்கள் மக்களுடன் மக்களாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.
தமிழர்களின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் முழுமையாக உள்வாங்கிய அவர், தமிழர் திருநாளாம் பொங்கலை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடினார்.
இந்த நிகழ்வில் மத்திய வர்த்தகம்,தொழில் மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் மாண்புமிகு
@PiyushGoyal அவர்கள், சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் மாண்புமிகு.
@arjunrammeghwal அவர்கள், மத்திய இணை அமைச்சர் மாண்புமிகு. @DrLMurugan அவர்கள், பாஜக மாநில தலைவர் திரு @NainarBJP அவர்கள்,பாஜக தேசிய செயலாளர் மற்றும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் திரு.
@MenonArvindBJP அவர்கள், பாஜக தேசிய இணை பொறுப்பாளர் திரு. @ReddySudhakar21 அவர்கள், முன்னாள் மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் திரு. @annamalai_k அவர்கள், தேசிய பொதுக்குழு உறுப்பினர் திரு. @HRajaBJP அவர்கள், தேசிய பொதுக்குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் திரு. @PonnaarrBJP அவர்கள், முன்னாள் தெலுங்கானா ஆளுநர் திருமதி.
@DrTamilisai4BJP அவர்கள், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு. @MRGandhiNGL அவர்கள், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திருமதி. @drcksaraswathi அவர்கள், மாநில பொதுச் செயலாளர் திரு. @KaruppuMBJP அவர்கள், மாநிலப் பொதுச் செயலாளர் திரு. @apmbjp அவர்கள், மாநிலச் செயலாளர் திருமதி. @APriya_Official அவர்கள், மாநில மகளிர் அணி தலைவர் திருமதி. @KavisriBjp அவர்கள், திருச்சி மாவட்ட தலைவர் திரு. K ஒண்டிமுத்து அவர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
திருக்குறள்:
தினைத்துணை நன்றி செய்தினும் பனைத்துணையாகக் கொள்வர் பயன் தெரிவார்.
(சிறிய அளவு நன்றி செய்திருந்தாலும், அதன் பயனை உணர்ந்தவர் அதை மலையைப் போலப் பெரியதாகக் கருதுவர்)
Met BJP National Working President Shri @NitinNabin Ji along with @BJPMahilaMorcha General Secretaries Smt @InduGoswamiBJP and Smt @deeptirawatbjp, and extended our best wishes for a successful tenure.
Wishing him strength and success in leading the organization to new heights.
தமிழக மக்கள் ஒன்றும் அத்தனை முட்டாள்கள் இல்லை முதல்வர் திரு. @mkstalin அவர்களே!
எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது “பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.5000 கொடுக்க வேண்டும்” என்று பொங்கிய @arivalayam, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நான்கு பொங்கல் பண்டிகைகள் கடந்துவிட்டன. இதில் ஒருமுறை கூட பொதுவெளியில் மக்களுக்கு வாக்களித்தபடி பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.5,000-த்தைக் கொடுக்கவில்லை.
ஆனால், தற்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் மக்களை மடைமாற்ற வேண்டும் என்ற நோக்கில், தடாலடியாக ரூ.3000-த்தைப் பொங்கல் பரிசாக அறிவித்து படாடோபமாக விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பது மட்டுமன்றி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கொடுப்பதாகவும் அறிவித்துள்ளது இந்த விளம்பர மாடல் அரசு. இலவச லேப்டாப் வழங்குவோம் என்ற திமுகவின் பொய் வாக்குறுதியை நம்பி அவர்களுக்கு வாக்களித்த மாணவர்கள் எல்லாம் இந்த நான்கரை ஆண்டுகளில் படிப்பை முடித்து கல்லூரியை விட்டே சென்றிருப்பார்கள். பொங்கல் பரிசாக ஆண்டுக்கு ரூ.5000 என்ற திமுகவின் பொய் பரப்புரையை நம்பிய தமிழக மக்கள் இதுவரை ரூ.20,000-த்தை இழந்துள்ளார்கள். இவர்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறது திமுக அரசு?
ஆட்சி முடியும் தருவாயில் இலவசங்களையும் பணத்தையும் அள்ளி வீசினால் திமுக ஆட்சியின் அவலங்களை மூடி மறைத்து விட முடியுமா? அல்லது தமிழக மக்களுக்கு திமுகவின் மீதுள்ள வெறுப்பை தான் அழித்து விட முடியுமா? தூண்டிலில் புழுவை சொருகி மீன்களைப் பிடிப்பது போலத் தமிழக மக்களைப் பணத்தை வைத்து விலைக்கு வாங்கி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் திமுக அரசின் தேர்தல் கபடநாடங்களைத் தமிழக மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் இரட்டை வேடத்தைத் தோலுரிக்கப் போகிறார்கள்!
தியாகி என்ற சொல்லுக்கு களங்கம் ஏற்படகூடாது என, சுதந்திர போராட்ட தியாகி விருது வழங்கப்பட்டபோதும் கூட, தியாகத்துக்கு விலை இல்லை, பென்ஷன் வாங்கக்கூடாது என்று ஏற்க மறுத்த உத்தம தலைவர், #ரா_கிருஷ்ணசாமிநாயுடு பிறந்தநாள் இன்று (05.01.1902).
#krishnasamynaidu#Annamalai#salemdistrict
தாய் மண்ணுக்காக வீரமுடன், ஆயுதம் ஏந்தி களம் கண்டு ஆங்கிலேய படையை சிதறடித்து, வெற்றி கண்டு சரித்திரம் படைத்த பெண் போராளி..!
இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை..!
வீரமங்கை இராணி #வேலுநாச்சியார் அவர்களின் வீர, தீர தியாகங்களை நினைவு கூர்ந்து வணங்குவோம்.