1000 வருடங்கள் பழமையான சோழர்களின் அணைக்கட்டு கற்கள். தோண்டி எடுத்து, குழி தோண்டி புதைக்கிறார்கள்... தமிழர்கள் தானே, கேள்வி கேட்க நாதி இருக்காது.
.@CollectorCbe எப்போதும் போல நீங்கள் வேடிக்கை மட்டும் பாருங்கள்.
உத்தரவிட்ட SDO உடனடியாக suspend செய்யப்பட வேண்டும்.
.@CMOTamilnadu
தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவுக்கு இரங்கல்.
மதுரையைச் சேர்ந்த புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற சாலமன் பாப்பையா அவர்கள், தமிழ் இலக்கியங்கள் குறித்து விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். திருக்குறள் உள்ளிட்ட இலக்கியங்களுக்கு உரைகளை எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சாலமன் பாப்பையா அவர்களை அறியாத தமிழர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நகைச்சுவையாகவும், நாகரிகமாகவும் பட்டிமன்றங்களை நடத்தியதன் மூலம் அனைத்துத் தமிழ் குடும்பங்களுக்கும் அறிமுகமானவர். பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட தமிழகத்தின் அரசியல் மற்றும் தமிழ் ஆளுமைகளுடன் நெருங்கிய நட்பு கொண்டவர்.
சாலமன் பாப்பையா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்.எல்.சியில் 347 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நீக்கம்: மேலும் 713 பேரை நீக்கத் திட்டம் - தமிழக அரசு தலையிட்டு பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும்!
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தின் 1, 1ஏ, 2 ஆகிய நிலக்கரி சுரங்கங்களின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த 347 ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்த சில வாரங்களில் மேலும் 713 பேரை பணி நீக்கம் செய்ய என்.எல்.சி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. என்.எல்.சி நிறுவனத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பணி நீக்கம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
என்.எல்.சி நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களை என்.எல்.சி நிறுவனம் ஒன்றன் பின் ஒன்றாக ரத்து செய்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை 6 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த 11 ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன. அதன் காரணமாக 347 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். நாளை, செப்டம்பர் 3-ஆம் தேதி இரு நிறுவனங்களின் இரு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு 64 பேர் பணி நீக்கப்படவுள்ளனர்.
நவம்பர் 16 ஆம் தேதி வரை மொத்தம் 13 நிறுவனங்களின் 27 ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு மொத்தம் 1060 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளனர். அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டால், அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடும் நிலை உருவாகும். என்.எல்.சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிலைப்பு செய்யப்பட்டால் அவர்களுக்கு இந்த நிலை நேராது. வட இந்தியர்களை நிரந்தரப் பணிகளில் அமர்த்தும் என்.எல்.சி நிறுவனம் தமிழர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக மட்டுமே அமர்த்தி கொத்தடிமைகளாக நடத்துகிறது.
என்.எல்.சி நிறுவனம் நிலக்கரியை வெட்டி எடுத்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடிகளை லாபமாக ஈட்டி வருகிறது. அதற்கு அடிப்படை நிலங்கள் தான். ஆனால், என்.எல்.சி நிறுவனத்திற்கு கோடிகளைக் கொட்டிக் கொடுக்கும் அந்த நிலங்களை வழங்கியவர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் 1827 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரம் குடும்பங்கள் மொத்தம் 37,256 ஏக்கர் நிலங்களை வழங்கியுள்ளன. அவற்றில் 23 ஆயிரத்திற்கும் கூடுதலான குடும்பங்களுக்கு இன்னும் வேலை வழங்கப்படாத நிலையில், நிலமே வழங்காத வட இந்தியர்களுக்கு நிரந்தர வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. நிலம் கொடுத்த மக்களுக்கு வேலை கூட வழங்காமல் நன்றி மறந்த துரோக நிறுவனமாகவே என்.எல்.சி நிறுவனம் செயல்பட்டு வருவதற்கு இதுவே சான்றாகும். இது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தான் என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி கூறி வருகிறது.
என்.எல்.சி நிறுவனத்தின் இந்த அத்துமீறல்களையும், துரோகங்களையும் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு பணி நீக்கப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கச் செய்ய வேண்டும். அங்கு பணியாற்றி வரும் தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்வதற்காக சிறப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கி செயல்படுத்தும்படியும் என்.எல்.சி நிறுவனத்திற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
@CMOTamilnadu
பார்க்கவே இவ்ளோ கஷ்டமா இருக்கு.
பொண்டாட்டி, பிள்ளை எல்லாம் அடிச்சு விரட்டி இருக்கானுங்க.
கூட நின்னுருக்க வேண்டிய பொண்டாட்டி, விரட்டி இருக்காங்க.
என்ன தான் சம்பாரிச்சாலும் உங்க பேர்ல கொஞ்சம் சொத்து வச்சிக்கோங்க.
உதவிய அந்த வீடியோ நண்பருக்கு நன்றி 🙏
புதுக்கோட்டை மாவட்டம், குண்டாண்டார் கோவில் கிழக்கு ஒன்றியம் பெரிய தம்பி உடையான்பட்டி பஞ்சாயத்தில், பஞ்சபாண்டவர்கள் தங்கி இருந்து சென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க புனித இந்து வனக்கோயில் நிலத்தை, அந்த ஊருக்கும் கிராமத்திற்கும் சமூகத்திற்கு சம்பந்தமே இல்லாத வேறு ஊர் இஸ்*லாமியர்கள் திடீரென வந்து "இது வக்பு போர்டுக்கு மட்டுமே சொந்தம்" என உரிமை கொண்டாடியுள்ளனர்.
இதனை எதிர்த்து தங்களின் பூர்வீக இந்து வனக்கோயில் நிலத்தையும் வழிபாட்டு உரிமையையும் மீட்க அறவழியில் போராடிய இந்துக்களை கைது செய்த காவல் ஆய்வாளர் அலாவுதீனையும், மத உணர்வோடு இதற்கு ஆதரவளிக்கும் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் முகமது பர்வேஷையும் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மூன்று மதத்தினரும் தங்களுக்கு சொந்தம் என்று கூறிவரும் அந்த இடத்தை மாவட்ட நிர்வாகம் முறையாக யாருக்கு அந்த நிலம் என்று சொந்தம் என்று தெரிவிக்காமல் ஒரு சமூகத்தினருக்கு மட்டும் திடீரென்று அப்பகுதியில் திருவிழா நடத்திக் கொள்வதற்கு அனுமதி அளித்தது மாவட்டத்தில் மத கல*வரத்தை மாவட்ட நிர்வாகமே தூண்டி விடுகின்ற வகையில் செயல்படுகிறதோ என்று அச்சம் ஏற்படுகிறது.
மாவட்ட ஆட்சியர் உடனடியாக இந்த சம்பவம் குறித்து வெளிப்படை தன்மையாக அறிக்கை வெளியிட வேண்டும். உடனடியாக கைது செய்தவர்களை விடு*தலை செய்ய வேண்டும்
'திமுகவுக்கு மாற்று' எனக்கூறிவிட்டு, நிதியமைச்சர் தமிழைத் தூற்றி தன் மதத்தைப் போற்றுவதும், அமைச்சர் முகமது பர்வேஸ் இந்து விரோத செயலுக்குத் துணைபோவதும் அநீதி!
கைது செய்யப்பட்ட இந்துக்களை உடனடியாக விடுதலை செய்க.! #Waqf #Hindu #mahabharat #BJP #Modi @narendramodi@AmitShah@NainarBJP
நடிகர் நடிகைகளை தினசரி சந்திக்க CM க்கு நேரம் உள்ளது. ஆனால் TVK வேட்பாளராக திருவண்ணாமலையில் போட்டியிட்ட அருள் ஆறுமுகம், வேளாண் கடன் தள்ளுபடி தொடர்பாக கோரிக்கை, மற்றும் தீர்வுகள் பற்றி பேச, முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு இன்றோடு 16 நாட்கள் ஆகிறது. நேரம் ஒதுக்கப்பட்டதா?