தமிழ் கடவுள் முருகன் பற்றி பாரிசாலன் விக்னேஷ் இருவரும் பேசின காணொளியை முழுசா பார்த்தேன்....
பாரிசாலன் பல தரவுகள் எடுத்து சொல்லிருந்தாலும் என்ன பொறுத்தவரை அது போதுமானதாக இல்லை...
காரணம் என்னன்னா முதன் முதலில் முருகனை தெய்வமாக சொல்லியது தொல்காப்பியம்
குறிஞ்சி நில தெய்வமா சொல்லிருக்கும் ஆதாவது திணை தெய்வமா... மனிதனின் முதல் நாகரிக வளர்ச்சி என்பது குறிஞ்சித் திணையில்தான் தமிழர்களின் முதல் தெய்வம் முருகன்தான்...
தமிழ் சங்க இலக்கியங்களில் மன்னர்களின் புகழ்ந்து வீரத்தை பாட முருகனை உவமையாக பாடியிருப்பார்கள் காரணம் முருகன் போர் வீரன் யானையில் வந்து தமிழரை காப்பாற்றியவர்...
போர் தெய்வம் என்றால் அது கொன்றவை
முருகன் மிகச்சிறந்த போர் வீரன் என்பதால் கொற்றைவையின் மகனாக சங்க இலக்கியத்தில் காட்டியிருக்கலாம்....
சங்க இலக்கியத்தில் ஐந்து திணைகள் இருந்தாலும் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் இது மட்டுமே இயற்கையாக இருக்கும் நிலங்கள் பாலை நிலம் என்பது
"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" - சிலப்பதிகாரம்
பாலை நிலம் என்பது வறண்ட நிலம் என்பதே பொருள்... அதிகமா போர் நடக்கும் இடம்...
இதனால் பாலை திணையின் தெய்வமாக போருக்கு முன்பு வழிபாடும் தெய்வமாக கொற்றைவை இருந்திருக்கிறாள்...
முருகனின் வழிபாடு என்றாலும் இளம் ஆட்டு இரத்தத்தில் தினை மாவு கலந்து கொடுப்பது....
சமயக் கோட்பாடுகள் உருவாவதற்கு முன்பே முன்னோர் வழிபாட்டு முறையில் முருகனை நாம் வழிபட்டுளோம்...
இப்படியிருக்கையில் அப்படியே இதற்கு மாற்றாக ஒரு ஆரிய புராண கதைகள் புகுத்தப் படுகிறது...
முதன்முதலில் இது எழுத பட்டது வால்மீகி ராமாயணத்தில்... அதாவது சமஸ்கிருத்தில் உள்ள பழமையான புராண காப்பியம்...
அதற்கு முன்புவரை இப்படியொரு கட்டுக்கதை தமிழர்களிடம் இல்லை இதை இன்னும் ஆணித்தரமாக நிறுவியிருக்கலாம்....
நமக்கு சமஸ்கிருதம் தெரியாது அதனால அதை விட்டிருவோம்னு சொல்லுறான் விக்னேஷ்
ஆனால் இதே பிராமண கூட்டம் வால்மீகி ராமாயணத்திற்கு தமிழில் விளக்கம் எழுதிருக்கு அதை எடுத்து ஆதாரமா பேசியிருக்கலாம்
முக்கியமான பாய்ண்ட் பாரிசாலன் கோட்டை விட்டுட்டான்
பிராமணர்களின் கட்டுக்கதையால்தான் வழிபாட்டு முறை மாறியது என்று சொன்னது சரி ஆனால் அதற்கு சரியான விளக்கம் கொடுக்கவில்லை
தமிழர் வழிபாட்டை மாற்றியதற்கு விக்னேஷ் திருவள்ளுவரை காரணம் காட்டினான் அதற்கு பாரி குலதெய்வ வழிபாட்டை எடுத்துக்காட்டா சொன்னான் அதைவிட கொற்றவையின் வழிபாட்டை மேற்கோள் காட்டியிருந்தால் 100% சரியாக இருந்திருக்கும்
முருகனுக்கு நிகராக அன்றைய காலத்தில் பலி கொடுத்து வணங்கப்பட்ட தெய்வம் கொற்றவை அந்த கொற்றவை தெய்வத்தை தான் நாம் மாரியம்மனாக காளியம்மனாக காவல் தெய்வமாக பலி கொடுத்து இன்றும் வழிபடுகிறோம் அந்த காளியம்மன் மாரியம்மன் கோவிலில் கூட இன்று பிராமணர்கள் நுழைந்துகொண்டு வழிபாட்டு முறையை மாற்றுகிறார்கள்...
பிராமணர்கள் முதலில் நம்முடைய பெருதெய்வ வழிபாட்டை சிதைக்க எல்லா வேலைகளையும் பார்த்தார்கள்
அதற்காக பல கட்டுக்கதைகள் எழுதப்பட்டது
கொற்றவை போன்ற பெண் தெய்வ வழிபாட்டை சிவனின் மனைவி என்று அடைக்க முயற்சி செய்தார்கள்...
சமய கோட்பாடுகள் உருவான பிறகு திருமுருகாற்றுப்படை போன்ற பக்தி இலக்கியங்கள் எழுதிய நம்முடைய முன்னோர்கள் எனது கடவுள்தான் உயர்ந்தது என்று காட்டுவதாக நினைத்த ஆரிய புராணங்களை உள்வாங்கிக்கொண்டார்கள்
அதனால் அதில் ஆரிய புராண தாக்கம் இருக்கிறது
அதில் சில தொன்மையான வழிபாட்டு முறையும் இருக்குது என்பதை மறுக்க முடியாது....
சென்னை, தி.நகரிலுள்ள பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் நீட் தேர்வுக்கு எதிரான இளைஞர் கூட்டத்தின் அறப்போராட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையினரும், மாணவர் பாசறையினரும் இன்று (24.07.2026) கலந்துகொண்டு போராடுபவர்களுக்கு ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் அவர்கள் உரையாற்றினார்.
@ntkmaanavar@Ntkyouthwing@idumbaikarthi
#ntk #seeman #ntkitwing #banneet
தூத்துக்குடியில் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட விசாரணை சிறைவாசி அருணாச்சலத்தின் மரணத்திற்கு நீதியைப் பெற்றுத் தர மறுப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
தூத்துக்குடி, தென்பாகத்தில் அருணாச்சலம் எனும் சிறைவாசி காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இறப்பதற்கு முன்பு, மரண வாக்குமூலமாகத் தான் தாக்கப்பட்டது குறித்து அருணாச்சலம் கூறும் காணொளி நெஞ்சை பதைபதைக்கச் செய்கிறது. சிறைக்குள் சபரிவர்மன் எனும் சிறைவாசி அடித்துக் கொல்லப்பட்ட ரணத்தின் சுவடு மறைவதற்குள்ளாகவே, அருணாச்சலம் எனும் விசாரணை சிறைவாசி காவல்நிலையத்தில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
மூன்று மாதத்தைக்கூட நிறைவுசெய்யாத தவெகவின் ஆட்சியில் நான்கு சிறைவாசிகளின் காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பது மாநில அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. முந்தைய திமுகவின் ஆட்சியில், காவல்துறை மரணங்களின்போது ஆளும் வர்க்கத்துக்கு எதிராகச் சீறிய இன்றைய முதல்வரான விஜய் அவர்கள், தனது ஆட்சியில் நடக்கும் காவல்நிலைய மரணங்களுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று வருத்தம் தெரிவிக்கவோ, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கவோ செய்யாதிருப்பது அதிகாரத்திமிரின்றி வேறென்ன? இது வாக்குச் செலுத்தி, ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யப்படும் சனநாயகத் துரோகமில்லையா? தன்னுடைய ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்காக ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் நிறுத்தி வைத்த முதல்வர் விஜய் அவர்களுக்கு, அநியாயமாய் போன ஒரு உயிருக்கான நீதியைப் பெற்றுத்தர மனமில்லையா? ஆட்சியதிகாரமும், பதவி மமதையும் கண்ணை மறைக்கிறதா முதல்வரே? ஏழை எளிய மக்களின் அழுகுரல்களும், ஒப்பாரியும், ஓலமும் உங்கள் செவிகளுக்கு வந்து சேரவில்லையா? திமுகவின் ஆட்சியில் காவல்நிலைய மரணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குக்கூட நீதியைப் பெற்றுத் தருவதாகத் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் பேசிவிட்டு, உங்களது ஆட்சியில் பறிபோன உயிருக்கான நீதியைப் பெற்றுத் தராது, குற்றவாளிகளைக் காப்பாற்றுவதுதான் மிக இழிவான செயல் இல்லையா? ஆளும் தவெக அரசின் இத்தகையப் போக்கு ஒருபோதும் ஏற்புடையதில்லை. இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
எப்பேர்ப்பட்ட குற்றவாளியாக, கொலையாளியாக இருந்தாலும் அரிதினும் அரிதான வழக்குகளுக்கே மரணத்தைத் தண்டனையாக நீதிமன்றங்கள் விதிக்கின்றன. அப்படியிருக்க, காவல்துறை எதேச்சதிகாரப்போக்கோடு குற்றஞ்சாட்டப்பட்டவரின் மீது கோரத் தாக்குதல் தொடுத்து, அடித்தே கொன்று, மரணிக்கச் செய்வதை ஒருநாளும் ஏற்க முடியாது. எந்தக் குற்றமிழைத்தவராயினும் அவருக்கான தண்டனையை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுத் தர வேண்டுமே ஒழிய, காவல்துறையினரே குற்றஞ்சாட்டப்பட்டவரின் கை, கால்களை உடைப்பதும், உயிரைப் போக்குவதுமான கொடுஞ்செயல்கள் குடிமைச்சமூகத்தில் நிகழக்கூடாத அவலம்!
ஆகவே, காவல்நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறைவாசி அருணாச்சலம் மரணத்தைக் கொலைவழக்காகப் பதிவுசெய்து, அதில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி