2024 பொது தேர்தலில், சேலம் மக்களவை தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.டி.எம்.செல்வகணபதி அவர்களை ஆதரித்து சேலம் மத்திய மாவட்டம், மெய்யனூர் பகுதி, 18-வது கோட்டத்தில் என்னுடைய தேர்தல் களபணியின் தொகுப்பு!
@SalemRRajendran@tmselvaganapat@TRBRajaa@drtharun @salemtamil3 @Ravi_Rajuslm
//Facebook-ல் படித்தது. இது உண்மையா உடன்பிறப்புகளே...//👇👇👇
தோற்கின்ற பொழுதெல்லாம் அறிவாலயம் கதவு திறக்கப்படுகிறது...
வெற்றி பெறும் பொழுதெல்லாம் அறிவாலயம் கதவு மூடப்படுகிறது...
அதுவும் கழக தொண்டன் என்று சொல்லிக்கிட்டு உள்ளே செல்ல முயன்றால்... 1/4
எனக்கு 18 வயசு complete ஆகும் போது நாம உதய சூரியனுக்கு ஓட்டுப் போட போறோம்னு excited ah இருந்துச்சு ஆனா 2019 நாடாளுமன்றத் தேர்தல் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி விசிக
சரி அடுத்து சட்டமன்றத் தேர்தல்ல உதய சூரியன்னு பார்த்தா 2021 காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி விசிக
அடுத்து 2024 நாடாளுமன்றத் தேர்தல் விசிக
அடுத்து 2026 சட்டமன்ற தேர்தல் விசிக
இன்னைக்கு வரைக்கும் உயிருக்கு உயிரா நேசிக்குற உதய சூரியன் சின்னத்த EVM machine ல நான் கண்ணால கூட பார்த்தது கிடையாது அடுத்த தேர்தலிலாவது உதய சூரியன் சின்னத்தில் ஓட்டு போடனும் தலைவரே @mkstalin 🥲 நமக்கு கூட்டணி கட்சியே வேண்டாம் இந்த மன உளைச்சலும் வேண்டாம் நம்மால முடியும் நாம ஜெயிச்சு காட்டனும்
தோல்வி தான் வைராக்கியத்தை கொடுக்கும் அந்த தோல்வியில நம்ம கூட யாரும் இல்லாதது தான் அந்த வைராக்கியத்த இன்னும் வளர வைக்கும் அடுத்து வர எந்த தேர்தலா இருந்தாலும் நாம பேசக் கூடாது நம்ம வெற்றி தான் பேசணும் ✊🖤❤️
நான் என் தொகுதியில் ஆசை பட்ட வேட்பாளர்..! அண்ணன் @VanniTamizhVCK அவர்கள். இரவு பகல் பாரமல் உழைத்துக் கொடுத்தோம்..! உங்கள் கட்சியின் தலைவர் சொல்வதற்கு முன்பே நீங்கள் தான் வேட்பாளர் என என்னை சார்ந்த தொகுதி வாசிகளிடம் தெரிவித்தேன்..!
ஆனால், காலச் சூழல் இன்று திமுகவை எதிர்க்க வேண்டி உள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா..! என்நாளும் தொகுதியில் நாங்கள்( திமுககாரர்கள்) உழைத்த நன்றியை மறந்திட வேண்டாம்..! 🙏🙏
அறத்தின் பக்கம் நிற்பது தான் அழகு..! அந்த வகையில் திமுக பக்கம் நின்று உங்களை எதிர்கொள்ள தயாராவேன்..!
@VanniTamizhVCK 💔
வெகுஜன மனநிலை
...
திராவிட முன்னேற்றக் கழகம் ஏன் தோற்றது என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திருமிகு. ஸ்டாலின் அவர்கள் வெளிப்படையாக எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான் கலைத்துறையைச் சேர்ந்தவன் ஆயினும், தொடர்ந்து 50 ஆண்டு காலம் தமிழ்நாட்டின் அரசியலைக் கூர்ந்து கவனிப்பவன் அல்லது அந்தச் சுற்றுச்சூழலில் வாழ்ந்தவன் என்ற அடிப்படையில், எனக்கும் சில தனிப்பட்ட கருத்துகள் உண்டு.
வெகுஜன மனநிலை என்று ஒன்று எப்பொழுதுமே இருக்கிறது. அந்த மனநிலையை யாரும் பிரச்சாரத்தாலோ அவதூறுக் கருத்துகளாலோ உருவாக்க முடியாது. ஆனால், ஒரு சிறிய செயல் அதனை உண்டாக்கக் கூடியது.
இன்று திரு. விஜய் அவர்கள் அரசியல் பொறுப்பேற்றிருக்கும் இந்தச் சூழ்நிலையில் இருக்கக்கூடிய தன்மைக்கும், அன்றைய நாளில் ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற காலத்தில் இருந்த நேர்மறையான அதிர்வலைகளுக்கும் (Positive vibes) நிறைய வித்தியாசங்கள் இருப்பதைப் பார்க்கிறேன்.
இப்பொழுது எல்லோருமே புதியவர்கள். என்ன செய்யப் போகிறார்கள்? ஏது செய்யப் போகிறார்கள்? யார் யார் அமைச்சர்கள்? அவர்கள் திட்டங்கள் என்ன? சாதிப்பார்களா, சாதிக்க மாட்டார்களா? போன்ற கேள்விகள் இருக்கின்றன. அதே சமயத்தில் எதிர்க்கட்சிகள், ஊடகத்துறை என எல்லாமே ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து அவருக்கு எதிரே இயங்குகின்றன. ஆனால், அன்றைய ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில், அவர் பொறுப்பேற்ற அந்த முதல் மூன்று மாதங்களில் அவருடைய எல்லா நடவடிக்கைகளும் மிகச் சிறப்பாகவே,
உள்ளத்தைத் தொடும் விதமாக, உண்மையாக இருந்தன.
அவர் பதவியேற்றதும் தன் சிறுவயதில் இருந்து யாரெல்லாம் பாராட்டி ஊக்கப்படுத்தினார்களோ அவர்களை எல்லாம் அவர் சந்தித்தது, மிகவும் சாதாரணமாக ஒரு முதலமைச்சருக்கு உண்டான தோரணை இல்லாமல் தன்னைக் காண வருபவர்களைத் தன் வாகனத்தை விட்டு இறங்கிச் சென்று பார்த்தது போன்ற நற்குணங்கள் அவரிடம் இருந்தன.
அது தொடர்ந்தது. தொடர்ந்து அவர் சிந்தித்துப் பல நற்பணித் திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். நான் கூட நண்பர்களிடம், "திராவிட முன்னேற்றக் கழகம் இத்தனை இடங்களைப் பெற்றிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் முதல்வரின் நலத்திட்டப் பணிகள்தான்" என்று சொல்வேன். அவர் 'நலத்திட்ட நாயகர்' என்று சிறப்பான அழியாத பெயர் பெற்றுவிட்டார்.
நான் ஆரம்பத்திலேயே சொன்னேன் அல்லவா,
வெகுஜன மனநிலை என்பது செயல்களால் உண்டாகும் என்று!
எந்த ஒரு விஷயத்தையும் ஒரு வெகுஜன மனநிலையிலிருந்துதான் நான் கவனித்து வந்திருக்கிறேன்.
எனக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எப்பொழுதுமே இருந்ததில்லை.
அந்தச் செயல்கள் என்னென்ன என்று அருமைத் தலைவர் ஸ்டாலின் அவர்கள் சிந்தித்துப் பார்க்கும் பட்சத்தில், அதற்கான விடை எளிதாக அவருக்குக் கிடைக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.
பெருந்தன்மையாக அவர் முன்வந்து, இந்தத் தோல்விக்குத் தான்தான் காரணம் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் தோல்விக்குக் காரணம் ஸ்டாலின் அவர்கள் இல்லை; இவ்வளவு வாக்குகள் பெற்றதற்குத்தான் அவர் காரணம்!
"வெகுஜன மனநிலைக்கு எதிரான செயல்கள் அப்படி என்னதான் நடந்தது, நீயே சொல்லேன்" என்று நீங்கள் கேட்கலாம். அவற்றைச் சொல்வதால், ஒரு கலைஞனாக நான் தேவையற்ற பகைக்கு ஆளாகக்கூடும்.
"பின் ஏன் இதை எழுதுகிறாய்?" என்று நீங்கள் கேட்பீர்கள்.
ஒரு உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஒரு மனிதன் கார் வைத்திருப்பதே ஆடம்பரம் என்று நினைக்கும் ஒரு நாட்டில், நீங்கள் ஒரு கார் ரேஸ் விழாவை நடத்துகிறீர்கள் என்றால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய விவசாய மக்கள், ஏழை எளிய மக்கள் ஆகியோரின் மனநிலையிலிருந்து அதைப் பார்த்தால்தான் உங்களுக்கான விடயம் புரியும்.
"அது சரி, அதற்காக ரேக்ளா ரேஸ்தான் நடத்த முடியுமா?" என்று யாராவது கீழே பதில் கேட்டால், அதற்கு நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.
எதிலுமே இந்த வெகுஜன மனநிலை என்பது மிக முக்கியமான காரணி.
எதைச் செய்தாலும் இந்த வெகுஜன மனநிலையைக் கண்ணோட்டத்தில் கொண்டுதான் செய்ய வேண்டும். இப்படி, நான் அறிந்து, இந்த வெகுஜன மனநிலைக்கு எதிரான சில விஷயங்கள் நிகழ்ந்தன.ஆனால் அது முதல்வர் அவர்களால் அல்ல.
இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்கும் நேரத்தில், அப்படி என்னென்ன, எந்தெந்தத் துறைகளில் எப்படி நிகழ்ந்தன? ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எல்லாத் துறைகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம்தான் முன்னின்று வியாபாரமே செய்கிறது என்ற தோற்றத்தை எவையெல்லாம் உருவாக்கின? எப்படியெல்லாம் உருவாக்கின? வெகுஜன மனநிலையில் அந்த கோணத்தில் அணுகினாலே விடைகள் எளிதாக கிடைத்துவிடும் என்று நம்புகிறேன்.
இருப்பினும் சோர்வில்லாமல்
நான் பார்த்த மழைக்கால சென்னை மேயர் போல இன்றும் இயங்கும் உங்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்.
அன்பன்.
சீனு ராமசாமி
@mkstalin
இப்பவும் சொல்லுறோம்
திமுக
தேர்தல் அரசியலுக்கான கட்சி அல்ல
மன் மொழி மானம்
மாநில சுய உரிமைக்காக
ஒடுக்கப்பட்ட அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்ட மக்களின் அரண் தான்
திமுக🖤❤️
ஓரே தலைவர்
M. K. Stalin 💯
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
💥 தளபதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் ஆகத்தான் எங்களுக்கு வாக்களித்தார்கள்.
🧨 அவர்களுக்கு எதிராக 2 கோடிக்கும் மேலான வாக்குகள் அளித்துள்ளார்கள் மக்கள்.
⚡️ஆம், அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.பிள்ளைகள்தான்!
🎇 நாங்கள் ஆதரவு கொடுத்துள்ளோமே தவிர, இப்போதும் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்.
அடி ஒவ்வொண்ணும் வேற மாறி 🔥🔥🔥 அதான் அண்ணன் ❤️🖤💙