சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி சமூகவலை துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் மாண்புமிகு துணை முதல்வர் @Udhaystalin அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி. 🖤❤️💥💫
#MKStalinCM#UdhayanidhiStalin#dmk#DMKYouthWing
MLA-க்களை வாங்க தெரிந்த Dummy CM-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா?
உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம் தான் இந்த #சோப்ளாங்கி_அரசு என்பதற்கு , கூட்டுறவுத்துறை மூலம் இவர்கள் வெங்காயம் கொள்முதல் செய்த லட்சணமே சாட்சி.
ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக எந்த ஆய்வும் செய்யாமல் 450 டன் வெங்காயத்தை இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம் இருந்து வாங்கி இருக்கிறது இந்த மூடர் கூட்ட அரசு.
மகாராஷ்ட்ராவில் இருந்து ரயிலில் வந்திறங்கிய அந்த வெங்காயம், அழுகிய நிலையில் தரமற்று இருக்கவே, அதை Cover-up செய்ய, கொருக்குப்பேட்டை ரயில் முனையத்திலேயே இந்த ஆட்சியாளர்கள் விட்டுவிட்டார்கள்.
இந்த Circus ஆட்சியை போலவே, நாளாக நாளாக வெங்காயமும் நாற்றமெடுக்க, "நாங்கள் வெங்காயம் வாங்கவில்லை - கொருக்குப்பேட்டை ரயில் முனையத்தில் இருக்கும் வெங்காயத்திற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று அரசே Fake News Peddler-ஆக மாறி Abusive Warriors-க்கு tough கொடுத்திருக்கிறது.
அதோடு நிற்காமல், வெங்காயத்தின் ஒரு பகுதியை திருச்சி காந்தி மார்க்கெட்டில் விற்க, லாரி ஏற்றியும் அனுப்பியுள்ளனர்.
இந்த கோமாளிக் கூட்டத்தை நம்பி எதிலும் இறங்க முடியாது என்பதை அறிந்த திருச்சி வணிகர்கள், வெங்காயத்தை பார்க்காமல் வாங்க மாட்டோம் என்று மறுத்துவிட்டனர்.
இப்போது அழுகிய வெங்காய மூட்டைகளோடு என்ன செய்வது என்று புரியாமல் லாரி ஓட்டுநர் கதறிக் கொண்டிருக்கிறார். வெங்காய விலையேற்றத்தால் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
இதுபற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல், இடைத்தேர்தல் வேலைகளில் பிஸியாகிவிட்டார் 24-ஆம் புலிகேசி.
இந்த தரமற்ற வெங்காயத்தை கொள்முதல் செய்தவர் யார்? அதற்கு பின்பு அழுகிய வெங்காயத்தை மறைக்க புளுகுணி ஆட்டம் ஆடியவர்கள் யார்?
ஏற்கனவே ரேஷன் கடைகளில் 30 ரூபாக்கு பொன்னி அரிசி வழங்குவதாக சொல்லிவிட்டு, tender விடாமல், வழக்கமான ரேஷன் அரிசியை Polish போட்டு விற்பது தொடர்பாக நான் எழுப்பிய கேள்விக்கு, காலம் வரட்டும் பதில் சொல்வேன் என்று ஓட்டமெடுத்தார்களே.. எப்போது தான் அந்தக்காலம் வரும்?
வெங்காயம் வாங்கக்கூட துப்பற்ற இந்த வெட்கங்கெட்ட ஆட்சியை நடத்தும் Dummy CM, இந்த கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?
விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது அறிவிக்கப் போகிறார் Dummy CM?
முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயிகளை Slab வாரியாக பிரித்து சொற்ப அளவிலான தொகையை மட்டுமே தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்கள்.
அதனை தி.மு.கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களும் கடுமையாக எதிர்த்தன.
இந்த சூழலில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது, தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்போம் என்று மங்குனி அமைச்சர்கள் கூறினார்கள்.
இடைத்தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆகப்போகிறது. இன்னமும் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக இந்த சோப்ளாங்கி அரசு வாய்த்திறக்காமல் இருப்பது ஏன்?
இந்த அரசின் மவுனத்தைப் பார்க்கும் போது, மறுபடியும் சொற்ப தொகையை மட்டும் தள்ளுபடி என்று அறிவிக்க முயற்சி நடப்பது போல் தெரிகிறது என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பண்டிகையைக் கூட கொண்டாட முடியாமல் சோகத்தில் இருக்கும் விவசாயிகள் அடுத்து வரும் பொங்கல் திருநாளையாவது நிம்மதியாக கொண்டாட முடியுமா என்ற வேதனையில் இருக்கிறார்கள்.
காவிரியில் முறையாக தண்ணீரை திறக்காமல் விவசாயிகளை வஞ்சித்ததால் குறுவை பொய்த்தது.
அப்போது, வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நாம் பேசிய போது, ‘ஏற்கனவே கொடுத்துவிட்டோம்’ என்று குறுவை சிறப்புத் தொகுப்பை வறட்சி நிவாரணம் என Confident-ஆக பொய் சொன்ன முதலமைச்சர், இப்போது என்ன சொல்லப் போகிறார்?
இந்த முறையும் விவசாயிகளை ஏமாற்றாமல், கழக ஆட்சிக்காலங்களில் போல, அனைத்து விவசாயிகளுக்குமான அனைத்துப் பயிர்க்கடனையும் இந்த Circus அரசு ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
கழகத்தின் மூத்த உடன்பிறப்பு காசி தாத்தாவை இன்று சந்தித்தோம். முரசொலியை அரசியல் அரிச்சுவடியாக்கி இன்று வரை கொள்கை உறுதியோடு பயணிக்கும் காசி தாத்தா நம் கழகத்தின் பெருமை!
50 ஆண்டுகளுக்கு மேலாக தான் பெற்ற உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் - மாநாட்டிற்காக அவர் அச்சடித்த போஸ்டர்கள் - பத்திரப்படுத்திய கலைஞரின் கடிதங்கள் - கருப்பு, சிவப்பு திருமண அழைப்பிதழ்கள் என்று கழக வரலாற்றைச் சேமித்து வைத்திருக்கிறார் காசி தாத்தா.
கலைஞரின் உடன்பிறப்புகளுக்கே உரிய வேகமும் - துணிச்சலும் காசி தாத்தாவிடம் இன்றும் சற்றுக்கூட குறையவில்லை. அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி கொள்கிறோம்!
முரசு புயல் நேரத்தில் நடுக்கடலில் சிக்கி மாயமான சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேரின் உடல்கள், ஆந்திர கடலோர பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
அந்த மீனவச் சகோதரர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீனவர்கள் மாயமானது தொடர்பாக இங்குள்ள சோப்ளாங்கி அரசுக்கு தகவல் தெரிவித்தும் அவர்களை மீட்பது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீரோடு கூறுகின்றனர்.
புயல் நேரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்? ஒருவேளை மீனவர்கள் முன் கூட்டியே கடலுக்குச் சென்றிருந்தால், Wireless கருவிகள் மூலம் தொடர்பு கொண்டு அவர்கள் கரை திரும்புவதை உறுதி செய்திருக்க வேண்டிய அரசு, எப்படி தவறியது?
உயிரைப் பணயம் வைத்து தொழில் செய்யும் மீனவர்களின் உயிரோடு விளையாடும் அளவுக்கு அலட்சியம் காட்டியுள்ள இந்த ஆட்சியாளர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைவிட இன்னும் அதிகமான இழப்பீட்டை அரசு தரப்பில் வழங்க வேண்டும்.
இது மாதிரியான துயரங்கள் இனியும் நடக்காமல் இருக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
மிக முக்கியமாக கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு மீனவரும் ஆயுள் காப்பீடு செய்துள்ளதை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
இளைஞர்கள் மத்தியில் நின்று போதைப்பொருளை "Fun & Enjoyment" என அப்பட்டமாக Normalise செய்கிறார் தவெக முதல்வர் விஜய்!
தாங்கள் நடுநிலை என கர்வமுடன் சொல்பவர்களும், யாரு வந்தாலும் நாம தான் நமக்கு என நைசாக நழுவும் தவெகவிற்கு வாக்களித்தவர்களும், எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால் எனும் ரேஞ்சுக்கு தவெக ஆட்சியை கேள்விகளால் துளைத்து வரும் ஊடகங்களும், வெளிப்படையாக இவ்வளவு மோசமான போதைப்பொருளை நார்மலைஸ் செய்யும் உரையை, அதுவும் மாணவர்கள் மத்தியில் ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்திய விஜய்யின் பேச்சு குறித்து கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்ப்பது, விஜய்யின் பேச்சை விட லஜ்ஜையாகவும் அசுயையாகவும் உள்ளது.
When words spoken at an international conference feel like a mirror of Tamil Nadu today.
“Higher bills. Tougher lives.”
Different place. Different context. But the words hit a little too close to home.
@BarackObama@mkstalin
சாதாரண Ex MLAன்னு தங்களுக்குள்ளயே ஆர்கஸம் அடைஞ்சுக்குவானுங்க தற்குறீஸ்
ஆனால் இவரோட ஒரு வார்த்தைக்கான பவர்
டெல்லி கோட்டையே அலறும் 🔥🔥🔥
He is Not Ex MLA கண்ணுகளா
தகத்தகாய சூரியனின் திராவிட சுடர்
தலைவர் தளபதி @mkstalin
போக போக தலைவரின் ருத்ர தாண்டவம் இருக்கு 🖤❤😎
வரவேற்பு என வாரியணைத்துக் கொண்ட கோவை மக்களுக்கு நன்றி!
பெருமழையாய்ப் பொழிந்த உங்கள் பேரன்பைப் பெரும்பரிசெனப் பெற்று, கோவை மாவட்டத் தி.மு.க. புதிய அலுவலகக் கட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன்.
#KovaiVisit@V_Senthilbalaji
கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலில், இளைஞர் அணிச் செயலாளராக, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்து, இளைஞர் அணி அறக்கட்டளை மூலம் கல்வி, மருத்துவம் மற்றும் கழக முன்னோடிகளுக்குப் பொற்கிழி எனப் பல்வேறு நிதி உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நிதி உதவிகளைப் பெறும் பயனாளிகளுக்கான காசோலைகளை இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
இந்தக் காசோலைகள், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர் முன்னிலையில், இளைஞர் அணி அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் மூலம் பயனாளிகளிடம் வழங்கப்பட்டன.
மருத்துவ உதவி
1.ப.செந்தாமரைக்கண்ணன், தருமபுரி கிழக்கு மாவட்டம்.
2.பி.காஞ்சனா, சென்னை கிழக்கு மாவட்டம்.
3.மா.ராஜசேகரன், கோவை வடக்கு மாவட்டம்.
4.பொ.ஜெயபாலன், சென்னை மேற்கு மாவட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பஞ்சு குமார் அவர்கள் விபத்தில் காயமடைந்து, தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவனையில் அவரைச் சந்தித்து நலம் விசாரித்தோம். அவர் விரைவில் குணமடைந்து கழகப் பணிகளுக்குத் திரும்பிட வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.
@Nivedhamurugan_@durai944@sunramanathan_@Anbil_Mahesh@murasolimp@ilaiyadmk@anjugam_dr
ஆங்கிலேய ஆதிக்கத்தை அசரடித்த வீர வித்து தீரன் சின்னமலை நினைவு நாள்!
எத்தனை முறை எத்தகு படைகளைக் கொண்டு தாக்கியும் வெற்றி கொள்ள முடியாத பெருவீரனாகப் போரிட்டவர் தீரன் சின்னமலை.
திப்பு சுல்தானுடன் கூட்டணி அமைத்து பிரிட்டிஷாருக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய விடுதலைப் போராளி.
நேரடியாக எதிர்கொள்ள இயலாத எதிரிகள் சூழ்ச்சியால் அவரைத் தூக்கிலிட்டாலும் அவர் புகழைத் தமிழ்நாடு போற்றிக் கொண்டே இருக்கும்!
#DheeranChinnamalai
நிர்வாகத் திறனற்ற ஒரு டம்மி முதலமைச்சரால் தமிழ்நாட்டிற்கு இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது!
- மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @udhaystalin அவர்கள்
#விவசாயவிரோதிவிஜய்
தமிழ்நாட்டின் கல்வி, தொழில், வேளாண் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்!
மாற்று இயக்கத்தில் இருந்தாலும் தந்தை பெரியாரால் பச்சைத் தமிழர் எனப் பாராட்டப்பட்டு, அவரது எண்ணங்களைச் செயல்படுத்தியவர் காமராசர்.
பேரறிஞர் அண்ணாவால் பெரிதும் மதிக்கப்பட்டவர்.
நெருக்கடி நிலையை அறிவித்தபோது அதை எதிர்த்து முத்தமிழறிஞர் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்.
உடல்நிலை சரியில்லாதபோதும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்திய பெருந்தகையாளர்.
காமராசர் அவர்களின் பிறந்தநாளை் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.
அவரது வழியிலான நமது #DravidianModel அரசிலும்,
*காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்,
*பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்த அவருக்குத் திருவுருவச் சிலை,
*திருச்சியில் உலகத்தரத்தில் தயாராகி வரும் மாபெரும் நூலகத்துக்குக் காமராசர் அவர்களின் பெயர்
எனப் பெருந்தலைவரின் புகழ்போற்றும் அரசினை நடத்தினோம்!
தலைமுறைகள் தழைக்கக் கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் தமிழ்நாடுள்ள மட்டும் நிலைத்திருக்கும்!
75-ஆண்டுகளாக, தமிழ்நாட்டு அரசியலின் திசைவழியைத் தீர்மானிக்கும் பேரியக்கமாம் தி.மு.கழகத்தின், தலைமை நிலையமாக செயல்பட்ட ‘அன்பகம்’ இன்று @dmk_youthwing தலைமையகமாக விளங்கி வருகிறது.
இளைஞர் அணியை உருவாக்கியதுடன் தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தி, நிதி திரட்டி, அன்பகத்தை இளைஞர் அணி வசமாக்கிய இன்றைய கழகத் தலைவர் @mkstalin அவர்கள், 1988-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளன்று இனமானப் பேராசிரியர் தலைமையில், கலைஞர் அவர்களைக் கொண்டே அன்பகத்தைத் திறந்து வைத்தார்.
28 ஆண்டுகளைக் கடந்து, அன்பகத்தை நமக்கு பெற்றுத் தந்த கழகத் தலைவர் அவர்களே, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளான நாளை, காலை 10:00 மணி அளவில் , 75-அடி உயர கம்பத்தில் கழகக் கொடியேற்றி- தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் சிலைகளையும் புதுப்பிக்கப்பட்ட அன்பகம் அலுவலகத்தையும் திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறது கழக இளைஞர் அணி.
இந்த நன்னாளை, இளைஞர் அணியினர் அவரவர் வசிக்கும் பகுதிகளில், இருவண்ணக் கொடியேற்றி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
#KalaignarForever #Kalaignar103
களத்தில் தோற்றாலும், மக்கள் நெஞ்சத்தில் வென்ற அசல் தொண்டன் கழக செங்கல்பட்டு வேட்பாளர் திரு. எம்.கே.டி. கார்த்திக் தண்டபாணி அவர்கள்!
தேர்தல் பிரச்சாரத்தின் போது பரனூர் மறுவாழ்வு இல்லத்தில் அந்த மக்கள் கேட்ட வண்ணத் தொலைக்காட்சியை, தேர்தல் முடிந்த பின்பும் மறக்காமல் நேரில் வழங்கி அவர்கள் அகத்தில் ஒளியேற்றியுள்ளார்.
ஓட்டுக்காக மட்டுமே தேடி வருபவன் தி.மு.கழகக்காரன் அல்ல. எந்த எதிர்பார்ப்பும் இன்றி மக்களின் கண்ணீரை துடைத்து, அவர்கள் புன்னகையில் தன்னைக் காண்பவனே உண்மையான உண்மையான திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டன்!
#DMK4TN