தீர்ந்து போன சக்தியென்று சொல்லிவிட்டு அவர்களிடமே MLA கொள்முதல் செய்த குதிரை பேர ஆளுங்கட்சிக்கும் - Dummy முதலமைச்சருக்கும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம் என்று கழக வேட்பாளர் @iparanthamen அவர்களுக்கு ஆதரவாக மதுராந்தகம் நகரில் இன்று வாக்கு சேகரித்தோம்.
@evvelu@thamoanbarasan@ksundarmla@AbdulmalikDmk
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!
நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம்,
வெற்றி அரிவாள் வெட்டு திட்டம்,
வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!
பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.
“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.
ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.
எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்களுடன் இலங்கை எம்.பி. திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்திப்பு!
தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்- திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணிச் செயலாளருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களைச் சந்தித்தார். போருக்குப் பிந்தைய சூழலில் ஈழத்தமிழர்கள் சந்திக்கும் நெருக்கடிகளை எதிர்க்கட்சித் தலைவருக்கு அவர் விரிவாக விளக்கினார்.
கழகத் தலைவர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, கடந்த டிசம்பர் மாதம் அவரைச் சந்தித்து, ஈழத்தமிழர் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்ததையும், உடனடியாக ஒன்றிய அரசுக்கு கழகத் தலைவர் அவர்கள் கடிதம் எழுதி வலியுறுத்தியதையும் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர் உரிமைகளுக்காக பேரறிஞர் அண்ணா காலம் முதல் தற்போது வரை தொடர்ந்து குரல்கொடுத்துத் துணை நின்று வரும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை உலகத்தமிழர்கள் அறிவார்கள். அந்த வகையில், ஈழத்தமிழர் நலன் சார்ந்து அவர் கூறியவற்றை, கழகத் தலைவர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச்சென்று ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் செயல்படுவோம் என்று அவருக்கு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின்போது, நம் முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிட்டுள்ள 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' நூலை வழங்கி, 'இலங்கை தி.மு.க.' குறித்து எழுத்தாளர் ஷோபாசக்தி அவர்கள் எழுதிய கட்டுரையும் அந்த நூலில் இடம் பெற்றிருப்பதை திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
தி.மு.க. சார்பில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து புகார் .
தி.மு.க. சார்பில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி - தலைமைக் கழக தலைமை சட்ட ஆலோசகர் பி.வில்சன், எம்.பி., - எஸ்.ஆஸ்டின், M.L.A., - சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன், Ex.M.L.A., ஆகியோர்
மாண்புமிகு ஆளுநரிடம் புகார் கடிதம்!
கடந்த 1.7.2026 அன்று மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு அனுப்பட்ட புகாரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு.வைகோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து குறித்து கடிதம் எழுதப்பட்டது. அதுகுறித்து இன்று மாண்புமிகு ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட சீர்காழி மற்றும் கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொல்லி, இடைத்தேர்தலில் த.வெ.க.கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெறச் செய்வதாக திரு.வைகோ அவர்கள் அளித்த செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்ததை மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம் தெரிவித்து, அதன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
திருச்செந்தூர் தொகுதி கழக சட்டமன்ற உறப்பினர் திரு. அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ., அவர்களை அவதூறு வழக்கில் கைது செய்து தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஐந்து மணி நேரம் அடைத்து வைக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.கட்சியில் இணைந்திட வற்புறுத்தியதை மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
நாகர்கோவில் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆஸ்டின் அவர்களை த.வெ.க.சார்பில் அவரை தொடர்பு கொண்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.கட்சியில் இணைந்திட வலியுறுத்தியதுடன், அவர் விரும்பிய துறை அமைச்சர் பதவி கொடுப்பதாக நிர்ப்பந்தித்து குறித்தும் மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
வேப்பனஹள்ளி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. சீனிவாசன் அவர்களையும் த.வெ.க. கட்சியில் இணையும்படியும், 50 கோடி ரூபாய் கொடுப்பதாகவும் வாரியத் தலைவர் பதவி அளிப்பதாகவும் ஆசைக்காட்டி அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திட பேசியதாக மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நண்பர்கள், திரு. ஜான்ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணுரெட்டி ஆகியோர் அரசு அலுவல்களில் தலையிடுவதையும் – அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொண்டதையும் மற்றும் அவர்களுக்கு தலைமைச் செயலகத்தில் தனியாக அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்தும் – அதேபோல், முதலமைச்சரின் பாதுகாப்பு விதிகளுக்கு முரணாக முதலமைச்சர் அவர்களின் தனி பாதுகாவலர் ஒருவர் பணியாற்றி வருவதும், அவர் முதலமைச்சர் அலுவலகம் உள்ளிட்ட எல்லா நிகழ்ச்சிகளிலும் முதலமைச்சருடன் சட்டத்திற்கு புறம்பாக அவருடைனே பயணிப்பது குறித்தும் மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
மேற்சொன்ன புகார்களை கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி - நாகர்கோவில் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆஸ்டின், எம்.எல்.ஏ., - தலைமைக் கழக தலைமை சட்ட ஆலோசகர் பி.வில்சன், எம்.பி., - சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன், Ex.M.L.A.. ஆகியோர் விளக்கமாக எடுத்துரைத்து, புகார் கடிதத்தை மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களிடம் அளித்தனர். அனைத்து புகார்களையும் – புகார்களின் சாரம்சங்களையும் கவனமுடன் கேட்டறிந்த மாண்புமிகு ஆளுநர் அவர்கள், இதன்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
திராவிடக் கொள்கை நிலைபெற வேண்டும்; தமிழ்நாடு வளம்பெற வேண்டும்! - அதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் பலம் பெற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் திரு. பென்ஜமின் தலைமையில் கழகத்தில் இணைந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோரை வரவேற்றோம்!
#DMK4TN
தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று #ஒட்டன்சத்திரம் தொகுதி - தொப்பம்பட்டி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கரியாம்பட்டி மற்றும் கூத்தம்பூண்டி ஊராட்சிகளில் வெற்றியை எனக்குச் சாத்தியமாக்கிய பொதுமக்களையும், வெற்றிக்குத் தோள் கொடுத்த கழக தோழர்களையும் நேரில் சந்தித்து என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டேன்.
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் தலைவணங்குகிறேன்! உங்களுக்கான எனது மக்கள் பணி என்றும் தொடரும்!
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு ஒன்றியம் சேலை ஊராட்சி கிளைக் கழகங்களின் சார்பில் கழக இரு வண்ணக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினோம் உடன் சேலை சமுதாய கூடம் அருகில் பயனாளிகளுக்கு மதிய உணவு வழங்கினோம்..
கடம்பத்தூர் மேற்கு ஒன்றியம் இறையா மங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் மூத்த குடிமக்களுக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அறுசுவை உணவு மாவட்ட கழக செயலாளரோடு இணைந்து வழங்கினோம். உடன் ஒன்றிய செயலாளர், ஒன்றிய கழக நிர்வாகிகள், தேவாலய குருமார்கள், உடன் பங்கேற்றனர்.
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் @ChandranDMK_,அண்ணன் @VGRajendranDMK,ஒன்றிய செயலாளர் @mrameshdmk அவர்களுடன் இறையமங்கலம் சாந்தோம் சினேகதீரம் முதியோர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது ! 🖤❤️
@DMKITwing
Our Exporters need the URGENT ATTENTION of the Union Govt. Of India.
As a responsible state, led by a mature leader who puts our Nation's interests First, Tamil Nadu has stood with the Union Govt and expressed support during this #USTariff trade shifts, with National Interest in mind.
The union on the other hand has remained mute, without any discussion with regional stakeholders, especially with large manufacturing states like TN, MH etc. during these extremely tumultuous times !
Thiru. Kumar Duraisamy of Tiruppur Exporters Association, says:
"With the 50% tariff imposed by the United States on Indian imports now in effect, apparel exporters to the U.S. are heading into a severe crisis.
For Tiruppur alone, monthly trade worth about ₹2,000 crore faces the risk of being blocked—this amounts to nearly 40% of Tiruppur’s total exports.
Right now, to protect the Indian apparel industry, its allied sectors, and lakhs of workers, the central government must immediately increase export incentives by at least 10%.
India’s textile export sector employs 4.5 million workers, with 85% being small, micro, and medium enterprises (MSMEs).
As a parallel, the government has already raised export drawback rates for gold, silver, and gem-studded jewellery to 22–30% through Notification 51/2025 (dated August 25, 2025). This is proof that similar support is possible for textiles too."
He also says,
"Just as jewellery exporters are supported, we in the textile sector also stand firm—with the hope that the nation will stand with us.
It is deeply disappointing that the Union government continues to neglect the textile sector."
While we in TN expected the union govt to act swiftly and effectively, today they seem to be standing like a rabbit in headlights !
The Union must start acting with diplomatic maturity and move away from hypocritical false bravado.
Wake up Delhi, face reality, start dialogue, listen to informed advice, take swift decisions and use funds given by us the states to help industries tide over these trade barriers.
#USTariffs #IndianApparelExports
#TiruppurKnitwear
கழகப் பணியிலும், மக்கள் பணியிலும் நம்மையெல்லாம் வளர்த்தெடுத்து - என்றென்றும் நம்மை வழி நடத்தும் முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களின் 102 ஆவது பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள எனது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞரின் திரு உருவப்படத்திற்கு இன்று அதிகாலையில் மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
காலம் உள்ளவரை கலைஞரின் புகழ் நிலைத்திருக்கும்..!
#DMK #DravidianModel #MKStalin #UdhayanithiStalin #KNNEHRU #KalaingarBirthDay #கலைஞர்102 #தமிழினத்_தலைவர்_கலைஞர் #KalaingarBirthDayWish #KalaignarBirthDay #முத்தமிழறிஞர்
பிறப்பொக்கும் உயிர்க்கும் எல்லா என்று சமத்துவத்தைப் போதித்த, உலகப் பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவருக்கு கோட்டமும், குமரியில் வானுயர சிலையையும் அமைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்!
#கலைஞர்102
தமிழ்மொழி, மாநில சுயாட்சி, சமூகநீதியை தன் இன்னுயிரை விட மேலாக கருதி வாழ்வனைத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கே அர்ப்பணித்த ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்!
#கலைஞர்102
தமிழ்நாடு வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர்,
இருபதாம் நூற்றாண்டின் ஈடு - இணையற்ற அரசியல் சாணக்கியர்,
மூத்த மொழியாம் தமிழ் மொழிக்கு "செம்மொழி" அங்கீகாரம் வாங்கித்தந்த தமிழ்த்தாயின் தலைமகன்,
களம் கண்ட துறைகளில் எல்லாம் வெற்றிக்கொடி நாட்டிய பல்கலை வித்தகர்
"என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே" என ஒவ்வொரு தொண்டரையும் அன்பால் கட்டிப்போட்ட சுயமரியாதை சூரியன்,
ஆண்களையும் மிஞ்சிய பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் திராவிட மாடல் அரசின் ஒப்பற்ற வழிகாட்டி
நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம்.
தமிழ் - தமிழர் - தமிழ்நாட்டு என தன் வாழ்நாளை அர்ப்பணித்த தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை "செம்மொழி நாளாக" அறிவித்துள்ளார் நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள்.
"அன்னை தமிழ் காப்பதற்கு ஆவி தரவும் தயங்கிடோம்" என முழங்கிய கலைஞரின் புகழை நாடெங்கும் பரப்புவோம். கலைஞரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்க இந்நாளில் உறுதியேற்போம்..!
ஓங்கட்டும் கலைஞரின் புகழ்.!
#DMK #DravidianModel #MKStalin #UdhayanithiStalin #KNNEHRU #KalaingarBirthDay #கலைஞர்102 #தமிழினத்_தலைவர்_கலைஞர் #KalaingarBirthDayWish #KalaignarBirthDay #முத்தமிழறிஞர்