M Ramesh, DMK | Kadambathur West Union Secretary (2014- Present) and Ex-Councillor 2006- 2011, 2011-2016, Tiruvallur constituency | Tiruvallur West Dt.
வருகின்ற ஜூலை 21 (திங்கட்கிழமை) திருவள்ளூர் மாவட்டம், #நம்ம_கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் "கும்மிடிப்பூண்டி பூக்கடை வியாபாரிகள் நலச் சங்கம்" திறப்பு விழாவை முன்னிட்டு பூக்கடை சங்கத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கிய பேரன்பின் நிகழ்வில்…🙏🏻
#Gummidipoondi
#TiruvallurEast
தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் மாண்புமிகு தளபதியார் அவர்கள் வருகிற 11ம் தேதி சேலம் மாவட்டத்தில் அரசின் சார்பில் பல்வேறு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அமைக்கப்படும் அரங்கத்தை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
திருச்சியில் காவேரி மருத்துவமனையின் ஒரு புதிய அங்கமாக புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் அதிநவீன சிகிச்சை மையத்தை இன்று திறந்து வைத்தேன்.
நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை அளிக்கும் விதமாக Kauvery Cancer Institute என்ற பெயரில் இம்மையத்தை நிறுவியுள்ள காவேரி மருத்துவமனை நிர்வாகத்திற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன்.
இந்த நிகழ்வில், மாநகராட்சி மேயர் திரு. அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் திரு. வைரமணி, காவேரி மருத்துவமனை தலைவர் Dr. சந்திரகுமார், மருத்துவமனை இயக்குனர் Dr. மணிவண்ணன், செயல் இயக்குனர் Dr. செங்குட்டுவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#DMK #KNNEHRU #DMK4TN #KauveryHospital #KauveryCancerInstitute #TrichyDMK #TrichyCentralDMK #HealthCare
தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
தீர்மானம் 1:
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாளை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம்!
#திமுகபொதுக்குழு2025
மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருவாரூர் நகராட்சி வார்டு எண். 25 பழைய தஞ்சை சாலையில் ரூ.13.27 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள "கலைஞர் நூற்றாண்டு காய், கனி அங்காடி வளாகத்தை" மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி.ராஜா அவர்களுடன் இணைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தேன்.
அப்போது, நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வை.செல்வராஜ் அவர்கள், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பூண்டி.கே. கலைவாணன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வ. மோகனச்சந்திரன், இ.ஆ.ப., அவர்கள், ஆகியோர் உடனிருந்தனர்.
#DMK #DravidianModel #MKStalin #KNNEHRU #TRBRaja #Thiruvarur #NewVegetableMarket #KalaingarVegetableMarket #peoplewelfare @TRBRajaa
விளையாட்டு வீரர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் திராவிட மாடல் அரசு என்றென்றும் துணை நிற்கும். அதனை பயன்படுத்திக் கொண்டு பல சாதனைகளை படைக்க வேண்டும்!
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#DMK4TN
திருத்தணி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் சார்பில் திருத்தணி இரயில் நிலையம் எதிரில் ஆவின் பாலகம் திறந்து வைத்தேன்.
உடன் :- கழக உடன் பிறப்புகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்.
#DMK4TN#DMKGovt#tiruttani#aavin#schandran#tiruttanimla#ஆவின்#DMK
"எந்தவொரு சமூகத்தின் முன்னேற்றமும் அந்த சமூகத்தின் கல்வியின் முன்னேற்றத்தைப் பொறுத்தது" என்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் முழங்கினார்கள்.
இக்கருத்துக்கு ஏற்ப, சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற #AmbedkarBirthAnniversary#சமத்துவ_நாள் விழாவில், ‘அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை’ திட்டத்தின் கீழ், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், 60 ஆதி திராவிடர் - பழங்குடியின மாணவர்களுக்கு தலா ரூ.36 இலட்சம் அளவுக்கு அயல்நாடு சென்று உயர் படிப்பு மேற்கொள்வதற்கான கல்வி உதவித்தொகையை இன்று வழங்கினார்கள்.
முதுகலைப்பட்டம் மற்றும் முனைவர் ஆராய்ச்சி படிப்புக்காக வெளிநாடு செல்லவுள்ள நம் மாணவச் செல்வங்களின் கல்வி சிறக்க நாம் உடனிருந்து வாழ்த்தினோம்.
@MMathiventhan
தனது 14 வயதில் தலைவர் கலைஞர் அவர்கள் போர்பரணி பாடிய இடமும், பேரறிஞர் அண்ணாவை கலைஞர் முதன்முதலில் சந்தித்த இடமுமான இந்த திருவாரூர் மண்ணில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தின் ஒவ்வொரு துரும்பும் அவரை நினைவூட்டுகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், 60 மாணவ - மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய நிகழ்வில், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.@Udhaystalin அவர்கள் இன்று பங்கேற்றார்கள்.
சாதி எனும் ஆயிரமாண்டு அழுக்கினை அறிவெனும் தீப்பந்தம் கொண்டு பொசுக்கிய புரட்சியாளர் - தனக்குவமை இல்லாத புத்துலகப் புத்தர் சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்தநாள்... #சமத்துவ_நாள்!
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நம் பயணத்தில் என்றும் நம்மை வழிநடத்தும் அறிவுலகச் சூரியன் அம்பேத்கர் வாழ்க!
‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற இலக்கை நோக்கிய நமது #DravidianModel பயணத்தில், பாபாசாகேப் விரும்பிய சமத்துவ #INDIA கண்டே தீருவோம்! #JaiBhim!
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, ஆய்குடி ஊராட்சியில் தனது பரிந்துரையில், நபார்டு திட்டம்-ரூ.2கோடியே 37 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பாலத்தினை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர்.@TRBRajaa அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில், திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வ.மோகனச்சந்திரன் இ.ஆ.ப.,
துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்கள் நாளை புதுப்பிக்கப்பட்ட மெரினா கிளை நூலகத்தை திறந்து வைத்து சிறப்பிக்கவுள்ளார்.
இதனை முன்னிட்டு இன்று நூலகத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.
@tnschoolsedu
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களுடன் தொடக்கம் முதலே இணைந்து நின்றது திராவிட இயக்கம். அரசியல் சட்டத்தை வகுத்தளித்த புரட்சியாளர் அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் பெண்களுக்கு குடும்பச் சொத்தில் சம உரிமை வழங்கும் சட்டத்தை நிறைவேற்றியது முதல் சாதி ஏற்றத்தாழ்வற்ற சமத்துவபுரங்களை அமைத்தது வரை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் சாதனைகள் ஏராளமானவை.
அவர் வழியில் திராவிட நாயகன் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆட்சி காலம் புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ் சேர்க்கும் வகையில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் உட்பட அனைவருக்குமான திட்டங்களை நிறைவேற்றி வருவதுடன், இந்தியாவின் கூட்டாட்சி தன்மையை பாதுகாக்கும் வகையிலான சட்டப் போராட்டத்திலும் வெற்றி பெற்று வருகிறது.
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக திராவிட மாடல் அரசு கடைபிடிக்கிறது.
பெரியார்- அம்பேத்கர் லட்சியங்களை நிறைவேற்றும் மண் நம் தமிழ்நாடு.
ஜெய் பீம் !
சமூக ஏற்ற - தாழ்வுகளை களைந்து சட்டத்தின் மூலம் அனைவரையும் சமமாக்கிய புரட்சியாளர் டாகடர். அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குவோம்.
ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராகவும், தீண்டாமையால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை அண்ணல் அம்பேத்கரின் புகழ் இந்திய வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
அவர் பிறந்த இந்நாளில் பிற்போக்குத்தனங்களை புறந்தள்ளி, சாதி - மத பேதமற்ற; சமத்துவ சமுதாயம் படைக்க அனைவரும் உறுதி ஏற்போம்.!
அம்பேத்கரின் புகழ் ஓங்கட்டும்.!
#DMK #DravidianModel #MKStalin #KNNEHRU #DMK4TN #Tribute #BirthAnniversary #IndianConstitution #BRAmbedkar #DrAmbedkar #AmbedkarBirthdayWish