கடந்த 50 நாட்களாக தினமும் இரவில் மக்களை வாட்டி வதைக்கும் மின்வெட்டுத் துறை அமைச்சர், இதற்கு காரணம் சொல்கிறேன் என்ற பெயரில் ரீல்ஸ் அமைச்சரை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு வீக்கெண்ட்டுக்கு தன்னை அட்மிட் செய்ய எந்த பொய்யோடு வருகிறார் என்று பார்ப்போம்!
தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல!
மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்.
தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும் 💐❤️
Arrest/ Bail ..Arrest /Bail.. Arrest/Bail.. and arrest again. Isn’t Courts telling you that you are wrong.. Citizens are witnessing your Vindictive politics.. @ncbn@PawanKalyan please stop this #justasking
Staaaa..🔥
முதல்வர் பதவிக்கு உண்டான மரியாதை இப்பொழுது முதல்வராக இருக்கும் விஜய்க்கு கொஞ்சமேனும் தகுதி இல்லை.. அதனால்தான் என்னமோ... சபாநாயகருக்கு வாய் தவறி இன்னும் ஸ்டாலின் தான் ஆள்கிறார் என்ற நினைவில் ஸ்டா என உச்சரித்துவிட்டார்.
முதல்வர் ஸ்டாலின் என்பது எக்காலத்திலும் அழிக்க முடியாத ஒன்று.. தலைவர் செய்த திட்டங்களும் தலைவர் செய்த சாதனைகளும் பல!
ஸ்டாலின் என்பது வெறும் பெயரல்ல! 😎தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த பெயர்!💥
தமிழ்நாடு சட்டப்பேரவையில் #SofaModel அரசு அளித்த அறிக்கையை Comma, Full Stop கூட மாறாமல் ஆளுநர் அப்படியே வாசித்திருப்பது பாஜக - த.வெ.க-வின் மறைமுக கூட்டணியை அம்பலப்படுத்தி இருக்கிறது.
ஆளுங்கட்சியினர் Reels போடுவதற்கான Content Material-ஆக அமைந்துள்ள ஆளுநர் உரையில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் இல்லை.
தொடர் மின்வெட்டு - பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கெடு - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளுக்கு Sticker ஒட்டியும், த.வெ.க அரசின் சறுக்கல்களுக்கு கழகத்தின் மீது பழிபோடும் வகையிலும் அமைந்துள்ள ஆளுநர் உரையை கண்டிக்கிறோம். #TNAssembly
There’s no difference between BJP and TVK except that there are 2 ministers from Congress in the TVK Govt.
Let’s not also forget what Annan @thirumaofficial said about @TVKVijayHQ that he is a child of the RSS.
So it’s only natural that the narrative would shift. 😊
மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக நிறைவேற்றும் தீர்மானத்தை கடிதமாக ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல், தமிழ்நாட்டின் அனைத்து சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்து குழுவாக சென்று ஒன்றிய அரசிடம் வழங்கி நம் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும்.
- மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly
மக்களோட குரல் கேட்குதா CM saar.. தொடர் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு வீதியில் இறங்கி போராடிட்டு இருக்காங்க.
உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு நீங்க கொடுத்த மாற்றம் இதுதானா?
#TVKFails
தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜா அவர்களால் கிராமங்களுக்குள் நுழைந்தன. கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ்ச்சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார்.
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட அவரது படைப்புகளைத் தமிழ்ச்சினிமாவின் வரலாற்றை எழுதும் எவர் ஒருவரும் தவிர்க்க முடியாது. தனது படைப்பாற்றலின் வழியாகப் பிற மொழிகளிலும் படங்களை இயக்கி, அங்கும் தன் முத்திரையைப் பதித்த அவரை இந்தியத் திரை வரலாறு என்றைக்கும் உச்சத்தில் வைத்து நினைவுகூரும்!
தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுகொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் பாரதிராஜா அவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு.
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா - ‘இசைஞானி’ இளையராஜா - ‘கவிப்பேரரசு’ வைரமுத்து ஆகியோரது கூட்டணியில் உருவான பாடல்கள் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டும், ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்துக்கொண்டும்தான் இருக்கின்றன.
அவரது உடல்நலன் குறித்து விசாரிக்கவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும் பாரதிராஜா அவர்களைச் சந்தித்து உரையாடிய தருணங்களைத் தற்போது நினைக்கையில் நெஞ்சம் மேலும் பாரமடைகிறது.
பாரதிராஜா அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பாரதிராஜாவின் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அல்லிநகரத்தில் பிறந்து, அழியாத படைப்புகளைக் கொடுத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள், சினிமா ரசிகர்களின் மனங்களில் - தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்!
திரு. பாரதிராஜா அவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியபோது, அவரை அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் உடனிருந்தோர் கோரினர். இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் சாதனைகளைப் போற்றும் வகையிலும், அவரைச் சார்ந்தோரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் ஆவன செய்ய வேண்டுமெனத் தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்.
உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்குத் துணையிருப்போம்!
ஓராண்டில் 22 குடும்பங்களுக்கு உதவித்தொகை கொடுத்த போது இதயம் கனக்கிறது.
உடன்பிறப்புகளே… உங்கள் ஒவ்வொருவருக்கும் - உங்கள் குடும்பத்திற்கும் துணை நிற்க வேண்டியது கழகத்தின் கடமை! ஆனால், அதைவிடப் பெருங்கடமையாக நான் கருதுவது: சாலைப் பயணங்களை நீங்கள் கவனமுடன் மேற்கொள்ள வேண்டும்.
உடன்பிறப்புகள் ஒவ்வொருவொருவர் மீது நானும்,உங்கள் குடும்பத்தினரும் வைத்துள்ள நம்பிக்கையைக் காத்து நலமுடன் வாழ வேண்டும்!
#DMK4TN