Cha evlo arivaali kootathu kuda namba sanda senjite irukom🤣🤣🤣 #DMK
Starbucks already Anna Nagar, Chennai la irukam...😜😜
3-4 employment ahm 😛😛😛
Chaa cafe ka ivlo build up kuduthute irukom🤬🤬🤬
#TVK
One of the victims who testified in the POCSO Veeramani case belongs to the SC/ST community. Beyond caste and religion, all of us are here fighting for these children.
But those who claim to speak for the oppressed community..
@beemji , @mari_selvaraj, Ameer, @Dir_Vetrimaaran
1. Can’t you spare two minutes between your shoots to question the unfair investigation under the previous government?
2. Are these children not children of this soil?
3. Does their pain not matter when DMK was in power?
4. Does justice matter to you only when the cameras are rolling?
5. If even children don’t get your voice, what exactly are you all fighting for?
#veeramanifiles
17.09.2026 - சமூகநீதி துறை செய்தி வெளியீடு
மலேசிய நாட்டில் முனைவர் பட்ட ஆய்வு (Ph.D) மேற்கொண்டுவரும் திரு. பாரதிதாசன் என்ற மாணவருக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் இரண்டாம் ஆண்டு படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என x தளத்தில் வெளியான காணொளி தொடர்பாக சமூகநீதி துறை விளக்க அறிக்கை
@VanniTamizhVCK@ADWDtamilnadu@TN_Tribal_WD@tahdco@TNDIPRNEWS
இங்கிலாந்து, இலண்டன் நகரில் இன்று (14.09.2026), சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு (Assembly) மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் குழுமத்தின் உலகளாவிய சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் திரு.பாரி பெயிண்டர் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. ஆகியோர் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் திரு.குமரன் பெரியசாமி, IFS, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Today (14.09.2026), in London, England, a Memorandum of Understanding (MoU) was signed between Samvardhana Motherson International Ltd., along with its European and UK-based joint venture companies, and Guidance, Tamil Nadu, for an investment of approximately Rs.11,000 crore in Tamil Nadu. The investment will create employment opportunities for around 7,000 people across sectors including design, engineering, manufacturing, assembling and logistics facilities.
The MoU was signed and exchanged by Mr. Barry Painter, Global Head – Marketing and Communications, Samvardhana Motherson International Group, and Mr. Deepak Jacob, IAS, Managing Director, Guidance, Government of Tamil Nadu.
Thiru. Kumaran Periyasamy, IFS, High Commissioner of India to the United Kingdom, representatives of the company, and senior officials of the Government of Tamil Nadu were present in the event.
#CMJosephVijay
🚨 CLARIFICATION:
Erode District Police have clarified that permission has been granted for the Periyar birth anniversary procession scheduled for September 17 at 10:30 AM. Reports claiming that permission was denied are false and contrary to facts.
“தமிழ்நாடு முழுவதும் நேற்று காலை முதல் சீரான மற்றும் தடையற்றமின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு மின் தடை(unplanned outage ) ஏற்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளது மின்வாரியம்.”
தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சாரவிநியோகத்தை உறுதி செய்யும் வகையில், கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறுஉடனடி நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம்மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக மின்பற்றாக்குறை ஏதுமின்றி, தற்போது மாநிலம் முழுவதும் சீரான மற்றும்தடையற்ற மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
மின் தொகுப்பு மற்றும் மின்விநியோக நிலைமையைதொடர்ந்து கண்காணிப்பதற்காக, தமிழ்நாடு மின்சார வாரியதலைமையகத்தில் உயர்மட்ட அலுவலர்கள் குழு 24 மணிநேரமும் விழிப்புடன் கண்காணித்து, தேவையானநடவடிக்கைகள் மற்றும் உரிய உத்தரவுகளை உடனுக்குடன்வழங்கி வருகிறது.
மேலும், களப்பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள்அடங்கிய குழுக்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு, சீரான மின்விநியோகத்தினை உறுதிப்படுத்தும் பணியில்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மின்சாரத் துறை சார்ந்த புகார்களுக்கு, 24 மணிநேரமும் செயல்படும் ‘மின்னகம்’ நுகர்வோர் சேவைமையத்தை 94987 94987 என்ற எண்ணில்தொடர்புகொள்ளுமாறு மின் நுகர்வோர்கள் மற்றும்பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
— தமிழ்நாடு மின்சார வாரியம்
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
முப்பதாண்டுகளுக்கும் மேலாக அளவற்ற அன்பை வாரி வழங்கி, வாழ்வில் கிடைத்தற்கரிய ஓர் உயரிய இடத்தைப் பேரன்புடன் தந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாக, உறவாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக ஒவ்வோர் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒரு நிரந்தர இடத்தை வழங்கி, தாயன்புடன் தாங்கி வருகின்றீர்கள்.
எல்லாவற்றையும் அளித்த ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்கும் உலகத் தமிழ் உறவுகளுக்கும் என் நன்றியை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று யோசித்தோம். அதன் வெளிப்பாடாகவே, உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே 2024-இல் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் அரசியல் களம் கண்டே 27 மாதங்கள்தான் ஆகின்றது. ஆனால் அதற்குள், தமிழக அரசியல் வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டினீர்கள்.
35% வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சியாகத் த.வெ.க.வை உயர்த்திப் பிடித்தீர்கள். உங்கள் தீர்ப்பை மதித்த ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன் இதோ இன்று, தமிழக மக்களின் முதல் சேவகனாக, முதலமைச்சராக உங்கள் விஜய். ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை லட்சியமாகக் கொண்டு, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி அமைத்து, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சியை நிறுவிக் காட்டி இருக்கிறோம்.
மக்களே… என் சொந்தங்களே…தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பேரதிசயத்தை நீங்கள் நிகழ்த்திக் காட்டினீர்கள். அதன் வெளிப்பாடாக, இந்தியத் தேர்தல் ஆணையம் உங்கள் தமிழக வெற்றிக் கழகத்தை, தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது. ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய உங்கள் விசில் சின்னத்தையும் த.வெ.க.வின் சின்னமாக அங்கீகரித்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் நம்மை நம்புகிற ஒட்டுமொத்த மக்களுக்கான நன்றிக்கடன் பணி என்றென்றும் தொடரும். இந்த வேளையில், பேருழைப்பைத் தந்து கழகம் காக்கும் தோழர்களையும் நிர்வாகிகளையும் நெகிழ்வுடன் நினைத்துப் பார்க்கிறேன். அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!
Thoothukudi is moving from ambition to action.
Under the visionary leadership of Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay, the proposed HD Hyundai shipyard has entered detailed project preparation, with the DFR process underway and the DPR process initiated.
HD Hyundai confidently moves ahead with its plan to be the anchor shipyard at Thoothukudi Greenfield Shipbuilding cluster.
Thoothukudi, Tamil Nadu. India’s next shipbuilding powerhouse.
#CMJosephVijay #TamilNadu
Sreejith → Ramajayam → Sreekala → Geetha Mohan → Shruthi Karthik 👇
Lotus Reality LLP
Sreejith + Ramajayam + Sreekala - ஒரே LLP-ல் இணைந்தவர்கள்.
G Square Creators LLP
Ramajayam + Sreekala - Designated Partners.
Sreejith - முன்னாள் Designated Partner.
G Square Land & Building LLP
Ramajayam + Sreekala - Designated Partners.
Sreejith - முன்னாள் Designated Partner.
SAS Electron LLP
Mohan Karthik + Shruthi Karthik - Designated Partners
Sai Venkat Keerthi LLP
Rangaswamy Ramajayam + Sreekala - Designated Partners
Geetha Mohan + Shruthi Karthik - Partners
G Square Promoters Pvt Ltd
Shruthi Karthik + Sreekala - Directors
Rangaswamy Ramajayam - Former Director
G Square Ground & Promoters Pvt Ltd
Shruthi Karthik + Rangaswamy Ramajayam - Directors
Sreekala - Former Director
Red Brick Flat Promoters & Developers Pvt Ltd
Preetham Dev Moses - Director
Shruthi Karthik - Additional Director
Mannur Whitefield Creators Pvt Ltd
Ramajayam + Sreekala - Directors.
Geetha Mohan - முன்னாள் Additional Director
தந்தை: எம்.கே. மோகன்
தாய்: கீதா மோகன்
மகன்: கார்த்திக் மோகன்
மருமகள் / கார்த்திக் மோகனின் மனைவி: சுருதி கார்த்திக்
இப்போது M.K. Mohan-ன் மற்றும் அவரது மகன் Mohan Karthik தொடர்பான financial entry-யையும் பாருங்கள்
2021 Election Affidavit – Personal Loans/Advances Given: (கணக்கு காட்டப்பட்டது மட்டும்)
Ramajayam - ₹17,73,300
Sreejith - ₹17,49,697
R. Geetha - ₹18,94,340
M. Geetha - ₹1,25,00,000
M. Karthik - ₹7,00,000
இதற்கிடையில் Mohan Karthik + Sabarisan:
→ Max Space Realty LLP
→ Touch Feel Technologies LLP
→ Look Up Merchandise LLP
என்ற corporate links-லும் இணைந்திருக்கிறார்கள்.
இப்போது 2026 தேர்தல் காட்சியையும் பாருங்கள் 👇
M.K. Mohan-ன் (Ex-MLA) மகன் Mohan Karthik, Villivakkam தொகுதியில் DMK சார்பில் போட்டியிட்டபோது,
Sabarisan, அவரது மனைவி Senthamarai, M.K. Stalin, Udhayanidhi Stalin, Durga Stalin, Kanimozhi, Tamil Arasu, Selvi உள்ளிட்ட Stalin குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவருக்காக Villivakkam-ல் நேரடியாக பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டனர்.
ஒரு வேட்பாளருக்காக Stalin குடும்பத்தைச் சேர்ந்த பலரும் ஒரே தொகுதியில் நேரடியாக களமிறங்கி பிரச்சாரம் செய்தது எதற்காக??
Mohan Karthik-க்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து, Sabarisan உள்ளிட்ட Stalin குடும்பத்தினர் நேரடியாக களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்ததன் பின்னணி என்னவாக இருக்கும்.
Corporate Links + Partnership Links + Election Affidavit Financial Entries + 2026 Election Campaign
இந்த links-ஐ எல்லாம் சேர்த்து பார்த்தால், “தொடர்பே இல்லை” என்று சொல்லிவிட்டு கடந்து செல்ல முடியுமா?
Mr. Ramajayam, இந்த documented financial & corporate links-க்கு ஒரு தெளிவான விளக்கம் தர முடியுமா?
அடுத்ததாக, இந்த நிறுவனங்களின் Registered Address-களையும் பார்ப்போம் ஒரே முகவரியில் இயங்கும் பல நிறுவனங்களின் link என்ன என்று..
Documents are public. The links are on record.
#GSquare #Sabarisan #MohanKarthik
உழவர் சந்தை தான் US னு நினைக்கிற உண்டியல் திருடிக்கு,
ஆங்கிலத்தில் Acronym அப்படினு ஒன்னு இருக்குனு தெரியவா போகுது 😂😂
VETTRI-ல இருக்கிற ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு பொருள் இருக்கு. Vision, Enterprise, Trade, Transformation, Resilience, Innovation.
#TVK#Vijay
இந்த காணொளியில் உள்ள மின் நுகர்வோர் தனக்கும் மற்ற பலருக்கும் அதிக மின் கட்டணம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே, மின் வாரியம் மாநிலம் முழுவதும் உள்ள 3.74 லட்சம் மின் இணைப்புகளை சிறப்பு ஆய்வு செய்ய எடுத்துக் கொண்டது. இதில் நேற்று வரை 3.43 லட்சம் மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 0.75% மின் இணைப்புகளில் மட்டுமே வேறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த மின் நுகர்வோர் தனது மின் இணைப்பு எண்ணை தெரிவித்தால் மின்வாரியம் உடனடியாக அதை சிறப்பு ஆய்வு செய்ய எடுத்துக் கொள்ளும்.
மற்ற மின் நுகர்வோர்களும் தங்களது மின் கட்டணத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களுக்கு மின்னகம் 9498794987 என்ற எண்ணிலோ அல்லது X வலைத்தளத்தின் மூலமாகவோ தெரிவித்தால் உடனடியாக சிறப்பு ஆய்வு செய்யப்படும். 200 யூனிட் இலவச மின் திட்டத்தின் மூலம் 1 கோடியே 42 லட்சம் மின் நுகர்வோர்கள் பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தினால் ஜூன் மாதத்தில் 59.31 லட்சம் மின் நுகர்வோர்களும், ஜூலை மாதத்தில் 60.92 லட்சம் மின் நுகர்வோர்களும் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக மின் சேவையை பெற்று பயனடைந்துள்ளனர். மின் கட்டணத்திலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
மின் கட்டணம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த வருடம் ஜூலை மாதம் வரை தொடர்ந்த கோடை வெயிலினால் மின் பயன்பாடு அதிகரித்ததே பெரும்பாலோருக்கு மின் கட்டணம் உயர்ந்ததற்கு மூல காரணமாகும்.
In the video the consumer has alleged that many including her have faced unwarranted higher electricity bills. TNEB has already taken up a special inspection drive of 3.74 lakh service connections and out of which 3.43 connections have been inspected so far. Out of the services inspected only 0.75% had errors.
Any consumer including the person in the video may mention their service number to enquire about doubts in billing on social media by tagging TANGEDCO handle or contact minnagam at 9498794987 number. Under the 200 units free scheme 1.42 crore consumers have benefited. Under the scheme in the month of June, 59.31 lakh consumers and in July 60.92 lakhs consumers have enjoyed electricity without paying any charges.
Due to hot weather prevailing up to the month of July, the consumption has generally increased and there is no increase in electricity tariff. Hence, consumers are requested not to believe any hoax messages.
Just got a call from GCC. Apparently the revision was already in the pipeline but not implemented before elections. Apparently a small error in communication. The official was polite and informative. Thank you, @chennaicorp@CMOTamilnadu
Caught spreading yesterday’s decision as today’s outrage. 🤡
The screenshot you’re replying to shows the 6% property-tax resolution was passed in September 2024. So why tag the current CM in 2026 and pretend it just happened?
Before manufacturing outrage, check your own receipts. Dates don’t lie. 🔥
#FactCheck #Chennai #PropertyTax
திமுக ஆட்சியில் தாராளமாக தாரைவார்க்கப்பட்ட தமிழ்நாடு மருத்துவர்களின் உரிமைகளை மீட்டெடுத்து வரலாறு படைத்துள்ளது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தவெக அரசு.
கடந்த கால திமுக ஆட்சியில், தங்களின் நிர்வாகத் திறமையின்மையாலும், மெத்தனப் போக்கினாலும் தமிழகத்திற்கு உரிய உயர் சிறப்பு (Super Speciality) மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு (All India Quota) தாராளமாக தாரைவார்த்துவிட்டு, இன்று மக்கள் செல்வாக்கை இழந்து அமர்ந்திருக்கும் திரு. ஸ்டாலின் @mkstalin அவர்கள் தவறான தகவல்களின் அடிப்படையிலும், பொய்களின் அடிப்படையிலும் முதலைக் கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக உள்ளது.
கடந்த ஆண்டுகளில் உயர் சிறப்பு மருத்துவ கலந்தாய்வு முடிந்தபின், மாநில ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்களை கொண்டு நிரப்ப முடியாத இடங்கள் அனைத்தும் எவ்வித நிபந்தனையும் இன்றி அகில இந்திய தொகுப்பிற்கு (All India Quota) ஒப்படைக்கப்பட்டன.
அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பிறகு, அவ்விடங்களை ஒன்றிய அரசு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை (Cut-off) குறைத்து, அகில இந்திய தரவரிசைப் பட்டியல் (All India merit list) மூலம் நிரப்பி வந்தது. இதனால் தமிழ்நாட்டு அரசு மருத்துவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக, கடந்த ஆட்சிக் காலங்களில் 2024-ல் 119 இடங்களும், 2025-ல் 145 இடங்களும் அகில இந்திய தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்டன என்பது மறுக்க முடியாத வரலாறு. அதனால் தமிழ்நாடு மருத்துவர்களின் வாய்ப்புகள் முற்றிலும் பறிபோனதை இந்த நாடே அறியும்.
அன்று நீங்கள் இழைத்த வரலாற்றுத் துரோகத்தை மூடிமறைக்க, இன்று எங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் தலைமையிலான தவெக அரசு பெற்ற வெற்றியை சகித்துக் கொள்ள முடியாமல், வெற்று அறிக்கை ஒன்றை நீங்கள் வெளியிட்டதன் மூலம் உங்கள் அரசின் தவறுகளையும், தோல்விகளையும் மறந்திருந்த மக்களுக்கு நீங்களே மீண்டும் நினைவுப்படுத்தியுள்ளீர்கள்.
இந்த ஆண்டு, 151 உயர்சிறப்பு மருத்துவ இடங்கள் காலியாக இருந்தபோதும், முந்தைய ஆட்சியைப் போல அவற்றை உடனடியாக ஒப்படைக்க நமது அரசு மறுத்துவிட்டது. அரசு மருத்துவர்களின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு தகுதி மதிப்பெண் (Cut-off) குறைக்கப்படமாட்டாது என்ற திட்டவட்டமான உத்தரவாதம் அளித்தால் மட்டுமே இடங்கள் ஒப்படைக்கப்படும் என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தது.
தவெக அரசு உச்சநீதிமன்றத்தில் நடத்திய சமரசமற்ற, தீவிரமான சட்டப் போராட்டத்தின் விளைவாகத்தான் நேற்றைய தினம் தமிழ்நாட்டிற்கு ஆதரவான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு கிடைத்துள்ளது.
தலைசிறந்த சட்ட வல்லுநர்களின் பங்களிப்பு தமிழ்நாடு அரசின் சார்பில் மாநில உரிமைகளையும் அரசு மருத்துவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்காக, உச்சநீதிமன்றத்தில் வாதாட மூத்த வழக்கறிஞர் டாக்டர். அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்ட தலைசிறந்த சட்ட வல்லுநர்கள் நியமிக்கப்பட்டனர்.
உச்சநீதிமன்றத்தின் 28.07.2026 தேதியிட்ட உத்தரவின் முக்கிய அம்சங்கள்:
நிரப்பப்படாமல் உள்ள 151 உயர் சிறப்பு மருத்துவ (Super Speciality) இடங்களை 29.07.2026 அன்று DGHS-இடம் திருப்பி ஒப்படைத்து, அதே தகுதி மதிப்பெண் (Cut-off) அடிப்படையில் மட்டுமே இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மிக முக்கிய சட்டப் பாதுகாப்பு:
ஒருவேளை இரண்டாம் கட்ட கலந்தாய்விற்குப் பிறகு, நிரப்பப்படாத மருத்துவ இடங்கள் இருப்பின் அதனை நிரப்புவதற்காக தகுதி மதிப்பெண் குறைக்க முடிவு செய்யப்பட்டால், அந்த இடங்களில் 50% இடங்கள் உடனடியாக தமிழ்நாடு அரசிற்கே (மாநில அரசு மருத்துவர்களுக்கு) திருப்பி அளிக்கப்பட வேண்டும் என்ற நமது வாதங்களை ஏற்று உச்சநீதிமன்றம் தற்பொழுது உத்தரவிட்டுள்ளது.
முந்தைய ஆண்டுகளில் நடந்ததைப் போல, ஒட்டுமொத்த இடங்களும் பறிபோகும் என்ற நிலை முற்றிலுமாக மாற்றப்பட்டு, தகுதி மதிப்பெண் (Cut-off) குறைக்கப்பட்டால், காலியாக உள்ள இடங்களில் 50% இடங்கள் கட்டாயமாகத் தமிழ்நாட்டிற்கே திரும்ப வழங்கப்பட வேண்டும் என்ற உரிமையை தவெக அரசு நிலைநாட்டியுள்ளது.
தமிழ்நாடு மருத்துவர்களின் நலனையும், மாநில உரிமைகளையும் அடகு வைத்த திமுக, இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது. மாநில சுயாட்சியையும், மருத்துவக் கல்வி உரிமைகளையும் பாதுகாப்பதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தவெக அரசு எப்போதும் ஒரு படி முன்னேதான் இருக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
@TVKPartyHQ | @TVKVijayHQ | @HM_TamilNadu |