Format C-7
Details of candidate with pending criminal proceedings, the rationale behind their nomination, and an explanation as to why other individuals with no criminal antecedents were overlooked.
(As per the ECI's directions issued in pursuance of the Hon’ble Supreme Court)
Name of the Political Party: Tamilaga Vettri Kazhagam
Name of the Election: Bye-Elections to Tamil Nadu Legislative Assembly, 2026
Name of the State/UT: Tamil Nadu
Name of the Constituency: 101 – Dharapuram (SC)
Name of the candidate: P. SATHYABAMA
https://t.co/hZDNFTvafc
அனைவருக்கும் வணக்கம்!
வருகின்ற தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கழகத்தின் தேர்தல் துணைப் பொறுப்பாளராக பணியாற்றிட வாய்ப்புத்தனை நல்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அண்ணன் தளபதி. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும், கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் N. ஆனந்த் MLA அவர்களுக்கும், எங்கள் மாவட்ட பொறுப்பு அமைச்சர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
வாகைச் சூடுவோம்!
வெற்றிப் பெறுவோம்!!
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand@logintvk
இன்று (11.09.2026), மேனாள் சென்னை மாகாண முதலமைச்சர் டாக்டர் ப. சுப்பராயன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
மாண்புமிகு பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் திரு. லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்கள்,
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. L. மதுபாலன், IAS அவர்கள்,
நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு. C.S. திலீப் அவர்கள்,
சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு. சந்திரசேகர் அவர்கள்
ஆகியோர், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகிலுள்ள சுப்பராயன் நினைவரங்கத்தில் அமைந்துள்ள டாக்டர் ப.சுப்பராயன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ளும், திருச்சிராப்பள்ளி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, நாளை (01.06.2026) திங்கள்கிழமை, திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் மாலை 4.15 மணி முதல் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
காவல்துறையின் வழிகாட்டுதலின்படி, பங்கேற்பாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தும் போது, அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு நிறுத்த வேண்டும்.
QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்
(ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர்),
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் திரு. கூ. பிரேம்குமார் அவர்கள், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய சகோதரர்தான். எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான திரு. கூ. பிரேம்குமார் அவர்களையும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் நமது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது முழு ஆதரவுடன் களம் காணும் நம் சகோதரர் திரு கூ. பிரேம்குமார் அவர்களை, மனத்தளவில் நம்முடைய வேட்பாளராகக் கருதி, அவருக்குத் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள வரிசை எண் 12-இல் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். நம் குடும்பத்தைச் சேர்ந்த அவரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கழக நிர்வாகிகளையும் தோழர்களையும் எடப்பாடி தொகுதி மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில் இவரது வெற்றி அமையட்டும்.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
அனைவருக்கும் வணக்கம்.
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் அவர்கள், இன்று (14.04.2026, செவ்வாய்) திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் முதல் பூலுவபட்டி பிரிவு வரை மதியம் 2 மணி முதல் வாகனத்தின் வாயிலாக தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பிரசாரத்தில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், கண்டிப்பாகப் பின்தொடரக் கூடாது. இதை உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும்.
அத்தோடு தேர்தல் ஆணைய விதிகளை பின்பற்றுமாறும், குறிபிட்ட நேரத்திற்கு முன்கூட்டியே வந்து காத்துக்கொண்டிருப்பதைத் தவிர்க்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
அனைவருக்கும் வணக்கம்.
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் அவர்கள், நாளை (10.04.2026, வெள்ளிக்கிழமை) சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், காரைக்குடி டவுன், கண்ணதாசன் மணிமண்டபம் அருகே, நண்பகல் 12.00 மணி முதல் 2.30 மணி வரை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பிரசாரத்தில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், கண்டிப்பாகப் பின்தொடரக் கூடாது. இதை உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும்.
அத்தோடு தேர்தல் ஆணைய விதிகளை பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
அனைவருக்கும் வணக்கம்.
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் அவர்கள், நாளை (04.04.2026, சனிக்கிழமை) புதுச்சேரி மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 11 மணி வரை தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி பகுதியிலும், 11 மணி முதல் 12 மணி வரை கடலூர் சாலை மால் அருகிலும், 12 மணி முதல் 01 மணி வரை தவளக்குப்பம் ஜங்ஷன் பகுதியிலும் கழகத் தலைவர் அவர்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பிரசார நிகழ்வுகளில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் அறவே பின்தொடரக் கூடாது.
தேர்தல் ஆணையம் விதித்துள்ள நிபந்தனைகளின்படி, கழகத் தலைவர் அவர்களின் பிரசாரத்தில் கலந்துகொள்ள 5 ஆயிரம் பேருக்கு மேல் அனுமதி இல்லை.
அத்துடன் இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
18 வயதை கடந்தும் இன்னும் Voter ID-க்கு விண்ணப்பிக்கவில்லையா? முதல் முறை வாக்காளரா நீங்கள்? அப்படியானால், உங்கள் ஓட்டுரிமையை நிலைநிறுத்தவும் உங்கள் வாக்கை உறுதி செய்யவும் தேவையான வழிமுறைகளை விளக்கும் இந்தக் காணொலி உங்களுக்காக!
கழகத் தோழர்களுக்கு வணக்கம்.
கழகத் தலைவர் அவர்களின் தலைமையில், நாளை (05.11.2025, புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு, மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ள கழகச் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுக்குழுக் கூட்டத்திற்கான அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக் கழக அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.
எனவே பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதம் மற்றும் கழக அடையாள அட்டையைக் கட்டாயம் தவறாமல் கொண்டுவந்து, சிறப்புப் பொதுக்குழுவில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தலைமை நிலையச் செயலகம்
தமிழக வெற்றிக் கழகம்.
கோவையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் சீண்டலுக்கும் துன்புறுத்தலுக்கும்
வன்கொடுமைக்கும் ஆளாகி உள்ளதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது. அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமையே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கோவையில் தாங்க முடியாத கூட்டுப் பாலியல் கொடுமையா?
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எங்கே? பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு எங்கே? தொடர்ந்து துன்பம் நேர்கிறது. தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது?
கோவை மாணவிக்குக் கொடுமை விளைவித்த குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்துச் சட்டப்படி தண்டிக்க வேண்டும்.
@TNCMHelpline மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு 2 வருடங்களாக அலைகிறேன் இது CM Help Desk ல் எனது 2 வது புகார் . மனுவின் கோரிக்கையை நிறைவேற்றாமல் மனுவை close செய்கிறார்கள். இந்த முறையாவது தீர்வு கிடைக்குமா ஐய்யா ? ஒரு பட்டா மாறுதலுக்கு 2 ஆண்டுகள் 😔 @mkstalin@Udhaystalin
@TNCMHelpline மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு 2 வருடங்களாக அலைகிறேன் இது CM Help Desk ல் எனது 2 வது புகார் . மனுவின் கோரிக்கையை நிறைவேற்றாமல் மனுவை close செய்கிறார்கள். இந்த முறையாவது தீர்வு கிடைக்குமா ஐய்யா ? ஒரு பட்டா மாறுதலுக்கு 2 ஆண்டுகள் 😔 @mkstalin@Udhaystalin