மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு.சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களை இன்று (10.6.2026) புதுதில்லியிலுள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
3 செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா?
உண்மையை மறைக்க முயலும் தவெக அரசுக்கு கடும் கண்டனம்!
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கும் ஒளிபரப்புச் சேவையிலிருந்து பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் 24x7, தமிழ் ஜனம் ஆகிய செய்தித் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பியதால் ஆளும் தவெக அரசு, எதேச்சாதிகார போக்குடன் 3 சேனல்களையும் முடக்கியுள்ளது.
ஜனநாயகத்தின் 4 ஆவது தூணான ஊடகங்கள் தான், அரசு நிர்வாகத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதிலும், மக்களின் அன்றாட பிரச்னைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதிலும் முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால் ஊடகங்களின் குரல்வளையை நெரிப்பதன் மூலம் ஆட்சியின் அவலங்கள் மக்களிடம் சென்றடையாமல் தடுத்து விட முடியும் என தவெக அரசு எண்ணுகிறது.
3 சேனல்கள் முடக்கப்பட்டிருப்பது, பத்திரிகை சுதந்திரத்தைப் பறிப்பது மட்டுமின்றி ஜனநாயகத்திற்கும் எதிரானது. அரசு நிர்வாகத்தின் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் ஊடகங்களின் குரலை ஒடுக்க நினைப்பதும் தவெக அரசின் செயலற்ற தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத தவெக அரசு, ஊடகங்களை முடக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசுத் தரப்பில் சொல்லப்படும் காரணங்கள் எதிலும் உண்மையில்லை. கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடுமா?
ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை தவெக அரசு கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு அவர்களை இன்று (10.6.2026) புதுதில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay@rashtrapatibhvn
உங்கள் கருத்துகள் அனைத்தும் உண்மை என்றால் நிச்சயம் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் ஆனால் சொல்வதெல்லாம் உண்மைக்கு மாறனாதாக இருந்தால் எப்படி ஒரு கட்சியை உங்களுக்கு பிடிக்காது என்பதற்காக பொய்யான தூஷனங்களை அள்ளி வீசாதீர்கள். உண்மையின் பக்கம் நில்லுங்கள் நீதி உங்கள் பக்கம் நிற்கும்.
வாய்மையே வெல்லும்!
சட்டம் அனைவருக்கும் சமம் என்பது எப்போது நிஜமாகும்?
சக சகோதரி அலிஷா அப்துல்லா அவர்களின் புகாருக்கு உடனே நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு நன்றி. அதே வேகம் என் விஷயத்தில் ஏன் இல்லை? மார்ச் மாதத்தில் இருந்து புகார் கொடுத்து, பிரஸ் மீட் வரை வைத்தும் இன்றுவரை காவல்துறையிடம் இருந்து ஒரு சின்ன போன் காலோ, மெசேஜோ கூட வரவில்லை.
ஒரு சிலருக்கு மட்டும் உடனே செயல்படும் சட்டம், எனக்காக ஏன் மௌனம் காக்கிறது? யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை, ஆனால் எனக்கான நீதியைத் தேடி இனி நீதிமன்றத்தை நாடுவதுதான் ஒரே வழி என்று என் மனம் வலிக்கிறது. 🖤 #JusticeForJulie #LawAndJustice #TVKVijayFails
மண்ணின் மணத்தை திரையில் விதைத்தவர், மக்களின் வாழ்வை கலையாக வடித்தவர்.
கிராமத்தின் குரலை உலகம் கேட்கச் செய்த கலைஞர் இன்று நினைவாகிவிட்டார்.
உங்கள் படைப்புகள் காலத்தைக் கடந்தும் வாழும், உங்கள் பெயர் தமிழ்ச் சினிமாவின் இதயத்தில் நிலைக்கும்.
கண்ணீர் அஞ்சலிகள்... உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
#Rip
இது போன்ற தவறான செய்திகளை வெளியிடும் இந்த தொலைக்காட்சியை முழுவதும் தடை செய்ய வேண்டும் அவர் இவ்வாறு கூறியிருந்தால் உங்களால் வீடியோ வெளியிட இயலுமா ?
#TVK@PttvNewsX@srinathtvk
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (2.6.2026) சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்தும், மாண்புமிகு ஒன்றிய அரசின் ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு.சி.ஆர். பாட்டீல் அவர்கள் புதுதில்லியிலிருந்தும் கலந்து கொண்ட காணொலிக் காட்சிக் கூட்டத்தில், உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) 2.0 திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட செயலாக்கக் காலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (3.6.2026) தலைமைச் செயலகத்தில், கோயம்புத்தூர் மாவட்ட சிறுதொழில்கள் சங்கத்தலைவர் (CODISSIA) திரு. எம். கார்த்திகேயன், துணைத் தலைவர் திரு. வி. ரங்கசாமி, CODISSIA இன்டெக் தொழில்நுட்ப மைய (COINTEC) கௌரவச் செயலாளர் திரு. எம். வி. ரமேஷ் பாபு, CODISSIA Defence Innovation and Atal Incubation மையத்தின் (CDIIC) இயக்குநர் திரு. வி. சுந்தரம் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை 2.6.2026 அன்று தலைமைச் செயலகத்தில், லீப் கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. ராஜீவ் கார்த்திகேயன், அந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. வி. தேவ் ஆனந்த், புரூக்ஃபீல்ட் நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் மற்றும் இந்தியாவிற்கான மேலாண்மை கூட்டாண்மையர் (Managing Partner) திரு. நவல் சைனி ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (3.6.2026) தலைமைச் செயலகத்தில், CREDAI Chennai அமைப்பின் தலைவர் திரு. மெஹுல் எச். தோஷி, ஆலோசகர்
திரு. எஸ். சிவகுருநாதன், CREDAI National அமைப்பின் செயற்குழு உறுப்பினர் திரு. எஸ். ஸ்ரீதரன், இணைச் செயலாளர் திரு. சுரேஷ் கிருஷ்ணன், CREDAI Tamil Nadu அமைப்பின் தலைவர்
திரு. W.S. ஹபீப் மற்றும் CREDAI அமைப்பின் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாளில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூர்கிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.
#CMJosephVijay