1980
அப்போது நான் வேலைக்கு சைக்கிளில் தான் போவேன்
ஒரு நாள் சைக்கிள் பஞ்சர் ஆகிவிட்டது
சற்று தூரம் சைக்கிளை தள்ளிக் கொண்டு போய் அங்கிருந்த ஒரு சிறிய கடையில் பஞ்சர் போட்டேன்
அவருக்கு சுமார் 45 வயது இருக்கும்
அவர் பஞ்சர் போட்டு முடிந்ததும் ரூபாய் நோட்டு எடுத்து கொடுத்தேன்
என்கிட்ட சில்லறை இல்ல தம்பி என்றார்
சரி இதை நீங்களே வைங்க எனக்கு வேலைக்கு நேரம் ஆச்சு சாயங்காலம் திரும்பி வரும்போது மீதியை வாங்கிக் கொள்கிறேன் என்றேன்
வேணாம் தம்பி சாயந்திரம் நீங்க திரும்பி வரும்போது கொடுங்க போதும் என்று பணத்தை வாங்க மறுத்துவிட்டார்
நான் சாயந்தரம் வராம ஏமாத்திட்டா என்ன பண்ணுவீங்க என்று கேட்டேன்
அவர் லேசாக சிரித்தபடி இன்று ஒரு டீ குடிப்பதை குறைத்துக் கொள்வேன் என்றார்
அவருடைய பதில் எனக்கு வித்தியாசமாக இருந்தது
மாலை திரும்பி வரும் போது பஞ்சர் போட்ட பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு வாங்க டீ சாப்பிடலாம்
என்று அவரை அழைத்துக் கொண்டு போய் இருவரும் டீ குடித்தோம்
நான் எவ்வளவோ தடுத்தும் டீ க்கு அவர் தான் பணம் கொடுத்தார்
அதன் பிறகு
எனக்கும் அவருக்கும் 22 வயது வித்தியாசம் இருந்தாலும் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக மாறி விட்டோம்
அவரிடம் பேச பேச தான் அவர் யார் என்பதை தெரிந்து கொண்டேன்
அவருடைய தந்தை கேரளாவில் இருந்து வாசனைப் பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து பிரிட்டிஷ் காரர்கள்களிடம் விற்கும் பெரிய வியாபாரி
பெரும் பணக்காரர்
பிரிட்டிஷ் ஆட்சி சேலம் மாவட்டத்தில் நிலங்களை ஏலம் விட்ட போது 100 ஏக்கர் நிலத்தை அவர் வாங்கி இருக்கிறார்
பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு மிட்டாதார் என்ற பட்டமும் வழங்கியிருக்கிறது
1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்
இந்தியா சுதந்திரம் பெற்றதும் மிட்டாதார் முறை ஒழிக்கப்பட்டு அவர்களின் நிலங்களை பறிக்கப் போகிறது என்ற தகவலை ஒரு அதிகாரி அவரிடம் சொல்லி இருக்கிறார்
உடனே இவர்
நான் கேட்கும்போது திருப்பி கொடுத்தால் போதும் என்ற நிபந்தனையுடன்
தன்னிடம் இருந்த 100 ஏக்கர் நிலத்தையும் தன் உறவினர்கள் பெயரில் மாற்றி எழுதி வைத்து விட்டார்
இந்தியா சுதந்திரம் பெற்று சில ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய நிலத்தை அவர் திருப்பி கேட்டபோது உறவினர்கள் தர மறுத்து விட்டார்கள்
அந்த அதிர்ச்சியில் அவர் உயிரை விட்டுவிட்டார்
அதன் பிறகு அவர் குடும்பம் நிற்கதியாகி சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு இருக்கிறது
அந்த குடும்பத்தின் மூத்த மகன்தான் இவர் என்று தெரிந்ததும் நான் அப்படியே ஷாக் ஆகிவிட்டேன்
எட்டாவது வரை படிச்சி இருக்கீங்க அந்த காலத்தில் ஒரு நல்ல வேலைக்கு போய் இருக்கலாம் இல்ல என்றேன்
எந்த வேலையும் கிடைக்கல தம்பி குடும்பத்தை காப்பாத்த பஞ்சர் கடை வைத்தேன் இன்று வரை இந்த பஞ்சர் கடை தான் எங்களுக்கு சோறு போடுது
என் மூத்த மகளுக்கு கல்யாணம் பண்ணனும் என்னிடம் இருக்கும் சேமிப்பில் காதில் கழுத்தில் போட நகை வாங்கி விட்டேன்
மத்த செலவுக்காக ரெண்டு வருஷமா பணம் சேர்க்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன்
ஏதாவது ஒரு எதிர்பாராத செலவு வந்து அதை காலி பண்ணிடுது என்று விரக்தியாக சிரித்தார்
ஒரு நாள் உங்களுக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்துச்சே அதுதான் உங்க மூத்த பொண்ணா என்று கேட்டேன்
அவர் ஆமாம் என்றார்
அடுத்த வாரம் நான் என் அப்பா அம்மாவை அழைத்துக் கொண்டு அவர் வீட்டுக்கு போய் பெண் கேட்டேன்
அவருடைய மூத்த மகள் தான் கடந்த 43 வருடங்களாக என் குடும்பத்தை ஆட்சி செய்யும் என் இல்லத்தரசி.
தமிழ்நாட்டுல நம்ம மட்டும் தான் இந்த Heartbeat & Resort web series
இன்னும் 1 episode கூட பாக்காம,
எந்த OTT,
எத்தனை season-ன்னு எதுமே தெரியாம இருக்கோம் போல. 😬
கழகத்தோட இருந்திருந்தா பப்பு அரஸ்ட்க்கு தலைவர் ஸ்டாலின்ல ஆரம்பிச்சி, ஆன்லைன் உபிக வரைக்கும் சப்போர்ட் பறந்திருக்கும். ஆனா, இப்போ Homelander யாரு அரஸ்ட் பண்ணதுனு பேர் கூட சொல்லாம பேருக்கு ஒரு ட்வீட், வப்பாட்டிங்க அனாதை பொனம் மாதிரி அம்போனு விட்டுட்டு பட ரிலீஸ்க்கு ஒதுக்கிட்டானுங்க.
As a கழகத்தானா, பப்புவ பாக்க ஜாலியா இருக்கு பிரண்ட்ஸ்.😍
வரணும் பழைய மு க ஸ்டாலினா திரும்பி வரணும் 🔥
2011 ல் 23 இடங்கள் மட்டுமே வென்றபோது இனி திமுக ஆட்சிக்கே வராது என்றார்கள்.
2014 ல் பாராளுமன்ற தேர்தலில் ஓர் இடம் கூட கழகம் வெல்லாமல் போக திமுக அவ்வளவு தான் திரும்பி எழவே ஏழாது என்று கதை கட்டினார்கள்.
திமுக அழிவை நோக்கி என பக்கம் பக்கம் ஆக எழுதி கொண்டு இருந்த காலம் அது.
அடுத்த தேர்தலிலே அசுர பாய்சல் எடுத்தது கழகம்.
2016 ம் ஆண்டில் திமுக 89 mla க்களை வென்று பெரும் எதிர்க்கட்சி யாக வந்து நிற்க..
98 mla க்கள் கூட்டணி யோடு எதிர் வரிசையில் அமர...
எதிர்க்கட்சி தலைவர் ஆக மு க ஸ்டாலின் அவர்கள் அடியெடுத்து வைக்கிறார்.
ஆக்க பூர்வமான எதிர்க்கட்சி யாக செயல் படுவோம் என்று சொன்ன வார்த்தையை கடைசி வரை காத்தார்.
🔥🔥
2017 ல் அவர் நினைத்து இருந்தால் அன்றே முதல்வர் ஆகி இருக்க முடியும்.
மத்தியில் இருப்பவர்கள் உடன் இணக்கம் ஆக போய் இருந்தால் அன்றே களம் மாறி இருக்கும்.
ஆனால் அதை விரும்பாத நேர்மை யின் சின்னம் தான் மு க ஸ்டாலின் அவர்கள்.
எதிர் கட்சி தலைவர் ஆக மக்களின் ஒருவன் ஆக சட்டசபை யில் தொடர்ந்து குரல் எழுப்பினார்.
பத்திரிகை யாளர் சந்திப்பு கள் நடத்தி கொண்டே இருப்பார்.
மக்கள் கேள்வி களுக்கு பதில் சொல்வதில் நியாமாக இருப்பார்.
சட்டசபை கேள்வி பதில்களில் எதிர் ஒலித்த அவர் குரல் தமிழ் நாடு முழுவதும் ஓங்கி ஒலித்தது.
ஒவ்வொரு மக்கள் பிரச்னை க்கும் முதல் ஆளாய் நின்றவர் ஸ்டாலின் அவர்கள்.
எத்தனை போராட்டம்
எத்தனை ஆர்ப்பாட்டம்
எத்தனை கூட்டம்
எத்தனை பிரச்சாரம்
எத்தனை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள்.
அவ்வளவும் நடந்து கொண்டு இருந்த போது தான் தமிழ் மண்ணின் தலைவரும் அவரின் தந்தையையுமான தலைவர் கலைஞர் அவர்களை இழக்கிறார்.
எவ்வளவு வலிகளை அனுபவித்து இருப்பார் அன்று.. அந்த வலி களை எல்லாம் மீறி ஒரு தலைவன் ஆக வந்தார்.
மீண்டும் மீண்டும் மக்களை சந்தித்தார்..
மீண்டும் மீண்டும் மக்கள் முன்னிலையில் தன் அறம் சார்ந்த வழியில் நடந்தார்.
அந்த நேர்மை உழைப்புக்கு தான்,
மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட முதல்வர் ஆக
"Single majority party "ஆக
திமுக வை உயர்த்தி 10 ஆண்டு கள் கழித்து மீண்டும் ஆட்சியில் அமர வைத்து முதல்வர் ஆக அடி எடுத்து வைத்தார் மு க ஸ்டாலின் என்னும் அரசியல் அடி சுவட்டின் அறம் சார்ந்த அரசன்.
இது அனைத்துமே நம் அனைவர்க்குமே தெரியும். அதோடு..
திமுக தலைவர் ஆக பதவி ஏற்றதில் இருந்து இன்று வரை..
சொன்ன சொல் தவறாமல்
கூட்டணியை மாற்றமல்
சமூக நீதி இயக்க வழியில் தடம் மாறாமல் பயணித்த..
நடுநிலை மாறாத தலைவர்.
அவரையா இன்றைய சமூகம் குறை சொல்கிறது.
தமிழ் நாட்டிற்கு ஒரு பிரச்னை என்று வந்த போது எல்லாம் மாநில சுயாட்சியை காத்து நின்ற எல்லை சாமி ஸ்டாலின் அவர்கள்.
அவரையா இன்றய சமூகம் கேள்வி கேக்க நினைக்கிறது.
நாட்டிலயே நாட்டுக்கே முன் மாதிரி மாநில முதல்வர் ஆக இருந்தவர் ஸ்டாலின் அவர்கள்.
அவரையா இன்றைய சமூகம் சந்தேகம் கொண்டு பார்க்கிறது.
505 வாக்கு உறுதிகளில் 415 வாக்கு உறுதிகளை நிறைவேற்றியதோடு GDP யில் 2ம் இடம் கொண்டு வந்து சிறந்த முதல்வர் ஆக செயல் பட்ட 50+ வருடம் உழைத்து முன்னேறிய மா அரசியல் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள்.
அவரையா இன்றைய சமூகம் தேவை இல்லாமல் பேசுகிறது.
வரலாறு ஒருநாளும் பொய் சொல்லாது
மு க ஸ்டாலின் அவர்கள் ஒருநாளும் தன் நேர்மை பாதையில் இருந்து விலகியதும் இல்லை விலகவும் மாட்டார்.
ஏனென்றால் அது தான் ஸ்டாலின்
அதனால் தான் மு க ஸ்டாலின் ❤️
கலைஞர் மகன் ஸ்டாலின் நேர்மை யாக தான் அரசியல் வழி நடப்பார்.
Emergency காலத்தில் இருந்து மக்கள் க்காக போராடி கொண்டு இருப்பவர்
மக்களுக்கு ஒரு emergency என்றால் கூட
முதல் மனிதராய் களத்தில் அந்த மு க ஸ்டாலின் தான் வந்து நிற்பார்.
Becaz M K Stalin - OG people Leader ❤️
#MKStalin4TN
வரணும் பழைய மு க ஸ்டாலினா திரும்பி வரணும்.
#MKStalin
சட்டமன்றத்தில் ‘எங்க அப்பாவை காணோம்’ன்னு கேலி செய்ததற்காக காயம்பட்டதாக சொல்லி, தி.மு.க. தலைவரை திருச்சி கிழக்கு தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் நிற்க வைக்க, முன்னாள் அமைச்சர்கள் நேருவும், எ.வ.வேலுவும் உசுப்பேத்திக்கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் பரவுகிறது.
மெல்ல மெல்ல, தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும் அந்த ஆசை வந்துவிட்டது. வருகிறவர் போகிறவர்களிடையே கருத்துக் கேட்டு வருகிறாராம்.
இது விபரீத விளையாட்டு!
வென்றால், உதயநிதியின் பதவி இவர் கைக்கு வரும்..! அதைத்தாண்டி நடக்கப்போவது என்ன..?
தோற்றுவிட்டால், கட்சியின் நிலைமை அதலபாதாளத்தில்...!
கட்சி கலகலத்தால், அ.தி.மு.க.விலிருந்து ஓடிச்செல்வது போல காட்சிகள் இங்கே அரங்கேறினால்...?
அல்லது...
தி.மு.க. தலைவர் ஜெயித்துவிட்டுப் போகட்டும் ... அங்கே மட்டும் எனது கட்சி போட்டியிடாதுன்னு முதல்வர் விஜய் அறிவித்துவிட்டால்...?
அப்படி ஜெயித்து அங்கே போனால், தினந்தோறும் கேலியும் கிண்டலும் நடக்காதா..??
தி.மு.க.வுக்கு தேவை பொறுமை!
எதிர்கட்சி அரசியலில் தி.மு.க. சோடை போனதாக வரலாறு இல்லை.
3 மாதத்தில் ஆட்சி போய்விடும்...
6 மாதத்தில் தேர்தல் வரும்...
தயாராக இருங்கன்னு கட்சிக்காரர்களிடம் மு.க.ஸ்டாலின் பேசுவது எல்லாம் தேவையில்லாததே!
2011-ல் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திடம் அன்றைய முதல்வர் ஜெயலலிதா விட்ட சவாலை
தி.மு.க. நினைவுப்படுத்திக்கொண்டால் போதும்..!
@mkstalin@DMKITwing@Udhaystalin@arivalayam
#WATCH | "சட்டமன்றத்தில் நடந்தது அநாகரிகமானது. இது ஒன்னும் ஷூட்டிங் ஸ்பாட் இல்ல. காங்கிரஸ் கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.." -செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
#SunNews | #Vijay | @SPK_TNCC
இன்னும் 10 வருஷம் விஜய்தான், மக்களுக்கும் அவங்க அடிப்படை பிரச்சினையோ, அங்கங்க நடக்குற போராட்டங்கள் பத்தியோ, தேர்தல் வாக்குறுதிகள் பத்தி எதிர்பார்ப்போ கவலையோ கிடையாது.
அவங்களுக்கு தேவைலாம் எங்க மாநிலத்தோட CM ஓட பெர்சானாலிட்டி பாத்தீங்களா சார்ன்னு பெருமை பேசிக்கணும், மத்தபடி திமுக முதக்கொண்டு மத்த கட்சிகள் வைக்குற விமர்சனங்கள்லாம் பெருசா எடுபடாது.
மக்களே நேரடியா பாதிக்கப்பட்டா மட்டும்தான் புரியும், ஆனா அதுவும் இந்த தலைமுறைக்கு அது புரிய இன்னும் 10, 20 வருஷம் கூட ஆகலாம். அதுவரை விஜய்தான் கைஸ்.