இந்த அம்மாவின் பேச்சும் அறிவும் அரசியலில் பயணிக்கும் நபர்களிடம் கூட இருக்காது அந்த அளவுக்கு மிகவும் நுட்பமாக அரசியலை புரிந்து கொண்டு பேசுகிறார் 🖤 ஆனால் ஒன்று இதை கேட்ட பின் தோன்றுவது இது தான்
முதல்வர் விஜய்க்கு எதிரான திமுகவின் எந்த பரப்புரையும் மக்களிடம் எடுபடாது..
தமிழக வெற்றிக் கழகத்தில் கழகப் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், கழக அமைப்பானது சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களாக ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காக கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது
1. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்
2. திருநெல்வேலி தென்கிழக்கு மாவட்டம்
3. திருநெல்வேலி மத்திய மாவட்டம்
4. திருநெல்வேலி வடக்கு மாவட்டம்
5. திருவண்ணாமலை வடமேற்கு மாவட்டம்
ஆகிய 5 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... Click Here https://t.co/MdFPIj5NN5
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
புரட்சித்தலைவி #அம்மா எனும் பேராளுமையின் அரசியல் இலட்சியங்களால் தொடங்கிய
என் பொதுவாழ்வுப் பயணம்…
35 ஆண்டுகளாக,
நம் மண்ணின், மக்களின் அன்பை மூலதனமாகவும்,
அவர்களின் நம்பிக்கையை வழித்துணையாகவும் கொண்டு…
ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும்,
#நம்ம_விராலிமலை தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்ற வேட்பாளராகவும்,
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் பணியாற்றும் அரிய வாய்ப்பைப் பெற்றேன்.
இன்று…
ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நம்பிக்கையாக,
மக்கள் விரும்பும் மாற்றத்தின் அடையாளமாக,
தனது மவுனப் புன்னகையால் கோடிக்கணக்கான இதயங்களை வென்று,
வளமான தமிழகத்தின்
எதிர்கால அரசியலுக்குப்
புதிய திசையை உருவாக்கி வரும்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களின் தலைமையை ஏற்று,
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடும்,
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் பேரன்போடும், #நம்ம_விராலிமலை மக்களின் பேராதரவோடும்,
நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை முழுமையாக இணைத்துக் கொள்கிறேன்.
நேற்று போலவே…
இன்று இன்னும் உறுதியாக…
நாளை இன்னும் வலிமையாக…
மண்ணுக்கான..மக்களுக்கான
என் வாழ்நாள் பயணம் என்றும் தொடரும்! 🙏🏻
#CVB #TVK
"வாங்க.. வாங்க.. வணக்கம்"..
சென்னை அருகே நடைபெற்ற த.வெ.க தோழமை கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க வந்த கூட்டணி கட்சி தலைவர்களை அன்போடு வரவேற்று கலந்துரையாடிய முதலமைச்சர் விஜய்..!
#Kovalam | #CMJosephVijay | #TVKAllianceMeeting | #PolimerNews
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு சி.ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் இடதுசாரிகள் கட்சிகள் சார்பில் #CPIM சார்பில் நானும் #CPI மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மத்திய குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், #CPI தேசிய நிர்வாக குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, மாநில துணைச் செயலாளர்கள் என்.பெரியசாமி, ரவி, தேசியக்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்டோர் சந்தித்து மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
@CMOTamilnadu
கடந்த 17ம் தேதி வெளியான ஜூனியர் விகடன் இதழில், ‘அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.சிவசங்கர், மா.சுப்பிரமணியன், மூர்த்தி உள்ளிட்டவர்களுக்கு, த.வெ.க எம்.எல்.ஏக்களை இழுக்கும் அசைன்மென்ட் அளிக்கப்பட்டிருக்கிறது.’ என்ற செய்தியை வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இன்று ஊத்தங்கரை எம்.எல்.ஏ இளையராஜாவை த.வெ.க அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.35 கோடி வழங்குவதாக பேரம் பேசப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
#TVK | #Vijay | #DMK | #JuniorVikatan | #Magazine
#BREAKING || த.வெ.க ஆட்சியை கவிழ்க்க முயற்சி... செந்தில்பாலாஜி தம்பி அசோக் வீட்டில் நடைபெற்ற ரெய்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ள நிலையில் அசோக்கிற்கு போலீசார் வலை
#SenthilBalaji | #TVK | #DMK | #Police | #PolimerNews