“சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர்
திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ளார்.
ஏற்கனவே மேனாள் அமைச்சரும்
திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான திரு. அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல
பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.
மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தை பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர மீது சட்டப்பேரவை தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
- வன்னி அரசு
துணைப் பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
பாப்பானுக்கு பதில் சொல்ல மாட்டேன் என சொல்பவருக்கு முதலில் எனக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா?
சாதாரண குடும்பத்தில் பிறந்து, தளபதி மக்கள் இயக்கத்தில் சேவைகள் செய்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களான தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும், காமராஜரையும், வேலு நாச்சியாரையும் மற்றும் அஞ்சலை அம்மாளையும் மனதில் ஏற்று அவர்களது கொள்கைகளை பின்பற்றி நடப்பவன் நான்.
உங்களை போல தந்தை பெரியாரை வழிகாட்டி என்று சொல்லிக்கொண்டு, சமூக நீதி என பொய் வேடம் போட்டு மக்களை ஏமாற்றி ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ, அடித்தட்டு மக்களுக்கோ அல்லது வாக்கு அரசியலுக்கோ சாதியை வைத்து பிழைக்கும் பழக்கம் எனக்கில்லை.
எங்கள் மாண்புமிகு முதல்வர் இன்று சாதி மதத்தை உடைத்து உண்மையான சமூக நீதிப் பாதையில் ஆட்சியை அமைத்து மக்கள் பணி செய்கிறார். அவரது வழியை பின்பற்றி நாங்களும் நடக்கிறோம்.
சாதியை வைத்து நீங்கள் நடத்தும் போலி அரசியல் பிழைப்புக்கு தான் தந்தை பெரியாரின் தடி மூலம் தேர்தலில் தோல்வி அடி விழுந்திருக்கிறது என்பதை நினைவுபடுத்தி பேசுவது நல்லது.
கொள்கைப் பிடிப்போடு, கொள்கைத் தலைவர்களை மனதில் ஏற்று, கடினமாக உழைத்து அதிகாரத்துக்கு வந்த எங்களுக்கு எதிராக, ஒரு குடும்ப ஆதிக்கத்துக்கு கொத்தடிமைகளாக வாழும் உங்களுக்கு முதலில் பதில் சொல்ல என்ன தகுதி இருக்கிறது!
#தமிழகவெற்றிக்கழகம்
Party Fund என்றால் என்ன?
அது எத்தனை வகைப்படும்?
இதில் ஆதாயம் அடைபவர்கள் யார்?
இதனால் மக்களுக்கு என்ன பாதிப்பு?
வெளிநடப்பு செய்யாமல் பொறுமையாக கேளுங்கள்.
கவின் கொ**லைக்கு நியாயம் கேட்க வராத அனிதா ராதாகிருஷ்ணன், அர்ச்சகர் சுரண்டலுக்கு நியாயம் கேட்க வந்துள்ளார்.
இவ்வகையான ஒட்டுண்ணி, பார்ப்பனிய, சாதிய அரசியலைச் செய்த முன்னாள் அதிமுக, இன்னாள் திமுகவினரால் ஏற்பட்ட சேதங்களை தேர்தல் சொன்னது. 'திரிசுதந்திரர்' எனும் பார்ப்பன அர்ச்சகர்கள் குறித்து திரு. அனிதா ராதாகிருஷ்ணன் அறியாதவரா?
இளம் தலைமுறையை அரசியல்படுத்தாமல் போனதாலேயே, 'சமூகநீதி அரசியல்' புதுத்தலைமுறை அறியாமல் போனதென்கிறார்கள். ஜென்-ஜீ தலைமுறைக்கு அரசியலை சொல்லிக்கொடுக்காமல் போனதால் தோற்கவில்லை, பழம்பெரும் அமைச்சர்கள் திராவிடர் இயக்க/கொள்கை வரலாறே அறியாத 'தற்குறி'களாக இருந்தார்கள் என்பதுதான் அடிப்படை காரணம்.
உண்மை அதுமட்டுமல்ல,
திராவிடம் எனும் பெயரை வைத்துக்கொண்டு, 'திராவிடத்தை-பெரியாரை-அண்ணாவை கற்காத, அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற அமைச்சர்கள் சார்ந்த பழைய தலைமுறையே, திமுகவினை பின்னுக்கு இழுத்தது... இன்றும் இழுத்துக்கொண்டிருக்கிறது..' இப்படியாக எவ்வித திராவிட அரசியல் அறியாத அமைச்சர்கள் பட்டியலை தயாரித்தால், ஒரு சில பெயர்களைத் தவிர பெரும்பாலான அமைச்சர்களை பட்டியலில் காண இயலும்.
திராவிடர் இயக்க வரலாறு, பெரியாரியல், திராவிடர் இயக்க எழுத்துக்கள், உரைகள் பற்றிய விவரங்களெல்லாம் தெரியாத முன்னாள் அதிமுகவினரை, பெரியார் திடலுக்கு அரசியல் பயிற்சி வகுப்புக்கு அனுப்பி வைப்பது நல்லது. திராவிடர் இயக்கப் பெயரை களங்கப்படுத்தும் அரசியல் புரிதலற்ற முன்னாள் அமைச்சர்களுக்கு பெரியார் திடல் நடத்தும் கருத்தரங்கு, விடுதலை இதழ், பயிலரங்கு ஆகியவற்றில் கட்டாயம் பங்கெடுத்து, படித்து 'பாஸ்' செய்ய வேண்டும் எனும் கட்டுப்பாட்டை விதிக்காமல், திமுக தன்னுடைய சரிவை மீட்டெடுக்க இயலாது.
சீமான் வீட்டுக்குச் சென்றவர், அவரிடத்தில் பார்ப்பன கடப்பாரையை இரவல் வாங்கி வந்துள்ளாரா அனிதா ராதாகிருஷ்ணன்?
The Hindu talking about the misinformation spread by social media handles about the Government is fine. But what did @the_hindu do before the election. They along with most of the media made us believe that TVK will be routed,a non starter. What do you call that