கலைவாணி கல்வி மையம் 2023 பள்ளி ஆரம்பிக்கும் போது ஒரு கட்டிடத்திற்கு DTCP Approval வாங்க Apply செய்துள்ளார்கள்
டிசம்பர் 2023 Payment Process நடந்துள்ளது. 02.01.2024 அன்று முதல் எண்ணிட்டு (SWP/01/224) Approval அவரது நிறுவனத்திற்கு தான் வழங்கப்பட்டுள்ளது
அப்போது திமுக அரசு தான் இருந்தது. அந்த கட்டிடத்திற்கு யாரும் லஞ்சம் கேட்டார்களா? லஞ்சம் கொடுத்து தான் வாங்கினாரா? என்பதை திரு @svembu தான் சொல்ல வேண்டும்.
Public Service Guarantee Act படி 90 நாளுக்குள் இந்த பணிகளை முடித்து கொடுக்க வேண்டும்.
2024 முதல் உள்ள தரவுகள் படி 120-150 நாட்களில் Approval வழங்கப்படுகிறது
இதற்கு மேல் இது குறித்து Fact Check செய்ய விரும்பவில்லை. இத்துடன் முடித்து கொள்கிறேன்.
நன்றி 🙏
இந்த வீடியோவில் அமைச்சர் சரத் அவர்கள் வெள்ளையாக ஒரு பொடியை தனது செல்போன் திரையில் வைத்து நுணுக்கி தனது க்ரெடிட் கார்ட் கொண்டு அதனை மெல்லிய கோடு போல அமைக்கிறார். தனது இன்னொரு கையில் ஒரு 500 ரூபாய் தாளையும் வைத்திருக்கிறார்.
இது உயர் ரக போதை வஸ்து என்று சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.
அந்த வீடியோ போலியானது அல்ல; நாங்கள் எடுத்த வீடியோ தான் என்பதை முதலில் சரத் அவர்களின் மனைவி ஒப்புக்கொண்டுள்ளார். வாழ்த்துகள். இனி இது பொய்/போலி என்ற வாதம் செல்லாது.
அவரது மனைவி அது குழந்தைக்குக் கொடுக்க மாத்திரையை நுணுக்கிய வீடியோ என்கிறார்.
ஒன்றரை வயதுக் குழந்தையை இவ்வளவு இரைச்சல் மிகுந்த ஒரு கிரிக்கெட் போட்டிக்கு அழைத்துச் செல்வார்களா? அப்படியே சென்றாலும் செல்பி புகைப்படத்திலே குழந்தையைக் காணவில்லையே. அந்த வீடியோவிலோ அதற்கு முந்தைய ஸ்டேட்சிலோ குழந்தையைக் காணவில்லை. மொத்தம் 4 பேர் அதில் உள்ளனர். குழந்தை இல்லை.
அதே போல இந்த ஸ்டேடஸில் "Thug Life Moment" என்று போட்டுள்ளார். குழந்தைக்கு மாத்திரை நுணுக்கித் தருவது எப்போதிருந்து Thug Life Moment ஆனது?
மேலும் குழந்தைக்கு 500 ரூபாய் தாளையும் க்ரெடிட் கார்டையும் வைத்து தான் மாத்திரை நுணுக்குவார்களா? குழந்தை வளர்த்தோர் சொல்லவும்.
இன்று நாங்கள் அறிந்துகொண்ட ஒரு பொதுநலத் தகவலை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறோம்.
உங்கள் குழந்தைக்கு மாத்திரை கொடுக்கும் முன், செல்போன், ATM Card, 500 ரூபாய் நோட்டு ஆகியவை இருக்க வேண்டுமாம்.
அப்படியா?
(பி.கு. : மாத்திரை உடைப்பது எல்லாம் எப்படி Thug Life Moment ஆகும்? அதுக்கும் ஒரு விளக்கம் கொடுத்துடுங்க please…!!)
திமுக சரி இல்லை, அதிமுக சரி இல்லை, ஊழல் செய்கிறார்கள் என்று விஜய் பேசினார். அவர் பேச்சை கேட்டுக்கொண்டே அவர் கட்சிக்காரர் லஞ்சம் கேட்கிறார். விஜய் பேச்சை அவர் கட்சிக்காரரே கேட்பதில்லை. என்ன மாதிரியான மாற்றம் மண்ணாங்கட்டி இது?
திமுகவை அதிமுகவை விமர்சிக்கும்போது வேடிக்கைப் பார்த்த சில தற்குறிகள் தவெகவை விமர்சிக்கும்போது கேள்விக் கேட்கிறார்கள். திமுகவை விமர்சித்தாயா? என்று கேட்கிறார்கள். ஆயிரம் பதிவுகள் இருக்கும். தற்குறிகளுக்கும் தெரியும்.
இருந்தாலும் கேட்கிறார்கள். உங்களுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் தான். நீங்கள் திமுக அதிமுகவை விமர்சித்தீர்கள். நானும் விமர்சித்தேன். இப்போது தவெகவையும் விமர்சிக்கிறேன். உங்களால் முடியவில்லை.
உங்களுக்கு அறம், அறிவு, வக்கு இல்லை என்பதற்காக நான் கேட்காமல் இருக்க முடியாது. நாளை திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்களை நோக்கி கேள்வி கேட்பேன். நான் கட்சியைப் பார்ப்பதில்லை. அதிகாரத்தில் அமர்பவர்களைப் பார்க்கிறேன்.
விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரை சந்தித்த போது கட்சி சாராத , எம் எல் ஏ இல்லாத ஒருத்தரும் நின்றிருந்தார் . யார் இவர் ? என கேட்ட போது தான் அவர் ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் என தெரிந்தது . ஆனாலும் இவர் ஏன் இதற்கு வரணும்ண்ணு முட்டாள் தனமாக கேட்டவர்களுக்கு இன்று விடை கிடைத்திருக்கிறது .
கர்நாடகாவைச் சேர்ந்த அவர் தான் இன்று தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டிருக்கிறார் . வாழ்த்துகள் தமிழ்நாடு மக்களே !
நம்ம சி.எம் தவிர வேறெந்த சி.எம் மும் தமிழ்நாடு ஹிஸ்ட்ரியில ஓடினதே கிடையாது
- ஆதவ் அர்ஜுனா
குழம்பாதீங்க. அவர் கரூர் பற்றிச் சொல்லவில்லை. இன்றைய மாரத்தான் பற்றிச் சொல்கிறார்
சட்டமன்றத்துக்குள் நடக்கும் எல்லாமே கூட்டத்தொடர் ஆகிவிடாது, எம்.எல்.ஏ அல்லாத பல தலைவர்கள் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியை, சபை மரபு மீறல் என்று கூறுவது அறியாமையின் உச்சம்.
உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், தயவுசெய்து விதிப் புத்தகங்களை முழுமையாகப் படித்துவிட்டுப் பேசுங்கள் விஜய் அவர்களே!
#TVKfails
சட்டமன்றத்தில் வெறும் பொய்கள்!
தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு 0.1 சதவீதம்,
ஓபியாய்ட்ஸ் 0.26 சதவீதம்,
மயக்க மருந்துகள் 0.3 சதவீதம்,
உள்ளிழுக்கும் மருந்துகள் 0.2 சதவீதம் மட்டுமே. இவை அனைத்தும் தேசிய சராசரியை விட மிகக் குறைவு.
சொல்வது யார்? ஒன்றிய அரசு.
தமிழ் நாடே போதையின் பிடியில் இருப்பது போன்று பொய்யான தோற்றத்தை உருவாக்குகிறார் #PropagandaCMVijay
@PttvNewsX ஏன் இந்த திரிபு வேலை ?
12 மாநகராட்சிகளில் தூய்மை பணி தனியார்மயம் தொடர்பாக டெண்டர் வெளியிட்டது விஜய் - த.வெ.க அரசு.
வெளியான தேதி 20/06/2026. தற்போது டெண்டர் ரத்து அறிவிப்பிலும் அதே தேதி தான் உள்ளது.
இதில் முந்தைய அரசு என்று பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன ?
நான் 1967 ல் பிறந்தவன். ஏறக்குறைய 60 வயதை நெருங்குகிறேன். நான் பிறந்து வளர்ந்த இராமநாதபுரத்தில் அன்றைய காலத்தில் சுற்றிச்சுற்றி கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டக் காலம்.
இதுவரை எவ்விதப் போதைப் பழக்கத்திற்கும் நான் ஆளாகியதில்லை. அதை ஒருமுறை கூட தொட்டுப் பார்த்ததில்லை. அதற்கு முக்கிய காரணம் 17 வயதிலேயே மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் கற்கத் தொடங்கியது தான். ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை உருவாக்க நம்மால் இயன்ற பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற மாற்றம் குறித்த விழிப்புணர்வு உருவாகியது தான்.
நடிகரின் 69 திரைப்படங்களும் பாலியல் சீண்டல்களுக்கு ஆதரவான காட்சிகள், போதைக் காட்சிகளில் தோன்றி, குடிகாரன் என்று இழிவாகப் பார்த்த சமூகத்தையே வீக்கெண்ட் பார்ட்டி என்று நார்மலைஸ் செய்ததில் முக்கியப் பங்குண்டு.
நடிகனின் நிஜ வாழ்விலும் கூட எப்போதும் போதையில் இருக்கிறார் என்று விமானப் பயணம் முதல் கார் ஓட்டும் காட்சிகள் வரை செய்திகள் வந்துள்ளது. போதை பயன்படுத்தாதவர்கள் போதை ஒழிப்பு பேசுவதைவிட, போதையைப் பயன்படுத்துபவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நாட்டுக்கும், வீட்டுக்கும், தியாகத்தலைவி திரிஷாவுக்கும் நல்லது. பாராட்டுக்குரியது.
நடிகரின் அரசியல் பேச்சு முழுவதும் போதை, போதை என்றே இருக்கிறது. போதையில் தமிழ்நாடு தள்ளாடுகிறது என்ற தவறான தோற்றத்தை உருவாக்குகிறார். புள்ளி விபரப்படி அது முழுமையான பொய். ஊடகவிலாளர் அரவிந்தாக்ஷன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.
ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரப்பகிர்வுத்துறை அமைச்சகம் "Magnitude of Substance Use in India" என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை வெளியிடுகிறது.
அதன்படி, தமிழ்நாட்டில் கஞ்சா பயன்பாடு 0.1 சதவீதம்,
ஓபியாய்ட்ஸ் 0.26 சதவீதம்,
மயக்க மருந்துகள் 0.3 சதவீதம்,
உள்ளிழுக்கும் மருந்துகள் 0.2 சதவீதம் மட்டுமே. இவை அனைத்தும் தேசிய சராசரியை விட மிகக் குறைவு.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடும் புழக்கமும் இல்லை என்று கூறவில்லை, இருக்கிறது. ஆனால்,போதைப் பொருள்களைக் குறைவாக நுகரும் மாநிலமாகவே தமிழ்நாடு எப்போதும் இருக்கிறது.
குறிப்பாக தொழில்முறையாக கஞ்சா பயிரிடுவது, காவல்துறையின் நடவடிக்கையால் தமிழ்நாட்டில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது.
மேலே கூறப்பட்டுள்ள தரவுகள் அனைத்தும்
National Drug Dependence Treatment Centre (NDDTC), All India Institute of Medical Sciences (AIIMS) இணைந்து நடத்திய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள விபரங்கள்
ஆனால்,,
தமிழ்நாட்டில் தாறுமாறாக போதைப்பொருள் பரவியுள்ளது என நடிகன் சட்டமன்றத்தில் கூறியது எந்த தரவுகளின் அடிப்படையில் ?
எந்த ஆதாரங்களும்/தரவுகளும் இல்லாமல் மாநிலத்தை கேவலப்படுத்தி இருக்கிறார்.
இந்த குற்றசாட்டை எதிர்க்கட்சிகள் வைத்தாலும்,தமிழ்நாடு அரசு மறுக்க வேண்டும்.ஆனால், நடிகன் இந்த விஷயங்களைப் பேசும் போது அமைச்சர்களும்,சட்டமன்ற உறுப்பினர்களும் சபாநாயகரும் ரசிக்கின்றனர். உண்மையில் மிகவும் வருத்தமாக உள்ளது
சில கேள்விகள் ?
1.எத்தனை பேரிடம் ஆய்வுகள் மேற்கொண்டு தாறுமாறாக போதைப்பொருள் நடமாட்டம் பரவிக்கிடப்பதை முதலமைச்சர் அலுவலகம் கண்டுபிடித்தது ?
2)ஆய்வை நடத்தி ஆதாரங்களை முதலமைச்சர் அலுவலகத்திற்கு வழங்கியது காவல்துறையா ? சுகாதாரத்துறையா ?
3)வயது வாரியாக ஆய்வு மேற்கொண்டு,தாறுமாறாக போதைப்பொருள் பரவியிருப்பது கண்டறியப்பட்டதா ?
4)எந்தெந்த மாவட்டத்தில் போதைப்பொருள் அதிகம் பரவியுள்ளது ?
5)எத்தனை மாவட்டங்களில் போதைப்பொருள் பரவல் குறைவாக உள்ளது ?
6)என்ன வகையான போதைப்பொருள் அதிகம் பரவியுள்ளது ?
7)மதுபானம் தவிர்த்து தமிழ்நாட்டில் அதிகமாக பரவியுள்ள போதைப்பொருள் எது ?
8.கஞ்சாவா,மாத்திரைகளா,சிந்தெட்டிக் வகைகளா,ஓபியம் மூலம் தயாரிக்கப்படும் போதைப்பொருளா? மூக்கு வழியாக உள்ளிழுக்கும் பவுடர் மருந்துகளா? எது அதிகம் பரவியுள்ளது ?
இக்கேள்விகளுக்கு நடிகரிடம் பதில் இருக்கிறதா? இப்படியான போதை உளறல்களை நடிகர் தவிர்ப்பது மிகவும் நல்லது.
தமிழ்நாடு தனிநாடு அல்ல. இந்தியாவின் ஒரு மாநிலம் தான். போதையில்லாத இந்தியா என்ற முழக்கத்தை நடிகன் சொல்ல தயாரா? உலகமயக் கொள்கையில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. உலகச்சரக்கு முழுவதும் இங்கு வருவதை தடுக்க இயலாது.
தமிழ்நாடு பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. இங்கிருக்கும் குறைந்தபட்ச போதை பழக்கத்தை ஒழிக்க அனைவரும் போராடுவோம். போதையில்லாத இந்தியாவை உருவாக்க இணைந்து செயல்படுவோம். வடக்கில் இருப்பவர்களுக்கு அன்பான வேண்டுகோள். வாயில எதையோ வச்சு கொதிப்பிட்டு புளிச்சின்னு பொது இடத்தில் துப்பி, இந்தியாவை காவிமயமாவதை நிறுத்துங்கடே!
கோயம்புத்தூரில் இப்போது இருக்கிறேன். பல சுவர்கள் காவிமயமாயிருப்பதைக் காண்கிறேன்.
சூர்யா சேவியர்
26-06-26