#BREAKING | “ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல் செய்வது ஊழல்..”
மின் துறை பொறியாளர் அமைப்பைச் சேர்ந்த சா.காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு.
#SunNews | #TNEB | #TVK | #Nirmalkumar
#WATCH | “அப்போதான் அதிக விலைக்கு கரண்ட் வாங்க முடியும்..”
இணையத்தில் வைரலாகும் தவெக தலைவர் விஜயின் தேர்தலுக்கு முந்தைய பேச்சு
#SunNews | #Electricity | #TVKVijay
கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் அருகே உள்ள குளத்தில் தாமரை இலைகளையும், தாமரை மலர்களையும் பறித்ததாகவும் பறவைகளை துன்புறுத்தியதாகவும், ஒரு முதியவரை மறைந்திருந்து கண்காணித்துக் கைது செய்து, அவருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார்கள் வனத்துறையினர்.
பாவம் அந்த முதியவர்! ஒரு தாமரை இலையின் விலை ஒரு ரூபாய்கூட இருக்காது. அந்த இலைகளையும் பூக்களையும் பறித்து, பூக்கடைக்காரரிடம் கொடுத்து ஒரு நாளைக்கு 50 ரூபாயோ, 100 ரூபாயோ சம்பாதித்து, அதில் வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கும் ஏழை மனிதராகத்தான் இருப்பார். வயதான காலத்தில் வேறு என்ன வேலை அவரால் செய்ய முடியும்? குளத்தில் இறங்கி, தாமரை இலைகளையும் பூக்களையும் பறைத்து விற்று, கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பார். அப்படிப்பட்ட ஒரு பரிதாபத்துக்குரிய முதியவரைப் பிடித்து, ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார்கள். ஐயா, அவர் அந்தப் பணத்தை எப்படிக் கட்டுவார்? தாமரை இலை பறித்துப் பிழைப்பு நடத்தும் அந்த ஏழை மனிதர், ஒன்றரை லட்சம் ரூபாயை எங்கே போய்த் தேடுவார்? அபராதம் கட்டுவதற்காகக் கடன் வாங்க வேண்டுமா? அல்லது வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் அடைக்க முடியாத கடன் சுமையை அவர் தலையில் ஏற்றப் போகிறீர்களா?
அடடா! என்ன ஒரு சுறுசுறுப்பான அதிகாரி! மறைந்திருந்து கண்காணித்து, தாமரை இலை பறிக்கும் முதியவரைக் கையும் களவுமாகப் பிடித்து, ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் அளவுக்கு சட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்துகிறீர்களே, பாராட்டுகள்!
ஆனால், அனுமதியின்றி வனத்துறைக்குச் சொந்தமான கன்னியாகுமரி மாவட்ட மலைகளையே வெடி வைத்து உடைத்து, கனிம வளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு செல்லும் பெரிய பெரிய திருடர்களைப் பார்த்தால், இதே அதிகாரிகள் எத்தனை கோடி ரூபாய் அபராதம் விதிக்கப் போகிறார்கள்? அந்த மலைகளை வெடி வைத்துத் தகர்க்கும்போது இந்த அதிகாரிகளின் கண்களுக்கு அது தெரியவில்லையா? ஏழை முதியவர் தாமரை இலை பறிப்பது மட்டும் கண்ணுக்குத் தெரிகிறதா? மலைகளைத் தகர்த்து இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பவர்கள் மீது இதே வேகம் பாயுமா?
சட்டம் என்பது ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கான ஆயுதமா? அல்லது இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பவர்களைத் தண்டிப்பதற்கான கருவியா?
ஒரு பக்கம், வயதான காலத்தில் 50 ரூபாய், 100 ரூபாய் சம்பாதிக்கத் தாமரை இலை பறிக்கும் ஏழை முதியவர். இன்னொரு பக்கம், மலைகளையே வெடி வைத்துத் தகர்த்து வளங்களைக் கொண்டு செல்லும் பணபலம் மிக்கவர்கள். இந்த இருவரையும் ஒரே அளவுகோலில் பார்க்க வேண்டியதில்லை. சட்டத்தை மீறியிருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால், ஏழையின் வாழ்வாதாரத்தையும் குற்றத்தின் தன்மையையும் கருத்தில் கொள்ளாமல் ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பது எந்த வகையில் நியாயம்?
அந்த முதியவர் பறித்தது தாமரை இலைகளையும் பூக்களையும்தான்! ஆனால், அவர் மீது விழுந்திருப்பதோ ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம் என்ற இடி!
அதிகாரிகளே, அந்த முதியவரால் இந்த அபராதத்தை எப்படிக் கட்ட முடியும் என்று ஒருமுறை யோசித்துப் பாருங்கள். சட்டத்தை அமல்படுத்துவதில் காட்டும் அதே ஆர்வத்தை, இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பவர்கள் மீதும் காட்டுங்கள். ஏழை முதியவரின் கண்ணீருக்கு ஒரு விலையும், மலைகளை அழிப்பவர்களின் குற்றத்துக்கு வேறு விலையும் இருக்கக் கூடாது!, உங்களுடைய பார்வை ஒரே நேர் கோட்டில் இருக்க வேண்டும் இப்படி மேலும் கீழும் இருக்கக்கூடாது..
#shared
2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) மூலமாக தமிழக வெற்றிக் கழகம் (TVK) வென்றது எப்படி ?
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள ஒரு புலனாய்வுச் செய்தி, இதுவரை வெளிச்சத்துக்கு வராத ஓர் அதிர்ச்சியூட்டும் தகவலை முதன்முறையாக வெளிப்படுத்தியுள்ளது.
அதாவது, ERO (Electoral Registration Officer) /AERO (Assistant Electoral Registration Officer) அலுவலர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களைக்கூட, டெல்லியில் இருந்தபடியே தேர்தல் ஆணையத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இயக்குநரும் (Director – IT), அவரது குழுவினரும் ஒரு மென்பொருள் அமைப்பின் மூலம் ரகசியமாக நீக்கக்கூடிய வகையில் தேர்தல் ஆணையம் ஒரு தொழில்நுட்ப நடைமுறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது என்பதுதான் அந்தச் செய்தி வெளிப்படுத்தும் தகவல்.
❌ இது முற்றிலும் முன்னெப்போதும் இல்லாத நடைமுறையாகும். வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பது அல்லது நீக்குவது தொடர்பான முடிவை எடுக்கும் இறுதி அதிகாரம் ERO-வுக்கே உரியது. தேர்தல் ஆணையத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இயக்குநருக்கு இந்த அதிகாரத்தை வழங்கும் எந்தச் சட்டப்பிரிவும் இல்லை.
அடிக்கடி எழுப்பப்படும் மற்றொரு கேள்வி: இத்தகைய முறைகேடுகள் நடந்திருந்தால், ஏன் புகார்கள் எழவில்லை?
இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். எனக்குத் தோன்றும் முக்கியமான காரணங்கள் பின்வருமாறு:
👉 பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் விளிம்புநிலை மக்களாக இருக்கலாம்.
வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள மக்களாக இருக்கக்கூடும். அவர்கள் தங்களுடைய பெயரை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக மேல்முறையீடு செய்வதற்கும், அதற்காகத் தொடர்ந்து அலையவும் போதிய நேரமோ, வாய்ப்போ, பொருளாதார வசதியோ இல்லாதவர்களாக இருக்கலாம்.
👉 SIR நடைமுறை அவசர அவசரமாக நடத்தப்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வாக்காளர் பட்டியலின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, யாருடைய பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன, எதற்காக நீக்கப்பட்டுள்ளன என்பதைச் சரிபார்ப்பதற்குக்கூட போதிய அவகாசம் வழங்கப்படவில்லை.
👉 பலருடைய பெயர்கள் சேர்க்கப்படாததற்கான காரணங்களே தெரிவிக்கப்படவில்லை.
பல சந்தர்ப்பங்களில், விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் ஏன் சேர்க்கப்படவில்லை என்பதற்கான காரணங்கள் கூட அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.
இத்தகைய சூழ்நிலையில்,
வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கிரிமினல் வழக்கினை பதிவு செய்து, அதனை உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
வாக்குரிமை என்பது யாரும் - யாருக்கும் வழங்கும் சலுகை அல்ல. அது ஜனநாயகத்தில் அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமை.
அத்தகைய உரிமையையும் - ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையையும் காப்பது தேர்தல் ஆணையத்தின் கடமை.
மாறாக, தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையமானது மக்கள் விரோத சக்தியாக மாறியிருக்கிறது.
இதன் காரணமாக, 2026 பொதுத்தேர்தலில் எங்கள் கழகத்தலைவர் - திராவிட மாடல் நாயகர் தளபதியார் மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வெற்றி வாய்ப்பு திட்டமிட்டு பறிக்கப்பட்டிருக்கிறது.
2021 ல் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் மாண்புமிகு தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் @mkstalin அவர்கள் 70,384 வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியைப் பெற்றிருந்தார்.
ஆனால், 2025-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்குப் (SIR) பிறகு, கொளத்தூர் தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கையில் @ECISVEEP திட்டமிட்ட படி பெரும் சரிவு ஏற்பட்டிருந்தது.
ஆம்.. ஏறத்தாழ டிசம்பர் 2025 வரை 1,03,812 வாக்காளர்கள் கொளத்தூர் தொகுதியில் இருந்து நீக்கப்பட்டனர்.
நீக்கப்பட்ட வாக்காளர்கள் யார்.. ஏன் எதற்காக அதிகமாக நீக்கப்பட்டார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் எந்தவொரு வெளிப்படையான பதிலையும் வழங்கவில்லை.
இப்பொழுது தெரிகிறதா? தமிழ்நாட்டில் தவெக ஒன்றும் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி பெறவில்லை.. ஜனநாயக விரோத சக்திகளின் சூழ்ச்சிக்கு வாக்காளர்கள் பலிகடா ஆக்கப்படிருக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை!
@Udhaystalin@arivalayam@DMKITwing@dmk_youthwing
பொறுப்பு ஆளுநராக வந்தவர் முழுநேர ஆளுநராகிவிட்டார்.
தேர்தல் பணிக்காக வந்தவர் தலைமைச் செயலாளராகிவிட்டார்.
தமிழ்நாடு பாஜக தலைவர், அரசு நிகழ்ச்சிகளில் முன்னிலை பெறுகிறார்.
டெல்லி நியமித்த அதிகார முதலாளிகள் அவர்கள்.
10am to 5pm வேலையைப் பார்த்துவிட்டு கிளம்புகிறார் cute dummy CM
விஜய் வாழ்கிறார்.
ஆளுநர் ஆள்கிறார்
எனக்கு பிடிச்சது இந்த Top 10 பாயிண்ட்கள் தான்!
1. அடிமை மாணிக்கம் தாகூர் மீண்டும் தனது வாய்த்துடுக்கை வெளிப்படுத்தியுள்ளார்.
2. பாசிசம், பாயாசம் என பஞ்ச் பேசிய பக்கா பொடிமாஸ் முதலமைச்சர் விஜய் ஏன் இதுவரை SIR மற்றும் ஞானேஷ் குமார் குறித்துப் பேசவில்லை?
3. அவர் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கிறாரா இல்லையா? அவரைக் கேள்வி கேட்க மாணிக்கம் தாகூருக்கு ஏன் வக்கு வகையில்லை?
4. மாணிக்கம் தாகூரோ பனையூர் பண்ணையாரின் காலடியில் மண்டியிட்டு, திமுகவை நோக்கிக் கூவுகிறார்.இந்தத் த.வெ.க. கால் அமுக்கி மாணிக்கம் மறைக்கிறார்.
5. காங்கிரஸ் கட்சியில் இருந்த இத்தகைய அழுகிய பிணங்களின் சுமையைச் சேர்த்துச் சுமந்ததும் கழகத்தின் வாக்குகள் சரிய ஒரு காரணமாக அமைந்துவிட்டது.
6. பதவிப் பிச்சைக்காக கூட்டணி தர்மத்திற்கு எதிராக காங்கிரஸ் புல்லுருவிகள் தி.மு.க.வுக்குச் செய்த துரோகத்தையடுத்து இந்தியா கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம்.
7. மாணிக்கம் தாகூர் சூடு, சொரணையுள்ள மனிதராக இருந்தால் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் த.வெ.க.வின் தலைவர் விஜய் ஏன் போராட்டத்தில் இணையவில்லை என்று கேட்க வேண்டும்.
8. ஞானேஷ் குமார் குறித்தோ, பா.ஜ.க. குறித்தோ, பிரதமர் மோடி குறித்தோ ஒரு வார்த்தை கூட உதிர்க்காத தொடைநடுங்கிதான் விஜய்.
9. அப்படிபட்ட தொடைநடுங்கியின் காலைக் கழுவிக் குடிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்களுக்குz தி.மு.க.வின் பா.ஜ.க. எதிர்ப்பு குறித்துப் பேசத் துளியும் அருகதை இல்லை.
10. மாணிக்கம் தாகூர் போன்ற அட்டைப்பூச்சிகள் பேசக் கூடாது. த.வெ.க. போடும் பிஸ்கட்டுக்காக தி.மு.க. குறித்து இனிப் பேச வேண்டாம் என எச்சரிக்கிறோம்.
- DMK HQ
அறிவுக் கொழுந்து மாணிக்கம் தாகூருக்கு 2 கேள்வி
1. பாஜக விற்கு எதிரான காங்கிரசின் போராட்டத்தில் திமுக பங்கேற்பதில்லை என அங்கலாய்திருக்கும் ஐயா , உங்களின் இன்றைய கூட்டணிக் கட்சியான தவெக விற்கு பாஜக விற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு கொடுத்தீர்களா ? தவெக ஏன் கலந்து கொள்ளவில்லை
2. நாளைக்கே பாஜக விற்கு எதிராக திமுக ஒரு போராட்டத்தை அறிவித்தால் அதில் காங்கிரஸ் பங்கெடுக்குமா ? கேரளாவில் பாஜக விற்கு எதிரான இடதுசாரிகளின் போராட்டத்தில் கேரள காங்கிரஸ் கலந்து கொள்வதில்லை என்பதால் காங்கிரஸ் பாஜக ரகசிய கூட்டு என்பீர்களா மிஸ்டர் அறிவுக் கொழுந்து மாணிக்கம்
9.46 போட்ட பதிவில் இருந்த பாஜக என்கிற வார்த்தை 10 நிமிடத்தில் காணாமல் போன மர்மம் என்ன..
இப்படிப்பட்ட தொடை நடுங்கி கட்சியின் ஆதரவை வைத்து பாஜகவை எதிர்க்க போறீங்களா.@INCTamilNadu 🤡 @thirumaofficial 🤡
சிபிஐ ஆபிசிலிருந்து சிரித்து கொண்டே வெளியே வந்தார் விஜய். கரூர் சம்பவம் நடந்து ஒரு வருடம் ஆகியும் சார்ஜ்சீட் கூட சிபிஐ தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கை கண்காணிக்க உச்சநீதிமன்றம் அமைத்த குழுவையும் காணவில்லை.
கே.என்.நேரு மீது FIR போட உச்சநீதிமன்றம் வரை சென்று அழுத்தம் கொடுத்தது ED, செந்தில் பாலாஜியை ஒருவருடம் வரை சிறையில் அடைத்து வைத்தது ED. ஆனால் 41 பேர் இறந்து போய் ஒருவருடம் ஆகியும், ஒரு சார்ஜ்சீட் கூட பதிவு செய்யவில்லை சிபிஐ.
பாஜக ஆதரவு இருந்தால் எவ்ளோ பெரிய வழக்காக இருந்தாலும் தப்பிக்கலாம் என்பதற்கு கரூர் கேஸ் ஒரு உதாரணம்.💥💥
இடைத்தேர்தலில் இரண்டு தொகுதி நிலவரங்கள் வெளியானபோது, இரண்டு தொகுதிகளில் தவெக வெற்றி என அறிவித்த நியூஸ்24 சேனல் நெறியாளர்கள் அப்படியே மகிழ்ச்சியில் டான்ஸ் ஆடியதோடு, சட்டசபையில் முதல்வர் ஜோசப்விஜய் செய்த மோசமான செய்கையை செய்து விளையாட்டு காட்டியுள்ளார்கள்.
அவர்கள் இருவரும் தவெக துண்டு போட்டுக்கொண்டு டான்ஸ் ஆடியிருந்தால் யாரும் கேள்வி எழுப்பபோவதில்லை. அவர்கள் இருவரும் நெறியாளர்கள்.
எங்கே டான்ஸ் ஆடுகிறார்கள்?
தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில்.
சரியான ஊடக தலைமையாக இருந்தால் என்ன செய்துயிருக்கவேண்டும்? உடனே நேரலையை நிறுத்தி பார்வையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுயிருக்கவேண்டும். அது அரசியல்கட்சிகள் மறைமுகமாக நடத்தும் ஊடகம் என்றால்கூட அதைத்தான் செய்யவேண்டும். அந்த தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் அவர்களை அழைத்து கழுத்து மேலயே நாலு சாத்து சாத்தி, உனக்கெல்லாம் எவன்டா நெறியாளர் வேலை தந்தது என கேள்வி எழுப்பியிருக்கவேண்டும்.
நடுநிலை என்பது மக்களை ஏமாற்ற பயன்படுத்தப்படும் வார்த்தை. ஊடகங்கள் நியாயத்தின் பக்கம்தான் நிற்கவேண்டும். ஒரு பத்திரிக்கையாளனுக்கு சமூக பொறுப்பு இருக்கவேண்டும். மக்களுக்கும் அரசுக்கும், அரசுக்கும் சமூகத்துக்கும் இணைப்பு பாலமாக இருப்பதே ஊடகம். அதனால்தான் மக்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அது அரசின் கவனத்துக்கு போக ஊடகத்தின் உதவியை நாடுகிறார்கள். அரசும் தன் கருத்துகளை மக்களிடம் சொல்ல ஊடகத்தை நாடுகிறது.
தற்போது ஊடக அறத்தோடும், சட்டவிதிகளோடும், கண்ணியத்தோடும், சட்டவிதிகளோடு நடக்கவேண்டும் என்பதை ஊடக முதலாளிகள், ஊடகவியலாளர்கள் மறந்துவிட்டார்கள். ஊடகம் என்றால் என்னவென்றே தெரியாமல் இப்பணிக்கு வருபவர்கள் அதிகம். அதிலும் இந்த சமூக ஊடகங்கள் வளர்ச்சிக்கு பின் கையில் சொல்போன் வைத்திருப்பவர்கள் எல்லாம் தங்களை பத்திரிக்கையாளன் என்கிறார்கள்.
சமூகத்தில் நல்லவன், கெட்டவன், பொறுக்கி, பொறம்போக்கு, ரவுடி, திருடன் என பலவகையான ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் அரசியல்வாதிகளாக, அரசு அலுவலர்களாக, மருத்துவராக, பொறியாளராக, ஆசிரியராக, சமானிய மனிதராக, தொழில்துறையினராக என அனைத்து துறையிலும் இருக்கிறார்கள். அப்படித்தான் பத்திரிக்கை துறையிலும் புகுந்துள்ளார்கள். இவர்கள் ஊடகத்தில் இணைவது தங்களது பாதுகாப்புக்காகத்தான். அதிகாரத்தில் இருப்பவர்களை மீடியா எனச்சொல்லி சுலபமாக நெருங்கி நட்பு பாராட்டி அதன்மூலமாக தங்களது சட்டவிரோத தொழிலுக்கு பாதுகாப்பு பெறலாம் என்பதற்காக பத்திரிக்கை துறைக்கு வந்தவர்கள் நிறைய உள்ளார்கள். அது ஊடகத்தின் மேல்மட்டம் முதல் தாலுக்கா அளவில் வரை உள்ளார்கள்.
இவர்களை சம்மந்தப்பட்ட ஊடக முதலாளிகள் கூட கேட்கமுடியாது. காரணம் தங்களது கல்வி நிறுவனங்களை, தொழிற்சாலைகளை, சீட் கம்பெனிகளை பாதுகாக்க தொலைக்காட்சிகளை தொடங்கி நடத்துகிறார்கள். அதில் பணிக்கு சேர்க்கப்பட்டு வளர்க்கப்படுபவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை நீங்களே யூகித்துககொள்ளுங்கள். ஊடகத்தில் செய்தி ஆசிரியர்கள் என்பவர்கள் மிக முக்கியமானவர்கள் அவர்கள் தான் இவர்களை வழிநடத்துபவர்கள், அவர்கள் கேட்கமாட்டார்களா?
அரசியலை விட மிகமோசமான உள்குத்துகள் நடக்கும் ஊடக நிறுவனங்களில். அவர்களுக்கு இவர்கள் போன்ற ஜால்ராக்கள், தற்குறிகள் இருந்தால்தான் அது பலவகையிலும் பாதுகாப்பு - பலன் என்பதால் இவர்களை அவர்கள் ஊக்குவிப்பார்கள். அந்த ஊக்குவிப்புதான் இந்தளவுக்கு சீரழிவில் வந்து நிற்கிறது.
ஊடகத்தில் இருப்பவர்களும் மனிதர்கள் தான். அவர்களுக்கும் ஆசாபாசம் எல்லாமே இருக்கும். உங்களுக்கு அரசியலில், வாழ்க்கையில் ஒரு சார்பு, கொள்கை இருக்கும். அதன்படி வாழ்வது உங்களது உரிமை. அதில் யாரும் தலையிடமுடியாது. ஆனால் உங்கள் அரசியல் சார்பை, நாயக கொண்டாட்டத்தை உங்கள் ஊடக பணியில் காட்டாதீர்கள். சரியான தலைமை இருந்தால் அல்லது பயிற்சி பெற்றிருந்தால் உங்களுக்கு அதுக்குறித்து பாடம் நடத்தியிருப்பார்கள். அப்படி இல்லாததால் தான் இப்படி டான்ஸ் ஆடவைக்கிறது.
தற்குறி முதல்வர் சைட்சிக் வைத்துக்கொண்டு ஊர்சுற்றுவதை ஊடகங்கள் நார்மலைஸ் செய்து முட்டுக்கொடுத்து நாட்டை சீரழிப்பதுப்போல் நெறியாளர்கள் தங்கள் முட்டாள்தனத்தை நேரலையில் வெளிப்படுத்தி ஊடகம் மீது மக்களிடம் கொஞ்சமாகவுள்ள மரியாதையை இன்னும் குழிதோண்டி புதைத்துவிடாதீர்கள்.
தமிழ்நாட்டில் நடந்த SIR குளறுபடிகள் பற்றி ராகுல்காந்தியிடம் கேள்வி கேட்க முயன்ற லயோலா கல்லூரி மாணவனை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி இருக்கிறது காங்கிரஸ் கட்சி! எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு! யாரை ஏமாற்ற இந்த SIR எதிர்ப்பு போராட்டம்?
TVK கட்சி BJP யின் 'B' Team nu சொன்னா எந்த தற்குறியும் நம்ப மாட்றான்..
டேய் உங்கொண்ணன் டெல்லியின்
#அறிவிக்கப்படாத_அடிமை டா
புதிய மெட்ரோ ரயில் வழித்தடத்தை தொடங்க மோடி & விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில்
திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை வரவேற்பு
மக்களின் உரிமைகளுக்காக பதினாறு ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்துப் போராடிய ஐரோம் சர்மிளா வெறுமனே தொன்னூறு வாக்குகள் தான் பெற்றார். ஐரோம் சர்மிளாவின் கட்சியிலேயே மற்றொரு தொகுதியில் நஜிமா பிபி என்கிற முஸ்லிம் பெண் போட்டியிட்டிருந்தார். அவர் வாழ்ந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்காக பல்வேறு வழக்குகளை நடத்தியவர். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்காகவே அடைக்கல முகாமையும் நடத்திவந்தார். அவர் போட்டியிட்ட தொகுதியில் அவர் பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா? வெறும் 30 தான்.
எந்த மக்களுக்காக தங்களுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்துப் போராடுகிறார்களோ, எந்த மக்களின் பிரச்னைகளை தீர்த்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தீர்வுகளை கொண்டு வருகிறார்களோ அந்த மக்களே அப்போராளிகளுக்கு வாக்காளிக்காமல் புறக்கணித்து தள்ளி விட்டு அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் பிரச்னைகளை சேர்த்து புதிய பிரச்சனைகள் கொண்டு வருபவர்களையே மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுப்பது சகித்துக் கொள்ள முடியாத உலக வழக்கமாகும்
காங்கிரஸ்,விசிக,IUML,மதிமுக இந்த கட்சிகள் திமுகவுடன் கூட்டணியில் இருந்த காரணத்தில் தான் திமுக வெற்றி பெற்றது.
இவர்களுடைய 15% ஓட்டு தான் திமுகவை வெற்றிபெற வைத்தது என்று சட்டமன்றத்தில் ஆதவ் பேசிருப்பான்...
அப்போ நேற்று ரெண்டு தொகுயிலும் தவெக வெற்றியிலும் அந்த 15% ஓட்டு இருக்குல..
குறிப்பா மதிமுகவின் 10000 ஓட்டு தான் தவெகவை வெற்றி பெற வைத்துள்ளது..
விசிகவின் 8000 ஓட்டு தான் வெற்றிய தீர்மானித்துள்ளது.
IUML 5000 ஓட்டு தான் வெற்றிய சாத்தியம் ஆக்கியுள்ளது.
ஓடுகாலி காங்கிரஸின் களபிரச்சாரம் தான் தவெக வெற்றிக்கு தோள் கொடுத்துள்ளது..
இதெல்லாம் ஆதவ் சொன்னது தான்...
கெடுவான் கேடு நினைப்பான் !
காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக போன்றோர் இந்த இடைத்தேர்தலில், நாம் இல்லாமல் திமுக டெப்பாசிட்டையே இழந்து தவிக்க வேண்டும் என ஒற்றைக் காலில் தவம் செய்துக் கிடந்தனர் !
எதிரிகளும் நம்மை, கூட்டணி துணையில்லாமல் திமுகவால் கணிசமான வாக்குகளையோ, வெற்றிகளையோ பெற்றதே இல்லை என்கிற அவப்பெயரை அவதூறாக பூசிக் கொண்டே கிடந்தனர் !
இந்த இடைத் தேர்தலையே திமுக தவிர்க்குமென புரளியைக் கிளப்பி விட்டனர்.
ஆனால் முதல் ஆளாய் வேட்பாளர்களை அறிவித்ததோடு அன்றி, முதல் ஆட்களாய் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தவர்களும் திமுகவினர்தான் !
மதுராந்தகத்தில் ஸ்டாலின் & உதயநிதி தலா ஒரு நாள் மட்டுமே பரப்புரையில் ஈடுபட்டனர். தாராபுரத்திலும் அதுவே. ஒருவர் வேன், இன்னொருவர் மேடைப் பேச்சு.
ஆனால் முதல்வராக இருந்தவர் தலா இரு முறை பேச்சு + சாலை உலா என அனைத்து சீன்களும் போட்டார். இடைத்தேர்தலுக்காக ஒரு முதலமைச்சர் இந்தளவு மெனக்கிட்டு யாருமே அவரவர் வாழ்வில் பார்த்ததில்லை, வரலாறுமில்லை. ஒரு முதல்வராக இருந்துக் கொண்டு மக்கள் வரிப்பணத்தை அப்படி வீணடிப்பது அறமில்லை !
எந்த நெருடலுமில்லாது தாய்மாமன் மோதிரம், வெற்றிப் பயணம், அண்ணன் சீர் திட்டங்களை இந்த இடைத் தேர்தலுக்காகச் செயல்படுத்தினார்.
அவருடன் பரப்புரைக்காக காங்கிரஸ், விசிக, மதிமுக, முஸ்லீம் லீக் என அனைவருமே பாடுபட்டனர்.
இவ்வளவு செய்த பின்னரும் அவர்களால் பிரம்மாண்ட வெற்றியைப் பெறவியலவில்லை. மாறாக, திமுக தனியாகவே போராடி இரண்டாமிடத்தில் கம்பீரமாக வந்து நிற்கின்றது !
தாராபுரத்தில் போன மே மாதத்தில் 16000 வாக்குகள் அதிகமாக வாங்கி வெற்றி பெற்றவரால் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெல்ல முடிந்திருக்கிறது. மதுராந்தகத்தில் போன முறை திமுகவுக்கு மூன்றாமிடம், இம்முறை இரண்டாமிடம். வாக்கு விழுக்காட்டில் திமுகவுக்கு சரிவில்லை.
கம்யூனிஸ்ட் தனியாக நின்றிருக்கத் தேவையே இல்லை. தன் பலவீனத்தை ஒருபோதும் பொதுவெளியில் வெளிப்பட யாருமே விரும்ப மாட்டார்கள். ஆனால் நம் முன்னாள் தோழர்கள் ஏன் அந்த ஆயுதத்தை எடுத்து தமக்குத் தாமே பாய்ச்சிக் கொண்டனர் எனத் தெரியவில்லை. இனி தவெக அவர்களை மதிக்காது, திமுக சீண்டாது !
இந்தியாவில் கம்யூனிஸ்ட்களை நாடாளுமன்றத்திற்கு தொடர்ந்து அனுப்பி வைத்த திமுகவை அவர்கள் இழிவு செய்திருக்கக் கூடாது !
சமீப காலங்களில், மதிமுக, முஸ்லீம் லீக் பேசிய பேச்சுக்களெல்லாம் ரணக்கொடூரமானவை. அதற்கெல்லாம் இனி எந்தப் பிறவியிலும் மன்னிப்பில்லை !
காங்கிரசைப் பொறுத்தவரை ராகுல் காந்தி தன் வாழ்க்கையில் செய்த பெருங்குற்றம் தன்னை ஏற்றி அழகு பார்த்த ஏணியை எட்டிவிட்டது. திமுகவை இழந்த ஒரே ஒரு காரணத்தினால் இன்று டெல்லியில் அவர் தனித்து பரிதாபமாகத் தெரிகிறார் !
பாமக பின்னாளில் திமுகவுடன் பயணிக்கும். அதற்கு முன்னால் அது கொஞ்ச காலம் விசிலடிக்கப் போகும். அது போவது விசிகவை துரத்தியடிக்க.
நான் மீண்டும் மீண்டும் சொல்வது இதைத்தான். திமுகவுக்கு துரோகம் செய்த எவனுடைய வாழ்க்கையும் நிம்மதியாக முடிந்ததாக வரலாறு இல்லவே இல்லை.
இனி எப்போதும் காங்கிரஸ், விசிக, மதிமுக IUML கட்சிகள் திமுகவுடன் கூட்டு சேர்க்கப்படாது. கலைஞருக்கு மிகப் பிடித்தமானவர்கள் என்பதால் கம்யூக்களை பொறுக்கலாம், ஆனால் அதை காலம் சொல்லட்டும் !
திமுக & அதிமுகவுக்கு வாக்களித்த தாராபுரம், மதுராந்தகம் மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. கொஞ்சமேனும் மானம், ரோஷம், பகுத்தறிவு, சூடு,சுரணை இருந்ததால் நீங்கள், கவர்ச்சிக்கோ, பரிசில்களுக்கோ மயங்காமல், உங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு வாக்களித்தீர்கள். உங்கள் கோபத்தை தக்க வைத்திருங்கள். விரைவில் இருள் அகலும், விடியல் வரும் !!!
#திமுக
Thanks
Raja Rajendran.. Facebook.