@teakkadai1 இந்த டைம் பெங்களூரு தான் ப்ரோ..
ஈ சாலா கப் நமதே..
18th IPL season
Kohli t-shirt no. 18
கஜினி முகமது படையெடுத்து 18 -வது முறை தான் வென்றார்னு படிச்சது இல்லையா..
@skpkaruna அண்ணா இவரை என்னானு கேளுங்க..
"த.வெ.கவுக்கு கொள்கை, கோட்பாடு ஒரு கத்திரிக்காயும் கிடையாது.. தொப்புள்கொடி கூட அறுபடாத ஒரு குழந்தை.. தேறுமா தேறாதானு போக போகதான் தெரியும்" - கடுமையாக விமர்சித்த கம்யூனிஸ்ட் முத்தரசன்
#Theni | #TVK | #CPI | #Mutharasan | #PolimerNews
A legal notice for defamation has been sent to Mrs.M.R.Pallavi, TVK MLA of ThiruViKa Nagar Constituency for making defamatory and baseless accusations against DMK for the power cuts in Chennai.
Within 3 days she has to seek an unconditional public apology, for making baseless accusations, failing which legal consequences will follow.
ஒரு ஆளும் கட்சி MLA எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாம ஒரு YOUTUBER மாதிரி புகார் சொல்லுறாங்க... திமுக சொல்லி கரண்ட் கட் பண்ண ராயபுரம் EB அதிகாரி யாரு?? அவரு மேல என்ன நடவடிக்கை எடுத்தீங்கன்னு சொல்லனும் இல்லைன்னா சட்ட ரீதியா MLA சொன்னதுக்கு நடவடிக்கை எடுக்கனும் @DMKLegalWing
இதெல்லாம் திமுக ஆட்சியில்
மாவட்ட வாரியாக மூடப்பட்ட
500 டாஸ்மாக் கடைகளின் பட்டியல்..
இதே போல தற்போது மூடப்பட்ட 717 மூடப்பட்ட கடைகளின் பட்டியலை த.வெ.க அரசு வெளியிடுமா?
இந்தத் பேட்டியில் நான் சொல்வது 2001 ஆம் ரிசல்ட் பத்தி.. 2001 ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணியும் சேப்பாக்கமும் தனித் தனி தொகுதி. அன்றைய திருவல்லிக்கேணி தொகுதி எம் எல் ஏ உசேன். சேப்பாக்கம் எம் எல் ஏ கலைஞர். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தான் சேப்பாக்கமும் திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக இணைக்கப்பட்டது. நான் சரியாத்தான் பேசி இருக்கேன். கூகிள் பண்ணி பாருங்க தற்குறிகளா!!!!
முதல்வர் விஜய் தலைமையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10.05 முதல் 11.20 வரை நடந்திருக்கிறது.
இதில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறுகிறார் அமைச்சர் நிர்மல்குமார்.
அதாவது, 75 நிமிடங்களில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசித்திருக்கிறார்கள். ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 5 திட்டங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்கள். சொல்லப் போனால், 12 நொடிக்கு ஒரு திட்டம் என விவாதித்து இருக்கிறார்கள். அந்த 12 நொடிகளிலேயே முதல்வர், துறைசார்ந்த அமைச்சர் என இருவரும் தலா 6 நொடிகள் பேசி, திட்டம் குறித்த ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
ஒரு அமைச்சரவைக் கூட்டத்தில், இவ்வளவு குறைவான காலநேரத்தில் இவ்வளவு அதிகமானத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது உலக வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கும். ஆகவே, கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்க வேண்டுமென தவெக அரசை உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள 152 உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள் அகில இந்தியத் தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படுவதைத் தடுக்க வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு,
சூப்பர் ஸ்பெஷாலிட்டி என அழைக்கப்படும் “உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு”களுக்கான 152 இடங்களை “அகில இந்திய தொகுப்பிற்கு” மாற்ற வேண்டும் என மாண்பமை உச்சநீதிமன்றம் 29.05.2026 அன்று உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
இந்நிலையில், தமிழ்வாணி என்பவர் தொடர்ந்த வழக்கில் தங்கள் தலைமையிலான புதிய அரசின் சார்பில் முறையான வாதங்கள் எடுத்து வைக்கப்படாத காரணத்தால் இச்சூழல் உருவாகியுள்ளது என்பது தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்புக்கு ஆபத்தாக அமைந்திருக்கிறது. 2025-ஆம் ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 430 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களுக்கு நடைபெறும் கலந்தாய்வில் உள்ள 215 இடங்கள், பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மேற்கண்ட இடங்களில் 63 இடங்கள் மட்டுமே கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு, இரண்டாவது கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் 152 இடங்கள் காலியாக இருந்தன.
கடந்த மே 27-ஆம் தேதி தமிழ்நாடு அரசின் “தேர்வு கமிட்டி” இரண்டாம் கட்ட கலந்தாய்வை நிறைவு செய்த சூழலில் தமிழ்வாணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கினை தாக்கல் செய்து, நிரப்பப்படாமல் இருக்கும் 152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். அந்த வழக்கு விசாரணை கடந்த ஏப்ரல் மாதத்தில் 8, 10 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற்ற போது தி.மு.க. அரசின் சார்பில் வெற்றிகரமாக வாதங்களை எடுத்து வைத்து, நிரப்பப்படாமல் உள்ள 152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்குச் செல்வதை தடுத்து வைத்திருந்தது.
இந்தச் சூழலில் தங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு மே 25 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “அந்த மாணவி மேற்கோள் காட்டிடும் N. Karthikeyan Vs State of Tamilnadu என்ற தீர்ப்பு இந்த வழக்கிற்குப் பொருந்தாது” என்பதையும், “அகில இந்திய இரண்டாவது கட்ட கலந்தாய்வு நடைபெறவில்லை”, என்பதையும் “மாநில இடங்களை ஒப்படைத்த பிறகு ஒன்றிய அரசு குறைந்தபட்ச சதவிகிதத்தைக் குறைக்கக் கூடாது” என்ற தகவலையும் முறைப்படி எடுத்து வைக்கவில்லை என்று தெரிய வருகிறது. அது மட்டுமின்றி, ஒன்றிய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குறைந்தபட்ச சதவிகிதத்தைக் குறைப்பதை பற்றி முடிவு பின்னர் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டின் இடங்களை ஒப்படைத்த பின்பு சதவீதத்தை குறைத்து “All India merit list”மூலம் இடங்கள் நிரப்பப்பட்டால் , அது தமிழ்நாட்டின் அரசு மருத்துவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரே “அந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டிக்குரிய 152 இடங்களை சரண்டர் செய்கிறோம்” என ஒப்புக்கொண்ட காரணத்தால், “நிரப்பப்படாமல் உள்ள 152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு மாற்ற வேண்டும்” என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, இதயநோய், புற்றுநோய், நரம்பியல் தொடர்பான நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் உயர்தர சிகிச்சைக்கும் பின்னடைவை ஏற்படுத்தும்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, கடந்த 2000-ஆம் ஆண்டிலிருந்து அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு மேற்கொள்ளும் இட ஒதுக்கீடு, கழக அரசு எடுத்த நடவடிக்கைகளால் 2022-இல் மீண்டும் உறுதி செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு மேற்கொண்டு கிராமப்புற மக்களுக்கும் உயரிய மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு மிக முக்கியமான காரணியாக இருந்துள்ளது. அந்த இட ஒதுக்கீட்டு உரிமை தற்போது தங்கள் அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் உரிய வாதங்களை எடுத்து வைக்காத காரணத்தால் பறிபோகும் சூழல் எழுந்துள்ளது வேதனையாக இருக்கிறது.
ஆகவே மாண்புமிகு முதலமைச்சராகிய தாங்கள் உடனடியாக தலையிட்டு, தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களும் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படுவதை தடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பணி மருத்துவர்கள் அந்த உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்குரிய இடங்களில் சேருவதற்கான சூழலை ஏற்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.
***
#DMK
#WATCH | “ஸ்டிக்கரை மாற்றி, சிங்கப்பெண் என்ற திட்டத்தை கொண்டு வருவோம் என சொல்லி அதையும் கொண்டுவர வக்கில்லாத ஒரு சோபா மாடல் ஆட்சி தற்போதைய ஆட்சி”
-உதயநிதி ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர்
#SunNews | #DMK | #TVKVijay | #Singapen
"களத்தில் யார் உண்மையான எதிரி என்று தெரியாமல் இல்லாத எதிரியுடன் சண்டைப் போட்டுக் கொண்டு இருந்துள்ளோம். அதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். எங்கு மிஸ் செய்து விட்டோம் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நம்
தவறைத் திருத்திக் கொள்ள முடியும். மக்கள் மீது Over confidenceஆக இருந்து விட்டோம். தமிழ்நாடு முழுவதும் தெரு தெருவாக வாக்கு கேட்ட நாம் நம்முடைய வீடுகளில் ஓட்டு கேட்க தவறி விட்டோம். நம்முடைய வீடுகளில் நம் சாதனைகளை சொல்ல மறந்து விட்டோம்." - உதயநிதி ஸ்டாலின்
#UdhayanidhiStalin | #DMK | #Chepauk | #Vikatan
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்காது கள்ளமௌனம் சாதித்து வந்தார் விஜய்.
"தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?" எனக் கேட்டு, வரும் 22ம் தேதிக்குள் அதனைத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது மதுரை உயர் நீதிமன்றம்.
இப்போதாவது வாய்ல ஏதாவது வருதான்னு பாப்போம்.
மிகவும் புரிதலான பேச்சு..!
நடந்தது நிழல் யுத்தம், பாரம்பரிய ஆயுதங்கள் கொண்டு அதனை வெல்ல முடியாது..!
வட இந்தியாவில் பிஜேபி வெல்ல பயன்பட்ட ஆயுதம் அது
எதிரி புலப்பட்டு விட்டான், தகுந்த ஆயுதங்களுடன் திருச்சியில் சந்திப்போம்