மரியாதைக்குரிய அண்ணன் @draramadoss அவர்கள், நாகரீகமற்று கொச்சையாகப் பேசி இருக்கிறார்.
கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களில் 9 பேர் பள்ளிக்குச் செல்லும் வயதிலும், எதிர்காலத்தில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதிலும் உள்ள எங்கள் பிஞ்சு குழந்தைகள். அவர்களை என்னுள் ஒருவராக கருதுகிறேன். என்னை மக்களில் ஒருவராக கருதுகிறேன். ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன்!
எங்கள் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்வதுபோல “எந்தத் தலைவரும் தன் ஆதரவாளர் இறப்பதை விரும்பமாட்டார்!”. தலைவரின் வழியில் பயணிக்கும் நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம். ஆறுதல் தேடுகிறோம். ஆறுதல் சொல்கிறோம்.
வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையை கூட கொச்சைப் படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என்றே கருதுகிறேன்.
பா.ம.க. நிர்வாகி இளந்தோப்பு வாசு கொலை: சட்டம் - ஒழுங்கு சீரழிவுக்கு எடுத்துக்காட்டு -
குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்!
செங்கல்பட்டு மாவட்டம் இளந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மத்திய மாவட்ட துணை செயலாளரும், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவருமான ஏ.வாசு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், அப்பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இளந்தோப்பு பகுதியைச் சேர்ந்த வாசு அப்பகுதி மக்களின் செல்வாக்கைப் பெற்றவர். பட்ரவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராகவும், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராகவும் பனியாற்றியுள்ளார். இந்த அளவுக்கு செல்வாக்கு மிக்க ஒருவரை பட்டப்பகலில் ஒரு கும்பல் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடுகிறது என்றால் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஏ.வாசுவின் படுகொலைக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஏ.வாசுவின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
@CMOTamilnadu@tnpoliceoffl
ஆதாரம் கேட்ட பூசாரிஸ்..
மாம்பழம் சின்னம் உறுதியான கடிதம் வந்த 3 மாதம் ஆகுது!
இந்த கடிதம் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணிராமதாஸ் தான் என தேர்தல் ஆணையம் உறுதிபடுத்திய கடிதம்
#அன்புடன்பாமக#PMKPresidentAnbumani
முதல்வர் மீண்டும், மீண்டும் பொய் சொல்லக்கூடாது: தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதற்கான ஆதாரங்களுடன் விவாதம் நடத்தத் தயாரா?
தமிழ்நாட்டில் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. வழங்கிய 505 தேர்தல் வாக்குறுதிகளில், 364 நிறைவேற்றி செயல்பாட்டில் இருக்கிறது. 40 அறிவிப்புகள் அரசின் பரிசீலனையில் இருக்கிறது. அந்த வகையில், மொத்தம் 404 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று மீண்டும் ஒரு பொய்யை கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். மீண்டும், மீண்டும் பொய்களைக் கூறி மக்களை ஏமாற்ற திமுக அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது.
தேர்தலில் அளிக்கப்பட்டவற்றில் 98% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பெரும் பொய் கூறி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் வெறும் 66 வாக்குறுதிகள், அதாவது 13% வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை பாட்டாளி மக்கள் கட்சி பட்டியலிட்டு ’’விடியல் எங்கே?” என்ற தலைப்பில் ஆவணமாக வெளியிட்ட பிறகு 98 விழுக்காட்டில் இருந்து இறங்கி வந்து 364 வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றப்பட்டு வருவதாக சற்று குறைவான பொய்யைக் கூறி வருகிறார்.
364 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்; 40 வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளன என்றெல்லாம் பொய்ப்பாட்டு பாடும் திமுக அரசால், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளின் பட்டியலைக் கூட வெளியிட முடியவில்லை. அவ்வாறு வெளியிட்டால் அவற்றில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதவை என்ற உண்மை அம்பலமாகிவிடும் ; திமுக அரசைப் பார்த்து மக்கள் சிரிப்பார்கள் என்ற அச்சத்தால் தான் வெறும் எண்ணிக்கையை மட்டும் கூறி மக்களை ஏமாற்ற திமுக அரசு முயலுகிறது.
நீட் விலக்கு வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை... அதை நாங்கள் மறுக்கலையே என்று கூறி மாபெரும் துரோகத்தை மிகவும் எளிதாக கடந்து செல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயல்கிறார். அவருக்கு மனசாட்சியும் இல்லை; மனித நேயமும் இல்லை என்பதைத் தான் இது காட்டுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் விலக்கு தான்; அதற்கான ரகசியம் எங்களுக்குத் தான் தெரியும் என தந்தையும், மகனும் ஊர் ஊராக சென்று வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றினீர்களே... அப்போது தெரியவில்லையா இது நிறைவேற்ற முடியாத வாக்குறுதி என்று?
2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது பற்றி எரியும் பிரச்சினையாக இருந்தது நீட்விலக்கு தான். நாங்கள் ஆட்சிக்கு வந்த அடுத்த வாரமே நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என்று கூறி வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்து விட்டு, இப்போது நிறைவேற்ற முடியவில்லை என்று கூறுவது மாபெரும் நம்பிக்கைத் துரோகம். 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட 50-க்கும் மேற்பட்ட மாணவர்களின் ஆன்மாக்கள் இந்த ஏமாற்றுவாதிகளை மன்னிக்காது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பொய், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் பொய் என அனைத்திலும் பொய்களை மட்டுமே கூறி மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசை திராவிட மாடல் என்று கூறுவதை விட கோயபல்ஸ் மாடல் அரசு என்று கூறுவது தான் பொருத்தமாக இருக்கும்.
நிறைவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஓர் அறைகூவல்....
திமுக அரசு நிறைவேற்றாத 373 வாக்குறுதிகள், அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட 66 வாக்குறுதிகள், முழுமையாக நிறைவேற்றப்பட்ட 66 வாக்குறுதிகள் ஆகியவற்றின் பட்டியலை ஆவணமாகவே வெளியிட்டிருக்கிறேன். உண்மையாகவே திமுக அரசு 364 வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால் அவற்றின் பட்டியலையும், அவற்றால் பயனடைந்த மக்களின் விவரங்களையும் வெளியிடுங்கள். அதனடிப்படையில் மக்கள் மற்றும் ஊடகங்கள் முன்னிலையில் விவாதம் நடத்துவோம். திமுக அரசின் பொய்களை அம்பலப்படுத்த நான் தயார், நீங்கள் சொன்னவை உண்மை என்பதை நிரூபிக்க நீங்கள் தயாரா?
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை பாமக தலைவராக அங்கீகரித்து இந்திய தேர்தல் ஆணையம்.
2026 ஆகஸ்ட் வரை பதவியை நீட்டிக்கும் பொதுக்குழு தீர்மானத்தை ஏற்று கடிதம்.
மாம்பழம் சின்னமும் அன்புமணிக்கே என தேர்தல் ஆணையம் கடிதம் அளித்தது.
#அன்புடன்பாமக#PMKPresidentAnbumani
சமூகநீதி அனைவருக்கும் கிடைக்க சாதிவெறி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என வலியுறுத்தி வரும் அன்புத் தலைவர் அன்புமணி அவர்களுக்கு மாம்பழம் சின்னம் வழங்கியது தேர்தல் ஆணையம்.
#அன்புடன்பாமக#PMKPresidentAnbumani