கரூரில் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 30க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூட்டநெரிசலில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
சென்னையில் இன்று ஒரே நாளில் ஏழுக்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து அரங்கேறியிருக்கும் செயின்பறிப்பு சம்பவங்கள் - தலைநகர் சென்னையில் திட்டமிட்டு நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்கத் தவறிய காவல்துறையும், திமுக அரசும் வெட்கித் தலைகுணிய வேண்டும்.
சென்னையில் இன்று ஒரே நாளில் வேளச்சேரி, திருவான்மியூர், பள்ளிக்கரணை, சைதாப்பேட்டை உள்ளிட்ட ஏழுக்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து செயின்பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் தாம்பரம் அருகே 8 இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற செயின்பறிப்பு சம்பவங்களை காவல்துறை அலட்சியமாக எதிர்கொண்டதன் விளைவே தற்போது மீண்டும் அதே செயின்பறிப்பு சம்பங்கள் தொடர்ந்து அரங்கேற முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பட்டப்பகலில் நடைபெறும் இதுபோன்ற செயின்பறிப்பு சம்பவங்கள் ஒட்டுமொத்த காவல்துறையின் செயலற்ற நிர்வாகத்திறனை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதோடு பெண்கள் வீட்டை விட்டே வெளியே வர முடியாத அளவிற்கு அசாதாரண சூழலையும் உருவாக்கியுள்ளது.
எனவே, செயின்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, சென்னை உட்பட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
ரயில்வே தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்குவதா? – தமிழக தேர்வர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
ரயில்வே வாரியத்தின் மூலம் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள உதவி ஓட்டுநர் பணிக்கான இரண்டாம் கட்ட தேர்வுக்கு தேர்வாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டாம் கட்ட தேர்வுக்கு தயாராகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 6,315 பேரில் சுமார் 80 சதவிகிதம் பேருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருப்பது தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை மாநிலங்களில் அமைக்கப்படும் இது போன்ற தேர்வு மையங்களால், தொலைதூர பயணம் மேற்கொள்வது மட்டுமின்றி, உரிய நேரத்திற்குள் தேர்வு மையத்தை அடைவதும் மிகுந்த சிரமம் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என தேர்வர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, ரயில்வே பணியில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு பகலாக தேர்வுக்கு தயாராகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசையும், ரயில்வே துறையையும் வலியுறுத்துகிறேன். @RailMinIndia@GMSRailway
"எனது ஆண்கள்" என்ற நூலின் மூலம் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியிருக்கும் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் ப.விமலா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் பற்றாளராக, கல்லூரி பேராசிரியராக, சிறந்த மொழி பெயர்ப்பாளராக என பன்முகத் திறமையின் மூலம் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியிருக்கும் பேராசிரியர் ப.விமலா அவர்களின் கல்வி, எழுத்து மற்றும் மொழிபெயர்ப்பு பணி
மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன். #SahityaAkademi
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலம் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் பெருமையைத் தேடித்தந்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர்ந்து கிரிக்கெட் உலகில் புதிய உச்சம் தொட வாழ்த்தி மகிழ்கிறேன். #ChampionsTrophy2025 #TeamIndia
அசுர குலத்தை அழித்து தேவர்களை பாதுகாத்த தமிழ்க் கடவுள் முருகனை போற்றிக் கொண்டாடும் இந்நாளில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு, ஒளி மற்றும் செழிப்போடு ஆன்மீக அற்புதங்களும் நிறைந்த இந்த புண்ணியத் திருநாளில் முருகப்பெருமானின் தெய்வீக அருள் நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் அமைதியையும், அளவில்லா மகிழ்ச்சியையும் வழங்கட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
பத்மபூஷன் விருதுக்கு தேர்வாகியிருக்கும் நடிகர் திரு.அஜித்குமார், தொழிலதிபர் திரு.நல்லி குப்புசாமி செட்டி, நடன கலைஞர் திருமதி. ஷோபனா சந்திரகுமார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் பத்மஸ்ரீ விருதுக்கு பல்வேறு துறைகளின் கீழ் தேர்வாகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தினமலர் திரு.லட்சுமிபதி ராமசுப்பையர், திரு.வேலு ஆசான், திரு.குருவாயூர் துரை, திரு.தாமோதரன், திரு. M D ஸ்ரீனிவாஸ், திரு.புரசை கண்ணப்ப சம்பந்தன், திரு. அஸ்வின் ரவிச்சந்திரன், திரு.சந்திரமோகன், திரு. ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி, திரு.சீனி விஸ்வநாதன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை பரிமாறிக் கொள்கிறேன்.
மத்திய அரசின் உயரிய விருதுகளுக்கு தேர்வாகி தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கும் அனைவரும் அவரவர் துறைகளில் மென்மேலும் சிறந்து விளங்கிட வாழ்த்தி மகிழ்கிறேன்.
#PadmaAwardees #PadmaAwards2025
இந்திய திருநாட்டில் இருந்து ஆங்கிலேயர்களின் ஆட்சியை அடியோடு அகற்ற இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்து போராடிய சுதந்திர போராட்ட வீரர் வங்கம் தந்த சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த தினம் இன்று.
வலிமையான இந்தியாவை உருவாக்கும் உயர்ந்த லட்சியத்தோடு மக்களிடையே தன்னம்பிக்கையையும், எழுச்சியையும் விதைத்த உலகம் போற்றும் உன்னத போராளி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் வீரத்தையும் துணிச்சலையும் போற்றி வணங்கிடுவோம்.