மொத்தம் 11000 பாஸ் அதுல 9000 VIP பாஸ், இந்த VIP பாஸ் எல்லாத்தையும் எந்த மாதிரி ஆளுகளுக்குக் குடுத்துருக்கானுகனு பாருங்க👇
பாப்பான்களுக்கும் பாப்பாத்திகளுக்கும் மார்வாடிகளுக்கும் குடுத்துருக்கானுகங்கிறதுக்கு ஒரு சாம்பிள்👇
புது அரசோட பக்கத்தையும் நேர்மையா வெக்கிறேன்.
5 ஆகஸ்ட் 2026 — தவெக அரசோட முதல் பட்ஜெட். இந்தத் திட்டத்துக்கு ₹131 கோடி. அமைச்சர் சொன்னது: 362 மாணவர்கள்.
₹65 கோடியில இருந்து ₹131 கோடி. ஒதுக்கீடு இரட்டிப்பு. அதை நான் மறுக்கல.
ஆனா அரசியல்ல ஒரு அடிப்படைப் பாடம்: ஒதுக்கீடு (allocation) வேற. விடுவிப்பு (release) வேற.
பட்ஜெட்ல எழுதுறது வாக்குறுதி. மாணவன் அக்கவுண்ட்டுக்குப் போறதுதான் உண்மை. ₹131 கோடி காகிதத்துல இருக்கு. பாரதிதாசனுக்கு ₹19.50 லட்சம் நிலுவையில இருக்கு. ரெண்டும் ஒரே நேரத்துல உண்மை.
இப்ப அரசு சொந்த எண்களையே எப்படிச் சொல்லுதுன்னு பாருங்க.
20 ஆகஸ்ட், அமைச்சர், சட்டசபையில: "கடந்த முறையை விட இந்த முறை மூன்று மடங்கு அதிகமாகக் கொடுத்துள்ளோம்."
17 செப்டம்பர், அதே துறையோட அறிக்கை: 181 மாணவர்கள் → 365 மாணவர்கள். "இருமடங்காக."
மூணு மடங்கா, ரெண்டு மடங்கா? ஒரே துறை. இருபத்தெட்டு நாள் இடைவெளி. ரெண்டு எண்.
அமைச்சர்: 362 மாணவர்கள். துறை: 365 மாணவர்கள்.
ஒரு மாணவனோட ஒவ்வொரு பில்லையும் ரூபா கணக்குல சரிபாக்குற அரசு, சொந்த மாணவர் எண்ணிக்கையை சட்டசபையில ஒண்ணு, அறிக்கையில ஒண்ணுன்னு சொல்லுது.
இன்னொண்ணு.
அமைச்சர், 20 ஆகஸ்ட்: உதவித்தொகை "அதிகபட்சமாக ரூ.36.00 லட்சம்." "ஆண்டுக்கு"ங்கிற வார்த்தை இல்ல.
துறை, 17 செப்டம்பர்: "ஆண்டிற்கு ரூ. 36.00 இலட்சம் வரை."
அந்த ஒரு வார்த்தைதான் விஷயம். மொத்தம் ₹36 லட்சம்னா, ₹48 லட்சம் கொடுத்தது தாராளம். ஆண்டுக்கு ₹36 லட்சம்னா, மூணு வருஷத்துக்கு வரம்பு ₹1.08 கோடி வரை — போனது ₹48 லட்சம்.
சட்டசபையில கேட்டவங்களுக்குப் போய்ச் சேர்ந்தது முதல் கணக்குதான்.
தலைப்புச் செய்திக்கு பட்ஜெட் எண். மாணவனுக்கு "பில் சரியில்ல." இதுதான் இப்போதைய மாடல்.
இந்தத் திட்டம் 2021-க்கு முன்னாடியும் காகிதத்துல இருந்துச்சு. போனது ஒரு கைப்பிடி அளவு பேரு.
எண்களைப் பாருங்க:
2021-22 — 9 மாணவர்கள். ₹2.57 கோடி.
2024-25 — 174 மாணவர்கள். ₹60.33 கோடி.
மூணு வருஷத்துல மாணவர் எண்ணிக்கை 19 மடங்கு. பணம் 23 மடங்கு.
எப்படி நடந்துச்சு? படிப்படியா:
2022-23 — வருமான வரம்பு ₹8 லட்சம். ஆண்டுக்கு ₹36 லட்சம் வரை. QS முதல் 1000 பல்கலைக்கழகங்கள். முதுநிலை + PhD.
2023-24 — ரெண்டு அடுக்கு. ₹8–12 லட்சம் வருமானக் குடும்பங்களுக்கும் ₹24 லட்சம் வரை. நடுத்தர வருமான தலித் குடும்பங்களும் உள்ள வந்தாங்க.
2023 — "வருஷத்துக்கு பத்து பேருக்கு மட்டும்"ங்கிற உச்சவரம்பு நீக்கம். தகுதி இருந்தா போ.
14 ஏப்ரல் 2025, சமத்துவ நாள் — ஒரே மேடையில 60 மாணவர்களுக்கு ₹21 கோடி.
2025-26 பட்ஜெட் — இந்த ஒரு திட்டத்துக்கு மட்டும் ₹65 கோடி.
கடந்த அஞ்சு வருஷத்துல மொத்தம் 385 மாணவர்கள் இந்தத் திட்டத்துல வெளிநாடு போயிருக்காங்க.
385 குடும்பங்கள். பெரும்பாலானவங்க வீட்டுல முதல் தலைமுறைப் பட்டதாரி. இப்ப லண்டன், மெல்போர்ன், டொரன்டோ, கோலாலம்பூர் லேப்ல உட்கார்ந்திருக்காங்க.
பாரதிதாசனோட sponsorship கடிதம் — 9 ஜனவரி 2025. முதல் வருஷ ₹36 லட்சம் போனது இந்தக் காலகட்டத்துலதான்.
இந்த எண்கள் பெருமைக்காக இல்ல. ஏணியை இவ்ளோ உயரத்துக்குக் கட்டுன பிறகு, அதுல ஏறுனவன் பாதியில நிக்கிறான்னா அது பெரிய விழுகை.
9 பேரு போன திட்டத்துல ஒருத்தன் மாட்டுனா அது செய்தி இல்ல. 385 பேரு போன திட்டத்துல ஒருத்தன் "ரோஹித் வெமுலா"ன்னு சொல்றான்னா, அது எச்சரிக்கை மணி.
கட்டுறது கஷ்டம். உடைக்க ஒரு கையெழுத்து தாமதம் போதும்.
இந்தத் திட்டம் ஏன் முக்கியம்னு புரிய, ஒரு நூறு வருஷம் பின்னாடி போகணும்.
1913. ஒரு 22 வயசு இளைஞன். தீண்டாமைக் கொடுமையில பள்ளிக்கூடத்துல தனியா உட்கார வெக்கப்பட்டவன். அவனுக்கு பரோடா சமஸ்தானம் ஒரு உதவித்தொகை கொடுக்குது — மாசம் £11.50, மூணு வருஷம்.
அந்தப் பணத்துல அவன் அமெரிக்கா, கொலம்பியா பல்கலைக்கழகம் போறான். 1915-ல MA. 1916-ல லண்டன் — London School of Economics, Gray's Inn.
ஜூன் 1917. பரோடா உதவித்தொகை முடியுது. படிப்பு பாதியில. அவன் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம்.
மூணு வருஷம் கழிச்சு, சொந்தப் பணத்தைச் சேர்த்துக்கிட்டு மறுபடி லண்டன் போய் முடிக்கிறான். 1921 MSc. 1923 DSc. அதே வருஷம் பாரிஸ்டர்.
அந்த இளைஞன் பேரு பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்.
ஒரு உதவித்தொகை இல்லன்னா இந்தியாவுக்கு அரசியலமைப்புச் சட்டச் சிற்பி கிடைச்சிருக்க மாட்டாரு. அந்த உதவித்தொகை பாதியில நின்னப்போ, அவரோட படிப்பும் பாதியில நின்னுச்சு.
இப்ப 2026. அவரு பேருல தமிழ்நாடு நடத்துற திட்டம் — அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம். அதோட விதிகள் எளிமையா:
யாருக்கு — ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர்.
குடும்ப வருமானம் ₹8 லட்சம் வரை — ஆண்டுக்கு ₹36 லட்சம் வரை.
₹8 முதல் ₹12 லட்சம் வரை — ஆண்டுக்கு ₹24 லட்சம் வரை.
எங்க — QS உலகத் தரவரிசையில முதல் 1000 பல்கலைக்கழகங்கள்.
என்ன — முதுநிலை, PhD.
எதுக்கு — கல்விக் கட்டணம், விசா, விமானம், தங்குமிடம், சாப்பாடு.
ஒரு விஷயம் கவனிங்க. தேர்வாகி sponsorship கடிதம் வாங்குன பிறகு இது உதவி இல்ல, உரிமை. அந்தக் கடிதத்தை நம்பித்தான் அவன் ஒரு வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்துல கையெழுத்துப் போடுறான்.
வெளிநாட்டுல ஃபீஸ் கட்டலன்னா enrolment போகும். enrolment போனா visa போகும். visa போனா ஊருக்குத் திரும்பணும். 1917-ல அம்பேத்கருக்கு நடந்தது அதுதான்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 17 செப்டம்பர் சொன்னது: அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார்.
தேதிகளை வரிசையா வெக்கிறேன்.
26 மார்ச் 2026 — ரெண்டாம் வருஷக் கல்விக் கட்டணம் ₹5.57 லட்சம்.
7 மே 2026 — ஆறு மாச வாழ்க்கைச் செலவு ₹6.65 லட்சம்.
இதுதான் கடைசியா போன பணம். அமைச்சரே சட்டசபையில சொன்னாரு: "கடந்த 07.05.2026 அன்று கடைசியாக வழங்கப்பட்ட தொகையையும் நாங்கள் சொல்லியுள்ளோம்."
10 மே 2026 — புது அரசு பதவியேற்பு.
22 மே 2026 — வன்னி அரசு அவர்கள் அமைச்சர்.
அதுக்கப்புறம் அவனுக்கு ஒரு ரூபா போனதா அரசோட எந்த அறிக்கையும் சொல்லல. நிலுவை: ரெண்டாம் வருஷ ஆராய்ச்சிப் பணம் ₹19.50 லட்சம்.
அவன் என்ன பண்ணான்?
20 ஜூலை — அமைச்சருக்கு மனு.
28 ஜூலை — மீதி செலவு விவரம் சமர்ப்பிப்பு.
11 ஆகஸ்ட் — மறுபடி அவசர மின்னஞ்சல்.
17 ஆகஸ்ட் — முதல் வீடியோ.
18 ஆகஸ்ட் — துறை அதிகாரி: ஜூலை 28-லயே விவரம் வந்துடுச்சு, "பரிசீலனையில் உள்ளது."
20 ஆகஸ்ட் — சட்டசபை. திமுக உறுப்பினர் கோவி. செழியன் கவன ஈர்ப்பு. அமைச்சர் பதில்: "10 மாதங்கள் கடந்த பின்னரும் அவர் ஆவணங்களைச் சரிவரச் சமர்ப்பிக்காமல்…"
அதே நாள், 20.08.2026 — ₹8,17,962 மதிப்புள்ள பில்கள் "ஏற்புடையதாக இல்லை"ன்னு விளக்கம் கேட்டு துறை மெயில்.
அவன் சொல்றான்: "சட்டசபையில் அந்த விஷயம் விவாதிக்கப்பட்ட பிறகு, எனக்கு அன்று இரவே ஒரு மின்னஞ்சல் அனுப்பினீர்கள்."
17 செப்டம்பர் காலை — துறை பல்கலைக்கழக registrar-க்கு மெயில்: இந்தப் பொருள்கள் அவன் ஆராய்ச்சிக்குத் தேவைதானான்னு சான்று கொடுங்க. பதில் வந்ததும் பணம்.
ஜூலை 28-ல இருந்து registrar-க்கு ஒரு மெயில் போக — ஐம்பத்தொரு நாள்.
செழியன் அவர்கள் சபையில கேட்டாரு: மாணவன் பேசுன பிறகு இந்த அரசு புது நிதி ஏதாவது ஒதுக்குச்சா? அமைச்சர் பதில்ல அப்படி ஒரு தேதி இல்ல.
அமைச்சர் அடுக்குன ₹48 லட்சமும் மே 7-க்கு முன்னாடி போனது. "நாங்கள் யாரும் கடந்த ஆண்டில்தான் அவருக்கு உதவித்தொகை கொடுக்கப்பட்டுள்ளது என்பதை மறுக்கவில்லை" — இதுவும் அவரோட வார்த்தை.
முந்தைய அரசு கொடுத்த பணத்தைக் காட்டி, இந்த அரசு நிறுத்துன பணத்தை மறைக்க முடியாது.
17 செப்டம்பர் 2026. சமூக நீதி நாள். பெரியார் பிறந்தநாள்.
மலேசியாவுல ஒரு தமிழ்ப் பையன் கேமரா முன்னாடி உட்கார்ந்து அழுறான்.
பேரு பாரதிதாசன். மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்துல (UKM) PhD. படிப்பு Tissue Engineering and Regenerative Medicine — சேதமான திசுவை மறுபடி வளர வைக்கிற அறிவியல்.
ஒரு ஆதிதிராவிடர் குடும்பத்துப் பையன் அந்த லேப் வரைக்கும் போனது எப்படி? தமிழ்நாடு அரசு அனுப்புச்சு.
9 ஜனவரி 2025. ஆதிதிராவிடர் நல இயக்குநர் sponsorship கடிதம் கொடுக்குறாரு. மூணு வருஷம். ஆண்டுக்கு ₹36 லட்சம் வரை. அரசோட 17 செப்டம்பர் அறிக்கையிலேயே இருக்கிற வரி: "ஆண்டிற்கு ரூ.36.00 இலட்சம் வரை."
முதல் வருஷம் சொன்னபடி முழு ₹36 லட்சம் போச்சு:
கல்விக் கட்டணம் ₹5,01,638
விசா, விமானம் ₹3,58,222
வாழ்க்கைச் செலவு ₹8,46,893
ஆராய்ச்சிச் செலவு ₹18,93,247
அக்டோபர் முதல் வாரம் டெல்லி AIIMS-ல அவனோட ஆய்வுக் கட்டுரைக்கு அழைப்பு வந்திருக்கு.
இப்ப அதே பையன் சொல்றது:
"நான் ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த விஷயத்தைப் பற்றிப் பேசி வருகிறேன்."
"என்னை கல்லூரியிலிருந்து நீக்கப் போகிறார்கள்."
அப்புறம் அந்த வரி:
"என்னை ரோஹித் வெமுலா ஆக்கிடாதீங்க."
ரோஹித் வெமுலா — ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தோட தலித் ஆய்வு மாணவன். ஜூலை 2015-ல அவனோட மாசம் ₹25,000 fellowship நிறுத்தப்பட்டுச்சு. ஜனவரி 2016-ல அவன் இல்ல.
பணம் நின்னதுல இருந்து ஆரம்பிச்ச கதை அது. ஒரு PhD மாணவன் தன்னை அந்தப் பேரோட ஒப்பிடுறான்னா, அவன் பயம் எவ்ளோ ஆழம்னு யோசிங்க.
இது ஒரு பையனோட கதை மட்டும் இல்ல. தமிழ்நாடு கட்டுன ஒரு ஏணி ஆடுது.
@VanniTamizhVCK அதிகாரத்திற்கு வந்ததுக்கு அப்புறம் அவனுங்க நமக்கு பண்ணத நீ பண்ணாம இரு,
பகையை வளர்க்குறதை விட கடந்து போறது தான் முக்கியம், ஒரே மண்ணுல பிறக்கிறோம் ஒரே மொழி பேசறோம் இது ஒண்ணு போதாத எல்லாரும் சேருரருதுக்கு.
@TVKVijayHQ 💔 அந்த பையனோட வாழ்க்கை கெடுத்துடாதீங்க🙏🙏
#Education
பெரியார் பிறந்தநாளான இன்று அனைத்து சமுதாய மக்களும் கல்வியில் உயர வேண்டுமென எண்ணிய பெரியாரின் கனவை நிறைவேற்ற
திராவிடமாடல் ஆட்சியில் அயலகம் சென்று கல்வி கற்க சென்ற மாணவரின் கல்வி அழிந்துள்ளது
இதெற்கெல்லாம் கண்டிப்பா காலம் காவு வாங்கும் தவெக மற்றும் அதன் ஜால்ராவான வசீகரா வன்னியை