கூட்டணி கட்சிகள் இல்லாமல், திமுக ஒன்னுமே இல்லேங்கிற மாதிரி பேசிட்டு இருக்காங்க.
தமிழ்நாடு முழுக்க எல்லா தொகுதியிலும் தேர்தலை சந்திக்க முடியாத கட்சிகள் இவை.
நிறம் மாறும் பச்சோந்திகள்.
நாளைக்கு Press meet வைங்கனா...
மொத்த Fake news யையும் பிரிண்ட் போட்டு பத்திரிக்கையாளர்கள் முன்னாடி காட்டுங்க..
நாளைக்கு Breaking news இதான் ஓடணும்..
விஜய் ரசிகர்கள் என்னும் அயோக்கிய கும்பலின் முகத்திரையை கிழித்து தொங்க விடுங்கள்..
சட்டம் & ஒழுங்கை சீர் குலைத்தது போலவே, சொந்த கட்சியினர் பொய் செய்தி பரப்புவதை தடுக்க வக்கற்ற முதலமைச்சர் விஜய் என்பதை உரக்க சொல்லுங்கள்..
@Udhaystalin
ஆட்சி கைய விட்டு போயிருச்சு.அடுத்த தேர்தலுக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு..தினம் கொலை கொள்ளை கற்பழிப்புன்னு நடந்துட்டுதான் இருக்கு.இதை திமுக்ககாரன் ரொம்ப நோண்டுனா திமுக பக்கமே திருப்பி விடுற மாபியா அவங்கட்ட இருக்கு.ஒன்னு அதுக்கு ஈக்வலா ஒரு மாபியா நம்மட்ட இருக்கனும்.இல்லேன்னா நடக்குறது நடக்கட்டும்னு நாலரை வருஷம் வேடிக்கை பாக்கணும்.இப்போதைக்கு ரெண்டாவதுதான் நம்மனால முடியும்.தேவையில்லாம ப்ரஷர ஏத்திக்காதீங்க.அவங்கள பொதுமக்களுக்கு பதில் சொல்ல விடுங்க.
அறிவார்ந்த கமல்ஹாசனை தோற்கடித்த இந்த தமிழ்நாடு அடிப்படை அறிவு கூட இல்லாத @actorvijay யை முதலமைச்சர் ஆக்கியிருக்கிறது.
இந்த ஊர் எனக்கு வேண்டாம்.
என் அடையாளம் இனிமேல் என்னை தமிழனாக காட்டாது
👋👋👋
அரசியல் பதிவே எழுதக்கூடாது என்று நினைத்திருந்தேன். ஆனா சில விசயங்களை சொல்லி முடிச்சிடறதுதானே முறை. அதான் ”முறையா” எழுதிடால்ம்ன்னு இருக்கேன். இனி 5 வருசம் கழிச்சிதான் அரசியல் பதிவோட வருவேன். (மாற்றம் என் கையில் மட்டுமே)
தவெக வின் வெற்றி மேல் எனக்கு சந்தேகமெல்லாம் இல்லை, உறுதியாகவே அது உண்மையான வெற்றி அல்ல. அது நிரூபிக்கப்படும் நாளில் #தமிழ்நாடு சுடுகாடாக மாறி இருக்கலாம். வாழ்த்துகள்.
கடந்த 10-12 நாட்களாக முதலமைச்சர் முதல் ஒவ்வொரு எம்.எல்.ஏக்களின் செயல்பாடுகளும் சங்கரின் படத்துக்கு சவால் விடும்படி வேகமாக இருக்கின்றது. அந்த வேகத்திலும் கூட கேமராவை மறக்காமல் கையாள்வதை பார்த்து புல்லரிக்கின்றது. காரில் போகிறார், டப்பாவில் சாப்புடுகிறார், வண்டி ஓட்டி காட்டுகிறார் என்ன ஒரு விந்தை.
இங்கு சங்கரின் படத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் அதே நேரத்திம் மக்கள் தங்களுக்குள் லோகேஷ் கனகராஜ் படத்தை ஓட்ட ஆரம்பித்து விட்டனர். எங்கு பார்த்தாலும் கொலை, டெண்டர் மோசடி, கொள்ளை, பாலியல் வன்கொடுமை 10 நாட்களிலேயே முந்தைய அரசுகளை ஊதித் தள்ளிவிட்டு விஸ்வரூப வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் வன்முறையில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு வளரும் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்ய வேண்டும்.
மின்சாரம் இல்லை என்ற குரல்கள் கேட்கின்றன. முதலமைச்சரின் முகமே முழுமதியாக இருக்கும் போது நமக்கெதுக்கு ட்யூப்லைட் வெளிச்சம் சொல்லுங்க.
அடுத்து மழை காலம் வரும். அப்போதான் இருக்கு முழு காமெடியே. சென்னை மக்களே. தயாரா இருங்க. எங்க கிரகம் உங்களால நாங்களும் அனுபவிச்சே ஆகனும்.
ஒரு பத்தாவது படிக்கும் மாணவன் தேர்ச்சி பெற்ற பின் அவன் கோல்மால் செய்து தேர்ச்சி பெற்றான் என்பது தெரிய வந்தால் அந்த தேர்வு ரத்தாகி மீண்டும் அவனுக்கு மீண்டும் தேர்வு வைக்கப்பட வேண்டும் என்பது நியதி. ஆனால் இங்கு இத்தனை எம்.எல்.ஏ க்கள் போலி செர்டிஃபிகேட் கொடுத்து போலி வருமான அறிக்கை கொடுத்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறார்கள் அவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் இல்லை. என்னமாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்.
போலி சான்றிதழ் சமர்ப்பித்தது, தேர்தல் ஆவணங்களில் தவறான தகவல் கொடுத்தது என்பது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு:
• தேர்தல் செல்லாததாக அறிவிப்பு,
• பதவி நீக்கம்,
• மோசடி மற்றும் forged document தொடர்பான குற்றவியல் வழக்குகள்
என நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். இதெல்லாம் நான் சொல்லல. சட்டம் சொல்லுது.
நான் தேர்தலுக்கு முந்தைய பதிவுகளிலேயே பலமுறை எழுதி இருந்தேன். ஒரு குற்றமும் இல்லாத அரசாக தவெக இருக்கும் என்று தற்போதைய முதலமைச்சர் அப்போதைய நடிகர் சொல்லிக் கொண்டிருக்கும் போது அப்படி ஒரு அரசு அமைய வாய்ப்பே இல்லை என்று உறுதியாக கூறினேன். ஆனால் தவெக ஜோம்பிகள் கடித்து முடித்தார்கள். இப்போது அவர்கள் யாரை கடிப்பார்கள். பாவமாக இருக்கிறது.
தங்களுக்குள்ளேயே இவ்வளவு குற்றங்களை வைத்துக் கொண்டு எப்படி மாற்றரசியல் செய்வார்கள். இது ஒரு ஜெராக்ஸ் அரசியல். பெயர் மட்டும் தான் மாறி இருக்கிறது.
#திமுக விற்கு ஒரு வேண்டுகோள்
தயவு செய்து தவெக-வை ஆட்சி செய்ய விடுங்கள். மக்களும் தவெகவும் மட்டும் சந்தித்துக் கொள்ளட்டும். கொஞ்சம் ஓய்வெடுத்து வேடிக்கை மட்டும் பாருங்கள் 10 நாட்களில் இத்தனை கொலை கொள்ளை நடந்திருக்கிறது இதுவல்லவா சாதனை. இதனை மக்கள் அல்லவா உணர வேண்டும். கொஞ்ச நாளில் ரீல் அந்துப் போய்விடும், மக்கள் விழித்துக் கொள்வார்கள் நமது மண்ணின் தலைவிதி அனுபவித்து திருந்தட்டும் அதுவரை அமைதி காணுங்கள்.
திமுகவை முழுமையாக அழிக்க வேண்டும் என்றால் கட்டாயம் நல்லாட்சி கொடுத்தே ஆக வேண்டும் @TVKVijayHQ ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. ஒரு பானை சோற்றுக்கு பத்து நாட்களின் சாதனையே பதம்.
இன்று அமைச்சரவையில் பங்கேற்றிருக்கும் #விசிக, #IUML க்கு வாழ்த்துகள். அவர்களை துரோகிகளைப் போல் சித்தரிப்பதை நிறுத்தவும். இப்போதுதான் காயின்களை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள். காயின்கள் வெற்றியாளனனின் கைகளில் இருந்தே புறப்பட்டிருக்கும். வியூகம் சரியானது.
இதில் என்ன ஆறுதல் தெரியுமா? ஆளூர் ஷானவாஸ் (விரைவில்), அளீம் அல் புஹாரி இரண்டு சிங்கங்கள் திமுகவில் இணைந்திருக்கின்றன. திமுகவின் கோட்டை இன்னும் பலமாகிக் கொண்டே தான் போகின்றது. ஆக திமுக ஆட்சிலயும் இருக்கும் எதிர்லயும் இருக்கும், மக்களிடமும் இருக்கும். இருப்போம். :) -Zabinath (1/2)
என் மனம் வலிக்கிறது. அரசியல் முக்கியம். ஆபத்து காலத்தில் அருகில் இருப்பது அதைவிட முக்கியம்.
அண்ணாவின் கருத்து,
நெஞ்சுக்கு நீதி புத்தகம்
இந்த இருவர் உழைப்பின் முன்னிலையில்
இன்றிலிருந்து(மே 21, 2026)என்னை திமுகவில் இணைத்துக்கொள்கிறேன்...
வாழ்க திமுக
வளர்க திமுக
1/2
திமுக தலைமையிலான கூட்டணியில் முதல்வராக தளபதி @mkstalin அவர்களை முன்னிறுத்தி வெற்றி பெற்ற VCK மற்றும் IUML ஒரு அமைச்சர் பதவிக்காக இப்படி நடப்பது பச்சை அயோக்கியத்தனம்! 🚨
நாளை முதல் @thirumaofficial அவர்கள் சொன்னதுபோலவே RSS-இன் பேரனாகவே பார்க்கப்படுவார்! 🤦🏻♂️🔥
@mkstalin@DMKITwing@sunnewstamil
#TamilNaduPolitics #DMK #VCK #IUML
ஒரே ஒரு சந்தேகம் தான் மனச உறுத்திட்டே இருக்கு திமுக தலைமையில் ஒரு கூட்டணி 2019 லேருந்து இருக்கு காங்கிரஸ் வெளியே போனது கூடவே கூட்டணியில் இருந்த ஒவ்வொரு கட்சியையும் அது போன இடத்திற்கே கூட்டிக்கொண்டு போகிறது திமுகவை சுற்றி எதோ சிலந்தி வலை மாதிரி பின்னி திமுகவை தனித்து விட்டு திமுகவை நிர்கதியாக்கும் திட்டமா அது இருக்கனும் இல்லன்னா திமுகவுக்கு இனி யாருமே கிடையாதுன்னு பாஜகவை நோக்கி வான்டடா திமுகவை அதோடு பிடித்து தள்ளுவதற்கான திட்டமா இருக்கனும். காங்கிரஸ் அந்த வேலையை பார்க்கிறது உண்மை என்றால் அதில் காங்கிரஸே சிக்கி காணாமல் போக வேண்டும் 😠😠
அடுத்த தேர்தலில் நம் கூட்டணியில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் அல்லது முழுக்க முழுக்க தனித்து நின்று நம்மை நாம் நிரூபிக்க வேண்டும் இது அதற்கு ஒரு வாய்ப்பாக காலம் கொடுத்ததாக இருக்கட்டும்
எம்ஜியார் போல ஒரு நடிகர் தமிழ் நாட்டு முதல்வர் ஆவது என்பது இனிமேல் நடக்காத காரியம் என்று தான் நான் கடந்த 20-30 வருடங்களாக நினைத்திருந்தேன்.
காரணம், எல்லோருக்கும் பரவலான கல்வி. அந்தக் கல்வியால் மக்களுக்குக் கிடைத்த எக்ஸ்போஷரால், சினிமாவில் வருவதெல்லாம் நிஜ வாழ்வில் நடக்காது என்று உணர்ந்த ஒரு கற்றறிந்த தலைமுறை தான் இங்கு இருக்கிறது என்று எண்ணியது, தவிர சினிமா என்னும் பொழுது போக்குத் தொழிலையும், அரசியல் என்ற மிக அத்தியாவசியமான செயல்முறையையும் படித்த இந்தத் தலைமுறையினர் குழப்பிக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தது.
தவிர விஜயகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களின் தோல்வி, மற்றும் திமுக கூட்டணிக்குக் கிடைத்த தொடர் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் வெற்றிகள், பாஜகவை ஒதுக்கி ஒன்றுமில்லாமல் வைத்திருந்தது, ஆகியவை தமிழ்நாடு சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தைக் கொடுத்தது.
ஆனால், விஜயின் வருகை தான் இதெல்லாம் வெறும் பூச்சு என்பதையும், அடியாழத்தில் மக்கள் 70-80 களில் இருந்த கல்வியறிவு குறைந்த மக்களைவிட சிந்தனாசக்தி அற்றவர்களாக, கல்வியின் பலன் எள் முனையளவும் சிந்தனையை மேம்படுத்தாத மக்களாகத் தான் வாழ்ந்து வருகிறார்கள் என்ற உண்மையைச் செவிட்டில் அறைந்து சொல்லி இருக்கிறது.
எம்ஜியாரைத் தேர்வு செய்ததில் கூட ஒரு நியாயம் இருக்கிறது. அவர் வெறும் நடிகராக மட்டும் இல்லை, ஒரு தத்துவத்தை, கொள்கையைத் தன் படங்களின் மூலம் பல ஆண்டுகள் பரப்பியவராக, நேரடி அரசியலில் பங்கு பெற்றவராக, அரசு இயந்திரத்தை அருகில் இருந்து பார்த்தவராக, அனுபவம் பெற்றவராக இருந்திருக்கிறார். அவருடன் அனுபவசாலிகளும் உடன் இருந்தார்கள். அவரால் ஒரு அரசைத் திறம்பட நிர்வாகம் செய்ய இயலும் என்று மக்கள் நம்பியதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஜெயலலிதாவுக்கும் கட்சியில் ஆட்சியில் அனுபவம் இருந்தது. வெறும் சினிமா நடிகை என்று மட்டும் சொல்லி விட முடியாது. கொபசெவாக நியமித்ததில் ஆரம்பித்து, அரசியலில் கொஞ்சமாவது அனுபவம் பெற்றவராக, அரசியல் அறிந்தவர்களால் அரசியல் கற்பிக்கப் பட்டவராக இருந்தார்.
ஆனால், பிரச்சாரம் செய்யக்கூடப் பொறுப்பில்லாமல் லீவு எடுத்துக் கொண்டு வீட்டில் படுத்துகொண்டிருந்த ஒருவரை, ஆறு மணிக்கு மேல் வெளியே காணவே இயலாத ஒருவரை, 20 தொகுதிக்கு மேல் மக்களைச் சென்று சந்திக்காத ஒருவரை, வேட்பாளர்களாக அதிக பட்சமாக கிரிமினல்களையும், பொய்யர்களையும், சுத்தமாக அரசு இயந்திரம் என்றால் என்ன, அரசியல் என்றால் என்ன என்றே அறியாத தற்குறிகளையும் நியமித்த ஒருவரால் அரசை நடத்த முடியும் என்று நம்பி இந்த மக்கள் வாக்களித்திருக்கிறார்களே, அதுவும் கடந்த 106 வருடங்களில் தமிழகம் காணாத மிகச் சிறந்த அரசை நடத்தியவர்களைத் தூக்கி எறிந்து வாக்களித்திருக்கிறார்களே, இந்த மக்களை என்ன சொல்வது?
சத்தியமாக இவ்வளவு முட்டாள்களாக இந்த மக்கள் இருப்பார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை! இவர்களுக்குக் கல்வி என்ன தான் செய்தது என்ற கேள்வி மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது....
- Swaminathan Poornachandran
தமிழ்நாட்டில் கடந்த 10 நாளாக நடக்கும் தற்குறி அரசியலை பார்த்தால், என்னைச் சுற்றி முழுக்க முழுக்க பைத்தியக்காரர்கள்தான் இருக்கிறார்கள் போல feel ஆகுது… இதே மாதிரி யாரெல்லாம் நினைக்கிறீர்கள்?
#DMK இன் இந்த தோல்வி பெரிதளவில் என்னை பாதித்துள்ழது ஒரு அடிமட்ட கடை நிலை தொண்டனாக.
நான் உறுப்பினரோ நிர்வாகியோ இல்லை..
சாதரண மக்களில் ஒருவன்.
இனி நான்
செல்லும் இடமெல்லாம் பார்க்கும் #DMK சாதனையை
புகைபடமாக எடுத்து பதிவிட
போகிறேன்.
Photo 1 : Date : 21-5-2026