BREAKING: US Vice President JD Vance says he expects to go to Switzerland for Iran talks 'in the next couple of days'
🔴 LIVE updates: https://t.co/z1RNvjOGgY
மகேந்திரன் கந்தையன் யாரென்று தெரிகிறதா ? :
சல்லியர்கள் படத்துல ஹீரோயின் கூடவே செழியன்னு ஒரு கேரக்டர் வரும்.
படம் பாத்துட்டு இருக்கும் போதே இவர் இவர் தானான்னு ஒரு சந்தேகம் இருந்துட்டே இருந்தது.
படம் முட��ஞ்சு கன்பார்ம் பண்ணிக்கலாம்னு பாத்தேன் இவரே தான்.
நான் மகான் அல்ல உட்பட சில படங்களில் வில்லனாவும், கேடி பில்லா கில்லாடி ரங்கா உட்பட சில படங்களில் காமெடி வேடத்திலும் நடிச்சுருக்கார். அதுவும் அந்த பட கிளைமேக்ஸ்ல 30 ஓட்டு இல்ல 39 ஓட்டு-ன்னு சொல்லுற இடம் அல்டிமேட்டா இருக்கும் 😅
சில வருடங்களா ஆளே காணாம போயிருந்தார். இப்போ இந்த சல்லியர்கள் மூலம் அழுத்தமான கதையில் வந்திருக்கார். நடிப்பிலும் அவ்ளோ இறுக்கம், இரக்கம்னு காட்டிருப்பார்.
நடிப்பே வராத சிலருக்கு பேமஸ் காரணமா வாய்ப்பு கொடுப்பதை தாண்டி இவரை போன்ற அனுபவம் வாய்ந்த ச��லருக்கு கொடுக்கலாம்.
சமீபத்தில் பல நாட்களாக அடையாளம் கிடைக்காமல் இருந்த சிலர் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை தங்கள் நடிப்பின் மூலம் யாரென்று புரிய வைக்கிறார்கள்.
உதாரணம் சிறை மூனார் ரமேஷ், அங்கம்மாள் பரணி. இதோ இப்போ சல்லியர்கள் மூலம் மகேந்திரன் கந்தையன்.
இதுல இன்னும் இவர் பெயர் பலருக்கும் தெரியாது.
நடிக்க தெரிந்த, வாய்ப்பு கிடைக்காத நல்ல நடிகர்கள் இன்னும் இருக்காங்க. ப��மஸ், விளம்பரம் அதையெல்லாம் தாண்டி கதைக்காகவும் இவர்களைப் போன்றவர்களை அடையாளம் கண்டு கொஞ்சம் வாய்ப்பு கொடுங்கள்.
சினிமாவும் வாழும், அவர்களும் வாழ்வார்கள் ❤️
#salliyargal