தேசியத் தலைவரைப் பற்றி பேசுவது மட்டும் தமிழ்த் தேசியம் அல்ல!
தேசியத் தலைவரின் வழியில், ஒழுக்கத்தோடும் அறத்தோடும், உண்மையுடனும் நேர்மையுடனும் நம் இனத்திற்காக வாழ்வதுதான் சரியான தமிழ்த் தேசியம்!
காவி நிறத்தில் வானவில்!
வாய் கிழிய இந்து மதம், கலாச்சாரம், பண்பாடு என்று பேசுவார்கள். ஆனால், இறுதியில் உலக வல்லாதிக்க சக்திகளின் சதிச் செயல்களை, வாழ்வியல் சிதைவுகளை அப்படியே நடைமுறைப்படுத்துவார்கள்.
இவங்களோட மதமும் கலாச்சாரமும் அவ்வளவுதான்.
உண்மையாக மானுட வாழ்வியலைக் காக்க வேண்டும் எனில், மானுடத்திற்கு வாழ்வியலைக் கற்றுக்கொடுத்த தமிழினத்தால் மட்டுமே அது முடியும்!
அந்த தமிழினத்தின் அரசியல்தான் தமிழ்த் தேசியம்!
ஈழத் தமிழ்ச் சொந்தம், தம்பி கொக்கி குமார் என்று அழைக்கப்பட்ட அழகேந்திரராசா சுஜித் மறைவுற்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
தம்பி தனது முகத்தை மறைத்துக்கொண்டு தமிழ்த் தேசியத்திற்காகத் தொடர்ந்து செயல்பட்ட ஒரு செயல்வீரன். சிறுவயதிலேயே அவர் நம்மை விட்டுப் பிரிவார் என்று கனவில்கூட நினைக்கவில்லை.
அவரைப் பிரிந்து வாடும் அவரது உறவுகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
வாழா 2 என்ற மலையாளப் படத்தில் வீரப்பன் அவர்களை மிகவும் இழிவாகச் சித்தரித்து காட்சிப்படுத்தியிருப்பது கண்டனத்திற்குரியது.
வீரப்பன் அவர்களின் உண்மையான போராட்ட வரலாற்றை மடைமாற்றும் போக்கும், தமிழர்களையே தொடர்ச்சியாக இழிவான மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்களில் மலையாளத் திரைப்படங்களில் அதிக அளவில் காட்டும் நடைமுறையும், எதேச்சையாக நடக்கும் நிகழ்வாகத் தெரியவில்லை.
தணிக்கை குழுக்கள் தமிழர்களை இழிவுபடுத்தும் போது மட்டும் விடுமுறைக்கு செல்வது வியப்பாகவே உள்ளது!
இது திட்டமிட்டே மலையாளிகளிடம் தமிழர்கள் மீதான வெறுப்பை விதைக்கும் வெறுப்பு அரசியலாகவே நாங்கள் பார்க்கிறோம்.
இந்தப் போக்கை மலையாளத் திரைத்துறை கைவிடவில்லை என்றால், தமிழ் திரைப்படங்களில் விரைவில் மலையாளிகளின் சம்பந்தமுறை வாழ்வியலை வரலாற்று ஆதாரங்களுடன் காட்சிப்படுத்த வேண்டிய நிலை வரும்.
தமிழர்களை இழிவுபடுத்த நீங்கள் கற்பனையை கையாள வேண்டும்; உங்களை இழிவுபடுத்த நாங்கள் வரலாற்றை எடுத்தாலே போதும்.
பொறுப்புணர்வோடு நடந்துகொள்வது மலையாளத் திரைத்துறைக்கும் நல்லது; இந்நாட்டின் இறையாண்மைக்கும் நல்லது.
May 18 - Tamil Genocide Day
தமிழக முதல்வர் விஜய் அவர்கள், தமிழக சட்டமன்றத்தில் மே 18-ஐ “தமிழ் இனப்படுகொலை நாள்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தால், நீதி கிடைக்காத உலகத் தமிழர்களுக்கு அது பெரும் நம்பிக்கையாக அமையும்.
ஈழத் தமிழருக்கு நடந்த கொடுமை மற்றும் நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்புச் செயலாளரின் இலங்கை கொழும்பு சுற்றுலா பயணம் எழுப்பும் சந்தேகங்கள்!
உண்மையை மறைக்க நடத்தப்படும் மடைமாற்ற AI நாடகங்கள். ஆதாரங்களுடன்- https://t.co/WvTSn4Xxe3
தமிழ்த் தேசியவாதி ஐயா அருகோ அவர்களின் படத்திறப்பு விழாவும் அவரின் குடும்பத்திற்கு தமிழ்த் தேசியர்கள் துணை நிற்கும் நிகழ்வும் நேற்றைய தினம் மிகவும் சிறப்பாக நடந்தது.
தமிழுக்காக நின்றவர்களுக்கு தூய தமிழர்கள் என்றும் துணை நிற்பார்கள் என்பதை உணர்த்தும் நோக்கத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுத்த அனைத்து தமிழர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
நமது ஊடகத்தில் பதியப்பட்ட கடைசி காணொளி நீக்கப்பட்டுள்ளது. சில விஷமிகளின் இழிவான செயலால் இது நடந்துள்ளது. இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால் இது எவ்வாறு நீக்கப்பட்டுள்ளது என்பதுதான். அறிஞர் அருகோ அவர்களின் குடும்ப நிதிக்காக பகிரப்பட்ட தொடர்பு எண்களை பொய்யாக Harrasment and bullying என்று புகார் கொடுத்து நீக்கி உள்ளார்கள்.
இவ்வாறு புகார் கொடுத்தவர்களை நம் முன்னோர்களின் ஆன்மா சும்மா விடாது என்ற நம்பிக்கை எனக்கு உண்டு!
மாண்பை தமிழர்களிடம் மட்டுமே எதிர்ப்பார்த்துட்டு இருக்க கூடாது! தமிழனை அடித்ததற்கு எந்த நடவடிக்கையாவது கன்னடர்கள் மீது எடுக்கபட்டுள்ளதா?
கன்னட கொடிய ஏன் தமிழ் நாட்டில் பறக்க விட்டு வண்டி ஓட்டனும் இதே தமிழர்களின் கொடியை கர்நாடகத்தில் நாங்கள் பறக்கவிடலாமா?
👇
https://t.co/Ny7ZkczW7W
நமது சல்லியர்கள் படத்தை பார்க்கும் ஆர்வத்தால் Ottplus என்கிற தளமே ஸ்தம்பித்துள்ளது. உங்கள் பார்வைக்கு கிடைக்கவில்லையெனில் காத்திருக்கவும். இன்னும் சிறிது நேரத்தில் அதுவும் சரிசெய்யப்பட்டுவிடும். இதுவும் நம் இனத்திற்கான ஒரு முன்னெடுப்புத்தான்..
இத்திரைப்படத்தை மக்களுக்கு கொண்டு சேர்த்த அனைத்து பெருந்தகையோர்களுக்கும், நல்லுள்ளங்களுக்கும் பேரன்பும்.. பெரு நன்றியும்! #Salliyargalblockbuster
ஒண்ட வந்த பிடாரி
ஊர் பிடாரியை விரட்டிச்சாம்.
அப்படித்தான் இருக்கு,
மிகச் சிறப்பு வாய்ந்த
'சல்லியர்கள்' திரைப்படத்தை புறக்கணித்த வடக்கன் PVR திரையரங்கு நிறுவனத்தின் கதை...
தயாரிப்பாளர் மற்றும்
இயக்குநருமான சுரேஷ் காமாட்சி அவர்களின் கோபாவேச பேட்டி,
கண்டுக் கொள்ளாமல் இருக்கும் ஆளும் வர்க்கம், விநியோகஸ்தர்களுக்கு சாட்டையடி...
PVR திரையரங்கு நிறுவனத்தை புறக்கணிப்போம்.
இயக்குனர் கிட்டுவின் இயக்கத்தில் திரு சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரித்த சல்லியர்கள் திரைப்படம் இன்று வெளியான நிலையில் அப்படத்திற்கான முறையான திரையரங்குகளை திட்டமிட்டு கொடுக்காமல் அரசியல் மற்றும் பொருளாதார பலம் கொண்டு இருட்டடிப்பு செய்வதென்பது மிகவும் மலிவான அரசியல் அணுகுமுறை!
தமிழர் நலன் சார்ந்த பல பயனுள்ள திரைப்படங்களை இவ்வாறு அதிகார மையத்தில் உள்ள காழ்ப்புணர்ச்சியாளர்கள் தொடர்ந்து அறமற்ற முறையில் எதிர்த்து வருகிறார்கள்.
சல்லியர்கள் திரைப்படத்தை தங்களின் திரையரங்குகளில் புறக்கணிக்கும் #PVR நிறுவனத்தையும் தமிழர்கள் கவனித்துக் கொண்டுதான் வருகிறோம்.
இந்தச் சிக்கலில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு சல்லியர்கள் படத்திற்கு முறையான திரையரங்குகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்!
தமிழர்களின் இன வரலாற்றை அழித்து புதியதொரு திராவிட வரலாற்றை எழுதும் இந்த திராவிடர்கள் இத்தகைய நிகழ்வுகளால் அம்பலப்படுகிறார்கள்!
பிராமனை எதிர்ப்பு என்று பூச்சாண்டிக் காட்டி தமிழின வரலாற்று அழிப்பையே இவர்கள் தொடர்ந்து செய்கிறார்கள் என்று நாம் இவர்கள் மீது வைத்தக் குற்றச்சாட்டு எவ்வளவு உண்மையானது என்பதை இந்த நிகழ்வின் மூலம் தமிழர்கள் உணர்வார்கள்! இந்த வடுகக் கூட்டம் தகடூர் அதியமானுக்கு எதிராக நிற்பதன் அவசியம் என்ன? தேவை என்ன?
தகடூர் அதியமான் பிராமணரா? இல்லை பிராமண ஆதிக்கத்தை தூக்குப்பிடித்த மன்னனா?
இரண்டுமே இல்லை!
அப்படி இருந்தும் அதியமான் என்ற தமிழ் மன்னரின் அடையாளம் இந்த வடுக கூட்டத்திற்கு எரிச்சல் ஊட்டுகிறது என்றால் புரிந்து கொள்ளுங்கள்..
#TamilVsDravidam
#AdhiyamanTamilKing