#DMKManifesto2026: சட்டமன்றத் தேர்தலின் சூப்பர்ஸ்டார் களமிறங்கி விட்டது!
🌄 மகளிர், மாணவர், இளைஞர், விவசாயிகள், மீனவர், நெசவாளர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளையும் கொண்ட All-rounder நமது தேர்தல் அறிக்கைதான்!
🌄 இதனை இல்லந்தோறும் கொண்டு சேர்ப்போம்!
🌄 மே-4 சரித்திர வெற்றியைத் தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் காணிக்கை ஆக்குவோம்!
#வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK
💠 காலை உணவுத் திட்டம்
💠 புதுமைப் பெண் திட்டம்
💠 தமிழ்ப் புதல்வன் திட்டம்
💠 நான் முதல்வன் திட்டம்
💠 நமக்கு நாமே
💠 மக்களைத் தேடி மருத்துவம்
💠 இல்லம் தேடிக் கல்வி
💠 மகளிர் விடியல் பயணம்
💠 கலைஞர் கைவினைத்திட்டம்
💠 கலைஞர் கனவு இல்லம்
💠 Startup TN
💠 தாயுமானவர்
💠 தோழி மகளிர் விடுதி
💠 மீண்டும் மஞ்சப்பை
💠 முதல்வரின் முகவரி
💠 விண்வெளித் தொழில் கொள்கை 2025
💠 ‘இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48’
💠 கிராமந்தோறும் நூலகம்
💠 மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் நியமன பதவி.
💠 முதல்வர் படைப்பகம்
ஸ்டாலின் தொடரடும்
தமிழ்நாடு வளரட்டும் 🌄
#VoteForDMK
Tamil Nadu counts the betrayals of NDA.
தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே...
தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்?
#Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?
பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?
தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?
"#MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும்" என வாக்குறுதி எப்போது வரும்?
பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்?
இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்?
ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்?
கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்?
ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்?
தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்!
#NDABetraysTN
நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாக முகவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் - கழகத் துணைப் பொதுச் செயலாளர் திருமதி. கனிமொழி கருணாநிதி அவர்களுடன் இணைந்து இன்று கலந்து கொண்டேன்.
வேறுபாடுகளை களைந்து உடன்பிறப்புகளாக ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்றுவது குறித்தும் - எதிரிகளாலும், துரோகிகளாலும் தமிழ்நாட்டை சூழ இருக்கும் ஆபத்துகளை மக்களிடம் கொண்டு செல்வது குறித்தும் பாக முகவர்களுக்கு இக்கூட்டத்தில் ஆலோசனை வழங்கினோம்.
மேலும், தமிழ்நாட்டின் உரிமைகளை காப்பதற்காக இந்த தேர்தல் வெற்றி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து பணியாற்றிடுமாறும் அறிவுறுத்தினோம்.
இந்த நிகழ்வில், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் - சட்டமன்ற உறுப்பினர் திரு. அப்துல் வஹாப், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் திரு. டி.பி.எம் மைதீன் கான் ஆகியோருடன் தொகுதி பொறுப்பாளர்கள் - மாநில, மாவட்ட நிர்வாகிகள் - மாநகர, நகர, பேரூர் கழக செயலாளர்கள் - ஒன்றிய செயலாளர்கள் - பகுதி செயலாளர்கள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வெல்வோம் இருநூறு..! படைப்போம் வரலாறு..!
#DMK #DravidianModel #MKStalin #KNNEHRU #KanimozhiMP #பாக_முகவர்கள் #DMKCadres #DMKMeeting #ஓரணியில்_தமிழ்நாடு #DMK4TN #DMK2026 #MinisterKNNehruMeeting #ThirunelveliCentralDMK #PalayamKottai #BLA2 #BLA2Meeting
We thank and welcome today’s historic judgment of the Hon’ble Supreme Court, reaffirming the legislative rights of State Legislatures and putting an end to the trend of Union government-nominated Governors stalling progressive legislative reforms in Opposition-ruled states.
This is another crucial step in restoring balance in Union–State relations and a landmark victory in Tamil Nadu’s continuous struggle to usher in a truly federal India.
My congratulations to the people of Tamil Nadu and our legal team!
#MukulRohatgi @DrAMSinghvi #RakeshDwivedi @PWilsonDMK
அன்பு - ஈகை குணம் - சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரமலான் திருநாளை கொண்டாடும் நம் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்.
நபிகள் நாயகம் போதித்த அறநெறியை பின்பற்றி; நோன்பு கடமைகளை நிறைவேற்றி கொண்டாடும் இந்த ரமலான் திருநாளில் ஒவ்வொருவரின் உள்ளத்திலும், இல்லத்திலும் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கட்டும்.!
உலகில் மனித நேயம் செழிக்கவும், மத நல்லிணக்கம் தழைக்கவும் இந்த இனிய நாள் வழி வகுக்கட்டும்!
#DMK #DravidianModel #MKStalin #KNNEHRU #EidMubarak #Ramadan2025 #HappyRamadan #Ramadan #DMK4TN
எனது 72-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நேரிலும், கடிதம் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைத்தளங்களிலும் தங்களது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை, ஊக்கமளிக்கும் பாராட்டுகளை, கனிவுமிகுந்த சொற்களைத் தெரிவித்த அகில இந்திய அரசியல் இயக்கங்களின் தலைவர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், கலையுலகத்தைச் சேர்ந்தவர்கள், ஆன்மீகப் பெரியோர்கள், தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள், தமிழ்நாட்டு மக்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
இனத்தையும் மொழியையும் காக்க, தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்த உங்கள் அனைவரின் வாழ்த்தோடும் ஆதரவோடும் தொடர்ந்து உழைப்பேன்! தமிழ்நாடு வெல்லும்!
#FairDelimitationForTN
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சிராப்பள்ளிக்கு வருகை தந்த மக்களாட்சி நாயகர் - நம் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை விமான நிலையத்தில் இன்று வரவேற்றேன்.
#DMK#Dravidianmodel#CMMKStalin#CMatTrichy#MinisterKNNehru #MinisterWelcomesCM #Trichy #TrichyAirport #DMK4TN #CMNagappattinamVisit
நம் சந்ததி தலை நிமிர
சிந்திக்கும் அப்பா,
தமிழர்கள்
வாழ்வு சிறக்க
தசாவதாரம் எடுக்கும்
தங்கமகன்,
மாண்புமிகு தலைவர் அவர்களின் பிறந்தநாள் அன்று திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 12 குழந்தைகளுக்கு நெல்லை மத்திய மாவட்ட கழகம் சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இனிமையான தருணம்
சிறப்புமிகு இந்நிகழ்வில், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் திரு. கோ. ராமகிருஷ்ணன் துணை மேயர் திரு. K.R. ராஜு, கழக வழக்கறிஞர் திரு.A.L.B. தினேஷ், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் திருமதி. டாக்டர் ரேவதி பாலன், ARMO. நரம்பியல் நிபுணர் டாக்டர்.K.S.ரவி, மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிகள்,சார்பு அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டு, உரிமைக்காக போராடும் தமிழகம் என்றும் வெல்லும் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டு, நிகழ்வை சிறப்பித்தனர்.
விவசாய அணி திரு. இ. நடராஜன் நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.@mkstalin@Udhaystalin@KN_NEHRU@arivalayam@DMK4TN@dmk_youthwing@DMKITwing@DMKTirunelveli @DmkPalayamkottai
நெல்லை மத்திய மாவட்ட கழகம் சார்பில்,
மாண்புமிகு தமிழக முதல்வர், மானமிகு கழக தலைவர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,
தச்சநல்லூர் சிவன் கோவில் வளாகத்தில் 02.03.2025 ஞாயிற்றுக்கிழமை பகல், அறுசுவை உணவு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு துவக்கி வைத்த இனிமையான தருணம்.
சிறப்புமிகு இந்நிகழ்வில் திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் திரு. கே ஆர் ராஜு, மாநகர துணைச் செயலாளர்
திரு மூளிகுளம் பிரபு,
பாளையங்கோட்டை பகுதி கழகச் செயலாளர் திரு. அண்டன் செல்லத்துரை மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்கள்.
உரிமைக்காக போராடும் தமிழகம் என்றும் வெல்லும் என்று உறுதிமொழி ஏற்று சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடு
திரு. டாக்டர் சங்கர் அவர்கள்
முன்னாள் தச்சை பகுதி செயலாளர், மாமன்ற உறுப்பினர்.🖤❤️
@mkstalin@Udhaystalin@KN_NEHRU@arivalayam@DMK4TN@dmk_youthwing@DMKITwing@DMKTirunelveli @DmkPalayamkottai
நம் நெஞ்சம் நிறைந்த தலைவர், தன்னிகரில்லா முதல்வர், மாண்புமிகு தளபதி அவர்களின் ஆணையின்படி,
இளைஞர்களின் இதய நாயகன், மாண்புமிகு துணை முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப,
நெல்லை மத்திய மாவட்டத்தின் செயல்வீரர்கள் கூட்டம்,
மத்திய மாவட்ட அவைத் தலைவர் திரு. V.K. முருகன் அவர்களின் தலைமையில் 24.02.2025 திங்கள் கிழமை காலை 11.00 மணிக்கு, பாளையங்கோட்டை ரஹ்மத் நகர், இதயா மஹால் திருமண மண்டபத்தில், சிறப்பாக நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், கழக முதன்மைச் செயலாளர் மாண்புமிகு அண்ணன் K.N. நேரு அவர்கள் கலந்துகொண்டு சீரிய ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
@mkstalin@Udhaystalin@KN_NEHRU@arivalayam@DMK4TN@dmk_youthwing@DMKITwing@DMKTirunelveli @DmkPalayamkottai
ஒரு இலட்சம் பேருக்கு மேல் கலந்துகொண்ட தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழக மாநாடு!
👨👩👧👦பெற்றோர்கள்தான்- நமது முதல் ஆசிரியர்கள்👩🏫!
👨🏫ஆசிரியர்கள்தான்- நமது இரண்டாவது பெற்றோர்👨👩👧👦!
@Anbil_Mahesh#எங்கள்கல்விஎங்கள்உரிமை
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் பல்வேறு வசதிகளுடன் தயாராகி வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை இன்று நேரில் பார்வையிட்டேன்.
அப்போது பேருந்து நிலையத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்ததுடன், விரைவில் திறப்பு விழா காணும் வகையில் பணிகளை துரிதபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன்.
விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ள இப்பேருந்து நிலையம் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு மேலும் ஒரு சான்றாக இருக்கும் என்பது உறுதி.
#DMK #Dravidianmodel #MKStalin #KNNehru #Trichy #Panjappur #PanjappurBusStand #TNTransport #MinisterKNNehruInspection