தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏
@CMOTamilnadu@imrajmohan
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ( ஐயப்ப நகர்) பகுதியில் SC ST ஆதி திராவிட நல மாணவர்கள் சமூகநீதி விடுதியில் இந்த 2026-2027 கல்வியாண்டில் பள்ளி மாணவர்கள் அனுமதி மறுப்பு.!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஐயப்ப நகர் பகுதியில் எஸ்சி எஸ்டி சமூக நீதி மாணவர்கள் விடுதி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது அங்கு ஏழை எளிய பட்டியல் சமூக பள்ளி மாணவர்கள் பயன்பெற்று வந்தார்கள்
தற்போது கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தும் ஆதி திராவிட சமூக நீதி மாணவர்கள் விடுதியானது பாலக்கரை அருகே அசூர் மெயின் ரோட்டில் செயல்பட்டுக் கொண்டிருந்தது அங்கே பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் தற்போது அங்கு பயன்பெற்று வந்த கல்லூரி மாணவர்கள் தற்போது கும்பகோணம் பகுதி ஐயப்ப நகர் ஆதிதிராவிட மாணவர்கள் சமூக நீதி விடுதியில் அனுமதிக்கப்பட்டு பயன் பெற்று வருகின்றனர்
இதனால் இந்த நடப்பு 2026-2027 கல்வியாண்டில் இருந்து கும்பகோணம் ஐயப்பன் நகர் பகுதியில் உள்ள சமூக நீதி விடுதியில் ஏற்கனவே பயன் பெற்று வந்த பள்ளி மாணவர்கள் மற்றும் புதிதாக பயன்பெற இருந்த பள்ளி மாணவர்கள் பயன்பெற முடியாமல் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது.
அந்த கும்பகோணம் ஐயப்ப நகர் சமூக நீதி விடுதியில் கல்லூரி மாணவர்கள் மட்டுமே தற்போது பயன்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த கல்வியாண்டில் 2026-2027 ஆதிதிராவிட பள்ளி மாணவர்கள் பயன்பெறுவதற்காக அனுமதி பெறுவதற்கு விண்ணப்பமும் பெறுவதில்லை அதற்கான கும்பகோணம் பகுதி இணையதளமும் இயங்குவதில்லை என்று மாணவர்கள் கூறுகிறார்கள்.
கீழ் இருக்கும் இரண்டு மாணவர்களும் சிறிய மலர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஆதிதிராவிட பட்டியல் சமூக மாணவர்கள் இவர்கள் இந்த நடப்பு கல்வியாண்டில் முதல் நாள் மட்டும் அனுமதிக்கப்பட்டு அன்றே அனுமதி மறுக்கப்பட்டு அனுப்பப்பட்டிருக்கின்றனர்.
இதில் ஒரு மாணவர் தாய் தந்தை ஆதரவற்ற ஒரு மாணவர் மற்றும் ஏற்கனவே பயன் பெற்று வந்த மாணவர்களும் தற்போது பயனடைய இருந்த மாணவர்களும் பயின்று பயன்பெற முடியாமல் மிகவும் கஷ்டமான நெருக்கடியான சூழ்நிலையை அனுபவித்து படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்...
ஆகவே ஆதிதிராவிட நல சமூகநீதி விடுதி இல்லாமல் தவித்து வரும் பள்ளி மாணவர்களுக்கு பயன்பெறும் அளவில் ஏற்கனவே இருந்த விடுதியில் அனுமதிக்குமாறு அல்லது புதிதாக ஒரு ஆதிதிராவிடர் நல சமூகநீதி விடுதி ஏற்படுத்தித் தருமாறு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு Chief Minister of Tamil Nadu அவர்களிடமும்,
மாண்புமிகு சமூக நீதி துறை அமைச்சர் வன்னி அரசு Vanni Arasu சார் அவர்களிடமும் இந்த முகநூல் வழியே கோரிக்கை வைத்து மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
கும்பகோணம் கதிர்
மாநில துணைச் செயலாளர்
தொண்டரணி பாதுகாப்பு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் தம்பி திரு. லயோலா மணி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கல்வித் துறையில் புதிய, நல்ல மாற்றங்களை கொண்டு வருவார் என்று தம்பி மீது நம்பிக்கை உள்ளது.
@LoyolaMani
பழனி கோவில்நிலம் விஷயத்தில் இரண்டு துறைகளையும் இணைக்கும் ஒரே புள்ளி குமரகுருபரன் IAS.இரண்டு துறைக்கும் ஒரே செயலாளர்.
ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த திட்டமிட்ட முயற்சி போல் தெரிகிறது.
@RameshOffcl@logintvk இணைந்து நேரடியாக விசாரணை நடத்த வேண்டும்.
@CMOTamilnadu கவனத்திற்கு.