YellowStone வெப்சீரிஸ் என்னை கொண்டுபோய் நிறுத்திய படம்: Killers of the flower moon (2023). க்ரைம் திரில்லர் முகமூடி அணிந்தபடி, அமெரிக்க ஒசேஜ் பழங்குடிகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வரலாற்று அநீதியை கேள்வி கேட்டபடி, மனித மனச்சாட்சியின் பாழ்பட்ட இருள் பக்கங்களையே மீள மீள வெளிச்சம் பாய்ச்சி படரவிடும் உன்னத சினிமா. ஒட்டுமொத்த மூன்றரை மணிநேரமும் (என்) பிரக்ஞையை மாயக்கயிற்றால் கட்டிப்போட்டுக்கொண்ட ஆத்மார்த்தமான அனுபவம் இது.
கலைஞன் இழுத்த இழுப்புக்குத்தான் ஒட்டுமொத்த பிரபஞ்சமே மண்டியிடும். குற்றவுணர்ச்சி சிறிதுமற்ற வெள்ளை இன ஆதிக்கத்தின் பேராசையைக் காட்ட - கவனத்துடன் கோர்க்கப்பட்ட மெதுவான ஷாட்டுகளிலிருந்து, நாடித்துடிப்பை ஒத்த பின்னணி இசை தன்னையறியாமல் ஓலப்பேரொலி ஆவது வரை, பெருவலியையும் பதைபதைப்பையும் ஊற்றி ஒவ்வொரு ஃப்ரேமையும் ஆழ உழுது நம்மையே ஆடிப்பாவைகளாக்கிவிட்டார் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்செஸி.
பணத்துக்காக தனக்கு விஷ ஊசி போட்ட கணவனை உச்சக்காட்சியில் வெறுமனே ஊடுருவி துளைக்கும் பார்வையாலேயே பல நூறு போதனைகள் சொல்லிச் செல்லும் கதாநாயகி மோலி என்னும் பெண் ஜீசஸின் உறைந்த பார்வையை இனி என்னால் ரொம்ப காலத்துக்கு மறக்கமுடியாது. அந்தக் கண்களின் தகிப்புக்கு சொந்தக்காரரான lily Gladstone என்பவருக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை என்பது கலைக்கே நிகழ்ந்த அவமானமன்றி வேறில்லை!
2 1/2 வருடத்தில் CM சார், CM Uncle என ஹஸ்கி வாய்சில் புகழேந்தி ஐயாவை சிறுமைப்படுத்துவதாக நினைத்து A4 பேப்பரை வாசித்ததுக்கு,
வட்டியும் முதலும் திருப்பிக் திருப்பி கொடுத்துக்கிட்டு இருக்கார் சின்னவர்
காலம் தான் எத்தனை கொடியது..!
யாழ்ப்பாண நகர வானத்தை நோக்கி கரும்புகை மண்டலம் ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது. இரண்டு மாடிக் கட்டிடத்தின் மேலிருந்து அதைப் பார்த்த ஒரு கிறிஸ்தவ அருட்தந்தை, ஏதோ விபரீதம் என்பதை உணர்ந்து பதற்றத்துடன் தொலைபேசியை சுழற்றுகிறார்.
மறுமுனையில் அழைப்பை ஏற்றவர், மற்றுமொரு அருட்தந்தையார்.
"வானத்தில் ஏதோ பெரிய புகைமண்டலம் எழுகிறது... ஏதோ எரிவது போல் தெரிகிறதே, அங்கே என்ன நடக்கிறது?" என்று பதற்றத்துடன் கேட்கிறார் அந்த அருட்தந்தை.
மறுமுனையிலிருந்து வந்த அந்தப் பதில், ஒரு பேரடியாக விழுந்தது:
"ஏன் பாதர் உங்களுக்குத் தெரியாதா? நம் யாழ்ப்பாணப் பொது நூலகத்திற்குத் தீ வைத்துவிட்டார்கள்!"
"நூலகத்திற்கு தீ வைத்துவிட்டார்கள்" என்ற அந்த ஒரு செய்தி, அருட்தந்தை தாவிது அடிகளாரின் இதயத்தைத் துளைத்தது. அதிர்ச்சியிலும் வேதனையிலும் அவரது இதயம் அந்த நொடியே துடிப்பதை நிறுத்திக்கொண்டது. அப்படியே மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்தது.
யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிந்து சாம்பலானது என்ற செய்தியைக் கேட்ட உடனே உயிரையே விட்ட ஒரே மனிதர் அவர்தான்!
தன் தமிழ் சமூகம் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், உலகமே வியக்கும் சிறந்த கல்விமான்களாக உருவெடுக்க வேண்டும் என்ற உன்னத நோக்கம் அவரிடம் இருந்தது.
இதற்காகவே, 1930-ஆம் ஆண்டுக் காலப்பகுதியிலிருந்தே, உலகெங்கிலும் இருந்து அரிய பல புத்தகங்களைத் தேடித் தேடிச் சேகரித்தார்.
தன் இனத்தின் அறிவுப் பசியைத் தீர்த்து, அவர்களை உலகப் பேரறிஞர்களாக மாற்ற வேண்டும் என்று அவர் ஆசையோடு சேர்த்த அரிய புத்தகங்களும், ஓலைச்சுவடிகளும் தீக்கிரையாவதை அவரது ஆன்மாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
தமிழர்கள் உலக அரங்கில் தலை சிறந்த கல்விமான்களாக உயர வேண்டும் என்ற தன் வாழ்நாள் கனவு தீப்பற்றி எரிவதைக் கண்ட கணத்தில், அந்த "அறிவின் தந்தை" அருட்தந்தை டேவிட் அவர்களின் உயிரும் அங்கே பறிபோனது.
வரலாற்றின் இந்தப் பக்கங்களையும், நம் அறிவு வளர்ச்சிக்காக அவர் சிந்திய வியர்வையையும் நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது!
சீசன் முழுக்க எந்த மேட்ச் மொக்க பண்ணுவான் திட்டலாம்னு வெயிட் பண்ணிட்டு இருந்த ஹேட்டர்களுக்கு தொண்டை வரைக்கும் எறக்கிட்டான் ஆல்மோஸ்ட் எல்லா மேட்சும். SRபத்தி பேசிட்டு இருந்தானுக அதுக்கு 200SRல ஒரு Fifty in Final. அந்த ரெண்டு டக் இல்லனா ஆரஞ்ச் கேப்ம் வாங்கியிருப்பான் @imVkohli 🐐