ஓ டியர் தமிழக அரசியல்வாதிகளே! இந்த சமுதாயத்தில் தான் அரசியல் செய்து வாக்கு பெற வேண்டும்… beware and paradigm shift in attitude not to lose
https://t.co/bel64RHriw
@RaArjunamurthy 2024 தேர்தலில் அண்ணாமலை தலைமை பொறுப்பு வகித்த போது அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை தனியாக பிரித்து பாஜக வளர்ச்சி தடைசெய்யப்பட்டது
என்பதே உண்மை அந்த நேரத்தில் உங்களைப் போன்ற முக்கிய தலைவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டனர்
உங்கள் கருத்து முற்றிலும் சரியானது ஜி
நாள்: 15-04-2026
இடம்: திருப்பூர்
திருப்பூர் தெற்கு சட்டமன்றத்திற்குட்பட்ட செரங்காடு மண்டலில், மண்டல் தலைவர் திரு. மந்திராச்சல மூர்த்தி அவர்களின் தலைமையில் 19/30 சக்தி கேந்திர தலைவர்களை சந்தித்தேன்.
அவர்கள் தங்களது பூத் கிளைத் தலைவர்களுடன் இணைந்து, தாமரைச் சின்ன வேட்பாளர் திரு. தங்கராஜ் அவர்களை வெற்றி பெறச் செய்ய பல்வேறு திட்டங்களுடன் செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் ஆயத்த பணிகள் நம்பிக்கையை அதிகரிக்கின்றன.
இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு முன்னாள் மாவட்ட தலைவர் திரு. செந்தில்நாதன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றியும் வாழ்த்துகளும்!
@blsanthosh@NainarBJP@BJP4TamilNadu
நாள்: 16-04-2026
இடம்: அமிர்தபுரி, கேரளா
அமிர்தபுரியில் @Amritanandamayi அன்பு அம்மாவின் தரிசனம், தமிழக பாஜக பார்வையாளர் திரு @MenonArvindBJP அவர்களுடன் இணைந்து மேற்கொண்ட ஒரு ஆன்மீக தருணமாக இருந்தது.
ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்காகவும், பாராளுமன்றத்தில் நாரி சக்தியின் உயர்வுக்கும் வெற்றிக்கும் அம்மாவின் ஆசீர்வாதம் பெற்றோம்.
@PiyushGoyal@blsanthosh@NainarBJP@BJP4TamilNadu
நாள்: 16-04-2026
இடம்: அமிர்தபுரி, கேரளா
நாரி சக்தியின் வாழ்வாதாரம், பாதுகாப்பு மற்றும் அரசியல் பங்கெடுப்பை வலுப்படுத்த தொடர்ந்து செயல்பட்டு வரும் பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களது முன்னெடுப்பினைப் போல பல காலமாக தனி ஒரு பெண் சக்தியாக - அதிதீவிர சமுதாய பங்காற்றி வரும் ஆன்மீகத் தவத்திரு. @Amritanandamayi அன்பு அம்மாவை அமிர்தபுரியில் சந்தித்து ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் கலந்துரையாடிய தருணம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, ஆனந்தம் மற்றும் தெய்வ அனுகூலமாக இருந்தது.
அம்மாவின் திருவடிகளில் பணிந்து வணங்குகிறேன்🙏
@AmitShah@nsitharaman@blsanthosh@PiyushGoyal@blsanthosh@NainarBJP@BJP4TamilNadu
நாள்: 11-04-2026
இடம்: திருப்பூர்
நம் அன்புத் தலைவர் திரு. @rajinikanth அவர்களின் நீண்டகால அர்ப்பணிப்பு கொண்ட ரசிகர்கள் திரு. டி.ஆர். ஸ்ரீகாந்த், திரு. யாஷ் கணேஷ், திரு. சதீஷ் மற்றும் திரு. பி. மேகநாதன் அவர்களை சந்திக்கும் அரிய வாய்ப்பு இன்று எனக்குக் கிடைத்தது. அந்த சந்திப்பு என் மனதில் ஒரு இனிய நினைவாக பதிந்துவிட்டது.
பல ஆண்டுகள் கடந்தும், காலம் எவ்வளவு மாறினாலும், அவர்களது தலைவரின் மீது கொண்டுள்ள அன்பும் விசுவாசமும் சிறிதும் குறையாமல், இன்னும் அதே உற்சாகத்துடன் இருப்பதை காண மிகுந்த மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன்!
அவர்களது ஒரே ஆசை — தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து தலைவருடன் ஒரு நினைவுப் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே. இளமையில் தொடங்கிய அந்த ரசிகப் பயணம், இன்று மனைவி, குழந்தைகள், மருமகன், மருமகள், பேரக்குழந்தைகள் என குடும்பம் விரிந்து வளர்ந்தாலும், “எங்கள் குடும்பத்தில் தலைவரும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்” என்ற அந்த மனமார்ந்த விருப்பம் என்னை மிகவும் நெகிழச்செய்தது.
“அந்த நாள் கண்டிப்பாக வரும்… தலைவர் எங்களுக்கு இந்த ஆசையை நிறைவேற்றுவார்” என்ற நம்பிக்கையுடன் அவர்கள் தினமும் இறைவனை வேண்டிக்கொண்டிருப்பதை கேட்டு மனம் உருகியது.
அவர்களது அந்த நிரந்தரமான அன்பையும் உண்மையான பக்தியையும் கண்டு நெகிழ்ச்சியுடன் அவர்களிடம் இருந்து விடைபெற்றேன்.
இறைவன் அவர்களது இதயபூர்வமான இந்த வேண்டுதலை விரைவில் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என நானும் மனமார பிரார்த்திக்கிறேன் 🙏
ஐந்திணை ஒழுக்கம்
தமிழர் வழி தமிழ்நாடு – மக்கள், நிலம், பண்பாடு, வளம்
தமிழர் நாகரிகம் நிலத்தோடு பேசும் நாகரிகம்.
ஐந்திணை என்பது
⭐️ நிலம்
⭐️ மனிதன்
⭐️ ஒழுக்கம்
⭐️ காலம்
⭐️ வாழ்வாதாரம்
எல்லாவற்றையும் ஒரே கோட்டில் இணைக்கும் உலகின் முதல் முழுமையான மாதிரி
இந்த தமிழ் புத்தாண்டு 2026
குறிஞ்சி – முல்லை – மருதம் – நெய்தல் – பாலை என்ற ஐந்திணைகளை 21-ஆம் நூற்றாண்டு வளர்ச்சி கொள்கையாக மாற்றும் ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.
இனிய தமிழ் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்💐
- இரா. அர்ஜுனமூர்த்தி
#TamilNewYear #Puthandu
#தமிழ்புத்தாண்டு
🌿 Happy Ugadi 🌿
May this auspicious new year bring
✨ New hopes
✨ New beginnings
✨ Prosperity and success
May your life be filled with happiness, good health, and endless opportunities.
Let this Ugadi mark the start of a year full of growth, positivity, and achievements.
Warm Wishes,
Ra. Arjunamurthy
#HappyUgadi
🔥 2026 தேர்தல்: மக்கள் யார் பக்கம்?
மக்கள் யார் பக்கம்…
✅ ஊழல் அற்ற ஆட்சியின் பக்கம்
✅ வளர்ச்சி தரும் நிர்வாகத்தின் பக்கம்
✅ ஏழையின் சிறப்பில் இறைவனை காணும் ஆட்சியாளர்களின் பக்கம்
✅ நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து கும்பல்களை ஒழிக்கும் பக்கம்
✅ விவசாயியின் வளம் காக்கும் பக்கம்
✅ இளைஞருக்கு வேலை வாய்ப்பு உறுதி தரும் பக்கம்
✅ மகளிர் சுயசார்பு & சுயவேலைவாய்ப்பை வலுப்படுத்தும் பக்கம்
✅ ஆன்மிக தளங்களை பாதுகாக்கும் பக்கம்
✅ கள்ளச்சாராயம் & போதைப்பொருளை ஒழிக்கும் பக்கம்
✅ பெண்கள் பாதுகாப்பாக, சுதந்திரமாக நடமாடும் தமிழ்நாட்டின் பக்கம்
இதையும் தாண்டி, நற்பண்பு, நல்வழி, நல்லாட்சி — இவற்றின் முன் உதாரணமாக திகழும் @narendramodi அவர்களின் வழிகாட்டுதலின் பக்கம் 🇮🇳
தமிழகத்தில் வளர்ச்சிக்கான டபுள் இன்ஜின் சர்க்கார் நோக்கில், @EPSTamilNadu அவர்களின் பக்கம்!
2026 —
மக்கள் தீர்ப்பு தெளிவு:
💥 நல்லாட்சி
💥 வளர்ச்சி
💥 பாதுகாப்பு
#2026Election #DoubleEngineSarkar #TamilNadu #ModiForDevelopment #GoodGovernance 🇮🇳@PiyushGoyal@blsanthosh@NainarBJP@BJP4TamilNadu
2004 – மலரும் நினைவுகள் ✨
“சஷ்டி” என்ற அகர்பத்தியை உருவாக்கி, அதனுடன் கந்த சஷ்டி கவசம் பாடலை திருமதி #BombayJayashri அவர்களும் திரு #Karthik அவர்களும் பாட, இசை மேதை மறைந்த #LVaidyanathan அவர்கள் இசையமைத்து வெளியிட்டது என் வாழ்க்கையின் ஆன்மிகப் பெருமைமிகு தருணம்.
அந்த அகர்பத்தி, பழனி மலையில் உள்ள அருள்மிகு முருகப்பெருமானின் கற்பக கிரக வாசனையை தழுவியதாக உருவாக்கப்பட்டது. “சஷ்டி கவசம்” பாராயணம் செய்து, அந்த பத்தியை ஏற்றி வழிபடும் போது பழனி மலையிலேயே நிற்பது போன்ற ஆனந்த அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.
பத்தியின் மணமும், பக்தியின் குணமும் இணைந்து பலரின் உள்ளத்தில் ஆன்மிக உணர்வை எழுப்பியதாக பாராட்டுகள் கிடைத்தது எனக்கு இன்னும் நெகிழ்வான நினைவாக உள்ளது.
இன்று – சதுர்த்தி & கிருத்திகை இணையும் இந்த சிறப்பான பிப்ரவரி 23 நன்னாளில்,
அருள்மிகு முருகப்பெருமானுக்காக 6 தீபங்கள் நாம் சார்ந்த பகுதியின் நலனுக்காக 1 தீபம் என மொத்தம் 7 🪔விளக்குகளில் தீபமேற்றி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வோம்.
ஆன்மிக ஒளி நம் இல்லங்களையும், நம் சமூகத்தையும் வளமாக்கட்டும் 🙏🔥
#சஷ்டிபாடுவோம்_தீபம்ஏற்றுவோம்
@blsanthosh@NainarBJP@BJP4TamilNadu
இந்திய அரசியலில் தொழில்நுட்பம் ஒருகாலத்தில் தொலைதூர கனவாக இருந்தது. இன்று அது மக்கள் ஆட்சியின் இயக்க சக்தியாக மாறியுள்ளது.
நம் பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களின் தலைமையில் தொழில்நுட்பமும் அரசியலும் இரண்டறக் கலந்த ஆற்றல்மிகு நிர்வாகம் உருவாகியுள்ளது.
Digital India முதல் AI வரை –
தகவல், தெளிவு, திறன், துல்லியம் என்பவற்றால் புதிய இந்தியா கட்டமைக்கப்படுகிறது.
இந்த AI India Vision வீடியோவை இணைத்து பகிர்கிறேன். நவீன பாரதத்தின் புதிய பாதையை ஒன்றாக வரவேற்போம்.
வாழ்க பாரதம் 🇮🇳
#DigitalIndia #AIIndia #NewIndia
https://t.co/AGNj2sTtwD
மக்களுக்காக…
மக்களிடமிருந்து! 🇮🇳
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாஜகவின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கைக்காக மக்களிடமிருந்து நேரடியாக கருத்துகளை கேட்கும் இயக்கம் நேற்றைய தினம் திருச்செங்கோட்டில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த அர்த்தமுள்ள கலந்துரையாடல் நிகழ்வை என் மதிப்பிற்குரிய அண்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழக பாஜகவின் துணைத் தலைவருமான @KPRamalingamMP அவர்கள் சிறப்பாகவும் திட்டமிட்டும் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாநிலத் தலைவரும், ஆளுநருமான திருமதி.@DrTamilisai4BJP அவர்கள் தலைமை தாங்கி மக்களின் பரிந்துரைகளை பொறுமையுடன் கேட்டறிந்தார்.
மேலும் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் திரு @PThangamanioffl அவர்கள், முன்னாள் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திருமதி. @MlaSaraswathi அவர்கள், நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் திரு ராஜேஷ் குமார், பாமக மேற்கு மாவட்ட செயலாளர் திரு சுதாகர் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் தாமரை சொந்தங்கள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய தொழில் அடையாளங்கள்—
🚛 லாரி கட்டும் தொழில் (Truck Body Building Cluster)
🚰 Water Boring & Rig Industry
நிலத்தடி நீர் ஆராய்ச்சி மற்றும் போர்வெல் இயந்திர உற்பத்தியிலும் மற்றும் நிலத்தடி நீர் எடுப்பதிலும் நாமக்கல் முக்கிய பங்கு வகிக்கிறது.
🥚 கோழிப்பண்ணை மற்றும் முட்டை உற்பத்தி
🧵 நெசவு மற்றும் துணிநூல் தொடர்பான தொழில்கள்
🏭 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள்
இத்துறைகளைச் சார்ந்த தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள், அரசு ஆதரவு, ஏற்றுமதி ஊக்குவிப்பு, மூலதன வசதி, சாலை & லாஜிஸ்டிக்ஸ் மேம்பாடு, திறன் வளர்ச்சி மையங்கள் போன்ற தேவைகளை மிகவும் பொறுப்புடனும் தெளிவுடனும் முன்வைத்தனர்.
“தொழில் வளர்ச்சி + மக்கள் நலம்” இரண்டும் இணைந்தால் தான் ஒரு மாவட்டம் முழுமையான முன்னேற்றத்தை அடையும் என்பதனை இந்த கலந்துரையாடல் தெளிவாக எடுத்துக்காட்டியது.
பாஜக முன்னெடுக்க வேண்டிய பல்வேறு கொள்கைத் திசைகள் இந்நிகழ்வின் மூலம் உறுதியடைந்தன.
நாமக்கலின் தொழில் திறனும், தமிழ்நாட்டின் வளர்ச்சி கனவும் ஒன்றிணையும் நாள் தொலைவில் இல்லை.
#மக்களுக்காக_மக்களிடமிருந்து
#BJP2026
#NamakkalIndustrialGrowth 🇮🇳
@blsanthosh@NainarBJP@BJP4TamilNadu