நமது @WTLFoundation அமைப்பின் Dr. APJ Abdul Kalam Centre for Ethics & Politics மையத்தை நேரில் பார்வையிட விரும்புகிறீர்களா?
https://t.co/dFlPf8akVS என்ற இணைய தளத்தில், உங்கள் We The Leaders உறுப்பினர் அடையாள எண்ணைப் (WTL ID) பதிவு செய்யுங்கள். உங்கள் விவரங்களைச் சரிபார்த்து, வருகையின் நோக்கத்தையும் உங்களுக்கு ஏற்ற தேதியையும் குறிப்பிடுங்கள். உங்கள் வருகைக்கான நேரம் ஒதுக்கப்பட்டு, மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தப்படும். முன்பதிவு உறுதிசெய்யப்பட்ட பின்னரே மையத்திற்கு வருகை தரவும்.
தலைமைத்துவம் என்பது அதிகாரத்தை நோக்கிய பயணம் மட்டுமல்ல, சமூக மாற்றத்தை உருவாக்கும் பொறுப்பும் கூட. வாருங்கள், ஐயா அப்துல் கலாம் அவர்கள் கண்ட கனவுகளை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்து, அறநெறிகளுடன் கூடிய தலைவர்களை உருவாக்குவோம்.
அவிநாசியில் WTL (We The Leaders) அமைப்பு சார்பாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் 10,000-க்கும் மேற்பட்ட பெண்கள் அதிகாலையிலேயே திரளாகக் கலந்து கொண்டது உண்மையிலேயே ஒரு மாபெரும் நிகழ்வாகும்.
இது பெண்களின் ஆரோக்கியம் மற்றும் விழிப்புணர்வைக் காட்டுவதோடு மட்டுமில்லாமல், திரு. அண்ணாமலை அண்ணா @annamalai_k அவர்களின் செயல்பாடுகள் மற்றும் மக்கள் தொடர்பு களமட்டத்தில் ஏற்படுத்தி வரும் தாக்கத்தையும், அவர் மீதான மக்களின் கவனத்தையும் பிரதிபலிக்கிறது.
On International Day of the Girl Child, joined our spirited sisters for a 6.5 km Health Awareness Marathon in Avinashi this morning, organised by @WTLFoundation to mark Women Safety and Empowerment Month, our dedicated theme for the month of October.
More than 10,000 women & children participated in the marathon today with incredible zeal and energy.
When our women are healthy, safe, and empowered, our society thrives. It is truly inspiring to see such immense enthusiasm for health and fitness among our sisters.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான சமூகப் போராட்டத்தில் பெரும்பங்கு வகித்த ஐயா இமானுவேல் சேகரன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாகவும், ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரம் பெறவும் போராடிய ஐயா இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்.
சமூகத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் முக்கியமான விஷயங்கள் குறித்த எனது எண்ணங்களையும், தனிப்பட்ட பார்வைகளையும், 'ஒரு சாமானியனின் அறச்சீற்றம்' என்ற ஒரு தொடராகப் பதிவு செய்ய, ஒரு சிறந்த தளத்தை வழங்கியுள்ள விகடன் குழுமத்தின் ஜூனியர் விகடன் வார இதழுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சாமானியனாக நான் பார்க்கும் சமூகப் பிரச்சினைகள், நமது இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அரசியல் மற்றும் பொதுவாழ்வில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விஷயங்கள் என, பல்வேறு தலைப்புகளில், எனது கருத்துகளைத் தொடர்ந்து பதிவு செய்யக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பொறுப்புணர்வையும் அளிக்கிறது.
இந்தத் தொடர் வழியாக, எனது எண்ணங்களையும், சமூகத்தின் நலன் சார்ந்த கருத்துகளையும் தொடர்ந்து பதிவு செய்வேன்.
@JuniorVikatan
ஒவ்வொரு அதிகாரமிக்க பதவியில் இருப்பவர்களுக்கும் ஒரு சாமானிய தளம் உள்ளது..அண்ணாமலை ஒரு அதிகாரமிக்க பதவியில் இருந்து, மக்களை நோக்கி அரசியலுக்கு வந்தவர்..வழக்கமாக இப்படி பதவியிலிருந்து வருபவர்கள் ஒரு நியமனப் பதவியை பெற்றுக் கொண்டு டெல்லி போய்விடுவார்கள் அல்லது அரசாங்கத்தின் ஏதேனுமொரு உறுப்பாக ஆகிவிடுவார்கள்.
ஆனால், அண்ணாமலை தீவிர கள அரசியலுக்கு வந்தார். ஒரு யாத்திரை நிகழ்த்தி மக்களோடு மக்களாகச் சென்றார்..இங்குள்ள எல்லா மக்கள் பிரச்சனைக்கும் அவர் குரல் கொடுத்துள்ளார்..மீனவர் - விவசாயி - பெண்கள் என சமூகத்தின் அனைத்து தளங்களிலும் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தனது வலுவான கருத்துகளை பகிர்ந்துள்ளார்.. டங்க்ஸ்டன் பிரச்சனைகளில் அண்ணாமலையின் பங்களிப்பு என்ன என்பதை திமுகவிடம் பொறுக்கித் தின்னும் ஊடகங்கள் புறக்கணிக்கலாம் ஆனால் எதார்த்தத்தை மக்கள் அறிவார்கள்..
மற்றபடி, சமூகத்தின் ஒரு கீழ்மட்டத்தில் இருந்து மேலெழும்பிய ஒரு மனிதனாக அண்ணாமலைக்கு விசாலமான அதே சமயம் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களின் தேவையும் அறிந்த ஒரு பார்வை உள்ளது.. ஒவ்வொரு ஊடகங்களாக சென்று திமுக போன்ற கட்சிகளுக்கு தீவிரமாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த விடாமல் தடுக்கும் வாய் வியாபாரிகளுக்கு வேண்டுமானால் இவற்றை பார்க்கும் போது ஒரு பொறாமை வரலாம்..இனி ஒரு போதும் இங்கே கடந்த காலம் மீளாது..திமுக போன்ற கட்சிகளின் வீழ்ச்சியை ஏற்க முடியாமல் இதுபோன்ற அவதூறுகளால் அண்ணாமலையை தேக்கிவிட முடியாது..
இந்தப் பதிவில் பேசிய சகோதரி டாக்டர்...நவீன யுகத்தில் எதிர்கால இளம் குழந்தைகள் எப்படி எல்லாம் நாசமாகி வருகிறார்கள் என்பதை அறிவுப்பூர்வமாக புட்டு புட்டு வைக்கும் இந்த சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்..!🙏 ... *உங்கள் சொந்த வாரிசுகளின் நலன் கருதி...