உலகத்தில் இரண்டே விதமான மனிதர்கள் தான்!!
1) 'நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது!?' என்று நினைப்பவர்கள்!!
2)' நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்க மாட்டேங்குது!?' என்று நினைப்பவர்கள்!!!
ஆண்கள்
அழாமல் வாழ்கிறார்கள் என்று
இந்த உலகம் நினைக்கிறது.
உண்மையில்
அவர்கள் அழுகையை
குடும்பப் பொறுப்பின் முன்னாலும்,
சம்பளச் சீட்டின் பின்னாலும்
ஒவ்வொரு நாளும்
அமைதியாக
மடித்து வைக்கிறார்கள்!
வீடு வந்து
கைகளைக் கழுவினேன்;
ஆனால்
நாளெங்கும் ஒட்டிக்கொண்டிருந்த
கவலைகளை மட்டும்
கழுவ முடியவில்லை.
உடல் சோர்வதைவிட
மனம் சோர்வதற்குத்தான்
அதிக எடை இருக்கிறது!
இன்றைய பிரச்சனைகளை நாளையிடம் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறேன்
நிரம்பி வழிந்து கொண்டு தான் இருக்கிறது
என்ன செய்ய?
நாளை ஒருநாள் இன்றாகும்
பின்னர் நன்றாகலாம்
எனக்கானவர்கள் கவனிக்கத் தவறிய என் அமைதிக்குள் மறைந்திருந்த அசௌகரியத்தை கவனித்து,
“நீங்க ஓகேவா?” என்று கேட்ட அந்த மூன்றாம் நபருக்கு,
என்னால் செய்ய முடிந்ததெல்லாம்
“ஓகேதான்” என்ற ஒற்றை பொய் மட்டுமே....✍