இனிமே இந்தியாவில் எந்த அரசு பதவி ஏற்க வேண்டும் என்றாலும் திமுகவின் திட்டத்தில் கையெழுத்து போட்டு விட்டு தான் தொடங்க வேண்டும் போல..
திக்கெட்டும் திராவிடம் தான் ஆட்சி செய்கிறது.
சென்னை தெற்கு மாவட்டம், சைதை கிழக்கு பகுதி, 170ஆவது வட்ட @dmk_youthwing அமைப்பாளர் சகோதரர் வி.சந்துரு - கு.பிரித்திஷா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டு இணையர்களை வாழ்த்தினோம்.
அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்து மணமக்களின் இல்வாழ்க்கை சிறக்கட்டும்!
இரண்டு செய்திகள்
1) 2016 இல் நடைபெற்ற தேர்தலில் அண்ணன் அப்பாவு வெற்றி பெற்றுள்ளதாக நீதிமன்றம் பத்தாண்டுகள் கழித்து இன்று
அறிவித்துள்ளது.
2) பக்ரீத் பண்டிகைக்கு தங்கள் இடங்களில் மாடு பலியிட தடை என்ற தீர்ப்பு அவசர அவசரமாக பக்ரீத்திற்கு முதல் நாள் வந்தது.
விஜய் அவருக்கு வர வேண்டிய ராஜ்யசபா எம் பி பதவியை காங்கிரஸூக்கு குடுத்து இருக்காரு. காரணம் அவரு கட்சி எம் பி ஆனா நாடாளுமன்றத்துல பி ஜே பி கொண்டு வர்ற மக்கள் விரோத மசோதாவை எல்லாம் “நேரடியா” கடுமையா எதிர்த்து பேசணும். காங்கிரஸ்கிட்ட தள்ளி விட்டா அவங்க பார்த்துக்குவாங்க. எதுக்கு நம்ம நேரடியா பகைச்சிகிட்டு!!
சினிமாலதான் சண்டையெல்லாம்!! ரியல் லைஃப்ல பார்ட்டிக்கு கொஞ்சம் “பேஸ்மெண்ட்” வீக்கு.
நம்மால் பலனடைந்தவர்கள் நம்மிடம் நன்றியோடு இருப்பார்கள் என எதிர்பார்க்க கூடாது என்பதே என் பொதுவாழ்வில் நான் கற்றுக் கொண்டது. 2016ம் ஆண்டு ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் கலைஞர் சொன்ன வார்த்தைகள் இவை. கலைஞரின் கடைசிப் பேட்டி அதுதான் என்று நினைக்கிறேன்.
நீண்ட பொதுவாழ்வில் யாருக்காக உழைத்தோமோ அவர்களில் பெரும்பான்மையானவர்களால் புரிந்து கொள்ளப்படாமல் இருந்த துர்பாக்கியம் கலைஞருக்கு வாய்த்திருந்தது. யாரிடமும் நன்றியை எதிர்பார்க்காத மனநிலை கலைஞருக்கு வாய்த்திருக்கலாம்.
கலைஞருக்கு நினைவு தப்பி அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போன போது கோபாலபுரத்திலும் காவேரி மருத்துவமனை வெளியிலும் கூடியிருந்தவர்களில் கட்சிக்காரர்களைத் தாண்டி அவரால், அவர் திட்டங்களால் பலனடைந்தவர்களும் இருந்தார்கள். பணி நிமித்தமாக இல்லாமல் கலங்கிய கண்களோடு வந்து நின்ற ஊடகவியலாளர்களை காவேரி மருத்துவமனை வெளியில் பார்த்திருக்கிறேன்.
கலைஞரின் கடைசி நாட்கள், அதிமுக தரப்பிலிருந்து பன்னீர்செல்வம், வேலுமணி எல்லாம் வந்து பார்த்து சென்ற இரவு. நேரம் நள்ளிரவைக் கடந்ததால் கோபாலபுரம் வீட்டு வாசலில் கூடியிருந்தவர்களை கு.க.செல்வமும், தமிழரசும் கலைந்து போகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மறுத்தவர்களில் ஒரு திருநங்கையின் குரல் மட்டும் தனித்து ஒலித்தது.
”ஏதேதோ பேர் சொல்லி எங்கள உலகம் அசிங்கப்படுத்துனப்போ திருநங்கைனு எங்களுக்கு மரியாதை கொடுத்தவர் தலைவர். அவர் இருக்குற இடத்துல நாங்களும் இருந்துக்குறோம்” என செல்வத்திடம் வாதிட்டுக் கொண்டிருந்தார்.
முறைசெய்து காப்பாற்றிய மன்னவனை இறையென்று பார்த்த தமிழ்நிலத்தின் நன்றியறிதல் அது. கலைஞரின் இறுதி நாட்களில் அவருக்காக கூடிய கூட்டத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளும் அதிகமிருந்தனர்.
கட்டை விரலோ தலையோ இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும்; சுடுகாட்டில் அவன் கட்டை வேகும் என்ற வார்த்தைகள் கவியரங்க மேடைக்கானவை மட்டுமல்ல. முந்தைய தலைமுறைகளுக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உறுதிப்படுத்திய போர் முழக்கம்.
இன்று கலைஞருக்கு புகழஞ்சலி செலுத்துகிற பலரின் பதிவுகளில் கட்டை விரல்களைக் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கலாம். நான் உட்பட பலரின் பெயருக்குப் பின்னால் போடப்படும் பட்டங்களுக்கு கலைஞரின் கட்டை விரல் போட்ட கையெழுத்துகள் காரணமாக இருந்திருக்கின்றன.
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்
என்ற வள்ளுவன் வாக்கு தன் காலத்திற்கு பிறகு கலைஞர் இந்த சமூகத்தில் அடைந்த இடத்திற்கு சான்றாக இருக்கும்.
2021ல் செல்வி. ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவிற்கு வந்த அதிமுகவினர் சாரை சாரையாக கலைஞர் நினைவிடத்திற்கும் வந்தார்கள்.
அம்மாவைப் பார்க்க வந்தோம்; அப்படியே தலைவரையும் பாத்துட்டுப் போலாம்னு வந்தோம் சார் என அதிமுக கரைவேட்டியோடு ஊடகங்களிடம் அவர்கள் பேசிய வீடியோக்கள் இன்றும் உண்டு.
காங்கிரசின் பீட்டர் அல்போன்ஸும் பாஜகவின் ஆசீர்வாதம் ஆச்சாரியும் தலைவர் என்று விளித்து கலைஞருக்கு புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.
தலைவர் என்ற இடம் இந்த இனமும் நிலமும் அவருக்கு கொடுத்தது.
புறநானூற்று தமிழ் போல் நின் புகழ் வாழ்க!
கட்டை விரல் காத்து தலைமுறைகளைக் கரை சேர்த்த தலைவருக்கு புகழஞ்சலி
அய்யா, திமுகவை விட முற்போக்கான சிறந்த ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்க திமுக எதிர்ப்பு முற்போக்கு வேடதாரிகள் ஒருநாளும் உழைத்ததில்லை; உழைக்க மாட்டார்கள்.
திமுகவிடம் எதையெல்லாம் போதாமை என்று விமர்சித்து எதிர்ப்பு மனநிலையை உருவாக்கினார்களோ அதிலெல்லாம் தீர்வு கிடைக்கும் ஆட்சியையா அவர்கள் கொண்டு வருகிறார்கள்? ஒருநாளும் இல்லை. அதை விட முக்கியம்
அரசியலே இல்லாத மண்ணாந்தை சினிமா கல்ட்டிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு அதற்கு முற்போக்கு, தலித்திய குஞ்சங்கள் கட்ட உழைத்து வருவதையும் பார்க்கிறோம்.
திமுகவை விட சிறந்த ஒன்றைக் கொண்டு வர உண்மையிலேயே நினைக்கும் யோக்கியர்கள் யார் தெரியுமா? திமுகவின் தோல்விக்குப் பிறகு அது course correction செய்து மீண்டு வரவேண்டும் என்று பேசும் அந்தக்கட்சியின் தொண்டர்கள் மட்டும் தான்.
அவர்களின் தன்னலமற்ற நோக்கம், சமூகநீதிக்கான ஆர்வம் ஆகியவற்றை முன்வைத்து குற்ற உணர்ச்சியைத் தூண்டிவிடுவது மட்டும் தான் So called புரட்சிப் புளுத்திகளின் முழுநேரப்பணி. இவர்களின் யோக்கியதையை நீங்கள் உணர்வதற்கு தமிழ்நாடு கூப்பில் உட்கார வேண்டியிருக்கிறது என்பதுதான் அவலநகைச்சுவை.
தமிழ்நாட்டின் சமரசம் இல்லா அரசியல் தனித்துவம் தந்தை பெரியாரின் திராவிடக் கொள்கைகளால் வடிவமைக்கப்பட்டது. அந்த கருத்தியலுக்கும் பேரறிஞர் அண்ணாவின் அரசியல் சிந்தனைகளுக்கும் செயல்வடிவம் கொடுத்து, அவற்றை மக்களின் உரிமைகளாகவும் சுயமரியாதையின் வெளிப்பாடுகளாகவும் மாற்றி மக்களிடம் கொண்டு சென்றவர் கலைஞர்.
கலைஞர் தமிழ்நாட்டுக்கு செய்த பங்களிப்புகளை பட்டியலிட்டால் அது நீண்டுகொண்டே போகும். சுருக்கமாகச் சொன்னால், திராவிட ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாட்டில் கலைஞரால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பலனடையாதவர்கள் யாரும் இல்லை. நவீன இந்தியாவில் முற்போக்காகக் கருதப்படும் பல சிந்தனைகள் தோன்றுவதற்கு முன்னரே, அவற்றுக்கு சட்ட வடிவம் கொடுத்தவர். பெரியார், பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் கனவு கண்ட சமூகநீதிச் சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுத்து, அவற்றை மக்களின் வாழ்வில் உரிமைகளாக மாற்றியவர்.
கலைஞரை புகழவோ, அவரது பங்களிப்பை ஏற்கவோ தயங்கும் கூட்டம், ஏணி வைத்தாலும் எட்டாது என்று தெரிந்தும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான காரணத்தை வேறு தலைவர்களிடம் தேடிக்கொண்டே இருக்கிறது. அதற்கான பதிலையும் கலைஞர் தனது வாழ்நாளிலேயே கூறிவிட்டார். இன்றைய அரசியல் போக்கிற்கும் அந்த வார்த்தைகள் பொருத்தமாகவே இருக்கின்றன.
"நம்மால் பயனடையும் மக்கள் நமக்கு நன்றியோடு இருப்பார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது."
அரசியல் பயணத்தில் சமூக நீதியையும் மனித மாண்பையும் உறுதியாகக் கடைப்பிடித்தவர். என்றும் சுயமரியாதைக்காரராக வாழ்ந்து, அந்த உணர்வை தமிழ்நாட்டு மக்களிடையே விதைத்தவர்.
எங்கள் சமூகநீதி திட்டங்கள் என்றும் சுயமரியாதையைப் பேணும் வடிவத்திலேயே இருக்கும். வளர்ச்சித் திட்டங்கள் உரிமைகளாகவே இருக்கும். தமிழ்நாடு எனும் மாநிலத்தின் உரிமைகளாக இருந்தாலும் சரி, சமூகத்தின் விளிம்பில் வாழும் தனிமனிதனின் வாழ்வாக இருந்தாலும் சரி, சுயமரியாதையில் சமரசம் செய்வது கிடையாது என்பதை ஆழமாக விதைத்தது கலைஞரின் சிந்தனை.
தமிழ்நாட்டின் இரத்த ஓட்டம் கலைஞர். சமூகநீதியைப் பேசும் ஒவ்வொரு சொல்லிலும், எழுதும் ஒவ்வொரு எழுத்திலும், சுயமரியாதையை வலியுறுத்தும் ஒவ்வொரு குரலிலும் கலைஞர் என்றும் நிறைந்து நிலைத்திருப்பார்.
என்றும் கலைஞர் வழியில் உடன்பிறப்பாக... 🖤♥️
இன்று தலைவர் கலைஞர் கட்டிக்கொடுத்த வீட்டில் வசித்தும், அவர் கொடுத்த காப்பீடு மூலம் உயிரையும் பாதுகாத்தும் ,அவர் வழங்கிய கல்வி உதவித் திட்டங்களால் கல்வி கற்றும், அவர் வழங்கிய இலவச மின்சாரத் திட்டத்தின் மூலம் விவசாயம் செய்தும், கடனில் சிக்கிய விவசாயிகளுக்கான கடன்