ஒரு தலைமுறையே.... உழைத்தாலும் சேர்க்க முடியாத பணத்தையும் சொத்துக்களையும் கோடி கோடியாய் ஊழல் செய்து தன் சந்ததியை மட்டும் வளர்க்கும் கேடுகெட்ட அரசியல்வாதிகளை வேரோடு அகற்றுவோம் 😡😡 💪💪💪
#ஓடிஒளியும்_திமுக
நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை, பாலவாக்கத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
சட்ட உரிமைகள் மட்டுமில்லை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையும் அனைவருக்குமானவை என்பதை வலியுறுத்தி, தமது வாழ்நாளை மக்களுக்கு அர்ப்பணித்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம். நம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, சமத்துவம் என்றும் நிலைத்திட உறுதி ஏற்போம்.