By மருத்துவர் G. சிவராமன்...
மகிழ்வான பொழுதுகளைத் துவங்குகையில், இயற்கையை வணங்கியும் ஆராதித்தும் நன்றி சொல்லியும் துவங்குவது தமிழ் மரபு. தமிழர் மரபு!
மகளின் திருமணம் என்பது, இல்வாழ்வின் உச்ச மகிழ்ச்சியில் ஒன்று. தோளில் சுமந்த பிள்ளை, இன்னொரு தோள் சாயும், இன்னொருவருக்குத் தோள் கொடுக்கும் உறவைத் தொடும் சமயம் பெற்றோரின் மனமும் மகிழ்வில் வானம் தொடும்.
" பந்தக்கால் கட்டியாச்சா? அரசாணைக்கால் கட்டுங்க; பாலை மரம் கட்டோணும். ஆலும் அரசும் அத்தியும் மணப்பந்தலில் கட்டாயம் இருக்கணும்", என்ற கேள்விகள் சூழ்ந்த நாட்களில், சுத்தமான காற்றை, வளமான மண்ணை, செறிவான உயிர்வாழ் சத்துக்களை, கனிகளை, விதைகளை நமக்கு சத்தமில்லாமல் சுகந்தமான மணத்தோடு தினம் தந்துகொண்டிருக்கும் மரங்களைப் போற்றுதல் எத்தனை பொருத்தமானது!
இந்த அழகிய நிகழ்வை மகிழ்ந்து, ரசித்து, வணங்கி, நன்றி கூறி நேசித்துக் கொண்டாடினால் என்ன? என ஒரு எண்ணம் மனதில் ஓடியது. எண்ண ஓட்டத்தை, "கல்யாணத்தை ஒட்டி நாம் வனம் செய்யலாமே?!" என நான் நண்பர் பாரியிடம் சொல்ல, " அட! ஆயிரம் மரம் நடுவோம் வாங்க," என செந்தூர்பாரியின் வசீகரக்குரல் உறுதிசெய்து, இன்று மரம் நடுவிழா பேரழகாய் நடந்தேறியது.
இரவெல்லாம் கொட்டும் மழை, இன்னும் கொஞ்ச நேரத்தில் தீவிர புயலின் துவக்கம் என சென்னை குளிர்ந்துகொண்டிருக்க, சென்னையின் புழல் ஏரியை அடுத்த "முல்லைவனத்தில்" இன்று மரம் நடுவிழா! குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை 30க்கும் மேற்பட்ட "சூழல் காதல் அமைப்புகள்", கிட்டத்தட்ட 300 பேர்களுடன் குதூகலமாய் இளங்காலையிலேயே வந்து நிற்க, முன்பு அங்கு ஏற்கனவே நாங்கள் நட்டிருந்த பல ஆயிரம் மரங்களுக்கும் உறவைப்பார்த்த பேரானந்தம். தெருவெல்லாம் வாசக்கதவின் உள்ளிருந்து எட்டிப்பார்க்கும் கிராமத்துப் பெண்கள் போல, வேம்பும் கொய்யாவும் அத்தியும் மணமக்களை எட்டிப்பார்த்து மகிழ்ந்தன.
இளவல்கள் இருவரும் , தாங்கள் கைகோர்க்கும் இனிய இல்லற விழாவை முன்னிட்டு, சிறு வனம் ஒன்றினை தங்கள் நேசக் கரங்களால் துவக்கிட, ஒரு பிடி மண் பிடித்து, ஒரு சிறுசெடி தன் தாய் மடிக்குத்தந்து துவக்கினர். இந்த அழகிய நிகழ்விற்கு, மணமக்களுடன் ஆர்ப்பரித்து மகிழ, ஆயிரம் மரங்கள் உடன் தாய்மடியில் நடப்படுகின்றன. (இன்றே கிட்டத்தட்ட மழைத்தூறலுக்கு நடுவேயும் 500 நட்டாயிற்று). இவர்களின் இல்லறம் எல்லா வளத்துடன் அறம் சார்ந்து செழிக்கையில், இவ்வாயிரம் மரங்கள் கோடி உயிர்களுடன் குதூகலமிடும். நெல்லியும் கொன்றையும் வாகையும் விரிந்து நிற்கும் அந்த "ஆரோக்கிய வனத்தில்", கொண்டாடிக் கூவும் ஓசினிச்சிட்டுக்களின் ஓசையினை மணநாளின் ஆலாபனையாக இவர்கள் என்றும் கேட்பர். . இந்த அழகிய முன்னெடுப்பை இனி எந்த திருமணத்திற்கு செய்ய முன்வந்தாலும், பாரியும் அவரோடு உள்ள அத்தனை இயற்கையின் காதலர்களும் கூடவே நானும் எப்போதும் நிற்போம்! வனம் செய்தல்- அறம் செய்தல்; மரம் நடுதல் - நலம் பெருக்கல்!
இனி உங்கள் வீட்டுத் திருமணத்தில் விதை கொடுத்தல் செடி கொடுத்தலோடு வனம் கொடுத்தலும் செய்யலாம்!..- @Drgsivaraman@PariSenthur@nirmalmb
நிகழ்வில், பசுமை வேளச்சேரியின் அறங்காவலர் - கழக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவைச் செயலாளர் திரு.பொள்ளாச்சி உமாபதி, பசுமை வேளச்சேரி நிர்வாகிகள், பகுதிச் செயலாளர் திரு.சு.சேகர், வட்டச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், முன்னணியினர், பகுதி பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்
2/2
இன்று (22.04.2023), வேளச்சேரியில், @CMOTamilnadu@mkstalin அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பசுமை வேளச்சேரி சார்பாக 700 மரக்கன்றுகள் நடும் விழாவில் கலந்துகொண்டேன்.
1/2