வெற்றி தோல்வி பற்றி கவலையில்லை!
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்,மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் முன்னணியில் இருக்கும் கட்சி அஇஅதிமுக!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்கள்
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
#Madurantakam#ByeElections
நாளை 😍
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியின் கழக வெற்றி வேட்பாளர்
திருமதி.கணிதா சம்பத் ExMLA அவர்களை ஆதரித்து படாளம் பேருந்து நிறுத்தம் அருகில் கழக கொள்கை பரப்பு இணை செயலாளர் @vindhyaAiadmk அவர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்க இருக்கிறார்..
@AIADMKOfficial
இன்று காலை செய்தியாளர் சந்திப்பில் பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா மிக மோசமான ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின் மகன், கட்சியில் அடிப்படை உறுப்பினர் தவிர எந்த பொறுப்பும் வகிக்காத போது, அவரைப் பற்றி வாய்க்கு வந்ததை அவதூறாக அள்ளி வீசுவது கடும் கண்டனத்திற்குரியது.
“சொத்து அபகரிப்பு” என்ற சொல்லை உச்சரிக்க இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?
எங்களைப் பொறுத்தவரை, கழகப் பொதுச் செயலாளராக மாண்புமிகு @EPSTamilNadu அவர்கள் பதவியேற்ற பிறகு, கழகத்தின் சொத்துகள், வங்கி இருப்புகள் உயர்ந்து இருக்கிறதே தவிர குறையவில்லை என்பதை வெளிப்படையாக தெரிவிக்கிறோம்.
சாதாரண சத்துணவுப் பணியாளரின் மகனாகப் பிறந்த “எளிய மனிதரான” திரு. ஆதவ் அர்ஜுனா, 2026 தேர்தல் Affidavit-ல் காட்டிய சொத்துகளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? 534.90 கோடி ரூபாய்!
இவரின் குடும்ப சொத்துகளைச் சேர்த்தால் பல ஆயிரம் கோடிகள் கூட இருக்கலாம்.
இவ்வளவு சொத்தை திரு. ஆதவ் அர்ஜுனா உழைத்து சம்பாதித்தாரா என்ன? எப்படி இவ்வளவு சொத்து வந்தது என்பதை இந்த வாய்ச்சொல் வீரர் பொதுவெளியில் சொல்வாரா?
தன் மாமனார் சொத்தை அபகரித்து தான் ஆதவ் அர்ஜுனா அவர்களின் சொத்து வந்திருக்கிறது என்று நாங்கள் சொல்லலாமா?
அதேபோல், @AIADMKOfficial பொறுத்தவரை, எங்கள் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியின் சுதந்திர முடிவையும் மதிக்கும் பக்குவம் எங்களுக்கு உள்ளது.
தங்கள் கூட்டணியில் இருக்கும் கல்லாப்பெட்டி கட்சிகளை கிஞ்சற்றும் மதிக்காமல், “நீங்கள் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளுங்கள், நானெல்லாம் வரமாட்டேன்” என்று நவீன தீண்டாமையை கூட்டணியிலேயே கடைபிடிக்கும் ஒரு கட்சித் தலைவரை ஏற்றுள்ள ஆதவ் அர்ஜுனா அவர்கள், எங்கள் கூட்டணியைப் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலதனம் எங்கள் தொண்டர்கள் தான். கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும், எங்கள் கழகத்தின் தொண்டர்கள் உழைப்பில் நின்று வெற்றிபெறக் கூடிய தெம்பு, திராணி எங்களுக்கு உள்ளது!
திமுக-வுக்கு அளித்த வாக்குகளால் வெற்றி பெற்ற கூட்டணி கட்சி MLA-களிடம் இரவல் பெற்று ஆட்சியின் ஒவ்வொரு நாளையும் கடத்திக் கொண்டிருக்கும் தவெக-வுக்கு, கழகம் என்றால் உயிரைக் கொடுத்து உழைக்கும் எங்கள் இயக்கத்தைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை!
#பொய்க்கால்_குதிரை_அரசு
ஒருத்தர் அன்பா பண்பா அப்பா அம்மா, மனைவி, பிள்ளைகள் என்று குடும்பத்தோடு வாழ வேண்டும் என்று சொல்வது எந்த அகராதியில் வரம்பு மீறல், வார்த்தை மீறல்?
“ல்தகா சைஆ” போன்ற நாராசத் தத்துவங்கள் எதையும் நாங்கள் சொல்லவில்லையே..??!!
குடும்பத்தோடு வாழச் சொல்வது தவெக-வுக்கு நாராசமாக இருக்கிறதா?
அது சரி, குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும்?
பெற்ற தாய் தந்தை மீதே வழக்கு போட்டவரை தலைவராக வைத்துள்ள கட்சியினருக்கு பாசம், குடும்பம் என்பது எல்லாம் கெட்ட வார்த்தை தான் போல!
கடந்த கால வரலாற்றை பேச வேண்டும் என்றால் விஜயின் வரலாற்றை விட ஒரு கேவலமான வரலாறு உலகில் இருக்க முடியுமா?
இன்று வாய்கிழிய “தீயசக்தியின் ஒரே எதிரி நான் தான்” என்று முழங்கி சர்க்காரியா கமிஷன் பற்றி எல்லாம் பேசும் உங்கள் தலைமை தற்… மன்னிக்க… ஆச்சரியக்குறிக்கு, திரு. கருணாநிதி காலில் விழுந்து வானளாவ புகழ் பாடிய போது அதெல்லாம் தெரியவில்லையா?
தன்னுடைய திரைப்படம் வெளியாக வேண்டும் என்பதற்காக மாண்புமிகு அம்மா அவர்களின் கால்களைத் தேடி கொடநாட்டிற்கும், மாண்புமிகு @EPSTamilNadu அவர்களின் கால்களைத் தேடி சேலத்திற்கும் செவ்வந்தி இல்லத்திற்கும் மாறி மாறி அலைந்த போதெல்லாம் இன்றைக்கு பேசும் இந்த பேச்சு தெரியவில்லையா?
ஆபாச நதி, வாந்தி என்றெல்லாம் பேசும் இந்த இணைய தற்குறிகள், என்றைக்காவது விஜய் படங்களை எல்லாம் பார்த்தது உண்டா? பார்த்த பிறகும் இப்படி எல்லாம் பேசலாமா?
செல்லும் தெருவெல்லாம் மக்களால் விரட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த குதிரைபேரக் கும்பலுக்கு ரோஷம் ஒன்று தான் கேடா?
@TVKHQITWingOffl ஆதிவாசி… அடக்கி வாசி!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
ஓராண்டுக்கு முன்,
ஓர் இரவு,
41 அப்பாவி உயிர்கள்….
தங்கள் உறவுகளை இழந்து,
பச்சிளம் குழந்தை இழந்து,
அந்த சாமானிய மக்கள் வடித்த
கண்ணீரையும் மரண ஓலத்தையும்
தமிழ்நாடு மறக்குமா?
கட்சி பேதமின்றி அனைவரும் நின்ற போதும்,
கூட்டம் நடத்திய கட்சி காணாமல் போனதும்,
மாநிலம் விட்டு மாநிலம் சென்று ஒளிந்து கொண்டதும்,
அதன் தலைவர் கேள்விக்கே பதில் சொல்லாமல் புறமுதுகிட்டு பனையூர் பங்களாவிற்கு ஓட்டம் பிடித்ததும்,
72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராததும்,
பாதிக்கப்பட்ட மக்களை “பனையூருக்கு வந்து ஆறுதல் வாங்கிக் கொள்ளவும்” என்ற கேவலத்தை அரங்கேற்றியதும்
தமிழ்நாடு மறக்குமா?
தமிழ்நாடு மன்னிக்குமா?
#KarurTragedy
மூன்று மாதத்தில் ஜோசப் விஜயின் சொகுசு வாழ்க்கைக்கு 100கோடிக்கு மேல் அரசாங்க பணத்தை செலவு பண்ணி வச்சுருக்கானுங்க மக்களே
பேராசிரியர் @Kalyan1612#MLA_திருடன்#TVKVijayFails
மதுராந்தகம் தொகுதியில் எந்த ஊராட்சிக்கு சென்றாலும் “Idhu @AIADMKOfficial Territory” என்று மக்கள் உணர்வோடு பகிர்கிறார்கள்.
ஆத்தூர் டோல்கெட்டில், தேசிய நெடுஞ்சாலையில், QR கோடு கொடுத்து சினிமா கொட்டகை காட்சி காட்டிய ரீல்ஸ் முதல்வரின் ஆச்சரியக்குறிகளும், அந்த கட்சியின் வேட்பாளரும் எந்த இடத்திற்கு சென்றாலும் ஓட ஓட விரட்டியடிக்கப்பட,
மாண்புமிகு @EPSTamilNadu அவர்கள் செல்லும் வழியெங்கும் மக்கள் அவரின் வருகையை ஒரு திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.
ரசிக வெறி கூட்டத்திற்கும்,
மக்களுக்கான மாபெரும் இயக்கத்திற்கும்
உள்ள வித்தியாசத்தை இடைத்தேர்தல் களம் காட்டிக்கொண்டு இருக்கிறது!
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
போற இடமெல்லாம் விரட்டி அடிக்கப்படும் தற்குறிகள்...
படித்தவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு..
தற்குறிக்கு சென்ற இடமெல்லாம் செருப்படி...
மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் தனக்கு வேண்டப்பட்ட தற்குறிகளை அழைத்து வந்து 100 நாள் வேலை செய்யும் பொது மக்களிடம் பணம் கொடுத்து வாக்கு சேகரித்த பொழுது ஊர் பொதுமக்களும் விரட்டி அடித்த காட்சி பாரீர் பாரீர்
மதுராந்தகத்தில் நடந்த இபிஎஸ்-ன் தேர்தல் பரப்புரை.. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 5 கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்களின் ட்ரோன் காட்சி
#Madhurandhagam | #ADMK | #EPS | #ByElection | #Campaign | #PolimerNews
வன்மையாகக் கண்டிக்கின்றோம்!
ஆளும் தவெக அரசுக்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும், அவர்களை உடனடியாகக் கைது செய்ய முற்பட்டு, அவர்களின் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கழகத்தின் ஆற்றல்மிகு செயல்வீரராகவும், தனது கருத்துகளை மிகுந்த தைரியத்துடன் சமூக வலைதளங்களில் பதிவு செய்து, ஆளுங்கட்சியின் அவலங்களை மக்கள் மன்றத்தில் தொடர்ந்து எடுத்துரைக்கும் கழகத்தின் போர்வாள், அன்புச் சகோதரர் @Dhanaakutty1 மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்ய முற்பட்டதோடு மட்டுமல்லாமல், நேற்று இரவு முழுவதும் அவரது இல்லத்தில் விசாரணை என்ற பெயரில் அவரது குடும்பத்தினரையும் காவல்துறையினர் மிரட்டியதாகக் கூறப்படும் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கருத்துச் சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை. ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சிப்பது குற்றமல்ல. விமர்சனக் குரல்களை அடக்குவதன் மூலமாகவும், அச்சுறுத்தல்களின் மூலமாகவும் ஜனநாயகத்தின் குரலை ஒருபோதும் நசுக்கிவிட முடியாது.
கழகத்தின் செயல்வீரர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர் மீதும் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, அன்புச் சகோதரருக்கு உரிய சட்டப் பாதுகாப்பும், நியாயமும் கிடைக்க கழகப் பொதுச் செயலாளர் @EPSTamilNadu அவர்கள் என்றும் துணை நிற்பார்.
@satyenaiadmk
கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஈரோடு மண்டலத் தலைவர் திரு. @Dhanaakutty1 அவர்கள் மீது ஒரு சமூக வலைதளப் பதிவுக்காக வழக்கு பதிந்து, இரவு நேரத்தில் வீடு புகுந்து கைது செய்ய முற்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அரசியல் ரீதியான கருத்துகளை எதிர்கொள்ள கொஞ்சம் கூட துணிவில்லாத இந்த பொய்க்கால் குதிரை அரசு, காவல்துறையை ஏவி கருத்தாளர்களை முடக்க முனைவது என்பது கருத்து சுதந்திரத்திற்கு விரோதமானது.
ஜனநாயகன் என்று Reel படத்தில் நடித்தவர், ஆட்சி பீடத்தில் அமர்ந்து ஜனநாயக விழுமியங்களை நசுக்குவது என்பது பாசிசத்தில் வருமா, பாயாசத்தில் வருமா @CMOTamilNadu அவர்களே?
இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்று விசாரணை என்ற பெயரில் பெண்களை மிரட்டுவது, வழக்கு, வெள்ளிக்கிழமை கைது என்றெல்லாம் முடக்க நினைப்பது போன்ற அறமற்ற நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறோம்.
அதே சமயம், சரியான கருத்தை சரியான விதத்தில் எடுத்துக் கூறும் நம் கழகத்தினர் மீது இந்த அரசு அடக்குமுறையை பயன்படுத்த முயற்சித்தால், நிச்சயமாக மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க, @AIADMKITWINGOFL நம் நண்பர்களுக்கு துணை நிற்கும்.