இளநிலை செவிலியர் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கும் 7.5% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்!
அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கும் விளையாட்டுப் பிரிவுக்கான (Sports quota) இடஒதுக்கீட்டை 2% நடைமுறைப்படுத்த வேண்டும்!
தமிழ்நாடு அரசுக்கு விசிக வேண்டுகோள்!
---------------------------------
அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் ��ிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதாவது, மருத்துவ படிப்பு, பொறியியல் படிப்பு, சட்டப் படிப்பு, சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மருத்துவ படிப்பு, கால்நடை மருத்துவ படிப்பு, மற்றும் வேளாண் படிப்புகளுக்கு 7.5% இட ஒதுக்கீட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்மூலம் ஏழை எளிய மாணவர்கள் பயனடைந்து வருக��ன்றனர். குறிப்பாக, பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரி மற்றும் சுயநிதி கல்லூரிகளில் படிக்கிற வாய்ப்பு கிடைப்பது மட்டுமல்லாமல்; அவர்களுக்கு கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களை செலுத்துவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், துணை மருத்துவ படிப்புகளான https://t.co/7NNvohtCK3 (Nursing), B.Pharm போன்ற துணை மருத்துவ படிப்புகளுக்கு 7.5% இடஒதுக்கீடு நடைமுறைப��படுத்தப்படாமல் உள்ளது. இதனால் கல்லூரியில் படிக்க இடம் கிடைக்காமல் போவது மட்டுமல்லாது வாய்ப்புக் கிடைக்கிற மாணவர்களுக்குக் கட்டணச் சு��ையும் உள்ளது. எனவே, இந்த ஆண்டு முதல் துணை மருத்துவ படிப்புகளுக்கு 7.5% இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல, இளநிலை மருத்துவப் படிப்புகளில் (MBBS,BDS) விளையாட்டு வீரர்களுக்கான (Sports quota) பிரிவில் மொத்தம் உள்ள இடங்களில் (MBBS-7, BDS-1)
8 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கல்வியில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பிரிவில் 2% இடஒதுக்கீட்டினை ��ரும் (2025-2026) கல்வி ஆண்டு முதல் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைப் போன்று மருத்துவக் கல்வியிலும் விளையாட்டு வீரர்களுக்கான (Sports quota) சிறப்புப் பிரிவில் 2% இட ஒதுக்கீட்டினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
முனைவர் தொல்.திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்
வி.சி.க.
பொது வாழ்க்கையில் ஈடுபட தொடங்கிய ஆரம்பக்காலத்தில் தனக்கு உதவிக்காக உடன் பயணித்த தம்பியை இழந்த போதிலும் கலங்காமல் கடமையுடன் களத்தில் நின்ற கண்ணியமிக்க தலைவர் #எழுச்சித்தம���ழர் அவர்கள்...
அண்ணன் #தொல்_இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு 31 ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்கம்.!
“என் ஏரியால, என் இடத்துல வந்து நீ பேசிருக்க.. என் ஆசிரியர அவமானப்படுத்தியிருக்க.. சும்மா விடமாட்டேன்” - ஆவேசப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்
#SunNews | #AnbilMahesh | #GovtSchool
ரேசன்க���ை, போஸ்ட் ஆபிஸ், பால் சொசைட்டி, கூட்டுறவு வங்கி னு எல்லாதையும் ஊர் தெருவுலயே வச்சிகிட்டு வாக்கு வாங்க மட்டும் சேரிக்கு வருவானுக 💯🔥
இதுதான் இவனுங்க பண்ண சாதனை மயிறு 😒
#PARARI #TamilNadu 💙
எஸ்சி பட்டியலை மூன்றாகப் பிரிக்கப் போகிறார்களா?
கடந்த வாரத்தில் ஒரு நாள் நாடாளுமன்ற கூட்���ம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தண்ணீர் குடிப்பதற்காக வெளியே வந்தேன். கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்தார். உச்ச நீதிமன்றம் அளித்த சப் கேட்டகரைசேஷன் தீர்ப்பைப் பற்றி ஏன் இதுவரை காங்கிரஸ் கருத்து எதுவும் கூறவில்லை ? என்று அவரிடம் கேட்டேன்.
“என்னிடமும் கேட்டார்கள். நான் இன்னும் அந்தத் தீர்ப்பைப் படிக்கவில்லை. நீங்கள் படித்திருந்தால் அதைப்���ற்றி சொல்லுங்கள்” என்றார். அந்தத் தீர்ப்பின் சாராம்சமான விஷயங்களை அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது அந்தப் பக்கமாக வந்த ஒன்றிய அமைச்சர் மாண்புமிகு திரு எல் முருகன் அவர்கள், “ என்ன சீரியஸா பேசிக்கிட்டு இருக்கீங்க? என்று கேட்டார். “ சப் கேட்டகரைசேஷன் தீர்ப்பைப் பற்றி ரவி விளக்கிக் கொண்டிருக்கிறார்” என்று ஜோதிமணி அவரிடம் சொன்னார்.
“ தமிழ்நாடு அரசு இயற்றிய உள் ஒதுக்கீட்டுக்கான சட்டம் செல்லும் ���ன்று உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது. அவருக்கும் அது மகிழ்ச்சிதானே” என்று நான் சொன்னேன் . “திமுக தான் எங்களை ஏமாத்திட்டாங்களே” என்றார் அவர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “ என்ன அப்படி சொல்றீங்க? “ என்று நான் கேட்டேன். “ ஒதுக்கீடு கொடுத்துட்டு தகுதியானவங்க இல்லன்னா மத்தவங்கள வெச்சி நிரப்பிக்கிங்கன்னு ஆர்டர் போட்டுட்டாங்க. அப்புறம் ரிசர்வேஷன் கொடுத்து என்ன பிரயோஜனம்?” என்றார்.
“ கடந்த 15 வருஷங்கள்ல அருந்ததியர் சமூக மக்கள் வேலையில சேர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும், எம்பிபிஎஸ் மாதிரி உயர் படிப்புகள்ல சேர்வதற்கும் இந்த ஒதுக்கீடு பெரிய அளவுல உதவியிருக்கே அதப் போயி பிரயோஜனமில்லன்னு சொல்றீங்களே” என்று நான் கேட்டேன். “ வெறும் 3% தானே கொடுத்து இருக்காங்க. 6% ல கொடுக்கணும்? “ என்றார்.
“ 6% எப்படி வரும்? 2011 சென்சஸ்லகூட 2.9% தானே மக்கள் தொகை வந்திருக்கு? என்று நான் கேட்டேன்.
“ அது எப்படி? இருக்கிற 18% ஐ மூணா பிரிச்சு அருந்தியிருக்கு 6% தேவேந்திரகுல வேளாளருக்கு 6% ஆதிதிராவிடருக்கு 6% என்று தா��ே கொடுக்கணும்? “ என்று கேட்டுவிட்டு அவர் போய்விட்டார்.
அதைக் கேட்டு நான் திகைத்துப் போனேன். “ அவங்க அந்த அளவுக்கு இருக்க மாட்டாங்களா? என்று ஜோதி மணியும் கேட்டார்.
“ இல்லை” என்று சொன்னேன்.
“ எஸ்சில மூணு கேஸ்ட் தானே பெரிய கேஸ்ட் ? “ என்று அவர் மீண்டும் கேட்டார்.
“ ஆமாம், ஆனா பர்சன்டேஜ் வேறுபடும். அருந்ததியர் 2.9% தேவேந்திர குல வேளாளர் 3.4% ஆதிதிராவிடர் பறையர் சேர்த்து 12.71% “
என்று சொன��னேன்.
அப்படியா ? என்று வியப்போடு அவர் கேட்டுக் கொண்டார்.
2011 ஆம் ஆண்டு சென்சஸில் தமிழ்நாட்டில் இருக்கும் எஸ்சி சாதிகளின் மக்கள் தொகையைப் பிரித்து ஏற்கனவே கிறிஸ்துதாஸ் காந்தி ஐஏஎஸ் அவர்கள் தயாரித்திருந்த அட்டவணை என்னிடம் இருந்தது. அதை போட்டோ காப்பி எடுத்து அடுத்த நாள் ஜோதி மணியிடம் ஒரு பிரதியைக் கொடுத்தேன்.
அமைச்சர் திரு. எல். முருகன் அவர்கள் பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். ஒன்றிய பாஜக அரசின் கொள்கை முடிவுகளில் செல்வாக்கு செலுத்தக் கூடியவர். அவர் அப்படி சொன்னதை எதைச்சையாக சொன்ன ஒன்றாக என்னால் கருத முடியவில்லை. பாஜகவின் திட்டமாக அது இருக்குமோ? என்ற அச்சத்தை அது எனக்குள் எழ���ப்பி விட்டது. எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள எஸ்சி பிரிவினரை இப்படி மூன்றாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் 6% என்று ஆக்கிவிடுவார்களோ என்ற அச்சம் எழுந்தது.
திரு எல் முருகன் கூறுவதைத் தமிழ்நாட்டில் பலரும் நம்பத்தான் செய்வார்கள். ஏனென்றால் எஸ்சி பட்டியலில் உள்ள சாதிகளின் மக்கள் தொகை என்னவென்று எவருக்கும் தெரியாது. எஸ்சி பட்டியலில் உள்ள சாதிகளை ஒவ்வொரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போதும் சாதிவாரியாகக் கணக்கெடுக்கிறார்கள் என்பது கூடப் பெரும்பாலோருக்குத் தெரியாது.
எஸ்சி பட்டியலில் உள்ள அருந்ததியர் (7 சாதிகள்) தேவேந்திர குல வேளாளர் (7 சாதிகள்) பறையர் + ஆதிதிராவிடர் ஆகிய மூன்று பிரிவினரின் மக்கள் தொகை எவ்வளவு என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் சென்சஸ் ஆப் இந்தியா இணையதளத்தின் பின்வரும் இணைப்பில் சென்று அதை டவுன்லோடு செய்து தெரிந்து கொள்ளலாம்.
https://t.co/0PCqKBTTy7
அவ்வாறு டவுன்லோடு செய்ய முடியாதவர்கள் திரு கிறிஸ்துதாஸ் IAS Retd அவர்கள் சென்சஸ் விவரங்களைத் தொகுத்துத் தயாரித்த இந்த அட்டவணையில் அதைப் படித்துக்கொள்ளலாம்.
- ரவிக்குமார் எம்.பி
கடந்த 5 ஆண்டுகளாக கச்சா எண்ணைக்கு செஸ் வரி வசூல் செய்யப்பட்ட விவரங்களையும் அதனை செலவு செய்த விவரங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். அதற்கு மாண்புமிகு நிதியமைச்சர் ��ிர்மலா சீத்தாராமன் அவர்கள் கீழ்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு:
---------------------------
உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரமுண்டு என்னும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம்!
கிரீமிலேயர் முறையைப் பற்றிக் கூறியுள்ள கருத்தைப் புறந்தள்ள வேண்டும்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
---------------------------
எஸ்சி பட்டியலில் உள்ள சாதிகளைப் பிரித்து உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு அரசு அருந்ததியர் சமூகப் பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க இய���்றியுள்ள சட்டமும் செல்லுபடி ஆகும் என்றும் அது தெரிவித்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.
அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அன்றைய முதலமைச்சர் திரு. கலைஞர் அவர்கள் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதனை வரவேற்று ஆதரித்துக் கருத்துகளைத் தெரிவி���்தது. தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டமும், அது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எடுத்த நிலைப்பாடும் மிகச் சரியானவை என்பதை இன்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்புப் புலப்படுத்தி உள்ளது.
இந்தத் தீர்ப்பை அளிக்கும் போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு உரிய ஆதாரங்களை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதுவும் வரவேற்கத்தக்கதேயாகும்.
ஏழு நீதிபதிகள் கொண்ட இந்த பேரமர்வில் சில நீதிபதிகள் எஸ்சி பிரிவினருக்கும் "கிரீமி லேயர்" என்னும் வருமான வரம்பை அளவுகோலாகக் கொள்ளு��் ஒரு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், முதல் தலைமுறையில் இட ஒதுக்கீடு பெற்று முன்னேறிவிட்டால் அவர்களுக்கு மீண்டும் இட ஒதுக்கீட்டுச் சலுகை வழங்கக் கூடாது என்றும் கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
எஸ்சி பிரிவினருக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு மாநில அரசுகளாலும், ஒன்றிய அரசாலும் எந்தத் துறையிலும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது இல்லை. அவர்கள��க்கு அளிக்கப்பட வேண்டிய பல்லாயிரக்கணக்கான பணியிடங்களைக் காலியாக வைத்திருந்து அவற்றை மற்றவர்களைக் கொண்டு நிரப்பும் தந்திரத்தை மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் நெடுங்காலமாகப் பின்பற்றி வருகின்றன. இதனால் இலட்சக்கணக்கான பின்னடைவு காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்காகப் பல வழக்குகள் தொடுக்க��்பட்டு நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கின்றன.
இட ஒதுக்கீடே நிறைவு செய்யப்படாத நிலையில் கிரீமி லேயர் முறையைப் புகுத்தி இட ஒதுக்கீட்டுக்குத் தகுதியானவர்களை நீக்க முயற்சிப்பது எந்த விதத்திலும் நீதி ஆகாது.
எஸ்சி மக்களின் பணி நியமனம், பதவி உயர்வு முதலான விஷயங்களில் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் எதிரான தீர்ப்புகளையே வழங்கி வருகிறது. நீதித்துறையில் சமூக நீதி இல்லை என்பதன் விளைவே இது. இந்தத் தீர்ப்பில் கிரீமி லேயர் தொடர்பான கருத்துக்கள் ஆணையாகப் பிறப்பிக்கப்படவில்லை.
எனவே, அவற்றை நீதிபதிகளின் கருத்துகளாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, தீர்ப்பின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அதைப் புறக்கணிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறோம்.
உள் ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருக்கிறது என்ற இந்தத் தீர்ப்பை சில மாந���ல அரசுகள் தமது அரசியல் இலாபத்துக்காகப் பட்டியலின மக்களின் ஒற்றுமைக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடும். அது குறித்த விழிப்புணர்வோடு இந்தப் பிரச்சனையை அணுக வேண்டும் என்றும் சுட்டிக் காட்டுகிறோம்
இவண்:
தொல் திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
⚡ பீகார் கொண்டு வந்த 65% இட ஒதுக்கீட்டை ஏற்காத உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டின் 69% ஒதுக்கீட்டை ஏற்றுள்ளது
⚡ எடப்பாடி கொண்டு வந்த 10.5% ஒதுக்கீட்டை ஏற்காத அதே உச்ச நீதிமன்றம் கலைஞரின் அருந்ததிருக்கான 3.5% ஒதுக்கீட்டை ஏற்றுள்ளது
⚡ அத்துடன் அதனை இந்தியாவில் உள்ள ஒவ்வொர��� மாநிலமும் பின்பற்றிக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது
ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் திமுக தனது சட்டப் போராட்டங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல இந்தியாவிற்கே வழிகாட்டி இருக்கிறது பலமுறை..
சந்து முழுக்க இந்த தீர்ப்பை கொண்டு சொல்லுங்க
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் மலைச்சாமி படுகொலை!
துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கைக் கடற்படையினரை கொலை வழக்கில் கைதுசெய்ய வேண்டும்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
------------------------------
இராமேஸ்வரம் பகுதியில் புதன்கிழமை இரவு சுமார் 2000 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் கார்த்திகேயன் என்பவரின் படகு சேதம் அடைந்ததால் நான்கு மீனவர்கள் கடலில் குதித்துள்ளனர். அவர்களில் மலைச்சாமி, மூக்கையா, முத்து முனியாண்டி ஆகிய மூவரையும் இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. கடலில் குதித்த ராமச்���ந்திரன் என்பவரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.
இலங்கைக் கடற்படையின் தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர் மலைச்சாமி இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள புங்குடு தீவு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் இறந்து விட்டதாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது. இந்த மரணம் விபத்தினால் ஏற்பட்டது அல்ல; இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலால் உண்டானதாகும். எனவே, இலங்கைக் கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்துவதும், அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்வதும், மீனவர்களை சிறையில் அடைப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவ மக்களும் தமிழ்நாடு அரசும் இந்திய ஒன்றிய அரசைப் பலமுறை வலியுறுத்தியும் கூட இதில் உருப்படியான எந்த நடவடிக்கையையும் ஒன்றிய பாஜக அரசு எடுக்க மறுக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய குடிமக்களாக இந்திய வெளியுறவுத்துறை கருதுவதில்லை. அவர்களை இரண்டாந்தர குடிமக்களாகவே கருதுகிறது என்பதே இதற்குக் காரணம்.
இலங்கைக் கடற்படையின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தவும், இலங்கைச் சிறைகளில் ��ாடும் தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கவும், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை மீட்டுத் தரவும் இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
“கும்பல் கொலையாளிகளை ஊக்குவிக்கும் புதிய கிரிமினல் சட்டங்கள்”
மாண்புமிகு உள்துறை அமைச்சர் ��மித்ஷா அவர்களுக்கு நானும் தோழர் ரவிக்குமார் அவர்களும் கடிதம் அ��ித்தோம்.
அந்தக் கடிதத்தில் :
“ புதிதாக மற்றும் அவசரமாக இயற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக பரவலான எதிர்ப்புப் போராட்டங்கள் நாடெங்கும் நடந்துவருகின்றன. மக்களவையிலிருந்து எம்.பி.க்கள் பெருமளவில் இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர் எந்த விவாதமும் இன்றி இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து, சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இந்த மூன்று சட்டவிரோத சட்டங்கள��யும் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தச் சட்டங்களுக்கு எதிரான எதிர்ப்பை நியாயப்படுத்த இன்னும் ஒரு வலுவான காரணத்தைக் கூற விரும்புகிறேன்.
1992 இல் பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு, நாடு முழுவதும் பரவலான வன்முறை வெடித்தது, இதன் விளைவாக பல ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள். அந்தச் சூழலில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, ஒரு புதிய விதி, பிரிவு 144A, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (CrPC) ஒன்றிய அரசால் சேர்க்கப்பட்டது. அந்தப் பிரிவு எந்தவொரு ஊர்வ���த்திலும் ஆயுதங்களையோ, தடிகளையோ எடுத்துச் செல்வதையும், அத்துடன் பொது இடங்களில் ஆயுதங்களுடன் பயிற்சி ஒத்திகைகள் அல்லது பயிற்சிகளில் ஈடுபடுவதையும் தடைசெய்ய மாவட்ட நீதிபதிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. அதே போல, இந்திய தண்டனைச் சட்டம் (IPC) ஒரு புதிய பிரிவு 153A.A சேர்க்கப்பட்டது. இது "எந்தவொரு அணிவகுப்பிலும் ஆயுதம் ஏந்திச் சென்றாலும், அத்தகைய அணிவகுப்பை ஏற்பாடு செய்தாலும், நடத்தினால���ம் அல்லது ஆயுதங்களைக் கொண்டு வெகுஜனப் பயிற்சியில் ஈடுபட்டாலும், அதற்கு தண்டனையை அறிமுகப்படுத்தியது. CrPC, 1973 இன் பிரிவு 144A இன் கீழ் வழங்கப்பட்ட எந்தவொரு பொது அறிவிப்பு அல்லது உத்தரவை மீறினால் ஆறு மாத சிறைத்தண்டனை மற்றும் 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
"ஆயுதங்கள்" என்ற சொல்லைப் பற்றிய குழப்பத்தைத் தவிர்க்க, இரண்டு சட்டப் பிரிவுகளிலும் விளக்கமும் தரப்பட்டது: துப்பாக்கி���ள், கூர்மையான முனைகள் கொண்ட ஆயுதங்கள், லத்திகள், தண்டாக்கள், குச்சிகள் உட்பட குற்றம் அல்லது தற்காப்புக்கான ஆயுதங்களாக வடிவமைக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட பொருட்களை அது குறி��்கிறது .
பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) 2023 அல்லது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 2023 ஆகிய இரண்டிலும் பிரிவு 144A அல்லது பிரிவு 153A.A ஆகிய இரண்டு பிரிவுகளும் இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.
புதிய சட்டங்களில் வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ள இந்த விடுபடல் வகுப்புவாத அமைப்புகளுக்கு வாள், திரிசூலம் போன்ற ஆயுதங்களைப் பொதுவெளியில் ஊர்வலங்களில் எடுத்துச் செல்ல உதவுகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பு ந���த்தும் அணிவகுப்புகளில் தடிகள் மற்றும் தண்டா போன்ற ஆயுதங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கிறது.
பாஜக ஆட்சிக்கு வந்த 2014 முதல் கும்பல் கொலைகள் அதிகரித்து வருகின்றன என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். இந்தக் கொலைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள் மற்றும் பட்டியல் சாதியினர். பாஜக ஆளும் மாநில அரசுகள் இந்தக் கொலைகளைக் கண்டிக்கவில்லை, ஆனால் கொலைய���ளிகளைக் கொண்டாட வகுப்புவாத அமைப்புகளுக்கு அனுமதித்தன.
வாள்கள், திரிசூலங்கள் மற்றும் தடிகள் போன்ற ஆயுதங்களைப் பகிரங்கமாக ஏந்திச் செல்ல அனுமதிப்பது சமூகத்தில் குற்றவாளிகளை ஊக்குவிக்கிறது. அதனால் நாடு முழுவதும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. அதற்கு என்சிஆர்பியின் ஆண்டு அறிக்கைகளே சாட்சியாக உள்ளன.
எனவே, வகுப்புவாத சக்திகளின் வன்முறைச் செயல்களைத் தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அதற்கு, BNSS இல் முந்தைய CrPC இன் பிரிவு 144A மற்றும் BNS இல் IPC இன் பிரிவு 153A.A ஆகியவை சேர்க்கப்படுவது மிகவும் அவசியமானது என்பதை சுட்டிக் காட்டுகிறேன்.”
இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளராக களம் காணும் கமலா ஹாரிஸ் @KamalaHarris தமிழர்களால் கொண்டாடப்பட வேண்டியவர் தான்.
தமிழ���ம் அவர் பூர்வீகம் என்பதற்காக மாத்திரம் அல்ல, அவர் ஷ்யாமளா கோபாலன் - டொனால்டு ஹாரிஸ் என்கிற கலப்புமண தம்பதியினருக்கு பிறந்த குழந்தை என்பதால் அவர் கொண்டாடப்பட வேண்டியவர். சாதி,மதம், இனம் என எல்லா வரைவெல்லைகளையும் கடந்த காதல் தம்பதியருக்கு பிறந்த கமலா ஹாரிஸை கொண்டாடுவோம்.
Kamala Harris deserves to be celebrated as a presidential candidate in the US Elections.
Not just because she has roots in Tamil Nadu, but because she is the daughter of Shyamala Gopalan and Donald Harris—a union that transcends caste, religion, and race. She represents the spirit of breaking barriers and fostering unity.
#KamalaHarris #BreakingBarriers
#UnityInDiversity #Love