“நாங்க இருக்கோம். மீண்டும் வருவோம்!” - இதுதான் அறிவாலயத்தில் நான் கேட்கும் உடன்பிறப்புகளின் குரல்.
நாள்தோறும் அறிவாலயத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் புது உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கின்றனர்.
உடன்பிறப்புகளின் உணர்வுகளை உள்வாங்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த நூறாண்டுகளுக்கான பயணத்தைத் திட்டமிடும் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், இருவாரப் பயணமாக நாளை அயலகம் செல்கிறேன்.
அயலகத்தில் இருந்தாலும் அறிவாலயத்தில்தான் என் மனம் இருக்கும்!
#LetterToBrethren
'ஆளுநர் ஆய்வு செய்தார்' என்ற கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, தற்போதைய குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது.
மதுரை சென்றிருந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தான் நியமன பதவியில் - அதுவும் கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தி இருக்கிறார்.
அரசியலமைப்புக்கும் - மாநில உரிமைக்கும் எதிரான இந்த செயலில் ஈடுபட்ட ஆளுநருக்கும், இதை அனுமதித்த #SofaModel அரசிற்கும் கடும் கண்டனங்கள்.
ஆளுநர் மாளிகையின் பராமரிப்பே தமிழ்நாடு அரசிடம் இருக்கும் போது, வைகையை அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை களம் இறங்கும் என்று அடாவடியாக பேசி இருக்கிறார். ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்.
ஆளுநர் பங்கேற்ற அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படும் அளவுக்கு, என்ன Compromise செய்யப்பட்டது என்று சட்டமன்றத்தில் கேட்டிருந்தோம்.
அதற்கு உரிய பதிலைச் சொல்லாத ஆளுங்கட்சியினர், இன்றைக்கு ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளை compromise செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
சட்டத்துக்குப் புறம்பாக அடுத்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களை Panic buying செய்யும் ஆளுங்கட்சி, ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற anxiety-யில் அவரது ஆய்வை அனுமதிக்கிறதா?
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் ஆய்வுகளில் ஈடுபட்ட போது, அவர் சென்ற இடங்களில் எல்லாம் கழகத்தினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தோம். கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் அனுமதித்ததில்லை.
ஆகவே, மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளைத் தாரை வார்க்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குழந்தை டானிக் சாப்பிட மாட்டேன் என அடம் பிடிச்சா-
அதான் பீச் தண்ணீரில் நடந்து கொண்டே டானிக் குடிக்குலாம் என குழந்தைக்கு உற்சாக படுத்திய போது கிளிக்கியது..
மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.
“தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
#SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
பாஜக ஆட்சியில் கூட ஒரு நாளைக்கு இவ்வளவு பாலியல் வழக்கு பதிவு ஆகி இருக்காது! பெண் குழந்தைகள், பெண்கள், வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு அறிவிக்கப்பட்டது..
#sexualvoilance#tamilnadu#tvkvijayfails#womens
இந்த GO வை தான் GRS அமர்வு ரத்து செய்துள்ளது.
வேண்டுமென்றே RSS இந்துத்துவ கும்பலை திருப்தி படுத்த இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்படும் இட ஒதுக்கீட்டு ரத்து, மாடு பலியிட தடை எனும் அவர்களின் கோரிக்கையை நிலைநிறுத்த விஜய் அரசு நீதிமன்றங்களில் மொக்கையான வாதங்களை முன்னெடுத்ததா?
முதல்வர் விஜய் தனக்கு உள்ளார இருக்கும் இஸ்லாமிய வெறுப்பை திரைப்படங்களில் காட்டியதை தொடர்ந்து இப்பொழுது அரசு அதிகாரத்திலும் காட்டுகிறாரா?
சட்டத்துறை சங்கி அமைச்சர் நிர்மல்குமார் இதுகுறித்து வாய் திறக்காமல் இருப்பது ஏன்?
மக்கள் அழுத்தம் குடுத்து போராடிய பின்னர் தான் மேல்முறையீடு செய்வீர்களா?
ஒளிந்திருந்த பூனை இவ்வளவு சீக்கிரம் வெளியே வரும் என எதிர்பார்க்கவில்லை!
தேசியக் கல்விக் கொள்கை - 2020ன் ஒரு அங்கமாக APAAR(Automated Permanent Academic Account Registry) Card வழங்கும் திட்டம் உள்ளது. அதாவது “ஒரே நாடு ஒரே அடையாள அட்டை” என்ற அடிப்படையில் நமது தமிழ்நாட்டு மாணவர்களின் சுயவிவரத்தை ஒன்றிய அரசிடம் (அதிகாரப்பூர்வமாக!) ஒப்படைக்கும் திட்டம். இதைத்தான் வேறு வடிவத்தில் அமல்படுத்த இருக்கிறார்கள் என்பது த.வெ.க. அரசின் அமைச்சர் பேசியிருப்பதில் இருந்து தெரியவருகிறது. அதுவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க!
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கவே மாட்டோம் என்றவர்கள், இதுபோன்ற செயல்களில் இறங்கியுள்ளார்கள்.
“இரண்டாயிரம் கோடி என்ன? 10000 கோடி கொடுத்தாலும் NEP-2020ஐ ஏற்க மாட்டோம்” எனச் சொன்ன எங்கள் கழகத்தலைவர் அவர்களின் நெஞ்சுரம் இந்த ஆட்சியாளர்களுக்கும் வேண்டும். அது இல்லாமல் தேவையின்றி நமது மாணவர்களின் அடிப்படைத் தகவல்களை ஒன்றிய அரசிடம் தட்டில் வைத்து மரியாதையோடு கொடுக்கும் வேலையை அறவே கைவிட வேண்டும்.
சட்டமன்றத்தில் நடக்காத ஒரு விஷயத்தை உண்மை சம்பவம் போல பத்திரிகையாளர்களிடம் விஷத்தை கக்கியுள்ளார் தவெகவின் நிழல் முதல்வர் ஆதவ் அர்ஜுனா.
அம்மையார் ஜெயலலிதா அவர்களுடன் உடன் இருந்த திருநாவுக்கரசர் அப்படி எந்த ஒரு சம்பவமும் சட்டமன்றத்தில் நடக்கவில்லை என்று தெளிவாக சொல்லியுள்ளார் மங்குனி அமைச்சரே!
#TVKLies
திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. எ.வ. வேலு அவர்களின் வீட்டில் தமிழ்நாடு அரசின் DVAC ரெய்டு நடத்தி வருகிறது. அதற்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் அவர் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார்.
அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு.
ஆளும்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள். இதையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்!
@evvelu
திரு @svembu சொல்வது போல் திமுக ஆட்சியில் அப்ரூவல் பெற காத்திருந்தார் என்பது உண்மைக்கு மாறான தகவலாக உள்ளது.
1. இவரின் Kalaivani Kalvi Maiyam என்பது ஒன்றிய அரசின் கல்வித்துறையின் கீழ் இயங்கும் National Institute of Open Schooling வகையை சார்ந்தது. இதன் ஒப்புதல் அனைத்தும் ஒன்றிய அரசை சார்ந்து இருக்கும் போது எதற்காக திமுக அரசின் முடிவுக்கு காத்திருந்தார் என்று விளக்க வேண்டும்
2. இவருடைய கல்வி நிறுவனம் கடந்த திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பின், இந்த தவெக அரசு வந்து என்ன அப்ரூவல் கொடுத்தார்கள் என்ற விளக்கமும் இல்லை.
3. இவர் சொல்வது போல் திமுக அரசு அப்ரூவல் கொடுக்காத பள்ளிக்கு கடந்த ஆண்டு 2025 செப்டம்பர் மாதம் ஒன்றிய கல்வி அமைச்சர் சென்று பார்வையிட்ட நிகழ்வும் நடந்துள்ளது என்பது முரணாக இருக்கிறது
இவர் போன்ற பாஜக ஆதரவாளர்கள் எல்லாம் திமுக அரசில் ஊழல் இருந்ததாகவும் அதை தவெக அரசு முற்றிலும் ஒழித்து விட்டது என்ற பிம்ப தோற்றத்தை உருவாக்கவே இது போன்ற கட்டுக்கதைகளை அவிழ்த்து வருகிறார்கள்
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா வரை அறிமுகமான நபரின் பள்ளிக்கு திமுக அரசில் லஞ்சம் கேட்டு இருந்தால் அவர்களால் இதை வைத்தே அன்றைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களை கைது செய்து உள்ளே வைத்திருப்பார்கள்
மாற்றம் என்ற பெயரில் நம்மேல் திணிக்கப்பட்ட இந்த தவெக அரசு தமிழ்நாட்டின் சர்வலோக நிவாரணி என்று மக்களை நம்ப வைக்க முயற்சி செய்கிறார்கள்
மக்களும் நம்புவார்கள் என்று எதிர்பார்ப்போம்.! வைப் செய்து வாழ பழகிக் கொள்வோம்.!
I have written to the Union Minister for Coal and Mines, urging the Government of India to immediately reconsider and withdraw the proposed sale of a 3% stake in Neyveli Lignite Corporation (NLC) India Limited, a Schedule 'A' Navratna Central Public Sector Enterprise (CPSE).
This proposal has caused widespread concern among employees, trade unions, and the public. I have urged the Union Government to withdraw the stake sale and take appropriate steps to safeguard the interests of all stakeholders, while protecting the strategic and public-sector character of NLC.
வேம்பு சார் திமுக மீதுள்ள வெறுப்பில் தன் பள்ளிக்கு முந்தைய அரசு approval கொடுக்கல என்றும் இப்போது தவெக அரசு தான் அப்ரூவல் கொடுத்தது என்றும் ஒரு பதிவு போட்டு இருக்கார்
அவரே 2024 ஆம் ஆண்டு அந்த பள்ளி செயல்பட்டுட்டு இருக்குன்னு ஏற்கனவே பதிவு போட்டு இருக்கார் 🤭🤭🤭
#தவெக அரசுக்கு ஆதரவா சொல்லணும் என பெரிய பெரிய ஆட்களே தவறான தகவல்களை பரப்ப ஆரம்பிச்சிட்டு இருக்காங்க 😌😌😌
இதில் இன்னொரு முக்கியமான விஷயம்.. அது Matriculation பள்ளியே அல்ல.
அது NIOS எனும் திறந்தவெளி பல்கலைக்கழக மாடலில் செயல்படும் ஒரு சிறப்பு பள்ளி.
அதற்கான அனுமதி வழங்குவது மத்திய அரசு
பாஜக & தவெக ஆதரவாளர்கள் எதை சொன்னாலும் அது உண்மையா என ஒருமுறை சரிபார்த்து கொள்வது நல்லது. சர்வ சாதாரணமா கூச்சமே இல்லாம அரசியலுக்காக பொய்களை சொல்ல பழகிட்டாங்க
(சுயமா சிந்திக்க விரும்புபவர்களுக்கான பதிவு)
🙏🙏🙏🙏
கழகத்தின் #GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதே போல சமீபத்தில், Gen Z கூட்டத்தில் பேசிய கனி எனும் தம்பி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தம்பி கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தம்பி கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்தது.
கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் - அரசையும் எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது… இது தான் மாற்றமா?
நிர்வாகத்திறனற்ற #SofaModel அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையில் எடுத்து இருக்கிறார்கள்.
கழக இளைஞர்களை காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கிறேன்.