சேலம் அரசுப்பள்ளியில் வடமாநில ஆசிரியர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு எப்படி அனுமதித்தது? இதுதான் தவெக அரசு மாநில உரிமைகளைக் காக்கும் முறையா?
@CMOTamilnadu@TVKVijayHQ
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள குப்பூரில் அரசு மேல்நிலை மாதிரிப் பள்ளியில், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகளை நடத்த குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 5 பேரை ஆசிரியர்களாக நியமனம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டில், தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில், தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளியில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன?
யாருடைய உத்தரவின் பேரில் அரசுப் பள்ளியில் வட மாநிலத்தவர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்?
தமிழ் தெரியாத வடமாநிலத்தவர்களை ஆசிரியர்களாக நியமித்தால் மாணவர்களுக்குப் புரிதல் குறைபாடு ஏற்பட்டு அவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படாதா?
நீட் தேர்வை நடத்தும் பொறுப்பை அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைத்தபோதே நம் நாட்டில் தரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டுமென்று அமெரிக்க முதலாளிக்கு என்ன அக்கறை இருக்கப்போகிறது? என்ற கேள்வியை நான் எழுப்பினேன். அதைப்போலவே தமிழ்நாட்டு மாணவர்கள் இந்திய அளவிலான போட்டித் தேர்வில் வெல்ல வேண்டும் என்று வடமாநிலத்தவருக்கு என்ன அக்கறை இருக்கப்போகிறது?
அண்மையில் இப்பள்ளியில் பயின்ற 5 மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு தேர்வான நிலையில், அதனைக் கெடுப்பதற்காகவே வட மாநில ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனரா?
வேலையில்லா பட்டதாரிகளுக்கு 4000 ரூபாய் தருவதாகக் கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை இப்பொழுது அவர்களுக்கான வேலைவாய்ப்பையும் சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழக நடத்துநர்கள் நியமனம் தொடங்கி ஆசிரியர் பணி நியமனம் வரை வெளிமாநிலத்தவர்களுக்குக் கொடுத்துப் பறிப்பது என்ன நியாயம்?
தமிழ்நாட்டில் இத்தகைய தேர்வு பயிற்சிகளை வழங்குவதற்கான அறிவும், திறனும் வாய்ந்த ஆசிரியர் பெருமக்களே இல்லையா? பல இலட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் படித்துப் பட்டம் பெற்று, பல ஆண்டுகளாக வேலையின்றி வீதியில் போராடிக் கொண்டிருக்கும்போது, வட மாநிலத்தவரை தமிழ்நாட்டில் ஆசிரியர்களாக நியமிப்பது ஏன்?
தூய்மைப்பணியாளர்கள், நடத்துநர்கள், ஆசிரியர்கள் என்று அடுத்தடுத்து அரசுப் பணியிடங்கள் அனைத்துமே தனியார் நிறுவனத்தால் நியமிக்கப்படுவார்கள் என்றால் அரசுத்துறைகளின் வேலைதான் என்ன? அனைத்துமே தனியார் முதலாளிகள்தான் தீர்மானிப்பார்கள் எனில், அரசுக்கு பொதுப்பணி, போக்குவரத்து, உயர்கல்வி, பள்ளிக்கல்வி என்று தனித்தனி துறைகள் எதற்கு? தனித்தனி அமைச்சர்கள் எதற்கு? இது என்ன மாதிரியான மாற்று?
ஏற்கனவே, முதலமைச்சரிடம் முதன்மையாக எந்தத் துறைகளும் இல்லை. அனைத்து முக்கியத் துறைகளும் மற்ற அமைச்சர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமைச்சரும் மூன்று நான்கு முதன்மையான துறைகளை வைத்துள்ளார்கள். எல்லாத் துறைகளையும் அமைச்சர்களிடம் அளித்துவிட்டால் முதலமைச்சரின் வேலை என்ன? ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் வெளியிடுவது மட்டும்தானா?
வேளாண்துறை அமைச்சரிடம் கேள்வி கேட்டால் விளையாட்டுத்துறை அமைச்சர் பதில் சொல்கிறார். போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் கேள்வி கேட்டால் பொதுப்பணித்துறை அமைச்சர் பதில் சொல்கிறார். நீர்வளத்துறைப் பற்றிக் கேள்வி கேட்டால் அறநிலையத்துறை அமைச்சர் பதில் சொல்கிறார். சுற்றுலா குறித்த கேள்விக்குச் சுற்றுச்சூழல் அமைச்சர் பதில் சொல்கிறார். யாருக்கு எந்த அமைச்சகம்? யார் எந்தத்துறையின் அமைச்சர் என்பதே இன்னும் முழுமையாக முறைப்படுத்தப்படவில்லை. இப்போது அமைச்சர்களுக்கும் எந்த வேலை இல்லை என்ற அளவிற்கு, அனைத்து துறைகளின் பணிகளுமே தனியார் நிறுவனம் மூலம் வடமாநிலத்தவரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
தவெக ஆட்சியில் தமிழ்நாட்டின் பணிநியமனங்கள் அனைத்தும் வடமாநிலத்தவரைக் கொண்டு நிரப்பப்படுவதை, தமிழிளம் தலைமுறைப்பிள்ளைகள் இனியும் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இத்தகைய கொடுமைகள் தொடர்ந்தால் விரைவில் நாம் தமிழர் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாடக்கோரும் தமிழகச் சட்டமன்றத் தீர்மானம் வரவேற்புக்குரியது!
தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள தீர்மானத்தை முழுமையாக வரவேற்கிறேன்.
-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
@CMOTamilnadu@TVKVijayHQ
Relaxed ஆ இருங்க.. Cool..Cool என புத்தரின் தவப்புதல்வர் போல இரண்டு நாட்களுக்கு முன்புப் பேசிய அமைச்சர் மரிய வில்சன் இப்போது எதற்குப் பொங்குகிறார்?
தமிழையே வாசிக்கத் தெரியாது உளறிக் கொட்டினால், தமிழையே தப்பும், தவறுமாகப் படிக்காத தற்குறி முண்டமே எனும் குரல்கள் வரத்தானே செய்யும்!
கங்கா ,சந்திரமுகியாக மாறிய தருணம்
தனது சகோதரர் வீட்டில் ஆவேசமாக சண்டையிட்ட அமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையிலும் அதே போல குணத்தை இன்று வெளிப்படுத்தினார்.
தமிழ் படிக்க தெரியவில்லை எனில் விமர்சனம் வரதான் செய்யும். விமர்சனத்தை ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொள்ள வேண்டும் அதை விடுத்து உறுப்பினர்களை மிரட்டக் கூடாது.
மதம் பின்னாலும் ஒளிய வேண்டாம்.
தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாடக்கோரும் தமிழகச் சட்டமன்றத் தீர்மானம் வரவேற்புக்குரியது!
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள தீர்மானத்தை முழுமையாக வரவேற்கிறேன்.
மொழியை ஏற்றிருக்கிற நிலம்தான் தேசமாகவும், மொழியை அடிப்படையாகக் கொண்டுள்ள மக்கள் கூட்டம்தான் தேசிய இனமாகவும் வரையறுக்கப்படுகிறது. ஒரு இனத்தின் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, வழிபாடு, வாழ்வியல், அரசியல் எல்லாம் மொழியிலிருந்துதான் பிறக்கிறது. அதனால்தான், மொழியைத் தாயென்று போற்றுகிறோம். மொழியே ஒரு இனத்தின் முகம், முகவரி, அடையாளம் என எல்லாவுமாகத் திகழ்கிறது. தமிழர்களின் வரலாற்றுத் தாயகமான தமிழ்நாட்டில் தமிழை முதன்மைப்படுத்தப்பட வேண்டியது தமிழர் நிலத்தை ஆளுகை செய்யும் ஆட்சியாளர்களின் தார்மீகக் கடமையாகும். அந்தவகையில், தமிழர் தாய்நிலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்படுவதை உறுதிசெய்ய முன்வர வேண்டும். அதுவே தமிழ்த்தேசிய இனத்தின் இறையாண்மையையும், தமிழர்களின் தன்மான உணர்வையும் மதித்துப் போற்றுவதாக அமையும். அதுபோல, ஒவ்வொரு தேசிய இனத்தின் தாயகத்திலும் அந்தந்த இனத்தின் தாய்மொழியைப் போற்றும் பாடலே முதன்மையாக இடம்பெற வேண்டும்.
வேறுபட்ட மொழி, பண்பாடு, வாழ்வியல் கொண்ட வெவ்வேறு தேசிய இனங்கள் ஒன்றுபட்டு, ஒரே நாட்டுக்குள் வாழ்வதால்தான் வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டின் பன்மைத்துவம் போற்றப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளைவிட அதிக மாறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், இந்நாட்டில் பல்வேறு மொழிவழித் தேசிய இனங்கள் ஒரே நாட்டுக்குள் ஒன்றிணைந்து வாழ்வதைக் கண்டு, உலக நாடுகள் வியக்கின்றன. அத்தகைய தேசிய இனங்களின் தன்னுரிமையையும், தனித்துவ அடையாளத்தையும் பாதுகாப்பதே இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டுக்கு
ஏற்றதாகும். மாறாக, தேசிய இனங்களின் உரிமைகளை மறுத்து ஒற்றை மொழியையும், ஆதிக்கத்தையும் திணிக்க முற்பட்டால், அது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு உணர வேண்டும்.
ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம், ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே வரி, ஒரே இராணுவத்தளபதி, ஒரே உணவுச்சந்தை என எல்லாவற்றையும் ஒற்றைமயப்படுத்தும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, நாட்டுப்பண்ணை மட்டும் இரண்டாகத் திணிப்பது கேலிக்கூத்தாகும். மதச்சார்பு கொண்ட ‘வந்தே மாதரம்’ எனும் பாடலை வலியத் திணிப்பதும், தேசிய இனங்களின் மொழியைப் போற்றும் பாடலை பின்னுக்குத் தள்ளுவதுமானப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்த்தாய் வாழ்த்தே தமிழ்நாட்டில் முதன்மைப்பாடலாகப் பாடப்பட வேண்டும் எனும் தமிழர்களின் ஒருமித்தக் கருத்தோட்டத்தின் விளைவாக, தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாட வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றிய ஆளும் தவெக அரசுக்கும், மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் விஜய் அவர்களுக்கும், தீர்மானத்தை ஆதரித்துத் துணைநின்ற அனைத்துக்கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
மக்களை அரசியல்படுத்தவேண்டிய அவசியமில்லை
ஆட்சியமைக்க திரைக்கவர்ச்சியே போதுமானது என்ற நிலையில் தமிழ்நாட்டை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது காலம்.
முழு காணொளி
https://t.co/WVBkVuq6ip
“மேகதாது அணை”
ஒரு முக்கியமான கேள்வியை நாம் நம்மிடம் கேட்க வேண்டும்.
மேகதாது அணை கட்டப்படுகிறதா, இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும்…
தமிழ்நாட்டிற்கு வரும் ஒவ்வொரு துளி தண்ணீரையும் நாம் முழுமையாகப் பாதுகாக்கிறோமா?
மழை பெய்யும்போது அந்தத் தண்ணீரை எவ்வளவு சேமிக்கிறோம்?
நம்முடைய ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் உயிரோடு இருக்கிறதா?
நிலத்தடி நீரை நாம் மீண்டும் நிரப்புகிறோமா?
மழைநீர் கடலுக்குச் சென்று வீணாகாமல், கடலுக்கு தேவையானதை மட்டும் அனுப்பிவிட்டு மீதமுள்ள நீரை நமது நீர்நிலைகளுக்குள் கொண்டு வருகிறோமா?
இதுதான் நாம் இப்போது சிந்திக்க வேண்டிய நேரம்.
நமக்குத் தேவையானது ஒரு அணையைப் பற்றிய விவாதம் மட்டுமல்ல… ஒரு முழுமையான நீர்ப்பாதுகாப்புத் திட்டம்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஏரி, குளம், கண்மாய், ஊரணி ஆகியவற்றை மீட்டெடுக்க வேண்டும்.
மழைநீரை சேமிக்க வேண்டும்.
நீர்நிலைகளை ஒன்றோடொன்று இணைக்க வேண்டும்.
நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டும்.
விவசாயத்தில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
அதிலும் முக்கியமாக,
“தண்ணீர் வந்த பிறகு சேமிப்போம்” என்ற மனநிலையிலிருந்து, “தண்ணீர் வரும் முன்பே சேமிப்போம்” என்ற மனநிலைக்கு நாம் மாற வேண்டும்.
“மேகதாது விவகாரம் எப்படியிருந்தாலும், தமிழ்நாடு வெளிப்புற நீர்வரத்தை மட்டும் சார்ந்திருக்காத அளவுக்கு நீர்ப்பாதுகாப்பை உருவாக்க வேண்டும்!”
அதற்காக அரசாங்கம் மட்டும் அல்ல…
அரசு, விவசாயிகள், தொழில்துறையினர், பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள், என
அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
நாம் தண்ணீருக்காக அடுத்த தலைமுறையுடன் போராட வேண்டாம்.
அடுத்த தலைமுறைக்காக இன்றே தண்ணீரைச் சேமிப்போம்.
நீரைக் காப்போம்…
நீர்நிலைகளைக் காப்போம்…
நம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காப்போம்.
“நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!”
-நிமல் ராகவன்.
மின் பாதை திட்டத்திற்காக மரங்கள் வெட்டி சாய்ப்பு.. 10 ஆண்டுகளாக ஆசை, ஆசையாக வளர்க்கப்பட்ட மரங்கள் கண் முன்னே வெட்டப்பட்டதும் மரங்களை கட்டி அணைத்தபடி பெண் கண்ணீர்
#Kallakurichi | #Trees | #Women | #PolimerNews
அன்றைக்கு #Delimitation மக்கள் பிரச்சினையே இல்லை என்றவர், இப்போது எதற்கு அதனைக் காரணமாகக் காட்டி, அனைத்துக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டுகிறார்?
காவிரிச்சிக்கலுக்காக அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டாது மடைமாற்றம் செய்யத்தானே!
இதெல்லாம் ஒரு பொழப்பா முதல்வரே? @TVKVijayHQ
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களையும், பொறுப்பாளர்களையும் குறித்து உண்மைக்குப் புறம்பான அவதூறு காணொள்ளி வெளியிட்டுவரும் ஆல்டன் பி. நெல்சன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் கொடுக்கப்பட்டது