சென்னையில் இன்று நடைபெற்ற சன் குழுமத்தலைவர் அண்ணன் கலாநிதி மாறன் அவர்களின் அன்பு மகள் காவ்யா மாறன் - இசை அமைப்பாளர் சகோதரர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று, காவ்யா - அனிருத் இணையரை வாழ்த்தி மகிழ்ந்தோம்!
Greece நாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற சன் குழுமத்தின் தலைவர் அண்ணன் கலாநிதி மாறன் அவர்களின் அன்பு மகளும், Sun Network-ன் செயல் இயக்குநருமான #KavyaMaran - இசை அமைப்பாளர் சகோதரர் @anirudhofficial ஆகியோரின் திருமண விழாவில் குடும்பத்தினரோடு பங்கேற்று மணமக்களை வாழ்த்தினோம்.
இல்வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள காவ்யா - அனிருத் இணையர் தமிழ் போல் - இசை போல் பல்லாண்டு வாழ்க!
கழகத்தின் மூத்த உடன்பிறப்பு காசி தாத்தாவை இன்று சந்தித்தோம். முரசொலியை அரசியல் அரிச்சுவடியாக்கி இன்று வரை கொள்கை உறுதியோடு பயணிக்கும் காசி தாத்தா நம் கழகத்தின் பெருமை!
50 ஆண்டுகளுக்கு மேலாக தான் பெற்ற உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் - மாநாட்டிற்காக அவர் அச்சடித்த போஸ்டர்கள் - பத்திரப்படுத்திய கலைஞரின் கடிதங்கள் - கருப்பு, சிவப்பு திருமண அழைப்பிதழ்கள் என்று கழக வரலாற்றைச் சேமித்து வைத்திருக்கிறார் காசி தாத்தா.
கலைஞரின் உடன்பிறப்புகளுக்கே உரிய வேகமும் - துணிச்சலும் காசி தாத்தாவிடம் இன்றும் சற்றுக்கூட குறையவில்லை. அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி கொள்கிறோம்!
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டம் அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் எம்.எஸ்.பிரேம்குமார், மற்றும் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத் தலைவர் கண்ணன் (எ) ஜி.சுப்ரமணியன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், இன்று (24.10.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், மயிலாடுதுறை மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் எம்.எஸ்.பிரேம்குமார் மற்றும் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத் தலைவர் கண்ணன் (எ) ஜி.சுப்ரமணியன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது, கழகப் பொருளாளர் டி.ஆர்பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் நிவேதா எம்.முருகன், எம்.எல்ஏ., மயிலாடுதுறை மாவட்ட துணைச் செயலாளர்கள் ஞானவேலன், செல்வமணி, மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் பி.எம்.ஸ்ரீதர், அரசு முன்னாள் வழக்கறிஞர் ராமசேயோன், விவசாய அணி பரிதி ஆகியோர் உடனிருந்தனர்.
வாக்குரிமையைப் பறிக்கும் SIR வேண்டாம்! மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டும்!
இன்று நடைபெற்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள்!
🔴 #SIR-ஐ முழுமையாக இரத்து செய்க!
🔴 தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்து விசாரித்திடுக!
🔴 ஜனநாயகத்திற்காகப் போராடும் மாணவர் இயக்கங்களுக்கு முழு ஆதரவு!
🔴 EVM-க்கு மாற்றாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவருக!
SIR விவகாரத்தில் மாநிலத்துக்கு மாநிலம் மாறும் காங்கிரசின் நிலைப்பாட்டுக்கும், த.வெ.க.வின் மவுனத்துக்கும் கடும் கண்டனம்!
மக்களின் வாக்குரிமையையும் இந்திய ஜனநாயகத்தையும் பாதுகாக்க, #SIR இரத்து மற்றும் வாக்குச்சீட்டு முறை ஆகிய இரு கோரிக்கைகளை வலியுறுத்திக் குடியரசுத் தலைவரிடம் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு அளிப்பார்கள்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (10.10.2026) மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 148-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சாலை சிம்சன் அருகேயுள்ள தந்தை பெரியாரின் திருவுருவச்சிலைக்கு அருகே பெரியாரின் திருவுருவப்படத்திற்கு கழகத்தலைவர் @mkstalin அவர்களுடன் இணைந்து மரியாதைச் செலுத்தினோம்.
பெரியாரின் கொள்கைகளை வென்றெடுப்போம் - சமூக நீதி காப்போம்!!
#சமூகநீதிநாள் #SocialJusticeDay #PeriyarForever
தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு கழக பொதுச் செயலாளர் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகளுடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினோம்.
பேரறிஞர் அண்ணா வழியில் தமிழ் - தமிழர் - தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அயராது உழைப்போம்! #Anna #RememberingAnna
இந்திய திரையுலகின் மிக மூத்த கலைஞர் ‘பத்மஸ்ரீ’ திருமதி.சவுகார் ஜானகி அம்மையார் அவர்கள் மறைந்தது அறிந்து வருத்தமுற்றேன்.
தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். அவரது மரணம் கலையுலகிற்கு பேரிழப்பு.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீதும் - கலைஞர் குடும்பத்தார் மீதும் தனிப்பாசம் கொண்டிருந்தார்.
சவுகார் ஜானகி அம்மையாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திரைத்துறையினர் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
"அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்" என்ற வள்ளுவ நெறியே என் நெறி!
இல்லம் வந்து இன்மொழியால் மனம் நிறைத்திட்ட விடுதலைப் போராளியும் அகவை நூறு கடந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பெருமதிப்பிற்குரிய திரு. லட்சுமி காந்தன் பாரதி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் நன்றி.
Several Christian dignitaries called on me at my residence today and expressed their appreciation for the efforts being undertaken by the DMK in opposing the #FCRA Amendment Bill.
கிறித்துவ சமயப் பெரியோர்கள் பலர் இன்று எனது இல்லத்தில் என்னைச் சந்தித்து, #FCRA திருத்த மசோதாவை எதிர்த்து தி.மு.க. மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குத் தங்களது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தனர்.
பள்ளியில் இடம் பிடிப்பதில் தொடங்கி மறைவுக்கு பின்பு பேரறிஞர் அண்ணா அருகில் இடம் பெற்றது வரை அனைத்தையுமே போராடிப்பெற்ற போர்க்குணம் நிறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாள் இன்று.
நவீன தமிழ்நாட்டை - தனித்துவமிக்க மாநிலமாக உருவாக்கித் தந்த கலைஞரின் நினைவு நாளில்,
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற நினைவு நாள் அமைதிப் பேரணியில் கழக முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டோம்.
நம் உணர்வோடும் உயிரோடும் கலந்திருக்கும் கலைஞர் அவங்களின் புகழ் ஓங்கட்டும்!
#KalaignarForever
சென்னையில் கழகத்தை வளர்த்த தீரர்களில் முக்கியமான ஒருவர்; தி.மு.க.வின் மூத்த உடன்பிறப்புகளில் அனைவரின் அன்பையும் மதிப்பையும் பெற்றவர்.
தலைவர் கலைஞர் அவர்களுக்கும், தலைவர் தளபதி அவர்களுக்கும் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமான அற்புதமான மனிதர்.
என் மீதும், எனது தந்தை மீதும் பேரன்பு கொண்ட அன்பு மாமா, ஆயிரம் விளக்கு உசைன் அவர்கள். ❤️🙏🏾🌄
#DMK #வேர்களை_தேடி
டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க தஞ்சையில் நாளை நடைபெறும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வருகைதந்த கழக இளைஞரணிச் செயலாளர் - மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்களை, திருச்சி விமான நிலையத்தில் கழக நிர்வாகிகள், தொண்டர்களோடு வரவேற்றோம்.
#Cauveryriver #cauverydelta
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பஞ்சு குமார் அவர்கள் விபத்தில் காயமடைந்து, தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவனையில் அவரைச் சந்தித்து நலம் விசாரித்தோம். அவர் விரைவில் குணமடைந்து கழகப் பணிகளுக்குத் திரும்பிட வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.
@Nivedhamurugan_@durai944@sunramanathan_@Anbil_Mahesh@murasolimp@ilaiyadmk@anjugam_dr