Major betrayal of Hindu Temples by the TVK Govt!
HR&CE order dt. 9 July 2026 regularizes 3,085 acres of prime temple lands in Karur (worth >₹25,000 Cr) belonging to 4 temples & hands them over to encroachers.
Even DMK didn't go this far.
Temple lands are NOT govt property! Protect the Deity's assets. @CMOTamilnadu@RameshOffcl@tnhrcedept@TVKVijayHQ
#SaveTempleLands #HinduTemples #TVK
தமிழகம் முழுவதும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள, டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தையும் மூட வலியுறுத்துவோம்.
சென்னை நகரின் சில பகுதிகளில் நாம் மேற்கொண்ட கள ஆய்வின்படி, பல டாஸ்மாக் மதுக்கடைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாகவே இயங்கி வருகின்றன.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், இது போல, பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாக இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட, மக்கள் நேரடியாகவோ, அல்லது நமது We the Leaders அமைப்பின் மூலமாகவோ, மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுப்போம். மது அரக்கனை ஒழிக்க ஒன்றிணைவோம். தமிழ்நாட்டைக் காப்போம்.
மாறுவோம், மாற்றுவோம்!
#WTL_WhiteBandMonth
Major Act of treachery against Temples by the TVK Government after coming to power.
3085 acres of lands belonging to 4 temples and worth more than ₹25,000 Crores in and around Karur are being handed over to the encroachers by the @tnhrcedept
Shameless ACT of betraying Hindu Temples by TVK.
This atrocity was not carried out even DMK
@CMOTamilnadu@RameshOffcl
சென்னையின் பிரதான GST சாலையில் 400 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஆட்டையை போட முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தன் மகன்களின் நிறுவனம் மூலமாக என்ன என்ன தில்லுமுல்லு வேலைகளை செய்துள்ளார் என்று இந்த காணொளியில் https://t.co/K7XttV18wY ஆதாரங்களுடன் பாருங்கள்.
திமுக ஆட்சியில் அறப்போர் கொடுத்த இந்த புகாரை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கிடப்பில் போட்டுவிட்டார். முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பாரா? முன்னாள் திமுக அமைச்சர் மீது FIR பதிவு செய்வாரா?
@CMOTamilnadu@ArunIPSCOP@CTR_Nirmalkumar
யார் இந்த நாராயணன்?
தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மற்றும் பல கல்லூரிகள் அடங்கிய பவானி கல்விக்குழும தாளாளர் நாராயணன் அவர்களை, கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் convenor கமிட்டி உறுப்பினராக நியமித்தது ஏன்?
அவர் ஒரு திமுக உறுப்பினர். திமுக கல்வியாளர் அணியின் துணைத்தலைவர். கட்சி உறுப்பினரை ஒரு பல்கலைக்கழக convenor கமிட்டி உறுப்பினராக நியமித்தது ஏன்? ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் விவரங்கள் கூட பல்கலைக்கழகத்தில் இல்லாத அவல நிலையில் அதை சரி செய்ய எந்த முயற்சியும் எடுக்காமல் தங்கள் கட்சி உறுப்பினரை உயர் பொறுப்பில் நியமித்து அதன் மூலம் என்ன சாதிக்க முயற்சி செய்தார் முன்னாள் முதல்வர் ஸ்டாலின்?
பல்கலைக்கழக convenor கமிட்டிகளில் 3 அல்லது 4 உறுப்பினர்களாவது இருப்பார்கள். ஆனால் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் திமுகவின் நாராயணன் தவிர வேறு யாரும் இருக்கிறார்களா என்பதும் மர்மமாகவே இருக்கிறது. மாணவர்களுக்கு கல்வியும் ஒழுக்கமும் சொல்லித்தரக்கூடிய ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கும் கல்லூரிகளை நடத்துவதில் ஸ்டாலின் அரசு எத்தனை அலட்சியம் காட்டி இருக்கிறது என்பதை இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
விஜய் அரசு இந்த விஷயத்தில் என்ன செய்ய போகிறது? திமுக உறுப்பினரின் கட்டுப்பாட்டில் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் தொடர்ந்து சீரழிய அனுமதிக்க போகிறதா? உடனடியாக சீர் செய்ய வேண்டிய இந்த விஷயத்தை பற்றி இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது ஏன்? யாரை காப்பாற்ற இந்த மவுனம்?
@Viswanathan_INC@imrajmohan@CMOTamilnadu@TVKVijayHQ
There is an African Proverb that I love:
“A cat that dreams of becoming a lion must lose its appetite for rats.”
Meaning: To achieve greatness, you must let go of old habits that could hold back your progress.
சிறந்த இயக்குநரும், நடிகரும், இந்திய அளவில் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவருமான, திரு. K. பாக்கியராஜ் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
தன்னுடைய திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருந்தவர். எளிய, பண்பான மனிதராகத் திகழ்ந்தவர்.
திரு. பாக்கியராஜ் அவர்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
தென்காசி மாவட்டத்தில் நீண்ட விடுப்பில் இருக்கும் ஒரு மருத்துவர் அரசு மருத்துவமனை அருகிலேயே ஸ்கேன் சென்டர் வைத்திருப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள். இது உண்மையா என்று சுகாதாரத்துறை அமைச்சர் @arunraajkg ஆய்வு செய்து மக்களுக்கு விளக்கம் அளிப்பாரா?
அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவோம் என்று உறுதி அளித்து 40 லட்சம் வரை செலவாகும் உயர் படிப்பை அரசு பணத்தில் படித்த பிறகு இது போல தலைமறைவாக ஓடி ஒளிவது கிரிமினல் குற்றம் இல்லையா? இதை செய்ய உங்கள் மனசாட்சி எப்படி இடம் தருகிறது?
திமுக அதிமுக ஆட்சிகளில் இந்த மோசடியை தடுக்கவில்லை. வெளிப்படையாக ஆட்சி நிர்வாகத்தை தருவோம் என்று உறுதி அளித்துள்ள தவெக ஆட்சியிலாவது இந்த மோசடி தடுக்கப்படுமா என்று அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களை பார்க்க முடியாமல் வரிசையில் நிற்கும் லட்சக்கணக்கான தமிழக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
என்ன செய்ய போகிறீர்கள் முதல்வர் விஜய் அவர்களே..!
@CMOTamilnadu@TVKVijayHQ@CmcellTamilNadu@Chief_Secy_TN@TNHealthDept
அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்று இன்றைய தினம் தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இத்தனை நாட்களாக வெளி வராத இந்த மொத்த எண்னிக்கை உண்மை இன்று வெளி வந்துள்ளது.
இந்த பிரச்சனை முதலில் வெளிவருவதற்கு மிக முக்கியமான காரணம் திரு தினகரன் ராஜாமணி @thinak_ பத்திரிக்கையாளர். இவர் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு 20 கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டு தொடர்ந்து நடவடிக்கை கோரினார்.
அதை தொடர்ந்து அறப்போர் இயக்கம் மேலும் கூடுதல் RTI ஆதாரங்களுடன் கடந்த 22.06.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 229 அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவப்பேராசிரியர்கள், நெடுங்காலமாக பணிக்கு வரவில்லை என்ற விவரங்களை வெளிப்படுத்தியிருந்தோம்.
RTI மூலம் கிடைக்கப்பெற்ற இந்த தரவுகள் குறைவுகள் என்றும், முழுமையான விவரங்கள் அரசு வெளியிட வேண்டும், அதே போல் மருத்துவர்களை அரசுப்பணிக்கு திரும்பவைக்க முயற்சி செய்ய வேண்டும், இல்லையேல் சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசின் இழப்புத்தொகை மீட்கப்படவேண்டும் என கோரியிருந்தோம்.
27.06.2026 இன்றைய தினம் தமிழ்நாடு அரசு இதுகுறித்த முதல் கட்ட தகவலை வெளிப்படுத்தியிருக்கிறது. அதில், இது வரை தன்னிச்சையாக பணிக்கு வராமல் இருக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்றும், ஒழுங்கு நடவடிக்கை இறுதி ஆணை 680 நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும் , தொடர் நடவடிக்கையில் 740 நபர்கள் மீது இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இத்தனை ஆண்டுகளாக வெளியில் வராத இந்த எண்ணிக்கையை வெளியிட்டதை வரவேற்கிறோம். மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் பட்டியலை, புகைப்படத்துடன், Service Bond, Bond Liability, Recovery Status, Disciplinary Proceedings Status போன்ற விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு இணையதளத்தில் வெளியிட கேட்டுக்கொள்கிறோம்.
இந்த செய்தியை மக்கள் மற்றும் அரசின் பார்வைக்கு கொண்டு சென்ற அனைத்து தன்னார்வலர்களுக்கும் நன்றி!
அறப்போர் தொடரும்!
முன்னாள் அமைச்சர் EV வேலு மீது லஞ்ச ஒழிப்பு துறையால் பதியப்பட்ட FIR . அறப்போர் புகாரில் தவெக அரசின் முதல் FIR இது. வரவேற்போம் ! அறப்போர் புகாரில் என்ன சொல்லப்பட்டது ? திரட்டிய ஆதாரங்கள் என்ன ? அடுத்து செய்யவேண்டியது என்ன ?
Since Trump doesn't want this portrait of President Obama displayed in the White House, let's make this photo of our President go viral here!
RETWEET if you love @BarackObama!
You don`t have to be a Democrat, or black, or even American, to realise how much the world truly misses having a thoroughly decent, honest, caring human being at the helm.