ஆனால் ஒன்றிய அமைச்சர் பதவி கொடுக்க வேண்டாம்
என்று திமுக தலைவர் கலைஞர் சொல்கிறார்
தடுக்கிறார்
இப்போது திமுகாவில் இருக்கும் தலீத்களே
திமுக ஒரு சாதி வெறி கட்சி என்று நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால்
நீங்கள் முட்டாளாக இருக்கலாம்?
சுயநலவாதியாக இருக்கலாம்?
2019-ல் முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திருமா
காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஒன்றிய வனத்துறை மற்ற இலாக்கல் ஒதுக்கப்படுகிறது திருமாவுக்கு,
இதை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஜெயராம் ரமேஷ்
அறிவிக்கிறார்
மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலின் வெற்றி இடைத்தேர்தல் வரலாற்றில் முறியடிக்க முடியாத சாதனையாக இருக்க வேண்டும்.. அதற்கு விசிக களப்பணி ஆற்ற திருமா கட்டளை - ரவிகுமார் எம்.பி
TVK | Alliance | ByElection | Maragatham Kumaravel
#Newstamil24x7#RavikumarMP
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்
எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை
~~~~~~~~~~
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ‘சிறப்புத் தீவிரத் திருத்தம்’ (SIR) நடவடிக்கைகளின்போது நடைபெற்றவை குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் கடந்த 10 மாதங்களில் தேர்தல் ஆணையம் எடுத்த முடிவுகள் தொடர்பாக 14 முறை முறையான ஆட்சேபனைகளைப் பதிவு செய்துள்ளனர் என அந்நாளிதழ் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நிலைப்பாட்டுக்கு மாறாகவும், சட்டவிரோதமாகவும் செயல்பட்டு தேர்தல் ஜனநாயகத்தையே சீர்குலைத்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.
தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், தங்களது அறிவு அல்லது ஒப்புதல் இல்லாமலேயே முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.
இந்த உள்மோதலின் மையமாக 13 கோடி வாக்காளர்களின் பெயர்களைப் பாதிக்கும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) உள்ளது. புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான படிவம் 6-ல் “அங்கீகாரமற்ற, சட்டவிரோத மாற்றங்கள்” செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
மேலும், தகவல் தொழில்நுட்பப் பிரிவுகள் மூலம் வாக்காளர் பட்டியல் தரவுத்தளம் படிப்படியாக மையப்படுத்தப்படுவது குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மையப்படுத்தப்பட்ட மென்பொருள், கள அளவில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர்களின் (ERO) முடிவுகளை மீறி செயல்படுவதால், தகுதியுள்ள வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவது தடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
டிஜிட்டல் அமைப்புகளை இவ்வாறு மையப்படுத்துவது, தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் பாரம்பரியமாகக் கொண்டிருந்த பரவலாக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பை வலுவிழக்கச் செய்யும். சட்டப்பூர்வ அதிகாரம் பெற்ற அலுவலர்களின் அணுகலைக் கட்டுப்படுத்த தகவல் தொழில்நுட்பத் துறை தலைமை இயக்குநருக்கு சட்டரீதியான அதிகாரம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கோவாவில் ஏற்பட்ட மென்பொருள் பிரச்சினைகளால், உச்சநீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும், வாக்களிக்கத் தகுதியுடைய 97 பேர் வாக்களிக்கும் உரிமையை இழந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
2023ஆம் ஆண்டின் சட்டம், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஒருமித்த முடிவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் உள்மோதல் அதன் அரசியலமைப்புச் செயல்பாடு குறித்த தீவிரமான கவலைகளை ஏற்படுத்துகிறது.
இந்த ஆட்சேபனைகளின் நகல்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் மட்டுமே வெளிப்பட்ட நிலையில், தற்போதைய சூழலில் தேர்தல் ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களே முடிவெடுக்கும் செயல்முறையிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது மிகவும் கவலைக்குரியது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, தேர்தல் ஆணையம் மேற்கொண்ட SIR நடவடிக்கைகள் தேர்தல் ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெளிவாகிறது. SIR நடவடிக்கையின் அடிப்படையில் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது. அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட தேர்தல்களும் சட்டவிரோதமானவையே என அர்விந்த் கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் கோருவதில் நியாயம் உள்ளது.
எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தாமாக முன்வந்து உடனடியாகப் பதவி விலக வேண்டும். இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து SIR நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உயிர்நாடியாக இருப்பது வாக்குரிமையும் தேர்தலும்தான். மக்களின் வாக்குரிமையையும் தேர்தல் ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டுள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
இவண்,
தொல். திருமாவளவன்
நிறுவனர் - தலைவர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
நம் கட்சி கூட்டத்தை பார்த்து முதல்வர் விஜய் எனக்கு போன் செய்து மிரட்டிட்டீங்க சார் என பெருந்தன்மையோடு மனம் திறந்து பாராட்டினார்..! தேர்தலுக்கு பின் வி.சி.கவில் யாரும் இல்லை எல்லோரும் விஜயோடு ஓடிவிட்டார்கள் என்றார்கள்.. ஆனால் உளுந்தூர் பேட்டை மாநாட்டில் நான் பேசவே இல்லை.. அந்த மாநாடு பேசியது.. திருமா பேச்சு..
#Tambaram | #VCK | #Thirumavalavan | #CMVijay | #PolimerNews
நமது சமூகநீதித்துறை கீழ் இயங்கும் சமூகநீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களின் தேவைகளையும், குறைகளையும் உடனுக்குடன் கண்டறிந்து, அவற்றை நிறைவேற்றிடும் நோக்கில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
வாட்சப் மூலமாகவோ, தொடர்பு எண்ணுக்கு அழைத்தோ அல்லது துறையின் எக்ஸ் கணக்கிற்கோ மாணவர்கள் தங்கள் தேவைகள் குறித்து தெரியப்படுத்தலாம்.
ஜெம் வீரமணி குறித்த அந்த வீடியோக்களில் அவனது முகம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது
ஆனால் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வீடியோ தெளிவில்லாமல் இருந்தது என பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார்
உண்மையிலேயே யாரைக் காப்பாற்ற திமுக முயற்சிக்கிறது
காவல்துறையினர் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை மூடி மறைக்க முயற்சித்த போது காவல்துறைக்கான பொறுப்பு அமைச்சரான முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் தலையிடாமல் என்ன செய்தார்?
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில்தான் வீரமணிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது என சொல்கிறார்கள் அப்படி என்றால் இந்த விவகாரம் குறித்து அவருக்கு அனைத்து விவரங்களும் தெரிந்து இருக்கும் அப்படி இருந்தும் முதல்வருக்கே தெரியாமல் தமிழ்நாட்டின் காவல் துறையினர் செயல்பட்டார்களா?
இப்படி கடந்த ஆட்சி காலத்தில் எத்தனை விவரங்கள் காவல்துறையினரால் மூடி மறைக்கப்பட்டது?
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஈனத்தனமான வேலையில் வீரமணி ஈடுபட்டு வருவதாக தகவல்கள் சொல்லப்படுகின்றது.
அப்படி என்றால் அதற்கு முன்பிருந்த ஆட்சி காலங்களிலும் வீரமணியை காப்பாற்றியது யார்? அதிமுக ஆட்சி காலத்திலும் இதே போல மூடி மறைக்கப்பட்டதா?
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக அறிவுறுத்த வேண்டும்; அனைத்து எஸ் ஐ ஆர் நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும்
குடியரசுத் தலைவருக்கு விசிக சார்பில் தலைவர் @thirumaofficial கடிதம் 👇🏿
சமூக நீதிச்சமூகங்கள் எழுச்சித்தமிழரை @thirumaofficial ஆசான் இவரென கொண்டாடுவதை கண்டு மனம் பொறுக்காத அற்பர்கள் …
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
அமைச்சரவையில் இடம் பெற்றதை சகித்துக்கொள்ள முடியாதவர்கள்….
காழ்ப்புணர்வு காரணமாக கத்திக்கொண்டிருக்கிறார்கள் !
இப்போது ஆர் எஸ் எஸ் கழித்து வைத்த மாட்டிறைச்சி அரசியலை கிண்டிப்பார்க்கிறார்கள்.
மாட்டிறைச்சி என்பது சர்வதேச உணவு.
அதை அறியாமல் இருப்பது கிணற்றுத்தவளைகளின் மடமை.
விரும்புவோர் கோரிக்கையை பரிசீலிப்பது பரிவுள்ள அரசின் கடமை.
அடிக்கிற காற்றில் உயரே பறக்கும் காகிதமென வயிறெரிந்தாலும் ,
உங்களால் தொடமுடியாத உயரத்தில் நாங்கள் இருக்கிறோம் என்பதை ஏற்றமைக்கு பாராட்டுக்கள் !
தோழர்களே
அடர்காட்டில் நரிகள்
ஊளையிடுவது செய்தி அல்ல !
சிங்கங்களின்
எதிர்வினைதான் செய்தி!
சகோதர சமூகத்தை சீண்டுவதும்
சீண்டலின் எதிர்வினையை காரணங்காட்டி தம் சமூகத்தை தூண்டுவதும்
சாதிய சனாதன கும்பலின் அரசியல் யுக்தி.
சீண்டுவதும் தூண்டுவதுமாய்..
ஆர் எஸ் எஸ் கொண்டையை மறைக்க தெரியாத கோமாளிகளை கடந்து செல்வோம்.
மீண்டும் சொல்வோம் …
சிறுத்தைகளின் கொடி!
காற்றில் அசையும் கொடியல்ல
காற்றையே அசைக்கும் கொடி…!