நம்மவர் தொழிற் சங்கப் பேரவையின் கீழ் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ள நம��மவர் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கம், இது ஒரு மாநிலம் தழுவிய அமைப்பு தமிழகத்தில் எங்கும் இதன் கிளை அமைப்பை தொடங்கலாம். மேலும் தொடர்புக்கு கீழுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர, உயர மக்களின் வாழ்க்கைத்தரம் குறையும் என்கிற ஆபத்தை, மத்திய அரசிற்கு உணர்த்த தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும், மாநில தலைநகர் சென்னையிலும் நம்மவரின் ஆணைப்படி 9 ஏப்ரல் காலை 10.30-க்கு மநீம-வின் மாபெரும் ஆர்ப்பாட்டம். திரள்வோம் வெல்வோம்!
வெளிப்படையான அரசை நடத்துகிறோம், கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் இப்போதே பெரும்பான்மையான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று மகிழ்ந்துகொள்ளும் முதல்வர் அவர்கள் நாளையாவது , தனது “ரிப்போர்ட் கார்டை” டெல்லியில் தேசிய ஊடகங்கள் முன்னிலையில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாமா ?
சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழகத்தில் உடனே அமல்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்த மய்ய உறவுகள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஊறுவிளைவிக்கா��� முன்னெடுப்புகள் தொடரட்டும். #MNM4RTS
அதேசமயம், இந்த நடைமுறையை நகராட்சி, மாநகராட்சிகளில் மட்டுமல்லாமல் பேரூராட்சிப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்குரிய சட்ட திருத்தத்தை தமிழக அரசு கொண்டுவரவேண்டும் என்று தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்.(4/4)
சமீபத்தில் நடந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள்,காவல்துறை,வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழகமுதல்வர் விரைவில் ஏரியா சபை, வார்டு கமிட்டிகள் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். தமிழகமுதல்வரின் இந்த அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் சார்பாக வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்(3/4)
நகர்ப்புற உள்ளாட்சி���ளில் மக்கள் பங்கேற்புடன் கூடிய மக்களாட்சி நிலைப்பெற ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைப்புகளை நடைமுறைப்படுத்த மக்கள் நீதி மய்யம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. கடந்த பிப்ரவரி 21-ம் தேதி தமிழக தலைமைச் செயலாளரிடம் மனுகொடுத்தோம். (1/4)
இனி இந்த மென்மையான அரசியல் வேலைக்கு ஆகாது இறங்கி அடிக்கணும்
மாவட்ட வாரியாக பொது கூட்டங்கள் நடத்தணும்
தலைவர் மக்களை சந்திக்கணும்
அப்போது மட்டுமே நாளை நமதாகும்